.

Pages

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Wednesday, September 26, 2018

கடை மடை கண்ணீர்!

ஹைட்ரோ கார்பன்
இடம்
உனக்கு!
அதில்
ஆட்டையை
போடுவது
எனக்கு!

வெள்ளம்
வந்தா
உனக்கு!
ஆனா
வெள்ளாமை
மட்டும்
எனக்கு!

மணல்
கொள்ளையிலே
எனக்கு!
வாயில
மண்ணு
உனக்கு!

கர்நாடகம்
தண்ணீ
எனக்கு!
நாங்க
போடுற
நாடகம்
மட்டும்
உனக்கு!

ஆட்சியும்,
அதிகாரமும்
இணைந்த
பிறகு,
ஆத்து
தண்ணீ
எப்படி
கிடைக்கும்
நமக்கு!

'கவிஞர்' ஏ.மகபூப் அலி

Wednesday, July 18, 2018

மீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் 4G சேவை மீண்டும் கிடைத்தது !

'மீடியா மேஜிக்' எஸ். நிஜாமுதீன்
அதிராம்பட்டினம், ஜூலை 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ். நிஜாமுதீன் (43)  இவர், 'மீடியா மேஜிக்' என்கிற பொதுமக்கள் சேவை மையத்தை அதிரை பேருந்து நிலையம் அருகே ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் சொந்தமாக நடத்தி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஏர்டெல் நெட்வொர்க் சேவையின் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.

கடந்த ஓர் ஆண்டாக 4G சேவைக்கான கட்டணம் செலுத்தியும், சரிவர சிக்னல் இயங்காததால், அதன் சேவையை முழுமையாக பெற முடியவில்லை எனக்கூறி ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கததால் அதிருப்தி அடைந்தவர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையமான டிராய்க்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பி இருந்தார். இதையடுத்து, இவரது புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிராய் அறிவுறுத்தியதின் பேரில், உடனடியாக ஏர்டெல் நெட்வொர்க் நிறுவன பிரதிநிதிகள், புகார்தாரர் மீடியா மேஜிக் நிறுவனர் நிஜாமுதீனை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள டவரின் பழுதை சரிசெய்து, சிக்கனல் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து மீடியா மேஜிக் நிறுவனர் எஸ். நிஜாமுதீன் கூறியது;
அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டாக 4G சேவைக்கான கட்டணம் செலுத்தப்பட்டும், இப்பகுதியில்,  சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. இதனால் 4G சேவையை நுகர்வோர் முழுமையாக பெற முடியவில்லை.

இதையடுத்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையமான டிராய், மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்புத்துறை உட்பட தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு  நான் அளித்த புகாரைத் தொடர்ந்து, நான் வசிக்கும் பகுதியில் மட்டும் சிக்னல் சரிசெய்யப்பட்டு, தற்போது 4G சேவை கிடைக்கிறது. மீதுமுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் 4G சேவை கிடைப்பதற்கு ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.


Tuesday, July 10, 2018

CCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி சம்பவமும், நமது பொறுப்பும்!

சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சி
அதிராம்பட்டினம், ஜூலை 10
சமூகத்தில் அண்மை காலமாக இளைஞர்களிடம் மது குடிக்கும் பழக்கமும் அதனால் குற்றங்களில் ஈடுபடுவதும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கிரசண்ட் கேசோலின் என்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கக்கூடியதாக உள்ளது.

இதுபற்றி பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் கூறுகையில்;
கடந்த ஜூலை 5 ந் தேதி அதிகாலை 3:50 மணிக்கு இளைஞர்கள் சிலர்  பெட்ரோல் நிலையத்தில் உள்ள பூட்டிய பம்ப்பில் இருந்து பெட்ரோல் திருட முயற்சி செய்து அது முடியாமல் போகவும், அதை சேதப்படுத்த முயற்சி செய்தும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஊழியர்களின் பைக்கில் இருந்து பெட்ரோல் திருடியும், அலுவலக கதவை உதைத்து திறக்க முயன்றும், கழிப்பறைகளை அசிங்கப்படுத்தியும், உறங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை பயமுறுத்தினர்.

இவர்களின் நடவடிக்கைகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதியப்பட்ட காட்சிகள் ஆதாரங்களாக உள்ளது. இருப்பினும், இந்நிகழ்வு இளைஞர்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளதால், அவர்களின் எதிர்கால நலன் கருதி காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் பெருந்தன்மையுடன் விட்டுவிட்டோம். அதே சமயம் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரவும் அனுமதிக்க முடியாது. காரணம், பெட்ரோல் பங்க் என்பது சிறு தவறு கூட அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடம் ஆகும். அறியாமலோ, வேண்டுமென்றோ ஒரு சிலர் செய்யும் தவறினால் சுற்று வட்டாரமே அழியக்கூடிய பேரிழப்பை ஏற்படுத்திவிடும். ஆதலால், இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்த்துக்கொள்ளவும். பெற்றோர்கள், பாதுகாவலர்கள் எச்சரித்து அறிவுரை வழங்குவது அவசியம்' என்றனர்.

 
 

Sunday, May 13, 2018

வீடு வரதட்சணை ஒழிப்பு கருத்து கேட்பு ~ வாசகர்கள் பங்கேற்க அழைப்பு !

அதிரை நியூஸ்: மே13
திருமணத்தில் பெண் வீட்டாரிடம் வீடு மற்றும் இன்ன பிற பொருட்களை  கட்டாயப்படுத்தி வரதட்சணையாகப் பெறுவது சமூகத்தில் சில பகுதிகளில் இருந்து வருகிறது.

இதுதொடர்பாக, 'வீடு வரதட்சனை ஒழிப்பு' பிரசாரக் குழுவினர் அதன் பாதகங்களை சமூகத்தில் எடுத்துக்கூறி, விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, 'கூகுள் பார்ம்' தயார் செய்து அதில் கருத்துகளை பதிவு செய்வதற்கு நம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடு வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துகள் பதிவு செய்வதற்கு...

