.

Pages

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, November 14, 2020

தீபவொளித் தீர்ப்புகள்!

தீபந் தருமந்தத் தேனைமிஞ்சும் இன்பமுங்
கோபமூட்டுந் தீததை கொளுத்தவே - சாபம்
விடுவதில் சார்ந்தவர் வீரரன்று! சாத்தான்
தொடுமனத்தைத் தட்டித் துடை!

துடைத்துவிடும் மத்தாப்புத் தொட்ட மகிழ்வை
விடைகொடு 'தாம்நாம்' விதைப்பைத் - தடையற்று
விரவிக் கலந்தால் விறைவாய் உயர்வில்
துறவியின் கோலம் துற

துறவு தெளியுந் துணையி னுறவில்
அறமும் மலரும் அகத்துள் - புறத்துப்
புதுமை மெருகில் புகழ்வெடிக்கும்  சுற்றும்
அதுதானே மத்தாப்பாம் அன்பு

அன்பு மொழியிலே ஆட்சி செலுத்திடின்
துன்பஞ் சுடாது தொடர்பதில் - இன்பம்
இருப்பாகும் எல்லோ ரிதயமும் ஒன்றில்
உருவான வுண்மை யுணர்ந்து!

ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.

Monday, October 12, 2020

வலி!

உலக மூட்டு வலி தின சிறப்பு கவிதை! 

முளைத்த கிள்ளையோ,
முதுமையின் எல்லையோ,
மூட்டு வலி தொல்லையோ,
முடியாத தொடர் கதையோ!

இடைவிடாத உடற் பயிற்சி
தவிர்க்குமே தசை தளர்ச்சி
மூட்டுக்கு தரும் புத்துணர்ச்சி
உடலுக்கு ஆரோக்கிய கிளர்ச்சி!

நீச்சல், மிதிவண்டி தினம் ஒழுகு!
மூட்டுக்கு ஆரோக்கியம் பழகு!
உடலுக்கு ஏற்படும் அழகு,
இல்லையேல் உலகை விலகு!

“ARTHRITIS MAY BE A
CRIPPLING JOINT PAIN
SWIMMING OR CYCLING WILL MAKE
EVERYTHING FINE”

டாக்டர் எம்.எம். ஷேக் சைஃபியுதீன்
MBBS., D.ORTHO
எம்.எஸ்.எம் மருத்துவமனை, பழைய அஞ்சலக சாலை, 
அதிராம்பட்டினம்.

Saturday, August 1, 2020

தியாகத்தில் விளைந்த கோமான்!

தியாகத்தின் நிலைகள் பாரும்
   தீஞ்சுடரைத் தேகம் வென்றும் !
அயராது கனவு வந்தும்
   அழைத்தவுடன் தன்னைத் தந்தும் !
துயரங்கள் தொடர்ந்து வந்தும்
   தொல்லைக்கு பகரம் கண்டும்
உயர்ந்தவகை ஒட்ட கங்கள்
   ஒவ்வொன்றாய் குர்பான் ஈடாய்

சிகரத்தில் மனிதம் வாழ
   செயலாற்றி வாழ்ந்த கோமான்
பகரங்கள் ஏதும் உண்டோ
   பண்பாளர் நபிக ளார்க்கு !
அகரமுதல் ஆதி தொட்டு
   அக்குடும்பம் பட்டத் தொல்லை !
நிகராகா ஹுசைனார் துன்பம்
   நீண்டதங்கே சிரசைக் கொய்தும் !

இறைக்காக அர்ப னிப்பு
   இவ்விதமாய் இருக்க காப்பு !
மறைவேதம் காட்டும் மாண்பு
   மனிதாநீ மனிதன் ஆக !
திரைகொண்டு வடிக்கும் பாதை
   தியாகப்பெ ருநாளாய்ப் பாடம் !
முறையாக உன்னில் காணு
   முன்னேற அதனுள் பேணு !

அருவவனின் தூதாய் வந்த
  அண்ணலார் தியாக வாழ்வை
அருள்நிறைவாய் அடையக் காணு !
   அனைவரையும் தானாய்க் காண !
திருநாளில் வணக்கம் தந்தார்
    திருவவனில் மூழ்கச் சொன்னார்
பெருமானார் வாழ்வே இன்பம் !
   பேரின்பங் காண வேண்டும் !

 
விளக்கம்: (சில வற்றிற்கு)
தீஞ்சுடரைத் தேகம் வென்றும் -:  அன்று இப்றாஹீம் நபி (அலை) அன்னவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டபோது அத்தீசுவாலைத் தீண்டாது இதமாகவே அன்னவர்களை காத்தது. எந்த பாதிப்புமின்றி அதிலிருந்து வெளிவந்தனர்.

அயராது கனவு வந்தும் -: நபி இப்றாஹீம் (அலை) அன்னவர்களுக்கு மீண்டும் மீண்டும் தம் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அன்னவர்களை குர்பானி கொடுப்பதுபோல் கனவு வந்தது.

அழைத்தவுடன் தன்னைத் தந்தும் -: தந்தையார் நபி இப்றாஹீம் (அலை) தம் கனவுகளை கூறி இறைகட்டளையை நிறைவேற்ற அழைத்தபோது தயங்காது 'இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்', தந்தையே என்று நபி இஸ்மாயில் (அலை) அன்னவர்கள் தன்னை அறுத்து இறைவனுக்காக அர்பனிக்க முன்வந்தார்கள்.

துயரங்கள் தொடர்ந்து வந்தும்
   தொல்லைக்கு பகரம் கண்டும்
உயர்ந்தவகை ஒட்ட கங்கள்
   ஒவ்வொன்றாய் குர்பான் ஈடாய் -: இவ்வாறு தொடர் துயர்சோதனைகள் பல தொடர்ந்து அந்நபி வழி குடும்பத்தில் பெருமானார் (ஸல்) அன்னவர்கள் தந்தை அப்துல்லாஹ் அன்னவர்களை பலியிடப்படவேண்டும் என்றொரு நிகழ்வு ஏற்பட அதற்கு பகரமாக 100 ஓட்டகைகளை அறுத்து பலியிட்டு காக்கப்பட்டார்கள்.

