.

Pages

Showing posts with label பத்திரிகை செய்தி. Show all posts
Showing posts with label பத்திரிகை செய்தி. Show all posts

Wednesday, August 22, 2018

மதங்களை உடைத்த மனித நேயம் ! அசத்திய முஸ்லீம் இளைஞர்கள்..!

கடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை சேர்ந்து கேரளாவை நிலைகுலைய வைத்துவிட்டது.கொட்டிய பெருமழையின் பாதிப்பிலிருந்து மீள போராடுகின்றனர் கேரளா மக்கள். பல இடங்களில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

இளைஞர்கள், பொதுமக்கள், ராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்போது வரை ஈடுபட்டிருக்கிறார்கள். கேரளாவை மீட்டு கொண்டுவருவதில் பலரும் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவிலை சுத்தம் செய்து பலரையும் நெகிழ்வடைய செய்துள்ளார்கள் முஸ்லீம் இளைஞர்கள்.இவர்கள் வயநாடு அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது  அங்கிருந்த அதிகாரிகள் சிலர் அருகாமையில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு கோவிலையும் சுத்தம் செய்ய முடியுமா என தயக்கத்துடனே கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் "நாங்கள் முஸ்லீம்கள் தான். ஆனால் கோவில் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தால் உடனடியாக கோவிலை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்"  என தெரிவித்துள்ளார்கள்.இதனை அறிந்த கோவில் நிர்வாகமும் கோவிலை சுத்தப்படுத்த அனுமதி அளித்தனர். கோவிலின் கருவறையை தவிர அனைத்து பகுதியையும் முஸ்லீம் இளைஞர்கள் சுத்தம் செய்து கொடுத்தனர்.

சாதி மத வேறுபாடுகள் அனைத்தையும் உடைத்து மனிதம் மட்டுமே உன்னதமானது என்பதை நிருபித்து விட்டார்கள் இந்த இளைஞர்கள்.

Source: http://www.puthiyathalaimurai.com/news/india/50306-muslim-youths-help-clean-flood-hit-temples.html

Tuesday, March 20, 2018

இந்திய எதிர்காலத்திற்கு ஆபத்து! வரலாற்றை திரிக்கும் வேலைக்கு குழு அமைத்தது மோடி அரசு!

வேண்டுகோள்: 
அன்புநிறை வாசகர்களே! இது ஒரு நீண்டதொரு பெரிய பதிவு என்றாலும் பயனுள்ளதொரு கட்டூரை. இந்த வரலாற்று திரிபின் மூலம் பாதிக்கப்படப்போவது முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் மட்டுமல்ல மாறாக பார்ப்பனர், பனியாக்கள் அல்லாத ஒட்டுமொத்த இந்தியர்களுமே என உணருங்கள். 

படிக்கும் போது ஒருவகையான சோர்வுத்தன்மையும் கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது போன்ற உணர்வும் ஏற்படும் என்றாலும் தயவுசெய்து கடைசிவரை படித்து ஆபத்தை உள்வாங்கிக் கொள்ள முற்படுங்கள் என வேண்டுகிறேன். 

நேரடியாகவே ஆங்கிலத்தில் படித்துக் கொள்ள விரும்புபவர்களுக்காக அந்த கட்டூரையின் சுட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. 

http://gulfnews.com/news/asia/india/by-rewriting-history-hindu-nationalists-aim-to-assert-their-dominance-over-india-1.2183557

கருத்தாக்கத்தில் தவறு காண்பவர்கள் தயவுசெய்து காரணத்துடன் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். (நம்ம ஊரான்)

இந்தியாவின் வரலாற்றை மாற்றி (திரித்து) எழுதுவதன் மூலம் இந்து தேசியவாதிகள் (என கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்) பிற இனங்களின் மீதான தங்களது மேலாதிக்கத்தை மீண்டும் வன்மையாக நீட்டிக்க முயல்கின்றனர்.

கடந்த வருட ஜனவரி மாதத்தின் ஒருநாள் மத்திய டெல்லியிலுள்ள ஒரு வெள்ளை மாளிகையில் கல்வியாளர்களின்(?) குழுவொன்று கூடியது. அவர்கள் ஒன்றுகூடியதன் நோக்கம் 'இந்திய வரலாற்றை எவ்வாறு திருத்தி (திரித்து) எழுதுவது என்பது பற்றி ஆலோசிப்பதற்காகவே. (During the first week of January last year, a group of Indian scholars gathered in a white bungalow on a leafy boulevard in central New Delhi. The focus of their discussion: how to rewrite the history of the nation).

இந்த கல்வியாளர்கள் (எனும் போர்வைக்குள் ஒழிந்துள்ள (காவிச் சிந்தனைக்) குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்து காவி தேசியவாதத்தை பின்னனியாக கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் சத்தமின்றி நியமிக்கப்பட்டுவிட்ட சங்கதி தற்போது தான் முதன்முறையாக வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

இந்த குழுவினரின் (சதி) ஆலோசணை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அதன் உறுப்பினர்கள் அளித்த நேர்காணலில், எங்களிடமுள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புக்களும், மரபணு ஆய்வுகளும் இந்த தேசத்தின் ஆதிகுடிகள் இந்துக்களே, மக்களும் மதமும் வேறு எங்கிருந்தும் வந்தவையல்ல, அவர்களிடமுள்ள வேதங்கள் (புராணங்கள்) உண்மையானவையே அன்றி அவை (மூட நம்பிக்கையில் அமைந்த) கற்பனை கதைகள் அல்ல என கூறினர்.

14 பேர் கொண்ட இந்த கல்வியாளர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக்குழுவின் ஒட்டுமொத்த கருத்து என்னவெனில், சுமார் 1.3 பில்லியன் மக்கள் தொகையுடனும் பல்லின மதங்களின், இனங்களின் கலவையாக காட்சியளிக்கும் இந்த இந்தியாவை அரசியல் அதிகாரத்தையும் மீறி என்றென்றும் தங்களுடைய கைக்குள் வைத்திருக்க விரும்புகின்றனர் இந்து தேசியவாதிகள் (எனக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்). எனவே, இந்தியா இந்து தேசம், இந்துகளுக்கு மட்டுமேயான தேசம் என்பதற்கு ஏற்ப இந்தியாவை கட்டமைக்க வேண்டியுள்ளதாம்.

இந்த கட்டமைப்பின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்து நிலவுகின்ற பன்முகத்தன்மைகளை அடியோடு நீக்க விரும்புகின்றனர். இன்றைய நவீன இந்தியா என்பது குடியேற்றங்கள், ஆக்கிரமிப்புக்கள் மற்றும் மன, மத மாற்றங்கள் எனும் 'பல வண்ணக்காட்சிகள்' கொண்ட மக்கள் தொகை மூலம் வேறுன்ற செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையிலேயே பெரும்பான்மை இந்துக்களுக்கு அடுத்து இஸ்லாமியர்களும் இதரர்களும் சுமார் 240 மில்லியன் அளவுக்கு இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த குழுவின் தலைவரான கே.என். தீக்ஸித் கூறியதாவது, பண்டைய வரலாற்றின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசுக்கு உதவும் ஒரு அறிக்கையை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம் எனக்கூறியதை இக்குழுவின் சூத்திரதாரியாக விளங்கும் மத்திய கலாச்சாரத் துறை மந்திரி மகேஷ் ஷர்மா என்பவர் உறுதிபடுத்தியதுடன் 'இந்த குழுவினரின் வேலை இந்திய வரலாற்றை மாற்றி எழுதும் எங்களுடைய ஒரு பெரிய (சதி) திட்டத்தின் சிறுபகுதியே எனக்கூறினார்.

2014 ஆம் ஆண்டு மோடியின் தலைமையில் இந்த அரசு பதவியேற்றதில் இருந்து முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அதிகரித்து காணப்படும் மதப் பாகுபாடுகள் ஆகியவை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகரித்துள்ளது. ஆட்சியாளர்களால் இதுபோல் முஸ்லீம்கள் எப்போதும் ஒரேயடியாக ஒதுக்கப்பட்டதே இல்லை என அகில இந்திய மஜ்லீஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியின் தலைவர் அஸதுத்தீன் உவைஸி கூறினார்.

மேலும் இந்த மத்திய அரசு இந்திய முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்துகின்றது எனவும் கூறினார். இக்கட்டூரையின் மீது பிரதமர் மோடியின் கருத்தை பெற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முயன்றபோது அவர் கருத்து கூற முன்வரவில்லை.

வகுப்பறைகளுக்குள்:
இந்தியாவில் இதுபோன்ற வரலாறுகளுக்கு எதிரான சித்தாந்த விவாதங்களை கிளப்பி விடுவதற்கு பின்னுள்ளது ராஷ்டிரிய சுயம் சேவக்சங்க் என்கிற ஆர்எஸ்எஸ் என அழைக்கப்படுகின்ற (பார்ப்பனர்களை தலைவர்களாக கொண்ட) இயக்கமாகும். இந்த இயக்கத்தின் உதவியுடன் தான் நரேந்திர மோடி தேர்தலில் வென்று பிரதமரானார், நீடிக்கின்றார். எனவே தான் இந்த ஆர்எஸ்எஸ் (பயங்கரவாத சிந்தனைகளில் ஊறிய) இயக்க உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக விவசாயம், நெடுஞ்சாலை, உள்நாட்டு பாதுகாப்பு (போன்ற அனைத்து முக்கியத்) துறைகளில் நுழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள சுமார் 170 மில்லியன் முஸ்லீம்களின் முன்னோர்களும் ஒருகாலத்தில் இந்துவாக இருந்தவர்கள் தான் என்பதால் முஸ்லீம்கள் இந்தியாவை பாரத மாதாவாகவும், இந்து மதத்தை தங்களின் வாழ்வியலின் ஒரு அங்கமாகவும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வன்மையாக வற்புறுத்துகிறது. இந்த இயக்கத்தில் தன் சிறுவயது முதல் அங்கம் வகிப்பவர்களில் மோடியும் ஒருவர். கலாச்சாரத்துறை மந்திரியான மகேஷ் சர்மா தன்னுடைய நினைவு தெரிந்த நாளிலிருந்து முற்றிலும் கட்டுப்பட்டதொரு ஆர்எஸ்எஸ் உறுப்பினராக உள்ளதாக புளங்காங்கிதப்படுகிறார்.

இந்தியாவின் தேசிய அடையாளத்தைப் பற்றிப் பேசும் ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, இந்தியாவின் உண்மையான நிறம் காவியே. இந்தியாவில் (மனுதர்மா அடிப்படையில்) கட்டாய கலாச்சாரம் மாற்ற ஏற்படுத்த வரலாற்றை (திரிபுபடுத்தி) மாற்றி எழுத வேண்டியதும் கட்டாயமே என பகிரங்க சாட்சியம் தருகின்றார்.

ஆர்எஸ்எஸ் (எனும் பார்ப்பனிய) இயக்கத்தின் வரலாற்று ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவுள்ள பால்முகுந்த் பாண்டே, (வரலாற்றை மாற்றி எழுதுவது தொடர்பாக கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாவை அடிக்கடி சந்தித்து வருவதாக (நடைபெற்று வரும் சதியை மறைக்காமல்) கூறுகின்றார்.

மேலும் இந்துக்களின் பண்டைய நூல்கள் வெறும் மூடநம்பிக்கைகள் அல்ல என நிறுவ (பீஜேபி ஆட்சியிலிருக்கும்) இதுவே சரியான தருணம் எனவும் வாக்குமூலம் தருகின்றார்.