Friday, October 27, 2017

வெந்தனலில் விளையாடும் கந்துவட்டி!

வெந்தனல்  சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
போர்முரசு கொட்டிய
சங்கத்தமிழன்!

வடமொழி இந்தித்திணிப்பை  -65ல் 
எதிர் கொண்ட தமிழக இளைஞர்
வியட்நாமியருக்கு சளைத்தவர் இல்லை
என எடுத்துக் காட்டி

அக்கினி  ப்பிழம்பினை 
மாலையாக மார்பினில் அணைத்து
செத்து மடிந்தனர் சிவலிங்கம்
சின்னசாமி போன்றோர்

அவர்கள் தியாகம் வீண்
போகவில்லை-இந்தித்
திணிப்பு தடுத்து
நிறுத்தப் பட்டது ஓர் வரலாறு!

'கூலியுயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டு செத்தான் அத்தான்'-என
குரல் கொடுத்து -67ல் கோட்டையைப்
பிடித்தார் அறிஞர் அண்ணா

கூலியுயர்வு கேட்டதிற்காக
கீழ்வெண்மணி  44
விவசாயத் தொழிலாளர்கள்
வெந்தனலில் வேகவிட்டனர் -68ல்

'வேல் கொண்டு இதயம் பாய்ச்சிய'
செய்தி என்று வேதனைப் பட்டார்-அண்ணா
விடிவு- நில உச்ச வரம்பு, உழுவனுக்கே
நில உரிமைச் சட்டம் விடியலானது!

இங்கிலாந்து எழுத்தாளர் ஷேக்ஸ்பியர்
எழுதிய,'மெர்ச்சண்ட் ஆப் வெனீஸ்' -என்ற
 நாடகத்தில் ‘சைலாக்கின்’ கந்துவட்டி
 காவியம்  அறியாதோர் உண்டோ!

கந்துவட்டி  தடைச் சட்டம் பல வண்ணத்தில் வந்தாலும்
காளான் போல அத்தைக்கு மீசை
முளைத்து  துளிர் விட்டதோ-என்று
நெல்லை சம்பவம் நினைக்கத் தோன்ற வில்லையா!

வாங்கிய கடனை அடைக்க நெல்லையை விட்டு
கோவைக்கு வேலைதேடி சென்றாலும்
விடுவதாக இல்லையே  கந்துவட்டி
கலங்கினான் இசக்கிமுத்து!

கந்துவட்டியர், காவல்துறையினர் மறுபுறம்
கோர பிடியினை நெருக்கையிலே-மதுரை
 பாண்டிய மன்னர் சபையில் கண்ணகி நீதிகேட்டது போல
 நெல்லைக் கலைக்டர் அலுவலகம் வந்தான் நீதி கேட்க

ஏழைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி கிடைக்குமா
அந்தப் புற கலைக்டரை சந்திக்க காத்திருந்தான் இசக்கிமுத்து
அலறியது கைபேசி-கடும் குரல் எழுப்பிபேசியவர்
காவல் அதிகாரி கந்துவட்டிக்காரருக்கு ஆதரவாக

ஏழையின் குரல் எங்கே ஒலிக்கப் போகின்றது
போக்கற்றவனுக்கு புகலிடம் 'கிருஷ்னா' ஆயில் தான்
ரேஷன் கார்டுக்கு கிடைக்காத மண்ணெண்ணெய்
இசக்கிமுத்துவின் குடும்ப உயிரை பறிக்க உதவியது!

தீயின் கோர பிடியில் நான்கு உயிர்கள் பலர் முன்னிலையில்
கருகியபோது-கருணை உள்ளங்கள் கையில் கிடைத்ததை வைத்து
அணைக்க முற்பட்டனர்-ஆனால் கையில் கேமராவுடன்
படம் பிடித்தனர் பரபரப்பு செய்திபோட பத்திரிக்கையாளர்!

கண்டன குரல்கள் வந்தாலும் 'பத்திரிக்கை தர்மம்' என்றனர்
கல்நெஞ்சையும் கரைக்கும் சம்பவம் கருகிய நிகழ்வு
தங்கள் வீட்டில் நடந்தால் படம் பிடிப்பார்களா-என்று
கேள்விக் கணை எழுப்பாதோர் இல்லையென்றே சொல்லலாம்.

   2010ம் ஆண்டு இதே நெல்லையில் அமைச்சர் பெருமக்கள்
பவனி வர சீருடை பாதுகாப்புப் பணியில் இருந்த
உதவி ஆய்வாளர் நடு ரோட்டில் வெட்டி சாய்த்தபோது
நாவறண்டு தண்ணீர் கேட்டவனுக்கு-எட்டி நின்று

தண்ணீர் வாயிலில் ஊற்றிய மந்திரி பாதுகாவலனைக்
கண்டு வெகுண்டனர்-மக்கள்
அருகில் இருந்த மந்திரிகள், மாவட்ட ஆட்சியர்
கார்களில் காயம்பட்டவரை மருத்துவ மனைக்கு

அனுப்பாமல்-காத்திருந்தனர் ஒருமணி நேரம் அவசர ஊர்திக்காக
 கொடுங்காயம் பட்ட உயிர் காப்பாற்ற முடிந்ததா இல்லையே
அடுத்த வருடம் மந்திரி பதவியும் பறிபோனது
அதனையும் படம் பிடித்தனர் பத்திரிக்கையாளர்.

இசக்கிமுத்து குடும்ப சாவிற்கு காவல்துறையும்
கலெக்டரும் பல காரணங்கள் சொன்னாலும்
வழக்கமான சாக்குப் போக்குத் தான் என
அறியாதவர்களா மக்கள்!

வரதட்சணை சாவுகள் இருந்தாலும்
தீப்பற்றிய பெண் தனக்குத் தானே
வைத்துக் கொண்டது என்று
சொல்லாத மாமியார் இல்லையா!

