.

Pages

Showing posts with label கல்வி உதவித்தொகை. Show all posts
Showing posts with label கல்வி உதவித்தொகை. Show all posts

Tuesday, July 30, 2019

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? (முழு விவரம்)

தஞ்சாவூர், ஜூலை 30
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு. அரசு உதவி பெறும் மற்றும் மைய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி. பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

2019-20 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 135127 மாணவ, மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும், பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ மாணவியர்கள் 15-10-2019 வரையிலும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31-10-2019 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவ மாணவியர்கள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ மாணவியர்களின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இணையதளத்தில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது, மாணவ மாணவியரின் ஆதாரர் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலணை செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தால் பகிரப்படமாட்டாது.

கல்வி நிலையங்கள் ஆன்லைன் மு்லம் பெறப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்படவேண்டும்.

பள்ளிகள்-கல்வி நிலையங்கள், மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE/AISHE/NCVT குறியீட்டு எண் அவசியமாகும், புதிய கல்வி நிலையங்கள் NSP இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal Officer) விவரங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் இரு நகல்களில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும், கல்வி நிலையங்களின் பாடப்பிரிவில் மாற்றம் இருப்பின் உடன் திருத்தம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DISE/AISHE குறியீட்டு எண்ணை மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான / இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தணைகள் அடங்கிய விரிவான விபரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm. என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.  என இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Thursday, August 16, 2018

சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வித் உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருப்பதாவது;
மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்யலாம். அரசு/அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களும், தொழிற்கல்வி  மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாயின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம்.   மத்திய அரசின் www.scholarship.gov.in என்ற இணைய தளத்தின்  (NSP) மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்களை http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm. மற்றும் http://www.minorityaffairs.gov.in ஆகிய இணையதளங்களில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Monday, August 13, 2018

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற செப்.30 ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு!

சிறுபான்மையினர்களுக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை (Pre Matric Scholarship) திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆணடிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால வரம்பு புதியது மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு 30.09.2018 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு மொத்தம் 112419 மாணவர்களுக்கு புதியது (Fresh) மைய அரசால் 2018-19ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கு இலக்கு ஏதும் வரையறுக்கப்படவில்லை.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ மாணவியரின் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.1 இலட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ மாணவியர் முந்தைய கல்வி ஆண்டின் இறுதித் தேர்வில் (1ம் வகுப்பு நீங்கலாக) குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. மேற்காணும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவது ஒத்தி வைக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.  தவறான ஆவணங்கள் / தகவல்களின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறுவதாக தெரிய வந்தால் கல்வி உதவித்தொகை வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித்தொகை ஒரே தவணையில் மீள வசூலிக்கப்படும்.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகள் புதியது (Fresh) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாணவ மாணவியரின் புகைப்படம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் பட்டியல், ஆளறிச்சான்று (ஆதார் எண் கட்டாயமில்லை) எனினும் ஆதார் விண்ணப்பித்ததற்கான ரசீது, புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு ஏதேனுமு; ஒன்று), செயல்நிலையில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகம், வருமானச் சான்று (வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும்), மதம் / சாதிச்சான்று  (வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும்) அல்லது ரூ.10க்கான நீதி மன்றசாரா முத்திரைத் தாள் உறுதிமொழிப்படிவம்), இருப்பிடச் சான்று ஆகியவை இணைத்தல் வேண்டும்.

விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கல்வி நிலையத்தில் 30.09.2018க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மாணவ/மாணவியர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஆன்லைன் மூலம் 31.09.2018க்குள் பார்வோடு (Forward) செய்ய வேண்டும். மேலும் தகுதியுள்ள மாணவ /மாணவியரின் பெயர் பட்டியலை உரிய ஒப்பம் இட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அளிக்க வேண்டும்.

சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

Tuesday, July 10, 2018

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபின மாணவ மாணவியர்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்பயிலும் பிற்படுத்தப்பட்ட. மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ-மிபிவ-சீம மாணவ-மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது,

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றேhரது ஆண்டு வருமானம் ரூ 2,00,000-/க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்,

உதவித்தொகைக்கான கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, 15-10-2018 க்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

01-09-2018 ஆம் தேதியில் துவங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 15-10-2018 ஆம் தேதிக்கு முன்பும். புதியதிற்கான விண்ணப்பங்களை 30-11-2018 ஆம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மு்லம் சமர்பிக்க வேண்டும்,

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அஹணுகவும்.

அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Monday, October 9, 2017

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 'பேகம் ஹஜரத் மஹல்' கல்வி உதவித் தொகை பெறுவது எப்படி ? முழு விவரம் !

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு 'பேகம் ஹஜரத் மஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப்' (மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை) பெற www.maef.nic.in என்ற இணைய தள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (அக்.09 ) திங்கட்கிழமை தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் 'பேகம் ஹஜரத் மஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப்' என்ற திட்டம் (முன்பு “மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை “MAEF”) வழங்கப்பட்டு வருகிறது,

தகுதியானவர்கள்:
இத்திட்டத்தின்கீழ் சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லிம். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிஸ் ஆகிய சிறுபான்மை சமு்கத்தில் உள்ள மாணவிகளுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயில்வோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது

9 ஆம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயில்பவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும் மற்றும் 12ஆம் வகுப்பு வரை பயில்பவர்கள் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களும் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்கள் முந்தைய வகுப்புகளில் பெற்றிருக்க வேண்டும்,

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவிகளின் பெற்றோர் - காப்பாளரின் ஆண்டு வருமானம் அனைத்து வகைகளிலும் ரூ.2,00,000-/க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

கல்வி உதவித்தொகை:
9 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை வருடத்திற்கு ரூ.10,000-/மும் மற்றும் 11ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வருடத்திற்கு ரூ.12,000-/ மும் இரண்டு தவணைகளில் மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பயன்மாற்று முறையில் (Direct Benefit Transfer) வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகையில் சேர்க்கை, கற்பிக்கும் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருள் மற்றும் உண்டி உறைவிடம் ஆகிய செலவினங்கள் அடங்கும்,

புதுப்பித்தல்:
இத்திட்டத்தின்கீழ் மாணவிகள் ஏற்கனவே கல்வி தொடர (புதியது) பெற்றவர்கள் மட்டும் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்கள் முந்தைய வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் புதுப்பித்தல் கல்வி பெற தகுதியுடையவர்கள்.

மாணவிகள் தெரிவு செய்யும் முறை:
2011ஆம் ஆண்டில் சிறுபான்மை பிரிவினரின் மக்கட்தொகையின்படி ஒவ்வொரு மாநிலங்களுக்கு கல்வி உதவித்தொகை ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில் செய்யப்பட்ட  கல்வி உதவித்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவிகளின் பெற்றோர்  - பாதுகாவலர் அனைத்து வழிகளிலும் பெறும் ஆண்டு வருமானம் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
மாணவிகள் www.maef.nic.in என்ற இணையதள முகவாpயில் மட்டுமே 31-10-2017க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  பின்பு ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து விண்ணப்பிக்கப்பட்ட சான்றாவணங்களுடன் பள்ளி தலைமையாசிரியர் - முதல்வர் சான்றளிக்கப்பட்ட கையொப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் 15-11-2017க்குள் Maulana Azad Education Foundation, Maulana Azad Campus, Chelmsford Road, Opposite New Delhi Railway Reservation Centre, New Delhi – 110 055 என்ற முகவரிக்கு சென்றடைதல் வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1. பள்ளி முதல்வர் - தலைமை ஆசிரியரால் சான்றளிக்கப்பட்ட மாணவர் புகைப்படம் இணைக்க வேண்டும்.
2. பள்ளி முதல்வர் - தலைமை ஆசிரியரால் சரிபார்க்கப்பட்ட படிவத்தில் சான்றெப்பம் பெற்றிருத்தல் வேண்டும்
3. சுய சான்றொப்பத்துடன் கூடிய முந்தைய வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ்.
4. வட்டாட்சியரிமிருந்து பெற்ற ஆண்டு வருமானம் சான்றிதழ்
5. சிறுபான்மையினர் என்பதற்கான சுய உறுதிமொழி படிவம்
6. வங்கிக் கணக்கு எண். IFSC Code மற்றும் MICR Code ஆகிய விவரங்கள் அடங்கிய வங்கி கணக்கு புத்தகம் நகல்
7. ஆதார் அட்டை நகல்

மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Wednesday, October 4, 2017

சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு !

சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2017 அக்டோபர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடுவண் அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் நடுவண்-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2017-18ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் - ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு- கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை புதியது மற்றும் புதுப்பித்தல் ( Fresh and Renewal ) பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2017 அக்டோபர் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகையினை பெற இவ்வாய்ப்பினை பயன்படுத்தி உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Monday, July 10, 2017

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ( முழு விவரம் )

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைத்திட்டத்தின்கீழ் பயன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடுவண் அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் நடுவண்-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2017-18ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ. ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் - ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை. முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு- கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் (NSP) ஆன்லைன் மு்லம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

2017-18ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1,35,127 மாணவ-மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.  கல்வி உதவித்தொகை (புதியது) மாணவ-மாணவியர்கள் 31-08-2017 வரையிலும், புதுப்பித்தல் இனங்களுக்கு 31-07-2017 வரையிலும் மேற்படி இணையதளத்தில் மு்லம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவ-மாணவியர்கள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பாத மாணவ-மாணவியர்களின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

இணையதளத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை மிகுந்த கவனத்துடன் உள்ளீடு செய்ய வேண்டும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது. மாணவ-மாணவிகளின் ஆதார் எண்களின் விவரம் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தில் பகிரப்பட மாட்டாது,

கல்வி நிலையங்கள் ஆன்லைன் மு்லம் பெறப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில்  விவரங்களை சான்று ஆவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

மைய அரசின் தேசிய கல்விஉதவித்தொகை இணையத்தில் (NSP) புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE / AISHE  குறியீட்டு எண் அவசியமாகும், புதிய கல்வி நிலையங்கள் NSP இணையதளத்தில் தங்களது கல்வி நிலையத்தின் அடிப்படை விவரங்களை உடன் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்குரிய பயனாளர் குறியீட்டு ( Login ID / Password ) விவரங்களை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும், மேலும் NSP இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் தொலைபேசி எண்கள் அல்லது பாடப்பிரிவில் மாற்றம் இருப்பின் உடன் திருத்தம் செய்து கொள்ள வேண்டும், புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DISE / AISHE குறியீட்டு எண்ணை மாணவ-மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான - இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விளம்பரங்கள் www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் www.minorityaffiars.gov.in/_schemesperformance/scholarshipschemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மு்லம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Monday, September 19, 2016

நினைவூட்டல்: கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 30-09-2016 க்குள் கல்வி நிலையங்களில் சமர்பிக்க அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ-மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதள முகவரியான www.scholarships.gov.in என்பதில் ஆன்லைன் மு்லம் விண்ணப்பிப்பதற்கான காலவரையறை புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு 30-09-2016 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டிற்கு 2279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2016-17ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

கல்வி உதவித்தொகை பெற தேவையான தகுதிகள் பின்வருமாறு:
1, மாணவ-மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
2, பெற்றோர்-பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
3, ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

www.scholarships.gov.in என்ற புதிய இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு செய்து மாணவ-மாணவியர்கள் பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பதை படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு. அத்துடன் மதிப்பெண் சான்றிதழ். வருவாய்த்துறையிடமிருந்து பெற்ற மதத்திற்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் அல்லது சுய சான்றோப்பம். கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது. இருப்பிட முகவரி. வங்கிக் கணக்கு எண் ( Core Bank Service Account Number, IFS Code ) ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 30-09-2016 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்லைன் மூலம் மாணவ-மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்புதல் வேண்டும், சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மு்லம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,

Thursday, August 11, 2016

கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 31-10-2016 க்குள் கல்வி நிலையங்களில் சமர்பிக்க அறிவிப்பு !

தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ-மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதள முகவரியான www.scholarships.gov.in என்பதில் ஆன்லைன் மு்லம் விண்ணப்பிப்பதற்கான காலவரையறை புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு 31-10-2016 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டிற்கு 2279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2016-17ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

கல்வி உதவித்தொகை பெற தேவையான தகுதிகள் பின்வருமாறு:
1, மாணவ-மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
2, பெற்றோர்-பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
3, ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

www.scholarships.gov.in என்ற புதிய இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு செய்து மாணவ-மாணவியர்கள் பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பதை படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு. அத்துடன் மதிப்பெண் சான்றிதழ். வருவாய்த்துறையிடமிருந்து பெற்ற மதத்திற்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் அல்லது சுய சான்றோப்பம். கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது. இருப்பிட முகவரி. வங்கிக் கணக்கு எண் ( Core Bank Service Account Number, IFS Code ) ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 31-10-2016 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்லைன் மூலம் மாணவ-மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்புதல் வேண்டும், சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மு்லம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,