பள்ளிக்கல்வி பாடங்களிலும், கல்விசார் ஆய்வுகள் மீதும் எவ்வாறு இந்து வரலாற்றை உட்புகுத்துவது என்பது குறித்து ஆய்வுக்குழு விரைவில் வழிகாட்டும் என எதிர்பார்ப்பதாக மகேஷ் ஷர்மா கூறினார். 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது முதல் இன்று வரையான இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய முழுமையான ஆய்வு மற்றும் உலகின் பிற காலச்சாரங்களின் மீது அதன் தாக்கம் குறித்து ஆராயும் குழுவென்றே அரசின் ஆவணங்களில் இக்குழுவினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்கள் (பார்ப்பனர்கள்) சுமார் 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து ஊடுருவியவர்கள் என்று போதிக்கப்பட்டு வரும் வரலாறு நீக்கப்பட்டு இந்தியாவில் இந்து மதமே முதன்மையானது, முதலில் தோன்றியது என பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் எனவும் மகேஷ் ஷர்மா தெரிவித்தார். (அதாவது மகேஷ் ஷர்மாவின் இக்கூற்றுப்படி, பதிலை ஆய்வுக்குழுவிடம் தந்துவிட்டு அதற்கேற்றவாறு கேள்வியை தயாரிக்கச் சொல்லியுள்ளனர்)

இடப்பெயர்வுகளால் ஒன்றிணைந்த பன்முக கலாச்சார மக்களால் உருவான சங்கமமே 'இன்றைய இந்தியா' என்பதையே ஏற்க மறுக்கின்றனர் இந்து (பார்ப்பன) தேசியவாதிகள் என்று கூறிக்கொள்வோரும், மோடியின் சகாக்களும். இந்தியா இந்து என்ற ஆதி குடிகளால் இயல்பாய் உருவானதே என 'இல்லாத ஒன்றை' நம்பச் சொல்கின்றனர். யார் இந்த மண்ணின் மைந்தர்கள் என வலிந்து நிறுவுவதே இந்து தேசியவாதிகள் (எனும் பார்ப்பனர்கள்) முன்னுள்ள பெரும் சவாலாகும்; ஏனெனில் அவர்கள் உருவாக்க நினைக்கும் இந்து ராஜ்ஜியத்தில் இந்துக்களே முதன்மையான பூர்வீகக்குடிகள் என நிறுவினால் மட்டுமே இந்து மதம் (பார்ப்பன மதம்) ஒரு இறக்குமதி செய்யப்பட்ட மதமல்ல என்பதையும் நிறுவ முடியும் என புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ரோமிலா தாப்பர் தெரிவிக்கின்றார்.

தங்களே அந்த மூதாதையர் வழிவந்த வம்சாவளியினர் என்பதையும் முன்னோர் வழிவந்ததே தங்களின் மதம் என்பதையும் வலிந்து உறுதிப்படுத்த (பார்ப்பன) இந்து தேசியவாதிகள் என அழைத்துக் கொள்வோர் மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார் பண்டைய இந்திய குறித்த பல வரலாற்று ஆய்வு நூல்களின் ஆசிரியரும் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவருமான புகழ்பெற்ற பெண் வரலாற்றாசிரியர் 86 வயது ரோமிலா தாப்பர்.

இந்து தேசியவாதிகள் என அழைத்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் சுமார் 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து வந்தேறியவர்கள் என்ற வரலாற்று கோட்பாடு பிரிட்டீஷ் இந்தியாவின் காலத்தில் தழுவப்பட்டது என காவி கட்சியினர் குமுறுகின்றனர்.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் முதல் இந்தியப் பிரதமராக விளங்கிய ஜவஹர்லால் நேரு அவர்கள் 'இந்தியாவின் மதச்சார்பின்மை கோட்பாட்டையும், முஸ்லீம்களின் சகிப்புத்தன்மையையும் போற்றி வந்ததுடன் இந்திய கலாச்சாரம் என்பது இந்து கலாச்சாரமே என குறிப்பது முற்றிலும் தவறானது என்று கூறிச் சென்றுள்ளார்.

நேரு துவங்கி சுமார் 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்ட அவரது காங்கிரஸ் கட்சியும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை மதித்ததுடன் அவர்களை மத அடிப்படையில் பாகுபடுத்தி நடத்துவதையும் 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனம் சட்டப்பூர்வமாக தடுத்துப் பாதுகாத்தது.

வலதுசாரி இந்துக்கள் (பார்ப்பனர்கள்) இந்திய சரித்திரத்திற்கு எதிராக புதியதொரு இந்து காவி முகத்தை நிறுவுவதற்கான பிரச்சாரத்தை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகரான சசிதரூர் கூறினார்.

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இந்தியர்கள் பன்முகத்தன்மையில் உறுதி கொண்டு நிலைத்துள்ளதை கலைத்துப் போடும் வகையில் இந்து தேசியவாதம் எனும் பிளவு உணர்வை மக்களிடையே தூண்டி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இந்து மத நூற்களில் கூறப்பட்டுள்ள புனைவுகள்:
இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் மேலாண் இயக்குனரை சமீபத்தில் 14 கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை உறுப்பினர்களாக கொண்ட வரலாற்றை திருத்தி எழுதவுள்ள குழுவினர் அதன் தலைவரான திக்ஷீத் தலைமையில் சந்தித்து உரையாடியது. தீக்ஷீத் என்பவரும் அதே தொல்பொருள் மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரி என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த வரலாற்றுத் திருத்த (திரித்தல்) கல்விக்குழுவினர் தங்களின் ஆய்வறிக்கையை (?) பாராளுமன்றத்தில் கலாச்சார துறை மந்திரி மகேஷ் ஷர்மாவிடம் சமர்ப்பிப்பர் பின்பு மனிதவள அமைச்சகத்திற்கு அந்த வரலாற்று கண்டுபடிப்புகளை(?) கல்விக்கூட பாடப் புத்தகங்களில் பாடங்களாக வெளியிட பரிந்துரை செய்வார். கல்வி மற்றும் கல்வியறிவுத் திட்டங்களுக்குப் பொறுப்பான மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மற்றொரு கடும்போக்கு ஆர்எஸ்எஸ்காரரான பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

கலாச்சார அமைச்சகம் பரிந்துரை செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் மனிதவள அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொள்ளும். பள்ளி, கல்லூரிகளில் தற்போது கற்பிக்கப்பட்டு வரும் வரலாறு குறித்து கேள்வி கேட்கும் துணிவு தங்களது அரசங்கத்திற்கு மட்டுமே உள்ளது எனவும் மார்தட்டுகிறார் பிரகாஷ் ஜவடேகர்.

வரலாற்று ஆய்வுக்கமிட்டி தனது முதலாவது கூட்டத்தில் இயற்றியுள்ள தீர்மானத்தில், பண்டைய இந்து நூல்களுக்கும் பல்லாண்டுகள் பின்னுள்ள பண்டைய இந்தியாவிற்கும் இடையில் சான்றுகளைப் பொருத்தி ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என அதன் தலைவர் திக்ஷித் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்பை ஏற்படுத்துவதன் வழியாக இந்து புராண நூற்களில் கூறப்பட்டவை அனைத்தும் உண்மையானவை, இந்தியர்கள் அனைவரும் பண்டைய இந்துக்களின் வழிதோன்றல்களே என இருபலன்களை முடிவாக பெறமுடியும்.

தொல்பொருள் கள ஆய்வுகள், மனித எச்சங்கள் மீதான கார்பன் டேட்டிங் போன்ற காலக்கணிப்புகள் போன்ற ஆய்வுகளையும் நடத்துவதன் மூலம் தங்களுக்கு தோதானதொரு பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஏதுவான ஓரு குறுக்கு யுக்தியையும் வழங்கி, தங்களின் மறைவான குறிக்கோளில் வெற்றியடைய விரும்புகிறது இந்த காவி ஆய்வுக்குழு.

கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது, இந்து வேதங்கள் அனைத்தும் உண்மையானவையே என நிறுவ (திணிக்க) விரும்புகிறோம். ராமாயணம் என்ற புராணத்தைப் பற்றி குறிப்பிடும் போது அது 'மனித உருவில் கடவுள் வாழ்ந்த காவியம்' எனவே, ராமாயணத்தை போற்றி வணங்குகிறேன், அது ஓர் வரலாற்று ஆவணம் எனவும் நம்புகிறேன். இவற்றை புனைவு என்று சொல்பவர்களின் நம்பிக்கை தவறானாதாகும். இந்த புராணம் ராமன் எவ்வாறு தன் மனைவியை ஒரு ராட்சச அரசனிடமிருந்து மீட்டான் என விவரிக்கும் நிகழ்வுகள் இந்தியர்களுக்கு தங்களின் பாலினக் கடமையுணர்வுகளை கற்றுத்தருகின்றது என கூறினார்.

பழங்கால வேதங்களில் சொல்லப்பட்டுள்ள 'மாய நதியான' சரஸ்வதியை அகழ்ந்தெடுப்பதற்கு முன்னுரிமை தருவோம். மேலும் (பார்ப்பன) வேதங்களில் காணப்படும் சாஸ்திர நிகழ்வு காலங்களை ஆய்வு செய்வதுடன் மற்றொரு புராணமான மஹாபாரத்தில் சொல்லப்பட்டுள்ள போர் நடைபெற்ற களங்களையும் வெளிக்கொண்டு வருவோம் என மந்திரி மகேஷ் சர்மாவும் ஆய்வுக்குழுவின் தீர்மானங்களும் சொல்கின்றன.
கிருஸ்தவர்களின் பைபிளில் பூர்வக்காலத்தில் ஏற்பட்டதொரு பிரம்மாண்ட வெள்ளப் பெருக்கும், நோவா மற்றும் அவரது கப்பல் பற்றியும் பேசப்படுகின்ற அதே நம்பிக்கையை பின்பற்றி இந்தியாவின் பண்டைய வரலாறுகளையும் ஆராய்ந்தால் இன்று கட்டுக்கதைகள் என சொல்லப்படுபவையும் நாளை உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும். குர்ஆனையும் பைபிளையும் வரலாற்றின் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளும் போது ஏன் இந்து (பார்ப்பன) வேதங்களை இந்தியாவின் வரலாறாக ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது எனவும் சர்மா வினவினார்.

மோடியால் உத்தரவிடப்பட்டு இப்படியொரு வரலாற்று (புரட்டு) ஆய்வுக்குழு உருவாக்கப்படவில்லை என்றும் இது மந்திரி சர்மாவின் ஏற்பாட்டிலேயே நடைபெற்று வருவதாகவும் அரசு ஆவணங்கள் சொல்கின்றன என்றாலும் இத்திட்டம் மோடியின் கண்காணிப்பில் நடைபெற்று வருவதை அவரது செயல்கள் உறுதி செய்கின்றன. 2014 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஒரு மருத்துவமனை திறப்புவிழாவில் உரையாற்றிய மோடி இந்து (பார்ப்பன) வேதங்களில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான சாதனைகளையும் யானைத் தலையுடன் காணப்படும் விநாயகர் பற்றியும் புகழ்ந்து பேசினார்.

நாங்கள் வணங்கி வழிபடும் விநாயகரின் யானைத்தலை தோற்றம் பிளாஸ்டிக் சர்ஜரி அந்தக்காலத்தில் இருந்துள்ளதையும், இத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் அன்றைக்கு இருந்துள்ளதாலே இது சாத்தியமாகி இருக்கின்றது, இதுபோன்று எங்கள் மூதாதையர்கள் பங்களிப்புச் செய்த பல சரித்திரங்கள் உள்ளன எனக் கூறினார் என்றாலும் இதுகுறித்து மேல்விளக்கங்கள் பெற முயன்ற ராய்ட்டாஸ்; செய்தி நிறுவனத்திற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அறிவியல்பூர்வ அணுகுமுறை:
14 பேர் கொண்ட இந்த வரலாற்று (புரட்டு) ஆய்வுக்குழுவின் 9 உறுப்பினர்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பேட்டி கண்டது. தற்போது அறியப்பட்டுள்ள இந்திய வரலாற்றை விட நாம் அறியாத இந்திய வரலாறு மிகவும் பழமையானது, இந்தப் பழமையான வரலாற்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருள் மற்றும் இன்னபிற ஆதாரங்களை பொருத்துவதே தங்கள் பணி என ஒப்புக் கொண்டனர் என்றாலும் தங்கள் குழுவின் உள்ளார்ந்த நடவடிக்கைகள் குறித்து பேச மறுத்துவிட்டனர். பேட்டியளித்த இந்தக் குழுவில் ஒரு புவியியல் துறை அறிஞர், தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள், சமஸ்கிருத மொழி அறிஞர்கள் மற்றும் 2 அரசியல்சார் அரசுப் பிரதிநிதிகளும் அடக்கம்.