அதே போன்றுதான் ஆதிக்க சக்தியின்
சப்பைக் கட்டும் -சட்டம்
இனியும் ஒரு இருட்டறையா
எனி கேட்காதோர் உண்டா!

இசக்கிமுத்துவிற்கு ஏற்பட்ட கொடுமை போன்று
இச்சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிடக் கூடாதென்று
1400 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணலார் நபியவர்கள் 
வட்டி இணைவைப்பதினைவிட பாவமானது என்கிறார்கள்

ஆனாலும் அந்த புரையோடிய பழக்கம் இன்னும்
நமது சமுதாயத்திலும் இருக்கின்றது என்று
2014ல் உயர் நீதிமன்றத்தில் இரு முஸ்லிம்
வியாபாரிகளிடையே நடந்தது வியப்புத் தானே!

ஒரு காலத்தில் பள்ளப்பட்டி என்றாலே
வட்டித் தொழிலுக்கு பேர் போனது என்பர்
அந்த பழிச் நீக்கி வட்டியினை ஒழித்த ஊர்
 பள்ளப்பட்டி என்று இன்று விலங்க வில்லையா !

அதேபோன்று தான் இளையான்குடி-புதூர்
வியாபார பெருமக்கள் ஒரு காலத்தின் 
வட்டித் தொழில் வழக்கத்தினை -மாற்றி
வட்டியில்லா ஊர் என்ற பதாகை காணலாம் இன்று!

கந்து வட்டித் தொழிலை சட்டங்கள் கொண்டு
ஒழிக்கும் முயற்சி ஒருவேளை தோற்றுப் போகலாம்-ஆனால்
சமுதாய மக்கள் நினைத்தால் அரவே ஒழித்து விடலாம்
என்ற எடுத்துக் காட்டு பள்ளபட்டியும்-புதூரும் எடுத்துக்காட்டு!

ஒன்று படுவோம்  வென்று காட்டுவோம்
கந்து வட்டிக் கொடுமை அறுத்தெறிவோம்
வரதட்சணைப்  பேயினை
முறம் கொண்டு விரட்டிடுவோமே! 

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  / கவிஞர்
சமூக ஆர்வலர்

Saturday, July 15, 2017

ஏசி சுகமா? சோகமா? டாக்டர்கள் எச்சரிக்கை !

அதிரை நியூஸ்: ஜூலை 15
இன்றைய நவீன காலத்தில் ஏசி எனும் குளுகுளு வசதி இல்லாத வாழ்க்கை அரபு நாடுகளில் கனவிலும் நினைத்தப் பார்க்க இயலாத ஒன்று. மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவிலும் ஏசி அவசியம் என்பதையும் கடந்து அத்தியாவசியம் எனும் நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளோம் ஆனால் இவை நல்லதில்லை என அமீரகத்தில் பணிபுரியும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

மக்கள் தங்களின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள், வர்த்தக மையங்கள் என எங்கெங்கும் ஏசியில் தொடர்ந்து இருக்கும் நிலை பல்வேறு தொற்று வியாதிகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். முறையாக பாராமரிக்கப்படாத ஏசிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அதே கட்டிடத்தில் உள்ள பிற ஏசி மெஷின்களையும் தொற்றி பிறருக்கும் நோய்களை பரப்ப வல்லவை. குறிப்பாக, முடக்குவாதம் மற்றும் கீழ்வாதம் பீடித்துள்ளவர்களை மேலும் பாதிக்கும் என்றும் இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏசியில் அதிகம் இருப்பதைவிட வெப்பநிலையில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.

ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சுவாச நோய் உண்டாவதற்கும், மூச்சுத்திணறல், ஜலதோஷம், சளித்தொல்லை, இருமல் போன்றவை பரவுவதற்கும் ஏசிக்கள் காரணமாக இருக்கின்றன என்பதால் நோய்களை தவிர்க்க விரும்புவோர் அடிக்கடி தங்களுடைய ஏசி மெஷின்களை சுத்தப்படுத்தி பாராமரித்து வர வேண்டும்.

அனைத்து பெரியவர்களும் குழந்தைகளும் வெளிப்புற வெப்ப நிலையிலும், புல்தரைகளிலும் அதிக நேரத்தை செலவிட முன்வர வேண்டும். அதேபோல் வசிப்பிடங்களில் வெப்பநிலையை சுமார் 20 முதல் 25 டிகிரி செல்ஷியஸூக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 20 டிகிரி செல்ஷியஸூக்கு குறைவான தட்பவெப்பம் பல்வேறு தொற்று நோய்களை கடத்த வல்லவை என்று துபை யூனிவர்ஸல் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ஜிம்மி ஜோசப் அவர்களும் புர்ஜீல் மருத்துவமனைளை சார்ந்த டாக்டர் திரிலோக் சந்த் அவர்களும் எச்சரித்துள்ளனர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, May 14, 2017

99 நாடுகள் பாதிப்பு, ஹேக்கர்களின் புதிய வைரஸ்; எச்சரிக்கை !

அதிரை நியூஸ்: மே-14
ஹேக்கர்கள் புதிதாக ஏவியுள்ள (A massive ransomware identified as Wannacry also known as, WannaCryptor or WCRY) வைரஸ்களால் இதுவரை சுமார் 99 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பேங்க்குகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கார் உற்பத்தி நிலையங்கள் போன்றவை பெரும் பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னொருபுறம் இத்தகைய வைரஸ்களை பரப்பிவிட்டு காசு பார்க்கும் ஹேக்கர்களை பிடிக்க யூரோபோல் போலீஸ் அதிகாரிகள் (இன்டர்போல் போன்ற உளவுத்துறை) களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பியை அதிகம் உபயோகிக்கும் ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Dear All,
A massive ransomware identified as Wannacry also known as, WannaCryptor or WCRY hit computer systems of private companies and public organizations across the globe which is believed to be the most ransomware attack happened to date.