நிகராக ஹுசைனார் துன்பம்
   நீண்டதங்கே சிரசைக் கொய்தும் -: அன்னலார் பெருமானார் அன்னவர்கள் வழிப் பேரர் இமாம் ஹுசைனார் (ரலி) அவர்களின் சிரசை கர்பலா யுத்தத்தில் கொய்தனர் மாபாதகர்கள்.

அருவவனின் தூதாய் வந்த -: உருவமற்றவன் இறைவன். அவனின் தூதவராக வந்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.


ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.



Monday, May 25, 2020

பெருநாள் பேரின்பம்!

      ★பெருநாள் பேரின்பம்★
  (முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)

நாளின் றானதுகாண் 'பெருநாள்' - இன்று
நம்மைத் துறந்தவனைப் பெறவே !
சூழ்கொண் டாகநோன்பு நோற்றோம் - இனி
சுற்றும் பொழுதுகளி னின்பம் !

'நானே கூலியாவே' னென்றான் ! ,- அவன்
நம்மிற் தனைக்காண மோகம் !
வீணே யவன்சொல்லான் நம்பு - நீ
வெற்றிக் கொண்டாற்பே ரின்பம் !

பிறவிப் பலனெனக் கொண்டால் - இது
பெறுவ தற்குத்தான் வாழ்வு
உறவு வேறில்லைக் கண்டால் - ஒன்றின்
உருவிற் பலதான வின்பம் !

அரூபன் விளையாட்டி லுருவம் - பல
அவனின் மாட்சிமையிற் கோலம்
சொரூபம் உருவாகும் போது - தன்
சுயத்திற் தோன்றுமேபே ரின்பம் !

ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.


Wednesday, January 15, 2020

★புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் !★

★புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் !★
(இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா)

புத்தாண்டுக் கொண்டாட்டம் பொன்மணிகள் மஞ்சலுடன்
புத்துணர்வுப் பூக்களாம் பொங்கல் மகிழ்ச்சியுள் !
குத்தும்கொம் பையடக்கும் கோமகன் நற்றமிழன் !
வித்தைகள் வென்றொழிக்கும் வீரநடை யாட்டங்கள்
அத்தனையும் சொத்துக்கள் அன்புவீரம் ஊற்றினில்
முத்துப் பவள முகமலர்ச்சி கொண்டிங்கே
சத்தியச் சோதனை சாதகமாய் மாற்றிவிடும்
வித்தகன் வேற்றுமையை வேரொடு சாய்ப்பவன் !

தந்திர மெல்லாம் தகர்க்கும் திறன்மிக்க
மந்திரம் முன்னோர்கள் மான்பளர் சேகரித்த
விந்தை விளக்கம் வெகுவான நற்பண்பு
தந்தவழிக் கொள்கைத் தகுதி யுரமேற்றி
வந்ததிந்த வர்க்கம் ! வளர்ந்ததன் நல்லுள்ளம் !
பந்தபாசம் நீதியின் பார்வைக்கே நின்றாளும் !
அந்தமாதி சைவநெறி யவ்வழித் தன்மையிலே
சொந்தம் விடாது சுகம்தழைக்க நாடுவான் !

கோடுகள் போட்டெங்கும் கூர்மை விதிகளை
நாடுகள் உண்டாக்கி நாற்புறமும் வேலிகள் !
பாடும் யாதுமூரே பாட்டாலே தன்னுள்ளம்
தேடும் மனிதங்கள் திக்கெங்கும் உண்டாக
வீடெது? யென்றான் விளங்கவே வேண்டுமென்றான் !
மேடுகள் பள்ளங்கள் மேன்மையாக வாகவும்
காடுகள் வாழ்வீடாய்க் காட்டும் மதிகளுக்கு
போடும் அறிவியல் போதனை தானே !

ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.

Thursday, December 12, 2019

மானா மீயென்னச் சேனாவின் பூவொன்று உதிர்ந்தது...★

தெருவை ஆண்டாய்த் திறந்த மனத்தில்
உருவில் அழகு உயர்ந்தாய் அன்பில்
சிரியோர் பொரியோர் சிரிதோ எதிலும்
பரிவு வார்த்தை பகர்ந்தாய்ப் பண்பே !

எவரின் மனமும் எங்கனும் கோனாத்
தவறு கண்டும் தவிர்க்கப் பேசும்
சினத்தைக் கூடச் சிரிப்பில் வடிக்கும்
உனது வழியும் உயர்வு தானே !

மகானின் உன்னத மான்பை அறிந்தே
மகானின் பெயரை மதித்து வைத்தார்
மங்காப் பெயர்ஷேக் நஸ்ருத் தீனாம்
உங்கள் பெற்றோர் உணர்ந்தும் தானே

இருக்கும் வரைக்கும் இஸ்லாம் வழியில்
மறுப்புத் தோன்றா மரபைக் காத்தாய்
வெறுப்பு வேற்றுமை விதையைக் களைந்தே
வென்றாய் மன்றம் விரும்பும் மனிதம் !

அனைத்து மஹல்லா ஜமாத்து தலமை
அழைப்புத் தந்தார் அலங்கரித் தாய்நீ
உழைத்தே உழைத்தே ஓய்வுப் பெறவா...
உலகைத் துறந்தாய் உறவை விட்டே !

அங்கி ருந்து வந்தோம் மீண்டும்
அங்கு செல்வது அவனின் வழியாம்
இங்கி ருக்கும் இகத்தில் இவரும்
தங்கமாய் மின்னினார் தருக சுவர்க்கமே !

இறைவா இறைஞ்சும் எங்கள் உரிமை
மறையை மதித்த மனிதர் இவரை
அகிலம் போற்றும் நாதர் அருகில்
மகிழ்வில் நிலைக்க அருள்வாய் அங்கே !

ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.

Monday, October 28, 2019

சுகமாய் எழுந்து வா சுர்ஜித்!