இந்த வரலாற்று (புரட்டு) ஆய்வுக்குழுவில் ஒருவரும் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை பேரசிரியருமான சந்தோஷ் குமார் சுக்லா என்பவர் கூறியதாவது, இந்து (பார்ப்பன) கலாச்சாரம் பல மில்லியன் வருடங்கள் பழமையானது என தான் உறுதியுடன் நம்புவதாக ராய்ட்டரிடம் தெரிவித்துள்ளார். (அவர் நம்பிக்கை அவர் இஷ்டம், அந்த நம்பிக்கையை ஏன் பிற இந்தியர்களை நம்பச் சொல்லி வற்புறுத்த வேண்டும்). டெல்லி பல்கலைகழகத்தின் முன்னாள் மொழியியல் துறை தலைவரான ரமேஷ் சந்த் சர்மா என்பவர், தான் கண்டிப்பாக அறிவியல்பூர்வ அணுகுமுறைகளை மட்டுமே கடைபிடிக்கப்போவதாகவும், எந்த கருத்தியல் நிர்பந்தத்திற்குள்ளும் என்னை நுழைத்துக் கொள்ள மாட்டேன் என திருவாய் மலர்ந்துள்ளார்.

இந்திய கூட்டரசின் சார்பில் மத்திய கலாச்சார துறையின் கீழ் ஆண்டுக்கு சுமார் 400 மில்லியன் டாலர்கள் (1.46 பில்லியன் ரூபாய்கள்)இந்திய வரலாற்றை (திரித்து) திருத்தி எழுதுவதற்கும், அதுகுறித்து பிரச்சாரம் செய்வதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஒரு மருத்துவரும், பல சங்கிலித் தொடர் மருத்துவமனைகளின் உரிமையாளருமான மகேஷ் சர்மா கலாச்சார (பண்பாட்டுத்) துறை மந்திரியாக நியமிக்கப்பட்ட பின், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படியே செயல்படுவதாக (வஞ்சகப்) புன்னகையுடன் கூறுகின்றார். மத்திய டெல்லியில் உள்ள அவரது பங்களாவின் வரவேற்பறை வாசலில் பாரத மாதா எனும் கற்பனை சித்திரத்துடன் அவர் மதிக்கும் முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் படங்களே அலங்கரிக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இவர் தனது அமைச்சகத்தின் சார்பாக பல நூறு கருத்தரங்குகளை, பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி 'நமது புகழ்பெற்ற கடந்த கால மேலாதிக்கத்தை' (மனுதர்ம அடிப்படையில் பார்ப்பனர்களைவிட மற்ற மனிதர்கள் யாவரும் தாழ்ந்தவர்களே, பார்ப்பனர்களுக்கு அவர் அடிமைகளே எனும் உருப்படாத தத்துவத்தை) நிலைநாட்டுவதே தங்களின் பிரதான நோக்கம் என தெரிவித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியால் (நேருவால்) கடைபிடிக்கப்பட்டு அவர்வழி வந்த காங்கிரஸ் அரசுகளாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த தாராளவாதம் மற்றும் மதச்சார்பற்ற தத்துவங்களுக்கு எதிராக புதிய சிந்தனைக் களம் ஒன்றை உருவாக்குவது அவசியம் எனவும் கூறினார்.

கலாச்சாரத் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது செயல்படும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் வலதுசாரி இந்து தலைவர்கள் (ஆர்எஸ்எஸ்) என அறியப்படுபவர்களின் நிகழ்ச்சிகளால் வசப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பாஜகவின் தலைவர் அமீத்ஷாவால் முன்னாள் பிரதமர் நேரு மேற்கத்திய சிந்தனைகளால் பீடிக்கப்பட்ட நபராக சித்தரிக்கப்பட்டார். எங்களுடைய கொள்கைகள் மீது இந்திய மண்ணின் வாசனை நிரம்பியிருக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவின் வரலாற்றில் நமது (பார்ப்பனர்) கடந்த காலத்தை பற்றிய உண்மைகளை (பொய்களை) புகுத்த (திணிக்க) இதுவே சரியான தருணம் எனவும் கூறியிருந்தார்.

இந்த வரலாற்று திரிபு கொள்கைகளுக்கு பின்னுள்ளவர்கள் யார்? (மேற்காணும் பதிவின் கருத்துச் சுருக்கம்)

1. இந்திய வரலாறு குறித்த சர்ச்சைக்குரிய விவாதங்களை ஏற்படுத்துவதன் பின்னனியில் தீவிரப் பழமைவாத இயக்கமான ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கமே உள்ளது. 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பிஜேபி கட்சியின் ஆட்சியமைய உதவியதுடன் முக்கிய அமைச்சகங்களான விவசாயம், நெடுஞ்சாலைகள், உள்நாட்டு பாதுகாப்பு போன்ற பலவற்றில் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டில் வார்த்தெடுக்கப்பட்டவர்களையே அமைச்சர்களாக அமரச் செய்துள்ளது.

2. வம்சாவளி இந்தியர்களான 172 மில்லியன் முஸ்லீம்களும் தங்களின் மூதாதையர் மதம் இந்து என்பதையும், தாங்கள் அனைவரும் பாரதத் தாயின் புதல்வர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என ஆர்எஸ்எஸ் கட்டாயப்படுத்துகின்றது. இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் குழந்தைப்பருவம் முதல் ஒரு தீவிரத் தொண்டராக இருப்பவர் தான் பிரதமர் நரேந்திர மோடி. பண்பாட்டுத்துறை மந்திரி மகேஷ் சர்மாவின் அதிகாரபூர்வ சுயசரிதையிலும் தான் ஒரு 'முற்றிலும் அடிபணிந்த ஒரு தீவிர ஆர்எஸ்எஸ்காரர்' என பகிரங்கமாகவே எழுதியுள்ளார்.

3. பார்ப்பனர்களின் இயக்கமான ஆர்எஸ்எஸின் செய்தித் தொடர்பாளரான மோகன் வைத்யா என்பவர் கூறியதாவது, காவியே இந்தியாவின் நிறம். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைக்க (திரிக்க) வேண்டியது அவசியம் என்றார். மேலும் ஆர்எஸ்எஸின் வரலாற்று ஆராய்ச்சி குழுவின் தலைவரான பால்முகுந்த் பாண்டே தான் தொடர்ந்து மகேஷ் சர்மாவை சந்தித்து வரலாற்றை (திரிப்பது) திருத்துவது சம்பந்தமாக பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன் 'இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க இதுவே சரியான தருணம் என்றும், புராணங்கள் கட்டுக்கதையல்ல அவை வரலாறு என நிறுவ வேண்டும் எனவும் கூறினார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Wednesday, January 24, 2018

அதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம் !

அதிராம்பட்டினம், ஜன.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' புலனாய்வு தமிழ் மாத இதழ் அறிமுகம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாத இதழின் தஞ்சை மாவட்ட நிருபர் ஏ.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழகத்தில் மாதந்தோறும் வெளிவரும் சரித்திரம் மாத இதழ் வாசர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதில், வாசகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

Wednesday, December 27, 2017

விவசாயத்தில் சாதித்துக்காட்டிய அதிராம்பட்டினம் பிரமுகர் (படங்கள்)

ஒய்சூல் கருணை
நேரடித் தெளிப்பில் சாதித்துக்காட்டிய ஒய்சூல் கருணை!- பிலிப்பைன்ஸ் இவரை மதிக்கிறது.. தமிழகம் இவரை மறக்கிறது!

வறட்சியிலும், டெல்டா உள்ளிட்ட வேளாண் மாவட்டங்களில் விவசாயிகள் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கிறார்கள். என்றால் அதற்கு அவர்கள் கடைபிடித்த நேரடி விதைத் தெளிப்பு முறையும் ஒரு காரணம். வேதாரண்யத்தைத் தவிர்த்து ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்துக்கு இந்த நேரடித் தெளிப்பு முறையை முறைப்படி அறிமுகம் செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்த முகமது இப்ராஹீம் மகன் ஒய்சூல் கருணை.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இன்றைக்கு பல இடங்களில் தண்ணீர் மற்றும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நேரடித் தெளிப்பு முறையில் விவசாயம் செய்கிறார்கள். இதன் பரிணாம வளர்ச்சியாக வேளாண் விதைப்பு இயந்திரங்களும் வந்துவிட்டன. ஆனால், இத்தனைக்கும் அடித்தளம் போட்டுக் கொடுத்து நம்பிக்கையை விதைத்த சாமானியர் அதிராம்பட்டினம் ஒய்சூல் கருணை என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கே தெரியாது.

முன்பு, நேரடி விதைப்பு முறை அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்கத்தில் இருந்தது. ஆனால், நேரடி விதைப்பு செய்வதால் சரியான சாகுபடி கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லாததால் அப்போது இதை யாரும் முழுமையாகப் பின்பற்றத் தயங்கினார். வேதாரண்யம் பகுதியானது காவிரித் தண்ணீரும் சரியாகப் போய்ச் சேராத பகுதி என்பதால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இந்தப் பகுதியில் மட்டும் நேரடி விதைப்பு முறை சிறிய அளவில் இருந்தது.

கருணையின் வயலில்..
இந்த நிலையில் 1987-ல், பருவமழை பொய்த்துப்போய் இப்போது போலவே டெல்டாவின் குறுவை சாகுபடியை பாதித்தது. அப்போது, ஒருபோக சம்பாவையாவது சாகுபடி செய்திட முடியுமா என்ற அச்சத்துடன் விவசாயிகள் நாட்களை நகர்த்தினர். ஆனால், மற்ற விவசாயிகளைப் போல துவண்டுவிடாமல், நேரடித் தெளிப்பு செய்து, அதில் வளமான சாகுபடியை எடுத்துக்காட்டினார் ஒய்சூல் கருணை.

அந்த வருடம் நவம்பர் 9-ல் திறக்கப்பட்ட மேட்டூர் தண்ணீருக்காக காத்திருக்காமால் ஜூன் மாதமே 12 ஏக்கரில் நேரடியாக விதை நெல்லை தெளித்து சாகுபடியைத் தொடங்கினார் ஒய்சூல். அவ்வப்போது வந்து தூறிவிட்டுப் போன மழையே அந்த நெல்லை முளைக்க வைக்கப் போதுமானதாக இருந்ததால் ஆகஸ்ட் மாதமே நெற்கதிர்கள் முகம்காட்டத் தொடங்கின. காவிரிக்காக காத்திருந்த சக விவசாயிகள், கருணையின் வயலில் கதிர்விட்டு நின்ற நெல்மணிகளைக் பார்த்து வியந்தார்கள்.

இந்த விஷயத்தை அப்போதைய வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ஆண்டனியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் காவிரிப் பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன். அதன் பிறகு தான் மற்ற விவசாயிகளையும் நேரடித் தெளிப்பு முறையை பின்பற்றும்படி சிபாரிசு செய்தது தமிழக வேளாண்துறை. அன்றைக்கு ஒய்சூல் கருணையின் மூலமாக வெளியுலகத்துக்கு பரவலாக்கப்பட்ட நேரடித் தெளிப்பு முறைதான் இப்போது டெல்டா விவசாயிகளுக்குக் கைகொடுத்துக் கொண்டிருக்கிறது.