Like other ransomwares, WannaCry also blocks access to a computer or its files and demands money to unlock it. Once infected with the WannaCry ransomware, victims are asked to pay $300 to $600 in order to remove the infection from their PCs otherwise their PC’s remains unusable and the files remains locked.

The worm functionality attempts to infect unpatched Windows machines in the local network. The exploit has the capability to penetrate into machines running unpatched version of Windows computers and servers by exploiting flaws in Microsoft Windows SMB Server.  At the same time, it also executes massive scanning on Internet IP addresses to find and infect other vulnerable computers. Once a single computer in the company is hit by the WannaCry ransomware, the worm looks for other vulnerable computers and infects them as well.

Microsoft released a patch for the vulnerability in March (MS17-010), but many users and organizations who did not patch their systems are open to attacks. In our network the patches and updates are distributed thru centralized desktop enterprise management system. Our IT team will ensure the patches are installed in all the computers in the network.  However, please ensure to install the patches in the company laptops, which has been kept to use from home and your personal computers as well.

https://technet.microsoft.com/en-us/library/security/ms17-010.aspx

How to Protect Yourself from Ransomware: 
Please ensure to regularly install updates and patches on Windows machines and servers. To safeguard against such ransomware infection, one should always be suspicious of uninvited documents and file attachments sent an email and should never click on links inside those documents unless verifying the source. Please always maintain, a good backup routine in place that makes their copies to an external storage device that is not always connected to your PC.

Also, make sure that you run an updated anti-virus tools on the systems, and most importantly, always browse the Internet safely.

Source: Gulf News / AKS IT Team (In English)
தமிழில்: நம்ம ஊரான் 

Friday, April 7, 2017

உலகளவில் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் துர்மரணம் 5% அதிகரிப்பு !

அதிரை நியூஸ்: ஏப்-07
1990 ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுடன் சமகால ஆய்வை ஒப்பிடுகையில் உலகளவில் பல நாடுகளில் ஆண், பெண் புகையிலை பொருட்கள் பாவனையாளர்களின் சதவிகிதம் குறைந்திருக்கின்றது என்றாலும் அவர்களிடையே ஏற்படும் துர்மரண விகிதம் 5% அளவுக்கு உயர்ந்துள்ளது.

புகை பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் வளரும் நாடுகளை தீவரமாக குறிவைத்து விற்பதே இதன் காரணம் என ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் 3ல் ஒரு ஆணும், 12ல் ஒரு பெண்ணும் புகை பிடித்தனர் ஆனால் 2015 ஆம் ஆண்டு 25 விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் 4ல் ஒரு ஆண், 15ல் ஒரு பெண் எனும் அளவுக்கு சரிவுகண்டிருந்தது தெரியவந்தது. அதேவேளை 4.7 சதவிகிதமாக இருந்த மரணம் 6.4 எனும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தற்போதைய உலகில் புகைப்பிடிப்பதால் 10ல் ஒருவர் உயிரிழக்கின்றனர் அதிலும் சரிபாதி பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய  நாடுகளை சேர்ந்தவர்களே.

இவர்களுக்கு அடுத்து இந்தோனேஷியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனி நாட்டினர் புகைத்து துர்மரணத்தை விலை கொடுத்து வாங்குவோர் பட்டியலில் வரிசைகட்டி வருகின்றனர்.

புகைப்பழக்கம் உயர் இரத்த அழுத்த நோய்க்கு அடுத்து இளம் வயது மரணம் மற்றும் கை கால் வாதம் அடிப்பதற்கும் பெரும் காரணமாக அமைந்துள்ளது. பல்வேறு உலக நாடுகளும் புகைப்பிடித்தல் மற்றும் புகைப் பொருட்கள் பாவித்தலை கட்டுப்படுத்த பல்வேறு வகையான சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் வருகின்றன.

நமக்காகவும், நமது குடும்பத்திற்காகவும் புகைப் பழக்கத்தை விட்டுவிடுவோமே! முயன்றால் நம்மால் முடியாதது எது? சகோதரர்களே!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Tuesday, February 28, 2017

பெற்றோர்களே கவனம் ! வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை குழந்தைகள் மரணம்

அதிரை நியூஸ்: பிப்-28
புது டெல்லியின் வடமேற்கில் உள்ள ரோஹினி என்ற பகுதியில் வசிப்பவர்கள் ரவீந்தர், ரேகா தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் நக்ஷ், நீஷூ என்ற பெயரில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.

நேற்று இக்குழந்தைகளின் தாய் 'டாப் லோடிங் வாஷிங் மெஷினில்' சுமார் 15 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டு சோப்புத்தூள் வாங்க அருகேயிருந்த கடைக்கு சென்றுள்ளார். கடையிலிருந்து திரும்பி வந்தவர் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணாமல் அதிர்ந்து போய் தேடியுள்ளார் மேலும் அவரது கணவரும் அலுவலகத்திலிருந்து உடனே வீடு திரும்பி தேடியுள்ளார்.

இறுதியாக, குழந்தைகள் இருவரும் டாப் லோடிங் வாஷிங் மெஷினுக்குள் இறங்கி விளையாடியபோது அதிலிருந்த தண்ணீரில் முழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

இறைவன் விதித்த விதி வலியது என்றாலும் பெற்றோர்களே பொதுவாக விளையாட்டுப் பருவக் குழந்தைகள் ஆபத்தை உணராதவர்கள் அவர்களுடைய விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கவனமுடன் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Tuesday, December 20, 2016

போலி முட்டைகள் விற்பனையா ? உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

தஞ்சாவூரில் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தஞ்சாவூரில் கீழ வாசல், காவேரி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள முட்டைக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டதாகவும், யாரேனும் போலி முட்டைகளை விற்பனை செய்வதாகத் தெரிய வந்தால் அவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட பிரிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

Thursday, October 13, 2016

‘வாட்ஸ் அப்’ உபயோகத்தால் மாணவர், இளைஞர்களின் சிந்தனைத் திறன் பாதிப்பு: பேராசிரியர் ஆய்வில் தகவல் !

