தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் அர்ரஹ்மான் பள்ளிவாசல் மக்தப் மதரஸா மாணவர்களுக்கான குர்ஆன் அறிவுத்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.ஒய் அஹமது ஜலாலுதீன் தலைமை வகித்தார். வினாடி-வினா, பேச்சுப்போட்டி, குர்ஆன் சூராக்கள் மனனம், கிராத் உள்ளிட்ட இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை பள்ளிவாசல் இமாம் மவ்லவி.தவ்பீக், மவ்லவி. நவாஸ் ஆகியோர் வழி நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. முடிவில், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி ஆலோசகர் இ.வாப்பு மரைக்காயர் நன்றி கூறினார்.











தலையில் தொப்பி போட்டு
ReplyDeleteஇருந்தால் சிறப்பு க்கு சிறப்பாக இருந்து இருக்கும்