வங்கிகள் கடன் வழங்க மறுத்தன
ஒய்சூல் கருணையின் நேரடித் தெளிப்பு முறை குறித்து மன்னார்குடி ரெங்கநாதன் நினைவுகூர்ந்தார். “குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் முன்பெல்லாம் நடவு முறையை மட்டுமே நம் பக்கத்து விவசாயிகள் பெரிதும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஒய்சூல் கருணையின் சாகுபடி சாதனையை பார்த்துவிட்டு நானே வியந்தேன். சிலர், ‘இது எப்படி சாத்தியம்?’ என்றார்கள். ஒரு சிலர், நம்பிக்கை வைத்து அதே ஆண்டில் நேரடித் தெளிப்பு முறையில் இறங்கினார்கள். ஆனால், விதிகளைக் காரணம் காட்டி நேரடித் தெளிப்பு சாகுபடிக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்துவிட்டன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டும் உரிய நேரத்தில் நமக்கு காவிரி தண்ணீர் வராததால், அரசே நேரடித் தெளிப்பு முறையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. இதற்காக, வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ஆண்டனி தலைமையில் மன்னார்குடியில் அப்போது விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போதைய தஞ்சை ஆட்சியர் மச்சேந்திரநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், ‘நேரடித் தெளிப்புக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிலிப்பைன்ஸ் அங்கீகாரம்
அதன்படிதான், இன்றுவரை நேரடித் தெளிப்புக்கு வங்கிகள் கடன் வழங்கிவருகின்றன” என்று சொன்ன ரெங்கநாதன், “கடந்த ஆண்டு ஜூலையில் ஒய்சூல் கருணை காலமாகிவிட்டார். நேரடித் தெளிப்பு என்ற ஒரு சிக்கனமான சாகுபடி முறையை அறிமுகம் செய்து சாதித்த அவரை அரசு அங்கீகரிக்கவில்லை. அவரை கவுரவிக்கும் விதமாக, நேரடித் தெளிப்பு முறைக்கு ஒய்சூல் கருணையின் பெயரைச் சூட்ட வேண்டும். வேளாண் சம்பந்தப்பட்ட முக்கிய இடங்களிலும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்திலும் அவரது உருவப்படத்தை திறக்க வேண்டும்” என்றார்.

தமிழக அரசு ஒய்சூல் கருணையை அங்கீகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஒய்சூல் கருணையின் படத்தை வைத்து அவரை அங்கீகரித்துள்ளனர். இதை, தான் அங்கு சென்றிருந்தபோது பார்த்து வியந்ததாகக் கூறும் நெல் இரா.ஜெயராமன், “மறக்கப்பட்டுவிட்ட ஒய்சூல் கருணையின் பெயரை மீண்டும் இந்த மண்ணுக்கு நினைவுபடுத்தி அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது” என்கிறார்.

எங்களுக்கும் வருத்தம்
ஒய்சூல் கருணையின் புதல்வர்கள் லியாகத் அலியும், இதயத்துல்லாவும் நம்மிடம் பேசுகையில், 
“எங்க அத்தா, சாதித்துக் காட்டிய நேரடித் தெளிப்பு முறையை மற்றவர்கள் பின்பற்றிய போதும், பேட்டிகளில் அவரே சொன்னபோதும் எங்களுக்கு அதன் அருமை தெரியவில்லை. நாங்களே அவரது வழியில் விவசாயம் செய்துபார்த்த பிறகுதான் அருமை புரிகிறது.

நேரடித் தெளிப்பு மட்டுமல்ல.. மழை வெள்ளத்தின் போது, ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டவும், தண்ணீரில் மூழ்கியிருக்கும் பயிரைக் காப்பது குறித்தும் அத்தா சொல்லிக் கொடுத்த யுத்திகள்தான் இப்போதும் எங்களைக் காக்கின்றன. விவசாயத்துக்கு இப்படி யொரு அருமையான உத்தியைக் கற்றுத்தந்த ஒரு சாமானியனுக்கு அரசு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கும் இருக்கிறது” என்று சொன்னார்கள்.

நன்றி: தி இந்து தமிழ்
(26-12-2017)

மின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம்!

மின்சாரம் குறித்த புகார்களை வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கும் புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, மாவட்டம் வாரியாக வாட்ஸ்-அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்தடை, மின்கம்பம் சேதம், தெருவிளக்கு எரியாமல் இருத்தல், பில்லர் பாக்ஸ்கள் சேதம், மின்சார ஒயர்கள் அறுந்து விழுதல், மின்கேபிள்கள் சேதம் உள்ளிட்ட புகார்களை நுகர்வோர்கள் கால்சென்டர் மூலம் மின்வாரியத்துக்குத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நுகர்வோர்கள் மேற்கண்ட புகார்களை தற்போது வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கும் புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ளவர்கள் 9445850829 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு 9444371912, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு 9445851912, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 9486111912, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 9443111912, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு 9445855768, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 9442111912, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு 8903331912, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 6380281341 என்ற வாட்ஸ்-அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மின்நுகர்வோர்கள் மின்துறை சம்பந்தமான புகார்களை தங்கள் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

நன்றி: தி இந்து தமிழ்

Saturday, December 9, 2017

ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம்!

புதிய வகை நானோ சிகிச்சை முறையில் ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம் மேற்கொள்ளும் முயற்சியில் ஐஐடி, மும்பை பேராசிரியர் டாக்டர். ரோஹித் ஸ்ரீவஸ்தவா மற்றும் கொச்சியைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் ஷாந்திகுமார் வி நாயர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நானோ மருத்துவமுறை கருத்தரங்கம் - 2017 பெங்களூருவில் நடைபெற்றது.

இதில் ஐஐடி, மும்பை பேராசிரியிர் டாக்டர். ரோஹித் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:
புற்றுநோயை எதிர்கொள்ளும் விதமாக புதிய மருத்துவ சிகிச்சை முறை தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சி விரைவில் முழுமையாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்படும். இந்த நானோ சிகிச்சை முறையின் மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை தவிர்க்கப்படும்.

மேலும் இந்த புதிய முறையால் மருத்துவச் செலவுகளும், சிகிச்சை பெறும் நாட்களும் பெரிய அளவில் குறையும் நிலை ஏற்படும். இப்போதைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது. இந்த நிலை முற்றிலும் மாறும்.

இந்த சிகிச்சை முறையானது தங்கத்தின் நானோ பார்டிகலுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தினை இணைத்து புற்றுநோய் பாதித்துள்ள பகுதிகளில் செலுத்தப்படும். பின்னர் அவை இன்ஃப்ரா ரெட் மூலமாக 50 டிகிரிக்கு வெப்பமாக்கப்படும். இதன்மூலம் செலுத்தப்பட்ட மருந்து நேரடியாக புற்றுநோய் பாதித்த பகுதிகளில் செலுத்தப்படும்.

இந்த சிகிச்சை முறையின் முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்தகட்ட நகர்வுகளாக இதன் 2-ஆம் கட்ட பரிசோதனை முறையினை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

இதுகுறித்து கொச்சியைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் ஷாந்திகுமார் வி நாயர் தெரிவித்ததாவது:
இந்த நானோ சிகிச்சை முறையின் மூலமாக புற்றுநோயை உருவாக்கும் செல்களை எளிதில் கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரே வழியில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பல்வகை மருந்துகளை செலுத்தும் தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வகை சிகிச்சை முறையின் பரிசோதனைகளுக்கு ரூ.7 கோடி வரை நிதி தேவைப்படுகிறது. அதற்காக www.impactguru.co என்ற இணையதள பக்கத்தினை உருவாக்கி அதில் க்ரௌட் ஃபன்டிங் முறையில் நன்கொடை பெற்று வருகிறோம். இந்த நன்கொடை முறையை துவக்கி இந்த 45 நாட்களில் இதுவரை ரூ.63,000 க்ரௌட் ஃபன்டிங் முறையில் நன்கொடை பெற்றுள்ளோம் என்றார்.

நன்றி: தினமணி (09-12-2017)

Sunday, December 3, 2017

குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தமிழக தொழிலாளியை விடுவிக்க உதவிய முஸ்லீம் லீக் !

மதசார்பற்ற நாடு என்ற பெயர் உலக அளவில் இந்தியாவுக்கு உண்டு. ஏராளமான மதங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் தனிச்சிறப்பாகும். ஆனால் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வரும் மத கலவரங்கள் உலக அளவில் நமது நாட்டுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் இந்தியாவில் இன்னும் மத ஒற்றுமை சாகவில்லை என்பதற்கு அடையாளமாக சில சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில தினங்களுக்கு முன் அப்படி நடந்த ஒரு சம்பவம் தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குவைத் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு தொழிலாளியின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழை தொழிலாளி ஆதிமுத்து கடந்த 4 வருடங்களுக்கு முன் பிழைப்பு தேடி குவைத் சென்றார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

அவர் வேலை பார்த்த நிறுவனத்திற்கு சிறிது தொலைவில் தொழிலாளர்கள் தங்கும் முகாமில் ஆத்திமுத்து தங்கியிருந்தார். அதே முகாமில் தான் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பெரிந்தல்மண்ணா பகுதியை சேர்ந்த அப்துல் சாஜித்தும் தங்கியிருந்தார். அவரும் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக வயதான பெற்றோர், மனைவி மற்றும் 11 வயது மகளை விட்டு குவைத்துக்கு வந்திருந்தார். ஆதிமுத்துவும், சாஜித்தும் நண்பர்களானார்கள். இந்த நிலையில் தான் விதி இருவரது வாழ்க்கையிலும் விளையாடியது. கடந்த 2013ம் ஆண்டு ஒரு வியாழக்கிழமை இரவில், மறுநாள் (வெள்ளிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது இருவருக்கும் இடையே சாதாரணமாக தொடங்கிய வாக்குவாதம் திடீரென கைகலப்பானது. ஆத்திரத்தில் ஆதிமுத்து அங்கிருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து சாஜித்தின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.

குவைத் போலீஸ் ஆதிமுத்துவை கொலை வழக்கில் கைது செய்தனர். கடந்த 4 வருடங்களாக அவர் மரணத்தை காத்து சிறையில் உள்ளார். குவைத் சட்டப்படி கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் கொலை செய்தவருக்கு விடுதலை கிடைக்கும். இதை அறிந்த ஆத்திமுத்துவின் மனைவி மாலதி தனது கணவனை எப்படியாவாது காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் கடந்த சில வாரங்களுக்கு முன் மலப்புரம் சென்று சாஜித்தின் மனைவி மற்றும் உறவினர்களை சந்தித்தார். அங்கு சென்ற பின்னர் தான் தன்னை விட சாஜித்தின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பது மாலதிக்கு தெரியவந்தது. சாஜித்தின் வருமானத்தை வைத்துத்தான் அவரது வயதான பெற்றோரும், மனைவியும், மகளும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு சொந்த வீடும் கிடையாது. சாஜித்தை மட்டுமே நம்பிருந்த தங்களால் இனி எப்படி வாழ முடியும் என மாலதியிடம் கேட்டு அவர்கள் கதறி அழுதனர்.

இதனால் அந்த குடும்பத்தினரிடமிருந்து தனது கணவனுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடைக்காது என்று தான் மாலதி கருதினார். ஆனால் அந்த வறுமையிலும் சாஜித்தை கொலை செய்த ஆதிமுத்துவுக்கு மன்னிப்பு கொடுக்க அவர்கள் தயாரானார்கள். எஞ்சியுள்ள தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு ₹30 லட்சம் தருவதாக இருந்தால் ஆதிமுத்துவுக்கு மன்னிப்பு தருவதாக சாஜித்தின் குடும்பத்தினர் கூறினர். அது பெரிய தொகை தான் என்றாலும் தனது கணவனுக்காக பணத்தை எப்படியாவது புரட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் மாலதி ஊர் திரும்பினார். ஆனால் தனது நகை உட்பட அனைத்தையும் விற்றும் மாலதியால் 5 லட்சத்தை மட்டுமே திரட்ட முடிந்தது.