‘வாட்ஸ் அப்’ உபயோகத்தால் மாணவர், இளைஞர்களின் சிந்தனைத் திறன் பாதிப்புக்குள்ளாவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர் பெரி. கபிலன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கபிலன் மேலும் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் கோம், பிரையன் ஆக்டன் ஆகிய இருவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் யாஹூ நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இவர்களை முகநூல் (பேஸ்புக்) நிறுவனம் வேலைக்குச் சேர்க்காத விரக்தியில், 2009-ம் ஆண்டில் ‘வாட்ஸ் அப்’ செயலி நிறுவனத்தைத் தொடங்கினர்.

‘வாட்ஸ் அப்’ அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ‘சொந்த தகவலை வெளியிடுதல், பதினாறு வயதுக்குள் யாரும் பயன்படுத்தக் கூடாது, மீறினால் ‘வாட்ஸ் அப்’ குழுவில் இருந்து நீக்கலாம் என நிறுவன விதிமுறை இருந்தாலும், அது தடுக்கப்படுவது கேள்விக்குறியாக உள்ளது. உலகில் 80 கோடி பேர் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துகின்றனர். மாதந்தோறும் புதிதாக ஒரு லட்சம் பேர் வாட்ஸ் அப் குரூப்பில் இணைகின்றனர்

‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவோரில் முதல் மூன்று இடத்தில் இந்தியா இருக்கிறது.

மதுரையில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில், கிராமம், நகர் பகுதியில் 100 பேரை ஆய்வு செய்ததில், 60 சதவீதம் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவது தெரியவந்தது.

இளைஞர்கள், மாணவர்கள் ‘வாட்ஸ் அப்’பிற்கு அடிமையாகும் சூழலால் சுய சிந்தனை பாதிக்கிறது. இளைஞர்களிடத்தில் இது போதை போல மாறிவிட்டது.

‘வாட்ஸ் அப்’ பயன்படுத்தும் 500 கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி நிலை பற்றிய ஆய்வில், கல்வி, பொதுத்தகவல், அரட்டை, குடும்பம் போன்ற சில நியாயமான காரணங்களுக்காக பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். அதிகம் அரட்டை அடிக்க, பயன்படுத்துகின்றனர்.

பகுப்பாய்வில், கல்வி 8 சதவீதமும் பொது தகவலுக்கு 11 சதவீதமும், அரட்டைக்கு 72 சதவீதமும், குடும்பம் தகவலுக்கென 9 சதவீதமும் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துகின்றனர். அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுப்பதும் ஆய்வில் தெரிகிறது.

தடையின்றி சிலர் அனுப்பும் தகவல்களை விருப்பமின்றி பார்க்க, கேட்க வேண்டிய சூழல் குரூப்பில் இருப்போருக்கு ஏற்படுகிறது.

குறிப்பாக ‘வாட்ஸ்அப்’ செயலியால் மாணவ சமுதாயம் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகி வருவது தெரிகிறது என்பதுதான் உண்மை. இதனைத் தடுக்க, கல்வி நிறுவனங்கள், பெற்றோர் வாட்ஸ் அப் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் ஆரோக்கியம் அவசியம். வணிக நோக்கமற்ற தொழில்நுட்பமே தேவை என்பதை சமூக வலைதள நிறுவனங்களும் உணரவேண்டும் என்றார்.

நன்றி: தி இந்து தமிழ்

Thursday, July 28, 2016

கழிவு மேலாண்மையின் முன்மாதிரி பேரூராட்சி!

வீரபாண்டி பேரூராட்சி நூறு சதவீத கழிவு சேகரிப்பிலும், முழுமையான மறு சுழற்சியிலும் வெற்றி அடைந்திருக்கிறது.

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி கழிவு மேலாண்மையில் முன்மாதிரி என்ற பெயரெடுத்திருக்கிறது. கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதிலும், மட்கிப் போகாத கழிவுகளை மறு சுழற்சிக்கு உட்படுத்துவதிலும் முன்னிலை வகித்து வருகிறது. அத்தோடு கழிவுகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரங்களை விவசாயிகளுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் வழங்கி, வேதியியல் பூச்சிக்கொல்லிகளின் பரவலையும் தடுக்கிறது.

எப்படி இது சாத்தியமானது?
வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலர் செந்தில் குமாரின் தொடக்கம் இன்று பலனைத் தந்து வருகிறது. இப்போது பேரூராட்சி முழுவதிலும் அனைத்து வீடுகளில் இருந்தும் கழிவு சேகரிக்கப்படுகிறது. அவற்றை முறையாக அகற்றுவதாலும், மறு சுழற்சி செய்வதாலும் கழிவுகள் தேங்கிக் கிடப்பதில்லை.

இங்கு ஒவ்வொரு நாளும் 1.5 டன் மக்காத கழிவுகள் சேர்த்து சுமார் 3 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பை சுத்திகரிப்புக் கிடங்கு மற்று உரக்கிடங்கு மூலம் அக்கழிவுகளை தினமும் சுமார் 500 முதல் 600 கிலோ இயற்கை மற்றும் மண்புழு உரங்களாக மாற்றுகிறது. இயற்கைக் கழிவுகள் உரங்களாகவும், மண்புழு உரங்களாகவும் மாற சுமார் 40 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் கழிவுகள் சிறு சிறு துண்டுகளாக்கப்படுகின்றன. ஒப்பந்ததாரர்களிடம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு சாலை போடப் பயன்படுத்தப்படுகின்றன. மண்புழு உரம் கிலோ 3 ரூபாய்க்கும், இயற்கை உரம் கிலோ 1 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்துக்கு வருடம் ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. குப்பை சுத்திகரிப்புக் கிடங்கைச் சுற்றிலும் 200 மூங்கில் மரங்கள் இருப்பதால் துர்நாற்றம் எழுவதில்லை.