அன்னையின் கருவறையில்
அனுபவித்த கதகதப்பை
அனுபவிக்கவே மீண்டும்
ஆழ்குழாய் வழியாக
பூமியன் கதகதப்பைக் காண
புதைந்தாயோ குழந்தையே சுர்ஜித்!

சட்டங்களும் விதிகளும்
சரியில்லை என்பதை
சரியாக உணரவேண்டும் மன்பதை
பட்டங்கள் பெற்றவர்ட்குப்
பாடங்களும் பயிற்சிகளும்
பள்ளத்திலிருந்துச் சொல்கின்றாயோ?
உள்ளங்கள் வேண்டுகின்றன
பள்ளங்கள் தோண்டுகின்றனர்
உறங்காமல் உண்ணாமல் இருக்கின்றனர்
இறங்கிய வேகத்தில்
எழுந்து வா எழுச்சித் தர வா வா

மதங்களால் பிரிந்தவர்களை
மனங்களால் கூட்டினாய்
நிதமுனக்காகப் பிரார்த்தனை
நிகழவே மாற்றினாய்

சிரியாவில் இதுபோல்
சிக்கியப் பாலகனும்
அரிதாய்க் கிடைத்தானாம்
அதுபோல் மீண்டு வா
அதுவரைத் தோணாடுவோம் பார்!

"பாதாளக் குழிகளை மூடுக"
பாடம் நடத்துகின்றாயோ
பாலகனே நீதான் எங்கள்
பாட வகுப்பாசிரியரானாயோ?

ஆசிரியரை விடவும்
ஆகச் சிறந்த
தியாகமடா நீ செய்தது!
தெளிவூட்டச் சென்றது!!

தோண்டுவோம் தோண்டுவோம்
தோளில் உன்னை வீரர்கள் சுமக்கும் வரை
வேண்டுவோம் வேண்டுவோம்
வேதனை தீர்க்க இறையருள் கிடைக்கும் வரை
வா வா குழந்தாய்
வாரியணைக்க
வாசலிலே உன் தாய்!

கவிதை ஆக்கம்: 
"கவியன்பன் கலாம்" 
அதிரை

Sunday, October 27, 2019

தீபாவளி வாழ்த்து!

தீபாவளி வாழ்த்து!
(கட்டளைக் கலித்துறை)

பெருகி நிலைத்தாகப் பேரிண்பம் காணப் பிறவியிலே
இரவு பகலாக இனிப்பும் பலகாரம் இல்லமதி...
உறவு மகிழ்ந்தாட வுண்டாக்கித் தந்திட வுள்ளமோயா
திருகி துருவி திளைக்குந் தீபாத் திருவிழாவில்

தனித்து நரகத்தீ தன்னெண்ணம் நீங்கித் தனம்நிறைந்தே
இனிமை யிருப்பி லிதயந் திழைத்தே யியங்கிடத்தான்
மனித மனத்தில் மயக்கும் அறிவை யழித்தொழிக்கப்
புனிதச் செயலாய்ப் பொசுக்கி வெடிப்பார் புவியினிலே !

நிலத்து நிலைக்க நிறைந்த உறவுகள் நிம்மதியில்
வளத்து வனப்பு வடிவில் அகத்திலும் வல்லமையிற்
பலத்தொற்று மைக்கொண்டு பல்லாண்டு வாழப் பகிர்ந்திடுமென்
உளத்துத் திடத்தில் உவந்தெம்மின்  வாழ்த்துகள் உங்களுக்கே !

ஷேக் அப்துல்லாஹ்,
எவர்கிரீன் கஸ்டமர் கேர்,
பொது இ-சேவை மையம்,
சாரா கல்யாண மண்டப வனிக வளாகம்,
அதிராம்பட்டினம்.

Sunday, January 13, 2019

பொங்கல் வாழ்த்துப்பா!

ஆணை கட்டி போரடித்த-தன்னிகரில்லா தரணியிலே
தை பிறந்தால் வழிப் பிறக்கும் தங்கமே-தங்கம்
என்று-ஆனந்தக் கூத்தாடி, சுவைக்கு கரும்பு,
பசிக்கு சக்கரைப் பொங்கல், உடுக்க  பட்டாடை
உழவனின் தோழனுக்கு ஒரு விழா
மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஜல்லிக் கட்டு
அகிலமெங்கும் தமிழ் புகழ் பரப்பும் தை திருநாள்.

யார் கண் அல்லது ஊரார் கண் பட்டதா
உனக்குத்தான் தெரியும் ஏகனே,
மண்ணில் தாமிர கலவை கேன்சர்
கொடிய நோய் தாக்கம் தடுக்க
வெகுண்டது தூத்துக்குடி நகரம்
வீர போரில் சூழல் குண்டு பாய்ந்தது
வீர மறவன் மட்டுமல்ல வீரத்தாயும் தானே

நடப்பதிற்கே செருப்பில்லை, எட்டு வழி சாலை ஏனோ
பொன்னைக் காப்பது போல மண்ணைக் காத்த
சேலம் மக்கள் வெகுண்டனர் குரல் எழுப்பி
நீதி அரசர்கள் வநதார்கள் கருணை காட்ட
மரம் நடும் திட்டம் ஒரு பக்கம்
அந்த மலையையே குடையும்
நியூட்ரான், எலெக்ட்ரான் அடுத்தப் பக்கம்
வயலிலும் வாழ்வில்லை, ஒதுங்கும்
மலையிலும் வழியில்லை !

மண்ணையும், மரங்களையும் புரட்டிப் போட்ட
கஜா காட்டேரிப் புயல் மற்றொரு பக்கம்-பலன்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற
தமிழ் மண்ணில்-துணிப் பையுடன்
ரேஷன் கடைகளில் மானியம் வாங்க
காத்திருக்கும் தரணி புகழ் சமுதாயமே!