அந்தப் பணத்தால் எந்த பலனும் இல்லை என்றாலும் நம்பிக்கையை கைவிடாமல் அவர் மீண்டும் சாஜித்தின் குடும்பத்தினரை சந்திக்க சென்றார். ஆனால் 30 லட்சம் கிடைத்தால் தான் தனது குடும்பத்தை சிரமமில்லாமல் கொண்டு செல்ல முடியும், தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அவர்கள் கைவிரித்தனர். ஆனாலும் மனம் தளராத மாலதி, அங்கிருந்த சிலரின் யோசனைப்படி மலப்புரம் பாணக்காட்டுக்கு சென்று முஸ்லிம் லீக் தலைவர் முனவரலி சிகாப்பை சந்தித்து விவரத்தைக் கூறி அழுதார். மாலதியின் நிலைமை குறித்து அறிந்த முனவரலி மீதமுள்ள 25 லட்சத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும், 2 வாரம் கழித்து தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பிறகு தான் மாலதிக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும் தனக்காக 25 லட்சம் ரூபாயை யார் தருவார்கள் என்று தான் அவர் கருதினார். ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாகவே பாணக்காடு முனவரலியிடமிருந்து மாலதிக்கு அழைப்பு வந்தது. 25 லட்சம் பணம் தயாராக இருப்பதாகவும் உடனே வந்து வாங்கிக் கொள்ளுமாறும் அவர் கூறினார். அதை கேட்ட மாலதி, தனது தந்தை துரைராஜையும் அழைத்துக் கொண்டு பாணக்காட்டுக்கு புறப்பட்டார். அங்கு முஸ்லிம் லீக் தலைவர் முனவரலி சிகாப் தங்கள், ₹25 லட்சத்திற்கான காசோலையை மாலதியிடம் கொடுத்தார். மாலதிக்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த முனவரலி, அடுத்த நிமிடமே தனக்கு தெரிந்தவர்களை அணுகி மாலதிக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

அடுத்த ஒரு சில நாட்களிலேயே கேரளா மற்றும் அரபு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் தொடங்கி தொழிலதிபர்கள் வரை பலரும் பணம் அனுப்பியுள்ளனர். ஒரு சில நாட்களிலேயே 25 லட்சம் கிடைத்தது. அதை மாலதியிடம் முனவரலி கொடுத்து, தான் சொன்ன வாக்கை காப்பாற்றினார். மேலும் மாலதி வருவதற்கு முன்பே சாஜித்தின் குடும்பத்தினரிடம் பணத்தை சேகரித்த விவரத்தைக் கூறி ஆதிமுத்துவுக்கான மன்னிப்பு கடிதத்தையும் வாங்கி தயாராக வைத்திருந்தார்.அந்தக் கடிதத்தை இந்திய தூதரகம் வழியாக குவைத் அரசுக்கு அனுப்பி வைத்தால் உடனடியாக ஆதிமுத்துவுக்கு விடுதலை கிடைக்கும்.   

நன்றி: தினகரன் (03-12-2017)

Wednesday, November 15, 2017

இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஜப்பான்: ஜனவரி 1 முதல் அமல்

இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் குறுகிய காலத்தில் பலமுறை ஜப்பானுக்கு இந்தியர்கள் சென்றுவர முடியும். இந்தியத் தொழிலதிபர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இதன் மூலம் அதிக பயன் கிடைக்கும் என்று தில்லியில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தவிர ஜப்பானுக்கான விசா விண்ணப்பப் படிவமும் எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜப்பான் செல்லும் இந்தியர்களின் பணி தொடர்பான ஆவணங்களையும், ஜப்பான் செல்வதற்கான காரணம் குறித்த விளக்கக் கடிதத்தையும் இனி அளிக்க வேண்டியது இருக்காது. ஜப்பானுக்கு குறுகிய காலத்தில் பலமுறை சென்று வருவதற்காக விசா பெறுவதற்கு புகைப்படத்துடன் கூடிய விசா விண்ணப்பம், தங்களுடைய நிதி நிலைக்கான சான்றுகள் (சுற்றுலா காரணங்களுக்காக) ஆகியவற்றை அளிக்க வேண்டும். தொழில் முறையாக ஜப்பான் செல்ல விரும்புவோர் தங்கள் தொழில் விவரம் அல்லது பணியாற்றும் தொழில் நிறுவனத்தின் சான்றிதழை அளிக்க வேண்டும்.

ஜப்பானுக்கு பலமுறை சென்று வருவதற்காக வழங்கப்படும் விசா 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாகும். இதனைப் பயன்படுத்தி ஓராண்டில் 90 நாள்கள் வரை ஜப்பானில் தங்கியிருக்கலாம்.

ஜப்பான் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் தங்கள் நிதி நிலை தொடர்பான சான்றிதழை அளிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக மாணவர் என்பதற்கான சான்றை அளித்தால் போதுமானது. இந்தியா-ஜப்பான் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி

Friday, July 28, 2017

தமிழகத்துக்கு முன்னுதாரணமான 'செருவாவிடுதி' கிராம ஆரம்ப சுகாதார நிலையம் (படங்கள்)

பசுமையைத் தூவி நிற்கும் மரங்கள், பள பள கட்டடங்கள், சுற்றுப்புறம் எங்கும் தூய்மை என ஒரு அழகிய பூங்காவைப் போல இருக்கிறது அந்த இடம். மருந்து வாடை, மருத்துவக் கழிவுகள் என மருத்துவமனைக்கு உரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் கார்ப்பொரேட்  மருத்துவமனைக்கு நிகராக நிமிர்ந்து நிற்கிறது ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

ஆரம்ப சுகாதார நிலையம்
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிதான் பேராவூரணி. இங்கிருந்து, 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செருவாவிடுதி. விவசாயத்தையே ஜீவாராதரமாகக் கொண்ட கிராமம்.  மண்ணையும்,தென்னையையும் கவனிக்கும் அளவுக்குத் தங்கள் உடல் நிலை குறித்த எந்தவிதமான கவனிப்பும், விழிப்புணர்வும் இல்லாமல் வாழும் மக்கள். இந்த ஊரில் 1968-ல் ஆரம்பிக்கபட்டது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஆரம்பத்தில் எல்லா அரசு மருத்துவமனைகளை போலவேதான் இதுவும் செயல்பட்டு வந்தது.

இன்று ஆபரேஷன் தியேட்டர், பிரசவம், குடும்பக் கட்டுபாடு, விஷ முறிவு, சித்தமருத்துவம், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கட்டடங்கள். மெகா சைஸ் ஜெனரேட்டர் என ஆச்சர்யமூட்டும் வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தச் சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரே ஈர்க்கிறது. இங்கு என்ன என்ன சிக்கிச்சைகள் கொடுக்கப்படுகின்றன? அரசு வழங்கும் திட்டங்கள் என்னென்ன? என  அனைத்து விபரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எழுதி வைத்துள்ளார்கள்.

மருத்துவர் சௌந்தராஜன்
சுற்றுச்சூழல், சிகிச்சை, வசதிகள், உபசரிப்பு என எல்லா வகையிலும் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையின் மாற்றத்துக்கு யார் காரணம் என்று கேட்டால், "எங்க டாக்டர்தான்" என்று செளந்தராஜனை நோக்கி கை நீட்டுகிறார்கள் மக்கள்.

நாம் அவரைச் சந்திக்க சென்ற போது, சிகிச்சைக்காக வந்திருந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரிடமும்  அக்கறையாக விசாரிக்கிறார். எழுபது வயது இருக்கும்  வயதான பாட்டி, "எனக்கு என்ன நோவுன்னே தெரியலை... இடுப்புக்கு கீழே ஒரே வழியா இருக்கு... அந்த ஒவத்திரியம் தாங்க முடியல சாமி" என தன் மகனிடம் சொல்வதை போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார். "காலம் முழுக்க உழைத்த  உடம்பு...  எலும்பு தேய்ந்திருக்கும் இந்த மருந்த சாப்பிடு ஆத்தா சரியாயிடும்" என அன்போடு சேர்த்து மாத்திரையையும் கொடுத்து அனுப்புகிறார்.

இன்னும் சிலருக்கு சிகிச்சை அளித்துவிட்டு, "கொஞ்சம் இருங்க தம்பி வரேன்..." என  நம்மிடம் சொல்லிவிட்டு 'மருத்துவமனை சுற்றிலும் சுத்தமாக இருக்கிறதா' என ஒரு ரவுண்ட் அடித்துப் பார்த்துவிட்டு வந்து பேச ஆரம்பிக்கிறார்.
சுத்தமான மருத்துவமனை வளாகம்
"ஒரு நோயாளி குணமாவதற்கு மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது... சுத்தமும், சுகாதாரமும் ரொம்ப அவசியம். சுற்றுப்புறம் அசுத்தமா இருந்தா அதுவே பல  நோய்கள் வருவதற்கு வழி வகுக்கும். அதனால்தான் தூய்மை விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டுகிறேன்.

நான் இந்த பகுதியின் வட்டார மருத்துவ அலுவலராகவும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிலைய மருத்துவராகவும் இருக்கிறேன். 1992 -ம் ஆண்டுதான்  நான் இங்கு பணிக்கு வந்தேன்.

நானும் கிராமப்பகுதியில் பிறந்தவன்தான்.  பொதுவாக, கிராமப் பகுதிகளில் இருக்கிற மக்களுக்குச்  சுகாதாரம் குறித்து போதிய விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பார்கள். அதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சொல்லவே வேண்டாம். பிரசவம் குறித்த பயம், சத்துணவு இல்லாமை எனப் பல பிரச்னைகள். தாய், சேய் மரணம் அதிகமாக நடக்கும். இவற்றை முதலில் சரி செய்ய வேண்டும் என நினைத்தேன்.

வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்களிடம், "சத்து குறைபாடுள்ள உணவுகளைச் சாப்பிடுவதால்தான் உங்களுக்கும்,குழந்தைக்கும் குறைபாடு ஏற்பட்டு விபரீதங்கள் நடக்கின்றன. சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்" என்று சொல்லி, எதெல்லாம் சத்தான உணவுகள் என்றும் சொல்லி அனுப்புவேன்.

ஒரு கட்டத்தில், "நாம ஏன் இதை சொல்வதோடு நிறுத்திக்கிறோம்... நாமே சத்தான உணவைத் தயாரித்துக் கொடுத்தால் என்ன" என்ற யோசனை வந்தது. உடனே  சில நண்பர்களைப் பிடித்து விஷயத்தை சொன்னேன். அவர்களும் ஆர்வமாக உதவ முன் வந்தார்கள். செவ்வாய்கிழமை தோறும் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு கொடுக்க ஆரம்பித்தோம். 2007-ம் வருடத்தில் இருந்து இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இங்கு செயல்படுத்திய பிறகே அரசு தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது..."  எனப் பெருமிதமாகச் சொல்கிறார் டாக்டர் செளந்தராஜன்.
கர்பிணிப் பெண்களுக்கான சிகிச்சைகள்
தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதற்கும் முன்னுதாரணமாக இருந்தது இந்த ஆரம்ப சுகாதார நிலையம்தான்.   "கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடுவது, பிரசவகாலத்தின் போது ஏற்படும் பய உணர்வை போக்கத்தான். அது மட்டும் இல்லாமல் வளையல் சத்தத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆக்டிவாக இருப்பதோடு அதன் வளர்ச்சியும் அதிகமாகும். இந்த விழா இரு உயிர்களுக்கான நலன் சம்பந்த பட்ட விஷயம்.