இதே முறையைப் பின்பற்றி அருகிலிருக்கும் தென்கரை பேரூராட்சி தினமும் 2 டன் கழிவுகளை மேலாண்மை செய்து வருகிறது. இரண்டு பேரூராட்சிகளையும் ஆய்வு செய்து திரும்பிய தேனி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடாச்சலம், குப்பை இல்லாத ஊராட்சியை உருவாக்குவதில் ஏராளமான உழைப்பு செலவிடப்பட்டிருக்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

நன்றி: தி இந்து தமிழ்

Monday, July 25, 2016

உங்க வீட்டு மருமகன் எப்படி ? சிறிய அலசல் !

மாமியார்களே......! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா...?

இறைவனின் கிருபையால் ஒரு வழியாக கல்யாணம் நல்லபடியாக சிறப்பாக நடந்து முடிந்தது, இது கல்யாண வீட்டுக்காரர்கள் அடிக்கடி சொல்லுவது.....?

குறிப்பாக ஒரு சில இடங்களில் இப்போ கிட்டடியில் அதாவது அண்மையில் கல்யாணங்கள் நடந்து முடிந்து இருக்கின்றது, இது “அல்மோஸ்ட் அனைவருக்கும் தெரியும்.

அநேகமாக புதுப்பொண்ணுகள் எல்லாம்.....? புது மாப்பிள்ளைகள் எல்லாம் பிறந்த இடத்தை விட்டு புகுந்த இடத்தை நாடி இருப்பார்கள்.

மாமியா வீடு, புது அனுபவம், உணவுக் கலவைகளின் வித்தியாசமான சுவைகள், வயிற்றை கலக்குதல், அட்டாச் பாத் ரூம், ஏசி ரூம், அட்டகாசமான கட்டில்.

எங்கள் காலத்து சிறிய மணவறை சுகமான மயக்கத்தை வரவழைத்தது. இக்காலத்து பெரிய மணவறை ஏக்கம் கலந்த கலக்கத்தை வரவைக்குமோ.......?

மாமியார்களே என்று சொல்லிவிட்டு எதை எதையோ எழுதிக்கிட்டு இருக்கேன்.

சரி மாமியார்களே இப்போ விஷயத்துக்கு வருகிறேன்.

உங்கள் வீட்டு மருமகன் /  மருமகள் எப்படி?
அவர்களுடைய குணாதிசயங்கள் எப்படி?
பழக்க வழக்கங்கள் எப்படி?

இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால் உங்களுக்கு மயக்கம் வந்துடுமோ என்று எனக்கு பயமாக இருக்குது..........!

அதனாலே....! உங்களுக்கு இரண்டு டிப்ஸ் தருகிறேன், அதை வைத்து ஓரளவு கணக்கில் கொண்டு வரலாம்.

இந்த படத்தை பாருங்கள்.

முதலாவது டிப்ஸ்.
வீட்டுக்குள் வரும்போது மிதியடியை இப்படி கச்சிதமாக சரிசமமாக கழட்டி வைத்தால் சாந்தமானவர்கள் என்று அர்த்தமாம். 

......................................
மாறாக, மிதியடியை இப்படி ஏறுக்கு மாறாக கழட்டி வைத்தால் சாந்தமானவர்கள் இல்லை என்று அர்த்தமாம்.3,4,5


==============================================================
இரண்டாவது டிப்ஸ்:
உடையை கழுவி கொடியில் காயப்போடும் போது இப்படி சரிசமமாக கச்சிதமாக நூல் பிடித்தது போல் காயப்போட்டால், எல்லா விஷயத்திலும் சரியாக இருப்பார்கள் என்று அர்த்தமாம்.


......................................
மாறாக, இப்படி அலங்கோலமாக காயப்போட்டால் எல்லா விஷயத்திலும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமாம்.

மேலும், மேலே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் நானாகவே சொன்னது கிடையாது. மாறாக நான் சிறுவயதாக இருக்கும் போது (புதுமனைத் தெருவில்) என் அன்புத் தாய் “மர்ஹூமா, செ.ஒ.(S.O). உம்மாகனி அம்மாள் அவர்கள் மற்றவர்களிடம் பேசும்போது நான் கவனித்து இருக்கின்றேன்.

அன்று ஒருநாள் அதாவது எனக்கு கல்யாணம் நடத்திவைக்க பேச்சு அடிபடும்போது என்தாயிடம் இதைப்பற்றி நான் கேட்கும் போது, என் தாய் என்னிடம் சொன்னது, அவர்கள் சிறுவயதாக இருக்கும் போது (கடற்கரை தெருவில்) மொம்மா சாச்சிதான் சொன்னாக என்று பதில் வந்தது. என் தாய் பிறந்த வருடம் 1937.

மாமியார்களே........! மருமொவனையும் மருமொவளையும் நல்லா கவனிங்கோ.......!

குறிப்பு:- உதாரணத்துக்காக ஆண்களின் அணிகலன்கள் மட்டும் இங்கு காட்டப்பட்டுள்ளது.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
PRESIDENT of pkt Tk
State Executive Member
National Consumer Protection Service Centre.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com

Tuesday, July 12, 2016

500 ரூபாய் நோட்டில் கருப்பு கோடுகளா !?

தெரிந்து கொள்வோம் :

சமீபத்தில் ஏ.டி.எம் சென்று பணம் எடுக்கையில் இந்த 500 ரூபாய் நோட்டு கிடைத்தது.. ருபாய் நோட்டு பக்கவாட்டில் 5 கோடுகள் கருப்பு நிறத்தில் இடப்பட்டு இருந்தது.. மேலும் சில ருபாய் நோட்டுகளில் இந்த குறியீடை சமீபத்தில் அதிகம் பார்த்து இருந்ததால், இது என்ன, எதற்காக என்பதை அறிய ஆர்வம் ஏற்பட்டது..

