.

Pages

Showing posts with label அதிரைக் குளங்கள்.. Show all posts
Showing posts with label அதிரைக் குளங்கள்.. Show all posts

Tuesday, April 23, 2019

அதிராம்பட்டினத்தின் கோடைவாச குளங்கள் (படங்கள்)

அய்யனார் கோயில் குளம்
அதிராம்பட்டினம், ஏப்.23
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்வரை நம் அதிராம்பட்டினம் குடிநீர் கிணறுகள் மட்டும் நம்பியிருந்த போது கூடுதலாக மண்ணப்பன் குளமும் பிரத்தியேகமாக அதிரை பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றி வந்தது. அதேபோல் ஊரெங்கும் நிறைந்திருந்த குளங்கள் மட்டுமே குளியலுக்கு கதி. இன்று கிணறுகள் இல்லவே இல்லை குளங்கள் இருக்கு ஆனால் அதில் தண்ணீர் இல்லை என்ற நிலையே என்றபோதும் நமதூரிலும் நம்மை சூழ்ந்துள்ள கிராமங்களிலும் உள்ள வெகுசில குளங்கள் மட்டும் இன்னும் இந்த கடும் கோடையிலும் பயன் தந்து வருகின்றன.

கஜா புயலால் நமதூர் பேரழிவுகளை சந்தித்து தண்ணீர் இன்றியும் மின்சாரம் இன்றியும் சீரழிந்து கிடந்தபோது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் குளிக்கக் கை கொடுத்தவை இக்குளங்களே. தற்போதும் தேர்தலுக்கு சுமார் 2 தினங்களுக்கு முன் கஜா புயல் துன்ப நாட்களை "களா" செய்தது போலிருந்த மின்சாரமில்லாத அந்த 2 நாட்களிலும் கை கொடுத்தவை இக்குளங்களே.

பொதுவாக கோடை காலங்களில் கோடைவாச ஸ்தலங்களை நோக்கி படையெடுப்போம் அதேபோல் குளக்குளியல் பிரியர்களும் பொதுவானவர்களும் கீழ்க்காணும் நீர்நிலைகளுக்குச் சென்று உடல் சூட்டை தணித்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது, இதில் முதலிடத்தில் உள்ளது கடற்கரை தெருவிலுள்ள "வெட்டிக்குளம்"

அதிரையின் பெரும்பான்மையான குளங்கள் காய்ந்திருக்க அருமையான முறையில் மராமத்து செய்யப்பட்டுள்ள வெட்டிக்குளம் ரசித்துக் குளிக்க ஏற்ற நன்நீரை கொண்டுள்ளதுடன் கரை சுவர்களில் இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் பற்றியும் சகலருக்கும் அழகுற எடுத்துரைக்கின்றது.

இதற்கடுத்து வற்றிப் போய்விட்ட சினன ஏரியின் நடுவே குளம் வெட்டி நீரை தேக்கி வைத்துள்ளனர். தெளிவாகவுள்ள இந்த ஏரி குளத்தின் கரைகள் மட்டுமே கொஞ்சம் வழுக்கக்கூடியவை மற்றபடி ஆனந்தக்குளியலுக்கு அற்புதமானது.

அணையப் போகின்ற விளக்கை நினைவூட்டும் செடியன் குளம், அதில் சிறிதளவே எஞ்சியுள்ள நீரிலும் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் குளித்து வருகின்றனர் என்றாலும் இந்நிலையில் அது குளியலுக்கு ஏற்ற குளமல்ல.

ஏரிப்புறக்கரை கிராமத்தை சுற்றியும் குஞ்சி குளம், உடையங்குளம், அய்யனார் கோயில் குளம், வழுதியம்மன் கோயில் குளம், பள்ளக்குளம், வென்னீர் குட்டை போன்றவையும் குளியலுக்கு பயன்பட்டு வருகின்றன. இத்துடன் சின்ன பூச்செறி, பெரிய பூச்செரி என்ற குளியல் தவிர்த்த வேறுபல பொதுபயன்பாட்டுக் குளங்களும் நிறைந்த நீருடன் உள்ளன. இன்னும் சில குளங்களும் உள்ளனவாம் நம்மால் தான் அடிக்கிற வெயிலில் அலைய முடியவில்லை.

மேலும் ECR சாலை அமைந்துள்ள ஊர்களான சின்ன ஆவுடையார் கோயில், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதுடம் குளியலுக்கும் பயன்பட்டு வருகின்றன.

நாம் பார்த்த வகையில், கடற்கரை தெரு வெட்டிக்குளம் துவங்கி மல்லிப்பட்டினம் வரை கடற்கரையை ஒட்டியுள்ள குளங்களில் மட்டும் நீர் நிறைந்து காணப்படுவதன் காரணம் என்னவாக இருக்கும்?  மக்களின் பொறுப்புணர்வா? கடற்கரையை ஒட்டியுள்ள அந்த மண்ணின் தன்மையா?

அதேபோல் நமது ஊருக்குள் குளங்கள் வறண்டு போக காரணமென்ன? மக்களின் அலட்சியமா? மின் மோட்டார்கள் வைத்து சரமாரியாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாலா? அல்லது அரசின் புறக்கணிப்பா?

காரணம் எதுவாக இருந்தாலும் சரியே, இருக்கும் குளங்கள் கோடைவாசக் குளங்களாக திகழ்கின்றன என்பதில் மாற்றமில்லை.

களத்தொகுப்பு
அதிரை அமீன்
வெட்டிக்குளத்திற்கு குளிக்க வரும் இளைஞர் ஜமாஅத்
வெட்டிக்குளம்

வெட்டிக்குளம்

வெட்டிக்குளம் அறிவிப்பு பலகை

வெட்டிக்குளம் அறிவிப்பு பலகை
செடியங் குளம்
  
செடியங்குளம்

செடியங்குளம்

வென்னீர் குட்டை

பெரிய பூச்செறி

சின்ன பூச்செறி

சின்ன பூச்செறி

குஞ்சி குளம்

உடையங்குளம்

வழுதி அம்மாள் கோவில் குளம்

சின்ன ஏரி

சின்ன ஏரி 

Thursday, April 2, 2015

மரணத்தருவாயில் அதிரைக் குளங்கள் [ படங்கள் ]

பல வருடங்களுக்குப் பிறகு முழுமையாக நிறைந்து காணப்பட்ட அதிரைக் குளங்களின் இன்றைய நிலை எப்படி இருக்கின்றது என்று வந்து பாருங்கள்.

காட்டுக் குளம்:


மரைக்கா குளம்:


செடியன் குளம்:


கரிசைமணி ஏரி:


வெள்ளைக் குளம்:


செக்கடிக் குளம்:


செட்டியா குளம்:


ஆலடிக் குளம்:


செயனாங் குளம்:

மனிதன் மரணித்தால் மீண்டும் இந்த உலகில் மீள முடியாது, மரணிக்கும் தருவாயில் இருக்கும் இந்தக் குளங்கள் மீண்டும் உயிருடன் மீளப்போவது எப்போதோ!?

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.