அதனால் நமது மருத்துவமனையிலேயே வளைகாப்பு விழாவையும் நடத்த வேண்டும் என நினைத்தேன். அதற்காக ஒரு திருமண மண்டபத்தை பிடித்து  700 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் அமர வைத்தோம். கூடவே அவர்களின் உறவினர்களும். கர்ப்பிணி பெண்களுக்கு வளையலிட்டு வகை வகையான விருந்து வைத்து மருத்துவ குழுவினரோடு ஊரே கூடி வளைகாப்பு நடத்தபட்டது. அந்த நேரத்தில் பிரசவம் குறித்த விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தினேன். மிக பிரமாண்டமாக  நடந்த இந்த வளைகாப்பு திருவிழாவில் அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ தொண்டர்கள், நன்கொடையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். பின்னர்  தமிழக அரசு எல்லா ஊர்களிலும் வளைகாப்பு விழாவை நடத்த வேண்டும் என ஒரு திட்டமாகவே  உத்தரவிட்டது.  இன்று எங்கும் இந்த விழா நடப்பதற்கு நாங்கள்தான் முன்னோடி எனச் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி எங்களுக்கு.

சிகிச்சை பெறும் மக்கள்
ஒவ்வொரும் மாதமும் 20 முதல் 30 பிரசவங்கள் இங்கு நடக்கின்றன. கடந்த மாதம் ஒரே நேரத்தில் 18 பேருக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அளவிற்கு இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. எங்கள் செயல்பாட்டைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் விருது வழங்கியுள்ளார். ISO தரசான்றும் எங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த வளர்ச்சி நன்கொடையாளர்கள் மற்றும் எங்க ஊழியர்களால்தான் சாத்தியமானது என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் டாக்டர் சௌந்தர்ராஜன்.

மருத்துவமனையைச் சுற்றி ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் காய்கறித் தோட்டம், பசு மாடுகள் வளர்ப்பது அதன் மூலம் கிடைக்கும் பாலை கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பது, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா அமைப்பது எனப் பல திட்டங்கள் அரசு மற்றும் நன்கொடையாளர்கள் உதவியோடு செய்ய இருக்கிறார்கள். நன்கொடையாளர்களை மறக்காமல் அவர்களின் பெயர்களைக் கல்வெட்டிலுல் எழுதி நன்றி செலுத்துகிறார்கள்.

"சுத்தமா இருக்கும், சிகிச்சை தரமா இருக்கும் என்றுதான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்குச்  செல்கிறார்கள்.  எங்களுக்கு எல்லா வசதிகளும்  இங்கேயே கிடைத்து விடுகின்றன..." என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

ஒரு மருத்துவர் மனது வைத்ததால்  ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் மாறியது. எல்லா அரசு மருத்துவர்களும் மனது வைத்தால்..?

நன்றி: விகடன்

Monday, July 24, 2017

அதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடலோர ரயில் பாதை திட்டம் !

கட்டுமானப்பணியில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம்
தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கிழக்கு கடலோர ரயில் பாதை திட்டம் சிறிய மாற்றத்துடன் விரைவில் தயாரா கிறது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும் ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி யுள்ளன.

தமிழகத்தில் சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி வரையிலான பாதை பிரதான ரயில் பாதையாக இருக்கிறது. இதில், இரட்டைப்பாதை அமைக்கும் பணிகள் திண்டுக்கல் வரை நிறைவடையும் நிலையில் உள்ளன.

மக்களின் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து பெருங்குடி, மாமல்லபுரம், கடலூர், காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கூடங்குளம், நாகர்கோவில் வழியாக சுமார் 1,003 கி.மீ. தொலைவுக்கு கிழக்கு கடலோர ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை 4 பகுதிகளாகப் பிரித்து பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

இதில், தற்போது சென்னை பெருங்குடி - கடலூர் புதிய பாதை திட்டத்தில் சிறிய மாற்றம் செய்து சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரம் கடலூர் திட்டமாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம், செய்யூர், மரக்காணம், புதுச்சேரி, வரக்கால்பட்டு, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாகூர், திருக்குவளை, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, காயல்பட்டினம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கூடங்குளம், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னை செங்கல்பட்டு, வரக்கால்பட்டு பேரளம், காரைக்கால் நாகப்பட்டினம், நாகர்கோவில் கன்னியாகுமரி என 191 கி.மீ. தொலைவுக்கு தற்போது ரயில்கள் செல்கின்றன. பேரளம் காரைக்கால், நாகப்பட்டினம் திருக்குவளை திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி ஆகிய இடங்களில் நடந்துவரும் அகலப்பாதை பணிகள் இந்த ஆண்டில் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்துக்காக கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.240 கோடி ஒதுக்கீடு செய்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.

பணி தொடங்கவேண்டிய இடங்கள்:
செங்கல்பட்டு, மாமல்லபுரம் வழியாக கடலூருக்கு 100 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை, ரயில்வே வாரியம் ஏற்கெனவே அறிவித்து தற்போது நிதி ஒதுக்கீடு பட்டியலில் இத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

30 ரயில் நிலையங்கள்
காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் இடையே கடலோர வழியாக சுமார் 462 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்க 2009-ல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இத்திட்டத்துக்கு சுமார் ரூ.1,965 கோடி செலவாகும் என்றும் கூறப்பட்டது. இதை திட்டத்தில் சேர்க்க ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘செங்கல்பட்டு கடலூர், காரைக்கால் நாகர்கோவில் வழித்தடங்களில் கடந்த 7 ஆண்டுகளாக பல கட்டமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு முடியும் நிலையில் இருக்கின்றன. அதன்பிறகு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இத்திட்டத்துக்கு போதிய நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும். போதிய அளவில் நிலங்கள் கிடைத்த பிறகே திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற முடியும்’’ என்றனர்.

இதுதொடர்பாக டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் மனோகரன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கிழக்கு கடலோர ரயில் திட்டத்தை இணைக்கும் வகையில் ஏற்கெனவே, சில இடங்களில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள பகுதிகளையும் இணைத்து கிழக்கு கடலோர ரயில்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, செங்கல்பட்டு மாமல்லபுரம் கடலூர், காரைக்குடி - நாகர்கோவிலுக்கு ரயில்கள் இயக்கும் வகையில் கடலோர ரயில் பாதை அமைக்க வேண்டும். ஒட்டுமொத்த ரயில் பாதையில் தற்போது 54 சதவீத பாதைகள் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டத்தை விரைவாக முடித்தால், பயணிகளுக்கு மட்டுமல்லாமல், தூத்துக்குடி துறைமுகத்துக்கான சரக்கு போக்குவரத்துக்கும் வசதியாக இருக்கும்’’ என்றார்.

நன்றி: 'தி இந்து' தமிழ்
Published: 23 Jul 2017

Wednesday, May 17, 2017

இனி, பிளஸ் 1-க்கு பொதுத்தேர்வு !

கோப்புப்படம்
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதுபோல் 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில் டிபிஐ அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை மாவட்ட கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதுபோல் 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரியர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இதுதொடர்பான அரசாணை வெளியாகும்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை எப்போது மீண்டும் திறப்பது என்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

வரும் கல்வியாண்டுக்குத் தேவையான அனைத்து பாடபுத்தகங்களும் தயார் நிலையில் இருக்கின்றன" என்றார்.

Thursday, May 11, 2017

மீட்கப்பட்ட ஆறு !

கேரளா. எழுதும்போதே ஜில்லென்றிருக்கிறது. கண்களை மூடி கேரளாவை நினைத்துப் பாருங்கள். பச்சை நிறமில்லாமல், சிறிது ஈரம் இல்லாமல் கேரளாவில் ஒரு நிலப்பகுதி உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? நிஜமோ, சினிமாவோ… கேரளா வளமான பிரதேசம். குளிர்ந்த நிலம். தண்ணீர் தளும்பும் மாநிலம்.அவர்கள் வீட்டுக்குப் பின்னால் தோட்டம் இருக்காது.ஆறு ஓடும். படகு விட்டுக்கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் அவர்களுக்குக் கிடைக்க காரணமிருக்கிறது.

ஆலப்புழா மாவட்டம் பூதனூர் கிராமம் வழியே ஓடுகிறது கூட்டாம்பேரூர் ஆறு. பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளின் கிளை நதி இது. 12 கி.மீ நீளமும், 100 அடி அகலும் கொண்ட இந்த ஆறுதான் பூதனூர் கிராமத்தின் வளத்துக்கும் குடிநீருக்கும் ஆதாரம். அந்தப் பகுதி மக்களின் விவசாயத்துக்கும் இந்த ஆறுதான் நீர் தந்தது. அது போக, வியாபாரத்துக்கு உதவும் நீர்வழித்தடமாகவும் இருந்தது. பம்பையும், அச்சன்கோவில் ஆறும் மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும்போது, வெள்ளத்தைத் திசை திருப்பி பல தடவை பேரழிவிலிருந்து  காப்பற்றிய பெருமையும் கூட்டாம்பேரூர் ஆற்றுக்கு உண்டு. ஆனால், காலம் செல்ல செல்ல கதை மாறியது. அருகிலிருக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளும், ஆற்றின் கரையில் எழுப்பப்பட்ட ஆக்ரமிப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆற்றை அழித்தன. தங்கள் கண் எதிரே தங்களுக்கு வாழ்வளித்த ஆறு சாவதை இந்த மக்கள் பார்க்க வேண்டியதிருந்தது.

பூதனூர் பஞ்சாயத்தின் தலைவர் விஸ்வம்பர பணிக்கருக்கும், ரேஷ்மி என்ற சமூக ஆர்வலருக்கும் இந்த ஆற்றை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என ஆசை. முதலில் இதைச் சொன்னபோது ஊர்மக்கள் கண்டுகொள்ளவில்லை. ஆறு எல்லாம் தானாக உருவாக வேண்டியது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால், அந்த ஆற்றை அழித்ததே மனிதர்கள் தான். அதனால், அதை மீட்டெடுக்கவும் மனிதர்களால் முடியும் என நம்பினார்கள் ஊர்த்தலைவரும், அவர் முயற்சியை ஆதரித்தவர்களும்.

ஒரு வழியாக 700 பேரை அவர்களால் ஒன்று சேர்க்க முடிந்தது. அந்த 700 பேருக்கும், 70 நாள்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை தந்தார்கள். ஆனால், அந்த 700 பேரும் இதை வெறும் வேலையாக பார்க்காமல் முழு அர்ப்பணிப்புடன்  செய்தார்கள். விஷச்செடிகளின் ஆபத்து இருந்தது. சில முதலைகள் கூட வழியில் இருந்தன. வழியெங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக் கிடந்தன. எதுவுமே அவர்களைத் தடுக்கவில்லை. மீண்டும் அந்த ஆற்றை மீட்டெடுத்து, தங்கள் கிராமத்தைச் செழிப்பாக்க முடியும் என நம்பி வேலை செய்தார்கள். மனிதர்களின் ஆக்கப்பூர்வமான நம்பிக்கைக்கு இயற்கை எப்போதும் செவிமடுக்கும். பூதனூரிலும் அதுதான் நடந்தது.
இரண்டு மாதங்களுக்கு மேல்  700 பேர் உழைத்து கூட்டாம்பேரூர் ஆற்றைத் திரும்ப பிறக்க வைத்தார்கள். ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. வழியை மறித்துக் கொண்டிருந்த அனைத்து தேவையற்ற தாவரங்களும் நீக்கப்பட்டன. இப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து வந்துவிட்டது. படகு சவாரி செய்ய முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஐந்து கி.மீ சுற்றளவிலுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. பூதனூரில் மகிழ்ச்சி திரும்பி இருக்கிறது.

இப்போது மாநில அமைச்சர்கள் ஊர் மக்களையும், விஸ்வம்பர பணிக்கரையும் புகழ்கிறார்கள். இனிமேல், தங்கள் ஆற்றை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என்கிறார்கள் பூதனூர் மக்கள். இயற்கை கேரளாமீது கரிசனம் காட்ட காரணம் இருக்கிறது.

