.

Pages

Showing posts with label இந்தியன் வங்கி. Show all posts
Showing posts with label இந்தியன் வங்கி. Show all posts

Monday, May 18, 2020

கட்டுப்பாடு தளர்வு: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி நாளை (மே.19) முதல் திறப்பு!

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், மே.18
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டு இருந்த இந்தியன் வங்கி நாளை (19-05-2020) செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அதிராம்பட்டினத்தில் மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதிராம்பட்டினம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால்,  சேர்மன் வாடி அருகில் இயங்கி வந்த இந்தியன் வங்கி கடந்த 16.4.2020 அன்று முதல் மூடப்பட்டு இருந்தன. இதனால், வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஏப்.19 ந் தேதிக்கு பிறகு, புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், 28 நாட்கள் காலக்கெடு நேற்று (மே.17) ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, கடந்த 16.4.2020 அன்று முதல் மூடப்பட்டு இருந்த, அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி நாளை (19-05-2020) செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, அப்பகுதியில் அடைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அதிராம்பட்டினம் பேரூராட்சிப் செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்களால் இன்று திங்கட்கிழமை காலை அகற்றப்பட்டன.
 

Thursday, May 7, 2020

இந்தியன் வங்கி அதிராம்பட்டினம் வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு...

அதிராம்பட்டினம், மே.07
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளை வாடிக்கையாளர்கள் அவசரத் தேவைகளுக்கு தற்காலிகமாக அதிராம்பட்டினம் கடைத்தெரு ஹர்ரா மல்டி சர்வீஸ் பாயிண்ட் மையத்தில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வங்கி கிளை அமைந்திருக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளதால், அதிராம்பட்டினம் பேரூராட்சி அறிவுறுத்தலின் பேரில், வங்கி கிளையின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு (SAVINGS ACCOUNT) மற்றும் நடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது அவசரத் தேவைகளுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும், பணம் டெப்பாசிட் செய்துகொள்ளவும் அதிராம்பட்டினம் கடைத்தெரு ஹர்ரா மல்டி சர்வீஸ் பாயிண்ட் மையத்திற்கு சென்று பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதற்காக, வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் கார்டு, கைரேகை அல்லது ஏடிஎம் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றை வங்கி வணிக தொடர்பாளர்களிடம் வழங்கி ரூ.10 ஆயிரம் வரை வங்கி கணக்கில் இருந்து பணம் பெறலாம். இதே முறையை பயன்படுத்தி, ரூ.20 ஆயிரம் வரை டெப்பாசிட் செய்துகொள்ளலாம். இன்று (மே 07) வியாழக்கிழமை தொடங்கிய இந்த சேவை வங்கி திறப்பதற்கு மறு உத்தரவு வரும் வரை காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்க உள்ளது.
 

Thursday, April 16, 2020

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளையின் முக்கிய அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.16
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளை வாடிக்கையாளர்கள் அவசரத் தேவைகளுக்கு துவரங்குறிச்சி, பட்டுக்கோட்டை ஆகிய கிளைகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என கிளை மேலாளர் டி.ராஜசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஏப்.16) அவர் நம்மிடம் கூறியது;
'கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வங்கி கிளை அமைந்திருக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளதால், அதிராம்பட்டினம் பேரூராட்சி அறிவுறுத்தலின் பேரில், வங்கி கிளையின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், வங்கியின் மண்டல அலுவலகத்தின் அனுமதியுடன், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு (SAVINGS ACCOUNT) மற்றும் நடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது அவசரத் தேவைகளுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும், பணம் டெப்பாசிட் செய்துகொள்ளவும் அதிராம்பட்டினம் அருகில் உள்ள துவரங்குறிச்சி மற்றும் பட்டுக்கோட்டை வங்கி கிளைகளை பயன்படுத்தலாம் என்றும், இந்த வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும் என்றும், விரைவில் மறு உத்தரவு வந்ததும் வங்கி வழமைபோல் தொடர்ந்து செயல்படும்' என்றார்.