வருடம் தோறும் நண்பர்களுக்கு பொங்கல்
நல் வாழ்த்துப் பாடும் நான்-இன்று
வாங்கி விட்டாயா அரசு மானியம் என்று
கேட்கும் பரிதாப நிலையா வருவது
அடுத்த வருடமட்டுமல்ல இனி
இந்த நிலை என்றுமே வரக்கூடாது
என்று இறைவனை வேண்டுகிறேன்!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Friday, September 28, 2018

மழையே மறக்காதே!

கடைமடையை
தொடாத
காவிரிக்கு
கருப்பு
மேகங்களின்
கண்டனக்குரல்கள்!

அவை
ஒன்றாகி
இடித்து
வெடித்ததில்
மழையாக
கொட்டியது
வானம்!

விதைகள்
வெளிச்சமாகி
புரண்டு
படுத்தது!

மின் வாரியம்
இருண்டது!

இலைகளுக்கு
வேர்களுடன்
மறு உறவு
தொடர்ந்தது!
இரவு விடிந்தது!

அதிரையில் மழை!

'கவிஞர்' ஏ.மகபூப் அலி

Wednesday, September 26, 2018

கடை மடை கண்ணீர்!

ஹைட்ரோ கார்பன்
இடம்
உனக்கு!
அதில்
ஆட்டையை
போடுவது
எனக்கு!

வெள்ளம்
வந்தா
உனக்கு!
ஆனா
வெள்ளாமை
மட்டும்
எனக்கு!

மணல்
கொள்ளையிலே
எனக்கு!
வாயில
மண்ணு
உனக்கு!

கர்நாடகம்
தண்ணீ
எனக்கு!
நாங்க
போடுற
நாடகம்
மட்டும்
உனக்கு!

ஆட்சியும்,
அதிகாரமும்
இணைந்த
பிறகு,
ஆத்து
தண்ணீ
எப்படி
கிடைக்கும்
நமக்கு!

'கவிஞர்' ஏ.மகபூப் அலி

Thursday, September 13, 2018

இரக்கம் காட்டுமா? இயற்கை !

தஞ்சையில்
தான்
இருக்கிறது
ஆனால்
அதிரை
இங்கே 
தவிக்கிறது!

கடல் அலைகளை 
காவிரி
அங்கே 
அணைக்கிறது!
கடைமடை
பகுதிகள் 
இங்கே 
தரிசாகி
கதறுகிறது!

அதிகாரம்
அசையவில்லை!
மாவட்ட
தலைமை
மறைமுகமாக 
மறைக்கிறது!

அதனால் தான்
இயற்கையிடம்
இரக்கம் 
வேண்டி!
ஓடி வரும்
ஆறிடமே
ஓர்
மனு!

'கவிஞர்' ஏ.மகபூப் அலி

Friday, October 27, 2017

வெந்தனலில் விளையாடும் கந்துவட்டி!

வெந்தனல்  சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
போர்முரசு கொட்டிய
சங்கத்தமிழன்!

வடமொழி இந்தித்திணிப்பை  -65ல் 
எதிர் கொண்ட தமிழக இளைஞர்
வியட்நாமியருக்கு சளைத்தவர் இல்லை
என எடுத்துக் காட்டி

அக்கினி  ப்பிழம்பினை 
மாலையாக மார்பினில் அணைத்து
செத்து மடிந்தனர் சிவலிங்கம்
சின்னசாமி போன்றோர்

அவர்கள் தியாகம் வீண்
போகவில்லை-இந்தித்
திணிப்பு தடுத்து
நிறுத்தப் பட்டது ஓர் வரலாறு!

'கூலியுயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டு செத்தான் அத்தான்'-என
குரல் கொடுத்து -67ல் கோட்டையைப்
பிடித்தார் அறிஞர் அண்ணா

கூலியுயர்வு கேட்டதிற்காக
கீழ்வெண்மணி  44
விவசாயத் தொழிலாளர்கள்
வெந்தனலில் வேகவிட்டனர் -68ல்

'வேல் கொண்டு இதயம் பாய்ச்சிய'
செய்தி என்று வேதனைப் பட்டார்-அண்ணா
விடிவு- நில உச்ச வரம்பு, உழுவனுக்கே
நில உரிமைச் சட்டம் விடியலானது!

இங்கிலாந்து எழுத்தாளர் ஷேக்ஸ்பியர்
எழுதிய,'மெர்ச்சண்ட் ஆப் வெனீஸ்' -என்ற
 நாடகத்தில் ‘சைலாக்கின்’ கந்துவட்டி
 காவியம்  அறியாதோர் உண்டோ!

கந்துவட்டி  தடைச் சட்டம் பல வண்ணத்தில் வந்தாலும்
காளான் போல அத்தைக்கு மீசை
முளைத்து  துளிர் விட்டதோ-என்று
நெல்லை சம்பவம் நினைக்கத் தோன்ற வில்லையா!

வாங்கிய கடனை அடைக்க நெல்லையை விட்டு
கோவைக்கு வேலைதேடி சென்றாலும்
விடுவதாக இல்லையே  கந்துவட்டி
கலங்கினான் இசக்கிமுத்து!

கந்துவட்டியர், காவல்துறையினர் மறுபுறம்
கோர பிடியினை நெருக்கையிலே-மதுரை
 பாண்டிய மன்னர் சபையில் கண்ணகி நீதிகேட்டது போல
 நெல்லைக் கலைக்டர் அலுவலகம் வந்தான் நீதி கேட்க

ஏழைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி கிடைக்குமா
அந்தப் புற கலைக்டரை சந்திக்க காத்திருந்தான் இசக்கிமுத்து
அலறியது கைபேசி-கடும் குரல் எழுப்பிபேசியவர்
காவல் அதிகாரி கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக

ஏழையின் குரல் எங்கே ஒலிக்கப் போகின்றது
போக்கற்றவனுக்கு புகலிடம் 'கிருஷ்னா' ஆயில் தான்
ரேஷன் கார்டுக்கு கிடைக்காத மண்ணெண்ணெய்
இசக்கிமுத்துவின் குடும்ப உயிரை பறிக்க உதவியது!