வங்கி உள்ளே சென்று கிளார்கிடம் கேட்டதில் அவர் சொன்னது.., இது பிரெயில் (braille) முறையில் அடிக்கப்பட்ட நோட்டு என கூறினார், பார்வையற்றவர்களுக்கு அடையாளம் காண இந்த ஐந்து கோடுகள் எனவும், 1000 ரூபாய் தாளில் 6 கோடுகள் இருக்கும் எனவும், டூப்ளிகேட், ஒரிஜினல் கண்டுபிடிக்க இம்பெரஷன் ஆகவும் பயன்படும் வகையில் அச்சடிக்கபட்ட தாள் எனவும் கூறினார்.

நன்றி: Malini
பகிர்வு: தினகரன் முகநூல்

Monday, July 11, 2016

ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும் அபாயம்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 வயது பெண் ஒருவர், தனக்கு ஒற்றைக் கண்ணில் தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதை மருத்துவர்களிடம் பிரச்சினையாக முன்வைத்தார்.

இதேபோல், 40 வயது பெண்ணும் இதே பிரச்சினைக்காக மருத்துவர்களை அணுகினார். இருவரையும் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதாவது, இரு பெண்களும் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ எனப்படும் ‘தற் காலிக பார்வையிழப்பு’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

வலது கண்ணில் திடீர் பார்வையிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறிய 20 வயது பெண், தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கி ரீனை தொடர்ச்சியாக பார்த்துள் ளார். அந்த சமயங்களில் இவரின் இடது கண் தலையணையில் புதைந்திருக்கும். 40 வயதைக் கடந்த மற்றொருவர், தினமும் சூரிய உதயத்துக்கு முன்பே, விழித்து, படுத்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்திகளை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த பழக்கத்தின் காரண மாகவே இருவருக்கும் தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்ப டுவதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் ஓமர் மஹ்ரூ கூறும்போது, “நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திடீரென அறைக்குள் நுழையும் போது, சில கணங்களுக்கு கண் குருடானது போல இருக்கும். எந்தளவுக்கு பளீர் வெளிச்சத்தை நேருக்குநேர் நம் விழித்திரை சந்தித்ததோ, அந்தளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும்.

ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கிரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச்சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங்களுக்குப் பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

இதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தால் நிரந்தர குருட்டுத் தன்மைக்கும் இட்டுச்செல்லும்” என்றார். அண்மையில் நடத்தப் பட்ட மற்றொரு ஆய்வில், பெற் றோரில் 27% பேரும், குழந்தை களில் 50% பேரும் ‘மொபைல் போனு’க்கு அடிமையானவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தி இந்து தமிழ்

Sunday, May 22, 2016

பட்டா வாங்குவது அவசியமா?

வீட்டுமனை வாங்குவதில் முக்கியமான ஒரு விஷயம் பட்டா வாங்குவது ஆகும். வீட்டு மனை வாங்கும்போது பத்திரப்பதிவு செய்தால் மட்டுமல்லாமல் பட்டாவும் வாங்க வேண்டும்.

வாரிசு முறையில் எழுதிவைக்கப்பட்ட வீட்டு மனையின் பட்டாவையும் நம்முடைய பெயரில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். அது அவசியமானது.

நம் சொத்து, எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் www.tn.gov.in/LA/forms என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. இந்த விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்.

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி, பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்), மனை அங்கீகரிக்கப்பட்டதா, அங்கீகாரம் இல்லாத மனையா, என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பிறகு சொத்து எந்த வகையில் விண்ணப்பதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும். அதாவது சொத்து வரி ரசீது, மின் கட்டண அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஒன்றை இணைக்க வேண்டும்.

பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.

தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

நன்றி: தி இந்து தமிழ்

Friday, May 6, 2016

கார்பைடு மாம்பழம் - ஒரு உஷார் ரிப்போர்ட் !

முக்கனி என்று அழைக்கப்படும் மா, பலா, வாழையில் மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாவை சுண்டி இழுக்கும்.மேலும் மேலும்சாப்பிட வைக்கும்.

மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில் காணும் இடங்களிலெல்லாம் மாம்பழக்கடைகள் முளைத்துள்ளன. சீசனும் மாம்பழத்தின் மீதான மக்களின் ஆர்வமும் பல இடங்களில் மாம்பழக்கடைக்காரர்களை தடுமாற வைக்கிறது. விற்பனையை அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்கவைக்கின்றனர். மாம்பழ ஆசையில் அதை பரிசோதிக்காமல் வாங்கி உண்டுவிட்டு உடல்நிலையை கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.

தற்போது தமிழகத்தின் சராசரி வெப்பநிலையே 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்று சொல்லும் அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடையில் அதிகம் விளையக்கூடிய மாம்பழம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுறுத்தலுக்கு உரியது. அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயுவின் மூலம் மா, வாழை போன்றவைகளை  12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம்  சாதாரண ஒரு காய் 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும். எனினும்,  அதிக விற்பனையை கருத்திற்கொண்டு பழ வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும். கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள்  நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் கண்டறிய முடியும்.

அவசர உலகத்தில் இதனை கண்டறியும் மனமோ,நேரமோ இல்லாத அப்பாவி மக்கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்கின்றனர்.  ஆனால் வியாபாரிகள் மத்தியில் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களைப்பற்றி வேறுவிதமாக சொல்லப்படுகிறது.



“அந்தக் காலத்தில் பழங்களைப் பழுக்கவைக்க புகைமூட்டம் போடுவார்கள். அதற்கு அவசியமான காற்றுப் புகாத அறைக்கு வாய்ப்பில்லாததால்  அதற்கு பதிலாகத்தான் நவீன முறையில் கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறோம். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். மருத்துவ ரீதியாக கால்சியம் கார்பைடால் எந்த கெடுதியும் கிடையாது. கார்பைடு பழங்கள் பற்றி வருவதெல்லாம் பெரும்பாலும் வதந்திகள்தான்” என்று மறுக்கின்றனர்.

