நெசவுத்தெரு மஹல்லாவில் புதிதாக பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாக அப்பகுதியினரிடையே இருந்து வந்தது. இதற்கான முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அவ்வபோது ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நெசவுத்தெரு ஜமாத்தார்கள் கடந்த [ 07-08-2015 ] அன்று மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் ஒன்றுகூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் மேற்கு பகுதியில் ( நோன்பு கஞ்சி காய்ச்சும் இடத்தில் ) புதிதாக பள்ளிவாசல் கட்டி எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது
இதன் தொடர்ச்சியாக கடந்த [ 02-09-2015 ] அன்று நெசவுத்தெரு மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்கூட்டம் மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் நடைபெற்றது. இதில் புதிதாக கட்ட உள்ள பள்ளிவாசலுக்கு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' என்ற பெயர் சூட்டுவது என முடிவு செய்தனர். மேலும் கட்டுமான பணிக்கு புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் கட்டுமான பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலமா பெருமக்கள், நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.