தீயின் கோர பிடியில் நான்கு உயிர்கள் பலர் முன்னிலையில்
கருகியபோது-கருணை உள்ளங்கள் கையில் கிடைத்ததை வைத்து
அணைக்க முற்பட்டனர்-ஆனால் கையில் கேமராவுடன்
படம் பிடித்தனர் பரபரப்பு செய்திபோட பத்திரிக்கையாளர்!

கண்டன குரல்கள் வந்தாலும் 'பத்திரிக்கை தர்மம்' என்றனர்
கல்நெஞ்சையும் கரைக்கும் சம்பவம் கருகிய நிகழ்வு
தங்கள் வீட்டில் நடந்தால் படம் பிடிப்பார்களா-என்று
கேள்விக் கணை எழுப்பாதோர் இல்லையென்றே சொல்லலாம்.

   2010ம் ஆண்டு இதே நெல்லையில் அமைச்சர் பெருமக்கள்
பவனி வர சீருடை பாதுகாப்புப் பணியில் இருந்த
உதவி ஆய்வாளர் நடு ரோட்டில் வெட்டி சாய்த்தபோது
நாவறண்டு தண்ணீர் கேட்டவனுக்கு-எட்டி நின்று

தண்ணீர் வாயிலில் ஊற்றிய மந்திரி பாதுகாவலனைக்
கண்டு வெகுண்டனர்-மக்கள்
அருகில் இருந்த மந்திரிகள், மாவட்ட ஆட்சியர்
கார்களில் காயம்பட்டவரை மருத்துவ மனைக்கு

அனுப்பாமல்-காத்திருந்தனர் ஒருமணி நேரம் அவசர ஊர்திக்காக
 கொடுங்காயம் பட்ட உயிர் காப்பாற்ற முடிந்ததா இல்லையே
அடுத்த வருடம் மந்திரி பதவியும் பறிபோனது
அதனையும் படம் பிடித்தனர் பத்திரிக்கையாளர்.

இசக்கிமுத்து குடும்ப சாவிற்கு காவல்துறையும்
கலெக்டரும் பல காரணங்கள் சொன்னாலும்
வழக்கமான சாக்குப் போக்குத் தான் என
அறியாதவர்களா மக்கள்!

வரதட்சணை சாவுகள் இருந்தாலும்
தீப்பற்றிய பெண் தனக்குத் தானே
வைத்துக் கொண்டது என்று
சொல்லாத மாமியார் இல்லையா!

அதே போன்றுதான் ஆதிக்க சக்தியின்
சப்பைக் கட்டும் -சட்டம்
இனியும் ஒரு இருட்டறையா
எனி கேட்காதோர் உண்டா!

இசக்கிமுத்துவிற்கு ஏற்பட்ட கொடுமை போன்று
இச்சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிடக் கூடாதென்று
1400 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணலார் நபியவர்கள் 
வட்டி இணைவைப்பதினைவிட பாவமானது என்கிறார்கள்

ஆனாலும் அந்த புரையோடிய பழக்கம் இன்னும்
நமது சமுதாயத்திலும் இருக்கின்றது என்று
2014ல் உயர் நீதிமன்றத்தில் இரு முஸ்லிம்
வியாபாரிகளிடையே நடந்தது வியப்புத் தானே!

ஒரு காலத்தில் பள்ளப்பட்டி என்றாலே
வட்டித் தொழிலுக்கு பேர் போனது என்பர்
அந்த பழிச் நீக்கி வட்டியினை ஒழித்த ஊர்
 பள்ளப்பட்டி என்று இன்று விலங்க வில்லையா !

அதேபோன்று தான் இளையான்குடி-புதூர்
வியாபார பெருமக்கள் ஒரு காலத்தின் 
வட்டித் தொழில் வழக்கத்தினை -மாற்றி
வட்டியில்லா ஊர் என்ற பதாகை காணலாம் இன்று!

கந்து வட்டித் தொழிலை சட்டங்கள் கொண்டு
ஒழிக்கும் முயற்சி ஒருவேளை தோற்றுப் போகலாம்-ஆனால்
சமுதாய மக்கள் நினைத்தால் அரவே ஒழித்து விடலாம்
என்ற எடுத்துக் காட்டு பள்ளபட்டியும்-புதூரும் எடுத்துக்காட்டு!

ஒன்று படுவோம்  வென்று காட்டுவோம்
கந்து வட்டிக் கொடுமை அறுத்தெறிவோம்
வரதட்சணைப்  பேயினை
முறம் கொண்டு விரட்டிடுவோமே! 

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  / கவிஞர்
சமூக ஆர்வலர்

Saturday, September 2, 2017

திறமைகள் தூங்கினால் தரைகளே வெடிக்கும் !

கண்டதும் கேட்டதும் துடிக்குதே மனமே !
கதறிடும் பச்சிளம் குழந்தையும் ஜனமே !
அண்டை வீட்டிலே அழுகுரல் கேட்டால்...
அமைதியை இழந்திடும் மனிதனின் குணத்தில் !
கொண்டிடும் கொலைவெறி கண்டது என்ன ?
கொடுமைகள் ரசிப்பதில் மனிதமும் பின்ன !
சண்டைகள் தினமுமே வாழ்வினில்  என்றால்
சகிக்குமா ! உலகமும் கவலையை தின்றே !