நன்றி: விகடன்
பரிந்துரை: ஜமீல் எம். சாலிஹ் ( சமூக ஆர்வலர் )

Friday, May 5, 2017

அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய புதிய விதிகள் வெளியீடு

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

விளைநிலங்களை வீட்டுமனைகள் ஆக்குவதாகத் தொடரப்பட்ட வழக்கில், புதிய வரைவு விதிகளுடன் கூடிய அரசாணைகளை தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

புதிய விதிகள் சொல்லும் புதிய சாராம்சங்கள்:
- புதிய 2 அரசாணையின்படி 20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை அங்கீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

- விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தால் வீட்டு மனையாக மாற்றக்கூடாது.

- அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

-தொடர்ந்து வேளாண்மை செய்ய ஏற்ற நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றமுடியாது.

-விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண்துறை இயக்குனரின் ஒப்புதல் வேண்டும். ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

-ஆறு, கால்வாய் மற்றும் குட்டைகள் உள்ளிட்ட இடங்களை வீட்டுமனைகளாக மாற்றக்கூடாது.

-கோயில் நிலங்கள், வக்ஃபு வாரிய மற்றும் புறம்போக்கு நிலங்களை வீட்டு மனையாக மாற்றமுடியாது.

- உரிமம் இல்லாத காலி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை.

-ஒரு பகுதி விற்பனை செய்து வேறு பகுதி விற்பனை செய்யாவிட்டால் பத்திரப்பதிவு செய்யலாம்.

-சந்தை விலையை விட 3 சதவீத அபாரதத்துடன் புதிய விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

-மாநகராட்சிகளில் பத்திரப் பதிவு மேற்கொள்ள கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100.

- நகராட்சி பகுதிகளுக்கு கட்டணமாக ரூ.60

-பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

Saturday, April 29, 2017

10 தென்னை மரங்கள்... மாதம் 1 லட்சம் வருமானம்... நீரா கொடுக்கும் நம்பிக்கை!

தென்னை மரத்திலிருந்து 'நீரா' பானம் இறக்கிக் கொள்ள தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன. நீரா என்பது தென்னை மரங்களில் உள்ள பாலைகளில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை பானம்தான் இந்த நீரா. பதநீருக்கும், கள்ளுக்கும் இடைப்பட்ட பான வகையைச் சேர்ந்தது. மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக அதற்கென வடிவமைக்கப்பட்ட ஐஸ் பானைகளை மரத்தில் பொருத்த வேண்டும். ஐஸ் பானைகளில் சேகரிக்கும் நீராவை ப்ரீஸர் உள்ள வாகனத்தில் ஏற்றி கடைகளில் விற்பனை செய்யலாம். அதேபோல கடைகளிலும் ஐஸ்பெட்டி உள்ள கடைகளில் மட்டுமே நீரா பானத்தை விற்பனை செய்ய முடியும். இதனை மூன்று மாதங்களுக்கு இருப்பு வைத்து விற்றாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீரா விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது. கேரளாவில் ஒரு விவசாயி 25 மரங்களில் இருந்து நீராவை இறக்க முடியும். தமிழக விவசாயிகள் வேளாண்மைத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் கேரளாவுக்குச் சென்று நீரா பானம் இறக்குவது பற்றி பயிற்சி பெற்றும் வருகிறார்கள். கேரளா சென்று பயிற்சி பெற்றவர்களில் ஒருவரும், சுருள்பாசி உற்பத்தியாளருமான ரத்தின ராஜசிங்கம் நீரா பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

நீரா பானம்
"தமிழகத்தில் எளிதாக நீரா பானத்தை இறக்கலாம். முன்னர் மண்பானைகளில்தான் பதநீர் இறக்குவார்கள். ஆனால் நீராவை தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்ட ஐஸ்பெட்டியில் பிடித்துத்தான் விற்பனை செய்ய வேண்டும். நீராவை பதநீரைப்போல இறக்க முடியாது. அந்தப் பெட்டி பால்கேன் வடிவில் இருக்கும். அதை மரத்தில் கட்டிவிட வேண்டும். அதன்பின்னர் தென்னை பாலையைச் சீவிவிட்டு வடியும் பதநீரை பாலித்தீன் பைகள் மூலமாக கேன்களில் சேகரமாகும். இப்படிச் சேகரிக்கும்போது அதன் உண்மைத்தன்மை மாறாமல் இருக்கும். இப்படிச் சேகரிக்கும் நீரா பானத்தை 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பாலையில் இருந்து 5 லிட்டர் நீரா எடுக்கலாம். இதுவே ஒரு மரத்துக்கு இரண்டு பாலைகளில் எடுத்தால் நீரா வடியும் தன்மையை பொருத்து அளவுகள் மாறுபடும். வெறும் 10 மரங்கள் கொண்ட ஒரு விவசாயிக்கு நீரா நிச்சயமாக வரப்பிரசாதம்தான். ஒரு மரத்தில் தினமும் 5 லிட்டர் நீரா கிடைக்குமானால் 10 மரத்துக்கு 50 லிட்டர் நீரா கிடைக்கும். ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 லிட்டருக்கு 2500 ரூபாய் தினமும் வருமானம் கிடைக்கும். மொத்தமாக 30 நாட்களும் விற்பனை செய்தால் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுவே இரண்டு பாலைகள் உள்ள மரங்களில் வடியும் நீராவை விற்பனை செய்யும்போது இன்னும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். இந்த முறையைத்தான் எங்களுக்கு கேரளாவில் பயிற்சியாகக் கொடுத்தனர். மொத்த வருமானமாக (தேங்காய் விற்பனை, மட்டைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்) பத்து தென்னை மரங்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். இது உடலுக்கு நன்மை தரக்கூடிய பானமும் கூட. இந்த முறை பின்பற்றினால் விவசாயிகளுக்கு நஷ்டம் வராது. நீரா தமிழகத்தில் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் பன்னாட்டு நிறுவன குளிர்பானங்களுக்கு சரியான சவாலாக இருக்கும்.

கொச்சியில் இயங்கிவரும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் நீரா இறக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீராவை இறக்கிப் பதப்படுத்தி தொழில்நுட்பக் கல்வி மற்றும் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சிகளை ஊக்கத்தொகை கொடுத்து பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: விகடன்

Saturday, April 22, 2017

ஏரிகளை மீட்டு தூர்வாரிய இளைஞர்கள் பட்டாளம்! ( படங்கள் )

ஜல்லிகட்டு, நெடுவாசல் போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தில் இளைஞர்களின் சக்தி அசைக்கமுடியாத சக்தியாக வலம் வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்போது, இளைஞர்கள் பல இடங்களில் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் காணாமல் போன புதுகுறிச்சி ஏரியை கண்டுபிடித்து தூர்வாரி கடல்போல் மாற்றியுள்ளார்கள். இவர்களை பின்தொடர்ந்து பல இளைஞர்களும் ஏரியை தூர்வார முன்வந்து கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களின் இந்த செயலை மக்கள் வரவேற்று வருகிறார்கள்.

பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புதுகுறிச்சி கிராமம். 50 ஆண்டுகளாக ஏரியை தூர்வாராமல் விட்டதால் ஏரி தூர்ந்து போய் சமதளமாக மாறியிருந்தது. இதை நம்மாழ்வார் இளைஞர் நற்பணிமன்றத்தினர் கட்டாந்தரையாக கிடந்த ஏரியை கடல்போல் மாற்றி காட்டியிருக்கிறார்கள். மாற்றத்துக்கான விதை போட ஆரம்பித்துள்ளார்கள் இப்பெருமைக்குரிய நம்மாழ்வார் இளைஞர் நற்பணிமன்ற தலைவர் தனபாலிடம் பேசினோம். "புதுகுறிச்சி ஏரி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியால் 700 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்துக்கு இந்த ஏரியால் தண்ணீர் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது கடும் வறட்சி நிலவுகிறது. வற்றாமல் நீர் கொடுத்துக்கொண்டிருந்த ஏரியில் சீமைகருவேல மரங்கள்தான் மண்டிபோய் கிடக்கின்றன. ஏரி இருந்தற்கான தடமே தெரியாமல் அழிந்து போய்விட்டது. எங்கள் ஏரியை மீட்க போகிறோம் என்று கலெக்டர் நந்தகுமாரிடம் மனு கொடுத்தோம். அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். முதலில் ஏரியில் வளர்ந்து கிடந்த சீமைகருவேல மரங்களை அகற்றுவதற்காக குறைந்த விலையில் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்துமகொண்டு எங்கள் வேலையை தொடங்கினோம். எங்களுடைய முயற்சியை பார்த்துவிட்டு கிராம மக்களே எங்களுக்கு கைகொடுக்க தொடங்கினார்கள். அந்த வகையில் சீமைகருவேல மரங்களை வெட்டி விறகுகளை கடைகளில் விற்றோம். அதிலிருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது. எங்களுடைய முயற்சியை பார்த்துவிட்டு கலெக்டரும் ஏரியை தூர்வாரும் திட்டத்துக்கு ஒரு லட்சம் கொடுத்தார்.

ஏரியில் உள்ள வண்டல் மண்களையும் விவசாயிகள் எங்களிடம் பணத்தை கொடுத்து வாங்கினார்கள். அந்த பணத்தை வைத்து கொண்டு ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களை சரிசெய்தோம். பின்பு ஏரியின் மையப்பகுதியில் ஏழு ஏக்கர் அளவுக்கு ஐந்து அடி தூரத்துக்கு ஆழப்படுத்தியுள்ளோம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த மழையால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இப்போது எங்கள் கிராமத்தினர் அந்த குளத்தில் மீன்குஞ்சுகள் விட்டு வளர்க்க யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் இருந்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயமும் விவசாயிகளும் வளம் பெறுவார்கள். எங்களை போல் இளைஞர்கள் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் மில்லை" என்றார்.

இவர்களை பின்பற்றி குளத்தூர் நண்பர்களும் ஏரியை தூர்வார களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இது குறித்து சுரேந்தர் என்பவரிடம் பேசினோம். "எனது பெயர் சொல்வதை விட குளத்தூர் நண்பர்கள் குழு என்று சொல்வதே சரியானதாக இருக்கும். எங்கள் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததால் இந்த ஊரை குளத்தூர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். ஆனால், இப்போது ஐந்து குளங்கள்தான் இருக்கிறது. அதுவும் தூர்ந்து போய் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்துவருகிறது. அதேபோல் குப்பன் ஏரி 90 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மூன்று கிராமத்து மக்களும் இதை நம்பிதான் விவசாயம் செய்திருக்கிறார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

சீமைகருவேல மரங்களை அகற்றிவிட்டு, ஏரியை தூர்வார போகிறோம் என்று கலெக்டர் நந்தகுமாரிடம் மனுக்கொடுத்தோம். அதற்கு அவர் ஏரியை தூர்வார கோட்டா முடிந்துவிட்டது; எங்களிடம் பணம் இல்லையென்று சொன்னார். நாங்களே செலவு செய்துகொள்கிறாேம், நீங்கள் அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் சார் என்று சொல்ல, அவர் ஆச்சர்யமாய் பார்த்து எங்களுக்கு அனுமதி வழங்கினார். வெளிநாடுகளிலிருந்த எங்களது நண்பர்களிடம் உதவிக்கோரினோம். அவர்களும் அவர்களது நண்பர்களிடம் உதவிக்கேட்டார்கள். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் அனுப்பினார்கள். பின்பு குப்பன் ஏரியை மீட்க போகிறோம். இளைஞர்கள் உதவி தேவை என்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில்  செய்திகளை பதிவு செய்திருந்தோம்.