பழ வியாபாரிகள் மனசாட்சியோடு நடக்கவும், அதனை உண்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் என்று  எண்ணி  இது போன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட கடைகளை தொடர்ந்து இரவு பகல் பாராது திடீர் திடீரென்று ஆய்வு செய்து கண்காணித்து கார்பைடு பழங்களை அழித்து மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

- அ. அப்பர்சுந்தரம்
நன்றி:விகடன்

Tuesday, April 12, 2016

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம் !

ரிசர்வ் வங்கிப் பெயரைப் பயன்படுத்தி வரும் போலி இ-மெயிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த போலி இமெயில்களை நம்பி பொதுமக்கள் பணத்தைச் செலுத்த வேண்டாம் என்றும், பொதுமக்கள் பணம் ரிசர்வ் வங்கிக்கு தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ரகுராம் ராஜன் நேற்று பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.

மும்பையில் ஸ்டார்ட்அப் தலைவர்கள் மற்றும் வங்கிப் பணிக்கு பயிற்சி பெற்றவர்கள் கூட்டத்தில் பேசிய ராஜன் இதைக் குறிப்பிட்டார்.

அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வாங்குவதற்காக ரிசர்வ் வங்கி சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்துங்கள் என வரும் இ-மெயில்கள் ரிசர்வ் வங்கி பெயரில் பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடுகின்றன. இது போன்ற போலி மெயில்கள் வந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இது போன்ற மெயில் அனுப் புபவர்கள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இது தொடர்பாக விசாரிக்கும் விதமாக தினமும் பத்து மெயில்களாவது எனக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி இப்படி அறிவித்துள்ளதா இது பொய்யா உண்மையா என கேட்கிறார்கள். ரிசர்வ் வங்கி பொதுமக்களிடமிருந்து பணம் கேட்டு யாரொருவருக்கும் எப்போதும் மெயில் அனுப்பாது. ரிசர்வ் வங்கியிடம் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 36,000 கோடி டாலர் அளவுக்கு உள்ளது. 8 லட்சம் கோடி மதிப் புக்கு அரசின் கடன் பத்திரங் கள் உள்ளன. அதனால் பொதுமக் களின் பணம் ரிசர்வ் வங்கிக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

போட்டியில் வெற்றி பெற்றுள் ளீர்கள் என்றோ, லாட்டரில் பரிசு விழுந்திருக்கிறது, உங்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும், இதற்கான பரிவர்த்தனை செலவுகளுக்கு ரூ.20 ஆயிரம் அனுப்பி வையுங்கள் என்று மெயில் வருகிறது என்றால் நம்ப வேண்டாம். சாதாரணமாக ஜங்க் இமெயில் என்று விட்டு விடுங்கள். இதை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்.

இதற்கிடையே ஒழுங்குமுறை அமைப்புக்கு உட்படும் முயற்சி களிலும் முயற்சித்து வருவதாக ரிசர்வ் வங்கி ராஜன் குறிப்பிட்டார். புதிய திட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு எற்ப ரிசர்வ் வங்கி தகவமைத்துக் கொள்ளும் முயற்சிகளில் உள்ளதை தெரிவித்தார்.

பிரச்சினையை சரியாக புரிந்து கொள்வது, கவனமாக ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது, புதிய மாற்றங்களை உருவாக்குபவர்களுக்கு உதவி செய்வதற்கு ஏற்ப பொருந்திக் கொள்வது என்று இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் ராஜன் கூறினார்.

Thursday, March 17, 2016

சோப், யூரியா கலந்த பாலை குடிக்கும் இந்தியர்கள்: அமைச்சர் திடுக் தகவல்!

மூன்றில் இரண்டு இந்தியர்கள் தரமற்ற, கலப்படமான பாலை குடிக்கிறார்கள் என பார்லி.,யில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் விற்பனை செய்யப்படும் 68 சதவீதம் பால் தரமற்றவை எனவும் தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஹர்ஷவர்தன், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சான்று நிறுவனம் நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில் 68 சதவீதம் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இது மிகவும் அபாயகரமான நோய்களை ஏற்படுத்தி வருகிறது.

பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன. தற்போதுள்ள நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும், எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.

ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம். ஸ்கேனர் விலை அதிகமாக இருந்தாலும் கூட ஒருமுறை சோதனை நடத்த 10 பைசாதான் செலவாகும். விரைவில் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் பால் எங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறது, கேன்களில் அடைக்கப்பட்ட பாலில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்டறியும் முறை அமலுக்கு வரும் என தெரிவித்தார்.

நன்றி:தினமலர்

Tuesday, March 15, 2016

விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரை விற்பனை நிறுத்தம்!

"உங்களுக்கு தலைவலியா... ஜலதோஷமா? ஆமாம்ப்பா... ஆமாம்...!

அப்படியென்றால் விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரையை எடுத்தக்கோங்க...!"  என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம், 20 வருடங்களுக்கு முன்பு நுழைந்தது விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து நிறுவனம்.

மாத்திரை என்றால் மெடிக்கல்ஸை நோக்கி ஓடுவதை மாற்றி இந்தியாவின் கடைகோடி கிராமத்தின் மளிகை கடைகள், பெட்டிக் கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும்படி செய்தது இந்த நிறுவனம். எந்த நோய் என்றாலும் முதல் அறிகுறியாக வரும், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிக்கு இந்த மாத்திரையை வாங்கி சாப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. இதைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள்,  அதிக டோசேஜ் காரணமாக புழக்கத்தில் இருந்து வரும் சில மருந்துகளை தடை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக டோசேஜ் கொண்ட 344 வகையான மருந்து உற்பத்தியை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இது தொடர்பாக அந்தந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரைகளை தயாரிக்கும்,  பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்ஷன் - 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம்,  தங்களுடைய மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இதேபோன்று கோரக்ஸ் என்ற இருமல் டானிக்கை தயாரிக்கும் நிறுவனமும் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-த. ஜெயக்குமார்
நன்றி: விகடன்