மொஹிங்கா முஸ்லிமில் அமைதியை குலைத்தே
முகர்ந்திடும் பர்மிய குணமதை அழித்தே
அகிம்சை நிலையதை களைத்திடு உலகே
ஐக்கிய சபையிலும் குரலிடு பலமாய் !
தகித்திடும் தலைமையை வளர்ப்பதில் போனால்
தாங்கிடும் பூமியும் தடத்தினில் கோணும் !
சகித்திட முடியுமா இன்னமும் கொலைகள் !
சாவியை திறந்ததே துருக்கியின் தலைமை

காலிலே முள்ளது குத்திட வலிக்கும்
கண்ணது கலங்கிடும் மனம்தனில் கலக்கும்
தாலியை பிடித்திட பெண்ணது துடிக்கும்
தாங்கிட முடியவில் லைகொடுமை யார்க்கும்
வேலிகள் போட்டுதான் வெறியதை காட்டும்
விந்தைகள் விதையிலே கிள்ளிட வேண்டும்
கூலிகள் செயலிலே தலைவனே தெரியும்
கொடுக்கதை பிடுங்கிட அமைதியே நிலவும்

அக்கமும் பக்கமும் அழுகுரல் கேட்கின்
அமைதியும் கலைந்திடும் அவனியில் வழக்கில்...
எக்கண முமிதுவே ஆகிடின் என்கின் !
எப்படி இயலும் இதயமும் நொறுங்கி ?
சிக்கிடும் இனங்களை காப்பதும் கடமை
சிறத்தினை எடுத்திடு மனிதமே உடனே !
திக்கெலாம் திறண்டிடு கருணைதான் துடிக்கும்
திறமைகள் தூங்கினால் தரைகளே வெடிக்கும்

உன்னிலும் உள்ளதே அவனிலும் காணேன்
உண்மையை உணர்ந்திட வேண்டுமே பேனேன்
என்னதான் அடைந்திட போகிறாய் இங்கு ?
எதைத்தான் தெரிந்தாய் பௌத்ததில் அங்கே ?
சொன்னநற் போதனை அமைதியின் உருவம்
சுகமதும் கொலைதனில் கண்டிடு(தே) மிருகம் !
தன்னைபோல் அவர்களை உணர்ந்திடா  ஒழிப்பின்
தரணியில் பிரலயம் வருமதில் அழிவாய் !

திறண்டிட மலேசியா இந்தொனி சியாவும்
திக்கினில் பங்களா தேசுமே புயலாய்
உறங்கிடும் உலகினில் மனிதமை எழுப்பி
ஓடிடும் துரோகிகள் விடாமலே இழுத்தே
மறக்கனும் இனியுமே கொடுமையைச் செய்ய
மனிதமும் தழைக்கனும் மறுபடி மெய்யாய்
துறக்கனும் தூண்டுவர் மனதினில்
இவைகள்
துயரமும் தொடர்வதும் ஒழிந்திடும் உலகில் !

ஷேக் அப்துல்லாஹ். அ

Monday, June 26, 2017

நோன்பு தருவதென்ன...?

உன்னையே நோன்பிற்கு கூலியாய்த்  தந்தாயே
தன்னிலே யாரு தகுதியானார் ? - புன்னியம்
கன்னிய மென்றே கழித்திட்டார் காலத்தை
அன்னியம் கொண்டே யகன்று.

அகத்தி லிருக்கிறா யப்பாலும் நீயே !
சுகத்தில் திளைக்கிறார் சோம்பி - இகத்தில்
நகத்தைக் கடிக்கிறார் நாளெல்லாம் வாடி
முகத்தில் செழிப்பும் முடிந்து

முடிவும் முதலும் முதலோனே நீயே !
விடிவு தெரியாதே வீழ்ந்தே - கடிந்தே
துடித்தே மறைதலுக்குத் தோன்றவில்லை நாமும்
பிடிப்பு வறிதலே பேறு

பேறுகள் பெற்றவர் பேரின்பம் கண்டவர்
ஊறுகள் செய்யாரா மொன்றியோர் - மாறுவோர்
மீறுவார் மாண்டபின் மீட்சியில்லை ! தன்னிலே
ஊறுகின்ற வுத்திக்கே நோன்பு

நோன்பு தருமத னுண்மையி லூன்றிட
மாண்பு பெருதலே மானிடம் - பூண்டிட
வேண்டி வகுத்தானே வேந்தன் புரியாதே
போண்டியா யாகிடாதே வுண்டு.

ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.

Thursday, January 19, 2017

ஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு!

சென்றேன், கண்டேன், ஆர்ப்பெரியும் கடலென
பொங்கியெழுந்த ஜல்லிக் கட்டு
இளைஞர் அடலேறுகள்-மெரினா கடலோரம்
கல்லூரி மாணவப் பருவ அறுபத்தைந்தில்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்
நானும் பங்கு கொண்டு குண்டாந்தடி
தழும்பினைப் பெற்றவன்

அன்று எழுப்பியது ஹிந்தி ஒழிக என்ற கோசம்
இன்று எழுப்பியது வேண்டும் ஜல்லிக் கட்டு கோசம்
மூன்று நாட்களாக  கொட்டும் பணியிலும்
வீசும் கடுங்குளிர் கடற் காற்றிலும்
துவண்டு விடாத இளஞ்சிங்கங்களை-கண்டேன்
அவர்கள் எழுப்பிய ஜல்லிக் கட்டு கோசம்
ஆர்ப்பரியும் கடல் அலையினைத் தோக்கடித்தது

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே, தங்கம்
பாடியது அன்று, இன்று தை பிறந்து வழிபிறக்கவில்லை
ஏறு பிடித்து உழவன் வாழ்ந்தான் அன்று- இன்று
ஒட்டிய வயிறும்-கட்டிய கையுமாக வாடிய பயிறுமாக
திருவிழா எடுக்க கையில் நாலு காசில்லாமல்
கண்ணீர் சிந்தி செத்து மடிகிறான் கடனில்
தட்டிக் கேட்க நாதியில்லை-இளைஞர்களைத் தவிர

உழைக்கும் மாடுகளுக்கு வணக்கம் செலுத்த
அலங்கரித்து மாலையிட்டு வயல் பக்கம் வரும்-மஞ்சுவிரட்டு
அந்தக் காளைகள் கால் பாதிக்கும் வயல்கள் செழிக்கும்
ஆனால் பருவமும் பொய்த்தது-பவிக் கர்நாடகமும்
காவிரித் தண்ணீர் தராது மறுத்தது
கருகியது விளை நிலமட்டுமல்ல
விவசாயிகள் வாழ்வும் தானே
கொழுத்த யானையின் கொம்பையும் எதிர்கொண்டு
போர்க்களத்தில் எதிரியின் கூட்டத்தினை முறியடிக்கும்
யானைப் படையினைக் கொண்டவன் தமிழன்

