.

Pages

Showing posts with label அதிரை ஈத்கமிட்டி. Show all posts
Showing posts with label அதிரை ஈத்கமிட்டி. Show all posts

Monday, August 12, 2019

அதிரையில் ஈத் கமிட்டியினர் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.12
அல்லாஹ்வின் பேரருளால் இவ்வருடமும் தியாகப் பெருநாளை அதிரை முஸ்லீம்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வழமைபோல் அதிரை ஈத் கமிட்டியினர் மேலத்தெரு சானாவயல் திடலில் ஏற்பாடு செய்திருந்த ஈதுல் அதுஹா சிறப்புத் தொழுகையில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு ஏகன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தனர்.

பெருநாள் சிறப்புத் தொழுகையை சகோதரர் ஹஸனார் அவர்கள் நடத்தி குத்பா பேருரையையும் நிகழ்த்தினார்கள். ஹஸனார் அவர்கள் தனது உரையில் தனி மனிதராக இருந்து கொண்டு தூய ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவற்காக பட்ட துன்பங்களை பட்டியலிட்டு நாம் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் குறித்தும் எடுத்தியம்பினார்கள்.

இறுதியாக, குத்பா நிறைவிற்குப்பின் தொழுகையில் கலந்து கொண்ட மக்கள் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து முடித்தபின் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டவர்களாக சந்தோஷத்துடன் கலைந்து சென்றனர்.

அதிரை அமீன்

Wednesday, June 5, 2019

அதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 05
தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து இன்று அதிரை ஈத் கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதில், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் எம்.சாலிகு கலந்துகொண்டு, ஈகைப் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பேருரை நிகழ்த்தினார்.

இன்றைய பெருநாள் குத்பா உரையில் தர்மம், பெற்றோரை பேணுதல், நிலையான தர்மம் செய்தல், கணவனை பெற்றோர்களுக்கு கடமை செய்வதிலிருந்து தடுப்பதால் ஏற்படக்கூடியதன் தீமைகள் போன்ற பல நல்ல விஷயங்கள் நஸீஹத் செய்யப்பட்டன.

இன்றைய திடல் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளை வழமைபோல் அதிரை ஈத் கமிட்டி செய்திருந்தது.

அதிரை அமீன்

Wednesday, August 22, 2018

அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய திடல் தொழுகையில் திரண்ட பொதுமக்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.
அதிரை ஈத் கமிட்டி சார்பாக இந்த வருட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சுன்னத்தான முறையில் சானா வயல் திடலில் நடைபெற்றது. பெருநாள் தொழுகையை நடத்தி பெருநாள் குத்பா பேருரையை மவ்லவி. அப்துல் ரஹ்மான் ஷிப்லி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

ஏராளமான ஆண்களிம் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில் நபி இப்ராஹீம் அலை அவர்களின் ஏகத்துவ உறுதியும், இன்றைய நவீன இசங்கள் மற்றும் நாத்திக நாசாங்களுக்கு முன் நமக்கு இருக்க வேண்டிய உறுதியும் ஒப்பிடப்பட்டு விளக்கப்பட்டது.

இந்த ஹஜ் பெருநாள் திடல் தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை ஈத் கமிட்டியினர் செய்திருந்தனர். குறிப்பாக கடந்த ஈகைத் திருநாளின் போது ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தவிர்க்கப்பட்டிருந்தன, அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்வானாக.

பெருநாள் தொழுகை நிறைவடைந்த பின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்கூறிக் கொண்டதுடன் குரூப் செல்ஃ பிகளும் எடுத்துக் கொண்டனர்.

தகவல்: அதிரை அமீன்
படங்கள்: நஜி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Friday, June 15, 2018

பெருநாள் திடல் தொழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி அறிவிப்பு!

கோப்பு படம்
அதிராம்பட்டினம், ஜூன் 15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈத் கமிட்டி சார்பில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள திடலில் நாளை (ஜூன் 16) சனிக்கிழமை காலை சரியாக 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மவ்லவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி கலந்துகொண்டு பெருநாள் பேரூரை நிகழ்த்த உள்ளார். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழமை போல் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

அழைப்பின் மகிழ்வில்...
ஈத் கமிட்டி, அதிராம்பட்டினம்

Saturday, September 2, 2017

அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய திடல் தொழுகையில் பெண்கள் உட்பட பலர் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், செப். 02
இசுலாமியர்களின் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈத் கமிட்டி சார்பில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானாவயலில் அமைந்துள்ள திடலில் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மவ்லவி அப்துல்லா தவ்ஹீதி கலந்துகொண்டு ஹஜ் பெருநாள் பேரூரை நிகழ்த்தினார். சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Monday, June 26, 2017

அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய பெருநாள் திடல் தொழுகை ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈத் கமிட்டி சார்பில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானாவயலில் அமைந்துள்ள திடலில் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மவ்லவி அப்துல்லா தவ்ஹீதி கலந்துகொண்டு பெருநாள் பேரூரை நிகழ்த்தினார். ரமலான் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் 800 பேர் கலந்துகொண்டனர்.