வடபுலத்தில் படை செலுத்தி அரசர்களை
சிறைப் பிடித்து கோயில் கட்ட
மலைக் கற்களை சுமக்கச் செய்தவன் தமிழன்
திமிரும் காளைகள் திமிலை தாவிப் பிடித்து
சீவிய கொம்புகளை மடக்கி
பரிசுகள் பல பெறுவான் -வீரன்
அலங்காநல்லூரில் நான் கண்ட காட்சி

காளை விளையாட்டில் கூறிய கத்தி பாய்ச்சி
கொடூரமாக கொல்வர்  ஸ்பெயின் நாட்டில்
 வீதிகளில் காளைகளை ஓட விட்டு கிளித்தட்டு
ஆடுவர் இளங்காளைகள்  தென் அமெரிக்காவில்
ஆட்டுக் கிடாயினை ஓடச் செய்து-குதிரையில் சவாரி
செய்து கொல்வார் ஆப்கானிஸ்தானில்-வடபுலத்தில்
எருமையினை குன்றிலிருந்து தள்ளி குதுகூலம் கொள்வர்

குதிரை நுரை தள்ளி நோகடிப்பர் பந்தயத்தில்
யானை அங்குசம் குத்து பட்டு ஓடும் கேரள பந்தயத்தில்
சுமை தாங்காது கழுத்துப் புண் நோக கலங்கடிப்பர்
பிராணிகளின் பசியினை போக்காமல்  சுற்றுலா தளங்களில்
பிக்கினி உடையுடன்  கொட்டமடிக்கும் 'பீட்டா'
காளைகளை குழந்தைகள் போல காக்கும்
தாக்க பயன்படுத்தும் ஆயுதம்-ஜல்லிக் கட்டுக்கு தடையா

இளிச்ச வாயனல்ல இரும்புத் தமிழன்-குனியக்
குனிய கொட்டு வாங்க மாட்டான் இனியும்
'போக்கிரி' என்கிறான் போக்கற்ற மனுவாடி
பூச்சாண்டி காட்டாதே அதிகார ஆணவத்தில்
பொங்கி எழுந்து விட்டான்- வீராத் தமிழன்
இனியும் பொறுக்க மாட்டான் துன்பத் தமிழன்
இப்படை தோற்பின் எப்படை வெல்லும்

போர் முரசு கொட்டிவிட்டான் தமிழன் -ஓயமாட்டான்
வெற்றி முரசு கொட்டும் வரை!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Saturday, January 14, 2017

தமிழர் திருநாள்!

தமிழுக்கு அதுபிறந்த நந்நாள் !
தமிழர் வெள்ளாமை வீடுவந்து பொங்கும்நாள் !
தன்னோடே உழைப்பின் உறுதுணைக்கும்;
தன்னின பெண்டீர் சிறார்களுக்கும்;
தன்மகிழ்வை அவர்களில் காணும் தமிழினத் திருநாள் !

தன்னுழைப்பிற்கு வெற்றிகள் பிறக்க;
தக்க சூழலும் தகுமாறு காத்தே;
தானென்ற தன்னில் அனைத்துமான;
தன்னிகரில்லா தத்துவத்தை
தன்னில் நினைத்தே; திருமெய்யில்
தன்பொய்யுருகி; உள்ளத்தில் உருவாகி
தனதின் கண்வழி பனிக்கும் நன்றியின் திருநாள் !

உடலுக்கு உணவாய் நெல்முத்தும்;
உருசிக்கு உகப்பாய் செங்கரும்பும்;
அகத்துக்கும் பெண்முகத்துக்கும் மஞ்சளும்;
அன்னை பாலுக்கு சமமாம் வாழையும் தேங்காய்யும் கொண்டு;
ஆடிப்பாடிக் கொண்டாடி மகிழ்ந்தே,
ஆண்மைக்கு சவாலாய் வீரம் வெளிக்கொணர ஏறுதழுவலும்;
ஆண்டோர் சான்றோர் அமைத்துத் தந்தே,
அனைத்து தமிழரும் ஆனந்தம் ! ஆனந்தம் !!
ஆகி ஒற்றுமை ஓங்க வகுத்த தமிழர் திருநாள் !!!

ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.

Friday, December 23, 2016

வைத்தியம் வேண்டும் வைத்தியனுக்கு

வைத்தியம் வேண்டும் வைத்தியனுக்கு பணமென்ற மாயையில் பாழானயிவனுக்கே !

தைத்திடத் தன்னைத் தவறானபாதையில்
பழகிடுவான் விவரமறியாப் பாவத்திலுமே !

மொய்த்திடுவான் செல்வந்தரில் முகமிளித்தும்
பச்சோந்திக் குணம்கொண்டே பாசமாகியும் !

பொய்மையை நீக்கின் பொறுமையாகவே
பிறப்பின் இரகசியம் பிரித்தறிந்திட்டே !

உய்த்திடும் தொடர்பினிலாக உயர்ந்தோருடன்
தலைவனை கண்டத் தன்னையறிந்தோருடன் !

துய்த்திடலாம் அமைதியைத் துயரிலுமே !
சுயத்தைச் சிந்தித்த சுயம்பிரகாசிகளாகவே !

சைகையில் சொல்லிடச் சாதுகளாகின்
சைக்கினையும் செயலாய்ச் சாதனைகளாகும் !

மெய்யை விரும்பிடவே மேன்மையாகுவார்
மனிதமே முதன்மையாய் மனதிலாகியே !

பையை நிறைக்கும் பாதைவிரும்பாமல்
பக்குவம் கண்டே பண்பாளராகுவார் !

தெய்வக் குணமும் திகழ்ந்திடுமே
குழந்தை மனதாய் கொண்டிடுவார் !

செய்யும் தொழிலிலும் சிறந்திடுமே
நிம்மதியும் வாழ்வில் நிறைந்திடுமே !!

பலன்கள் உண்மையில் பார்த்திடலாம்
வேதனைகள் நெருங்காமல் வென்றிடலாம் !

உலகினில் பிறந்திட்டே உலாவுவதிலும்சுகமே
பிணியில்லா மனிதனாய் பிறப்பதும்வரமே !

ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.

Wednesday, December 21, 2016

இப்படிக்கு பிரியமுடன் அப்பா

உன்னை பெற்றதும்
உன்னில் என்னைக் குழந்தையாய்க் கண்டேன்
தன்னை மறந்தேன்
தனியே என்வானில் சிறகடித்துப் பறந்தேன்

தன்னில் பிரிந்த
தன்னின் பிம்பம் உருவில் !
என்னில் உடலுள்ளத்தில்
எல்லைதெரியா மகிழ்ச்சி !!

என் சிந்தனை உன் செயலாய் வளர்ந்தாய்
தன் அறிவு பின் தெளிவு கொண்டாய்

'நான்' 'நீ' வலுப்பெற அருவுருவில்
நகருதல் அதிகமாகியது உருவில்

வளர்ச்சியில் கேள்வி கேட்டலுமுண்டு நீ
மகிழ்ச்சியில் பார்த்து இரசித்தலுமுண்டு நான்

தான் வானாய் ஊனாய் ஆனதினாலோ
நான் நீயாய் பலவாய் காணுதலாகியோ
மனமே ! மகனே !
ஒன்றே பூத்துக் குலுங்கிறது
இன்றே பார்த்து தெளிந்துவிடு
நன்றாய் தன்னில் ஆழ்ந்துவிடு
என்றும் இதுதான் சுழன்றுவிடு

உண்டவுணவு உன்னில் பலவாகிறதே !!!

அப்படி சொன்னதில் காணப்பா !
எப்படி என்பது புரியுமப்பா
இப்படிக்கு பிரியமுடன் அப்பா.

ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.

Thursday, December 8, 2016

ஜெ. இரங்கல்: அதிரையரின் கவிதைகள் !

இரங்கட்பா
-- -- -- -
தமிழகத்தின் உயிர்!
தக்கவைத்துப்
பன்முறைகள் அரியணையில்
பசுமை ஆட்சி ஓட்சிய
முதலமைச்சர்!
சரித்திர வீராங்கனைகளுக் கெல்லாம்
தலைமை யேற்று
சரித்திரம் படைத்து
வீர முத்திரைப் பதித்த
வீராங்கனை!
எந்தநாடும் ஒருபெண் இத்தனை முறை
ஏற்றுத் தலைமை வகித்ததை
எடுத்துரைக்க முடியாது!
ஏழை எளியவர்க்கு
ஆதரவாய் ஆன
அம்மா!
தங்களை இழந்த
தமிழக மக்களின்
கோடான கோடி உள்ளங்கள்
அலை கொந்தளிக்கும் கடல் ஆனது!
அடங்காப் பீரிட்டழும் கண்கள்
காவிரியை உருவாக்கிவிட்டது!
எல்லோரையும் சமமாக நடத்தி
இனிதே ஆண்டீர்கள்!
தங்கள் பிரிவு
எல்லா சமூகத்தவரின்
உள்ளங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது!
மறக்கமுடியா சரித்திரம் படைத்தஅம்மா!
தங்கள் ஆத்மா
சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்!
கவிஞர் மு. முஹம்மது தாஹா

ஆளுமுன் திறனில் சிங்கம்
    ஆங்கிலப் புலமைத் தங்கம்
சூளுமுன் பகையில்  வீரம்
   சூதுகள் வெல்லும் தீரம்
வாளென உரையில் வீச்சு
    மாண்டது இன்றுன் மூச்சு
நாளெலாம் நினைவில் வென்றாய்
    நாடெலாம் புகழச் சென்றாய்!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

சாதனை வருதல் சிலரில்தான்
**********************************
நாளும் இரும்பு பெண்மணியாய்
நாட்டை ஆண்டாய் முதல்வராய்
கேள்வி பட்டோம் சரித்திரத்தில்
கேட்டும் கண்டும் கொண்டோமே
ஆளப் பிறந்த அம்மாவாய்
அனைவர் வாயில் அம்மாதான்
மூளும் எதிர்ப்பு எதுவாகின்
முடித்தாய் வென்றே சாதித்தே !

இன்று இந்திய தலைவர்கள்
எல்லாம் இறுதி மரியாதை
என்று இங்கு அணிவகுப்பு
எங்கள் மனமும் பரிதவிப்பு
அன்று என்றே உன்வாழ்வும்
அச்சு பதிவில் ஆகிறதே
ஒன்று மட்டும் சொல்வதென்றால்
ஒன்றாய் தனித்தே நின்றாயே !

உலகோர் அறிந்தார் ஜெயலலிதா
உந்தன் பெயரோ கோமளவள்ளி
நலமாய் ஜெய்ராம் வேதவள்ளி
நங்கை அவரில் பிறந்தீரே
வலமாய் நடிப்பில் உயர்ந்தீரே
வலிமை உள்ளம் கண்டோமே
தலமை பொருப்பில் தனிநிகராய்
தமிழ கம்ஆண் டாய்திறனாய்

உணவு மதியம் பள்ளிகளில்
உண்ணத் தந்தார் காமராஜூம்
கணக்காய் ! அம்மா உணவகமும்
காசு குறைவில் எல்லோர்க்கும்
இணக்கம் தந்தார் அம்மாவும்
இனாமாய் அரிசி ஏழைக்கும்
மணக்கும் அவரின் தைரியமும்
மணியாம் பெண்கள் வரிசைகளில்

பிரிவு என்றால் கலக்கம்தான்
பிறவி பெற்றோர் வழக்கம்தான்
சரிவு வருதல் இயற்கைதான்
சாதனை வருதல் சிலரில்தான்
வரிசை பெறுவார் திறனில்தான்
வாழ்த்து வருதல் விரும்பிதான்
புரிந்து வாழ்தல் சமத்துத்தான்
புகழில் நிலைத்தல் சவாலுதானே !
ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்