150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைகொடுத்தார்கள். முதலில் சீமைகருவேல மரங்களை அகற்றினோம். பின்பு ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் சரிசெய்தோம். இப்போது ஒன்பது ஏக்கருக்கும் மேல் ஏரியை தூர்வாரியுள்ளோம். இன்னும் எங்கள் வேலை முடியவில்லை. அதேபோல் ஏரியில் உள்ள வண்டல்மண் எடுக்க பல கலெக்டர்கள் அனுமதி கொடுப்பதில்லை. ஆனால், நம்ம  கலெக்டர் எந்ததடையும் இல்லாமல் அனுமதி வழங்கினார். அதுமட்டுமில்லாமல் நமது முன்னோர்கள் வண்டல்மண்ணை எடுத்து விவசாய நிலத்துக்கு பயன்படுத்தி அதிக மகசூல் அடைந்துள்ளார்கள். ஆனால், இப்போது இந்த சட்டத்தை மாற்றிவிட்டார்கள். இந்த சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அதேபோல் உள்ளூரில் உள்ள சில அதிகாரிகள் எங்கள் மீது இல்லாத பொல்லாத விஷயங்களை கலெக்டரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர் இளைஞர்கள் எல்லா விஷயத்திலும் எப்போதும் சரியாக இருப்பார்கள் என்று பதிலத்துள்ளார். எங்கள் மீது நம்பிக்கை வைத்த கலெக்டருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். இது எங்களுக்கு கிடைத்த முதல்வெற்றி" என்று முடித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் புதுகுறிச்சி, குளத்தூர், வரகூர்,அனூக்கூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களே முன்னின்று ஏரியை தூர்வாரி கொண்டிருக்கிறார்கள். மாற்றத்துக்கான விதையை விதைக்க தொடங்கியுள்ளார்கள் இளைஞர்கள்.

-எம்.திலீபன்
நன்றி: விகடன்

பரிந்துரை: ஜமீல் எம். ஸாலிஹ் ( சமூக ஆர்வலர் )
 
 

Friday, April 21, 2017

பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்தது ஐகோர்ட்!

அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை முறைப்படுத்தும் புதிய விதிகளுக்கு தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரையில், மனைகளைப் பதிவு செய்ய மீண்டும் இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று(வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, பத்திரப் பதிவில் தளர்த்தப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விசாரணையை மே 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். வழக்கால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் அரசு தரப்பின் வாதங்களை கோடை விடுமுறையில் கேட்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டது.

கடந்த மார்ச்சில் பொறுப்பு தலைமை நீதிபதியான ஹூலுவாடி ஜி.ரமேஷ் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாகப் பதியப்பட்ட அங்கீகாரமற்ற மனைகளை மறு பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, ‘‘அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரையறை செய்வது தொடர்பாக அரசின் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, புதிய வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒப்புதல் கிடைத்ததும் முறைப்படி அறிவிப்பாணையாக வெளியிடப்படும்’’ எனக்கூறி அந்த விதிகளை நீதிபதிகளின் பார்வைக்கு சமர்ப்பித்தார். அதையடுத்து விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரையில், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளைப் பதிவு செய்ய மீண்டும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் பத்திர பதிவு செய்வதற்கு இடைக்காலமாக வழங்கப்பட்டிருந்த தளர்வும் ரத்து செய்யப்படுகிறது.

நன்றி: தி இந்து தமிழ்

Tuesday, March 28, 2017

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு !

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

தடை உத்தரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறுபதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தியுள்ளது.

தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வைத்த கோரிக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படும் நிலத்தில், சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை, கழிவுநீர் குழாய் பதிக்க போதிய இடம் வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது.

நன்றி: தினமணி

Friday, March 17, 2017

தஞ்சையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல் !

தமிழகத்துக்கான சர்வதேசத் தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை, தமிழக முதல்வரின் பரிந்துரைப்படி, மாநிலத்தின் மையப் பகுதியான, அனைத்து வசதிகளும் கொண்ட தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டும் என மத்திய மண்டலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தின் மையப் பகுதியான, இரட்டை நகரங்கள் எனப்படும் திருச்சி அல்லது தஞ்சாவூரில், ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த செலவில் உயர் சிகிச்சை பெற வசதியாக, உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை தனியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனையில் கிடைக்கும் அனைத்து உயர் சிறப்பு சிகிச்சை வசதிகளும், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் கிடைக்கும் வகையில், மாநிலத்துக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை பால்பண்ணை ஆகிய 5 இடங்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் தாத்ரி பாண்டா தலைமையிலான குழு, 2015, ஏப்ரலில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து 23 மாதங்களாகியும் மத்திய அரசால் இடம் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால், மற்ற மாநிலங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.

போராட்டக் குழு அமைப்பு
இதையடுத்து, அனைத்து அம்சங்களையும் கொண்ட செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க வேண்டும் எனக் கோரி, ‘செங்கிப்பட்டி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான போராட்டக் குழு’ தஞ்சாவூரில் கடந்த 2016, ஜனவரியில் தொடங்கப்பட்டு, பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முதல்வர், பிரதமருக்கு நன்றி
இதற்கு, போராட்டக் குழு சார்பில், முதல்வர், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, முதல்வரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு, பணிகளைத் தொடங்க வேண்டும் என போராட்டக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைதியான இயற்கைச் சூழல்
இதுகுறித்து, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் துரை.மதிவாணன், வி.விடுதலைவேந்தன் ஆகியோர் தெரிவித்தது: தமிழ்நாட்டில் மற்ற இடங்களைக் காட்டிலும் செங்கிப்பட்டியில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லாத அரசின் சுமார் 206 ஏக்கர் நிலம், நோயாளிகள், மருத்துவ மாணவர்கள், மருத்துவ ஆராய்ச்சிக்குத் தேவையான அமைதியான இயற்கைச் சூழல், தண்ணீர், மின்சார, சாலை வசதிகள், 2 கி.மீ. தொலைவில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, 10 கி.மீ. தொலைவில் தஞ்சை- மதுரை தேசிய நெடுஞ்சாலை, 20 கி.மீ. தொலைவில் திருச்சி- சென்னை, திருச்சி- மதுரை, திருச்சி- திண்டுக்கல், திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

அதேபோல, 25 கி.மீ. தொலைவில் திருச்சி சர்வதேச விமான நிலையம், 15 கி.மீ. தொலைவில் தஞ்சை விமானப்படை நிலையம், தஞ்சை, திருச்சி ரயில் நிலையங்கள், மத்திய பேருந்து நிலையங்கள் என 24 மணி நேர பயண வசதி, தமிழ்நாட்டின் மையப் பகுதி, இயற்கைப் பேரிடர் பாதிக்காத பாதுகாப்பான இடம் என அனைத்து அம்சங்களும் கொண்ட செங்கிப்பட்டியில் அமைப்பதே சிறப்பாக இருக்கும்.

இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள காவிரி டெல்டா மக்களுக்கு உரிய சிகிச்சையும், உயர் மருத்துவப் படிப்புகளும், வேலைவாய்ப்பு களும், புதிய தொழில் வாய்ப்பு களும் கிடைக்கும். மாநிலத்தின் மத்தியில் உள்ள தால், மற்ற பகுதி மக்களும் எளிதில் வந்து சிகிச்சை பெற முடியும். அதனால், இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு, பணிகளைத் தொடங்க வேண்டும்” என்றனர்.

தஞ்சைதான் உகந்த ஊர்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளரும் மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் ஆர்.இளங்கோவன் கூறியபோது, “டெல்லியில் உள்ளது போலவே மாநிலங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளும் தன்னாட்சி பெற்றதாக இருக்கும். இங்கு இலவசமாகவும், குறைந்த செலவிலும் உயர் சிகிச்சைகள் கிடைக்கும். உலகத் தரத்திலான சிகிச்சை, மருத்துவ ஆராய்ச்சிகள், மருத்துவப் படிப்புகள் இங்கு நடைபெறும். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகவும், தரமதிப்பீட்டுக் குறியீடாகவும் இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தமிழகத்தில் மற்ற இடங்களைக் காட்டிலும் செங்கிப்பட்டி பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.

எம்ஜிஆரின் விருப்பம்
போராட்டக் குழுத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் கூறியபோது, “முதல்வராக இருந்த எம்ஜிஆர், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தொலை தூர பகுதி மக்கள் சென்னைக்கு வருவதைத் தவிர்க்கவும், சென்னையில் மக்கள் பெருக்கத்தை தவிர்க்கவும், இரட்டை நகரங்களான திருச்சி- தஞ்சாவூர் இடையே தமிழ்நாட்டின் தலைநகரை அமைக்க முயற்சி மேற்கொண்டார். இப்போது, அந்தப் பகுதியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வலியுறுத்துகிறோம். மற்ற இடங்களைக் காட்டிலும் செங்கிப்பட்டியே சிறப்பானதாக இருக்கும்” என்றார்.

நன்றி: தி இந்து தமிழ்
* File Image

Wednesday, March 15, 2017

ஜாமீன் வேணுமா? சீமை கருவேல மரங்களை வெட்டுங்க! அரியலூர் நீதிபதியின் புது உத்தரவு

அரியலூர், மார்ச் 15: ஜாமீனில் வெளியே செல்பவர்கள் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளவர்களுக்கு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்க புதிய வகையான நிபந்தனையை விதித்துள்ளது.

அதன்படி, ஜாமீனில் வெளிவரும் குற்றம் சாட்டப்பட்டவர் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதே!

ஜாமீனில் செல்பவர்கள் சீமை கருவேல மரங்களை அகற்றியதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நீதிமன்றம் புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

இந்த புதுவகையான நிபந்தனையை அரியலூர் மாவட்ட நீதிபதி ஏ.கே.ஏ.ரஹ்மான் பிறப்பித்தார். அரியலூர் நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்

Tuesday, December 20, 2016

மாடித்தோட்டம் அமைத்து அசத்தும் இன்ஜினீயரிங் மாணவன்!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் படிக்கும்போது படிப்பின்மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். படிப்பில் காட்டும் அக்கறைக்கு இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலையும் இங்கு இருந்துதான் வருகிறது. அதிலும் இன்ஜினீயரிங் மாணவர்களின் நிலை இன்று மிகவும் மோசமாகி வருகிறது. இதற்கு மத்தியில் படிப்பிலும் கவனம் செலுத்திக்கொண்டு அத்துடன் மாடித்தோட்டம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயராஜ். மாடித்தோட்டம் அமைப்பதையும் ஒரு பொழுதுபோக்காகவே ஆரம்பித்து செய்து வந்திருக்கிறார். அதன் பின்னர் ஜெயராஜின் நட்பு வட்டாரம் 'வானகம்' வரை போய் பயிற்சி எடுக்கும் அளவுக்கு விரிவானது. அப்போதிருந்தே நம்மாழ்வார் கொள்கைகளால் ஈர்க்கபட்டு இயற்கையின் மீது நாட்டம் கொண்டு மாடித்தோட்டத்தை அமைத்து கொடுத்து வருகிறார். மாடித்தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜெயராஜை சந்தித்தோம்.

“என்னோட அப்பா இன்ஜினீயர், அம்மா கல்லூரி பேராசிரியை. நான் ஒரே பையன். எனக்கு கல்லூரி முதல் வருஷம் படிக்கும்போதே எனக்கு இயற்கை மேல ஆர்வம் இருந்தது. என்னால விவசாயம் பண்ண முடியாது, ஆனால் மாடியில் தோட்டம் போடலாம்னு ஒரு எண்ணம் வந்தது. என் பெற்றோர்கிட்ட அனுமதி வாங்கி மாடித்தோட்டம் அமைச்சேன். இதையும் இயற்கையில செய்யணும்னு நம்மாழ்வார் ஐயாவோட வானகம் பயிற்சி பட்டறைக்கு போயி இயற்கையை பத்தி முழுமையா தெரிஞ்சுகிட்டேன். அவரோட வார்த்தைகளை நேர்ல கேட்க முடியலைனாலும், யூடியூப்ல அதிகமா கேட்பேன். நான் வானகத்துக்கு போனபோது அதிகமான இயற்கை வேளாண்மை செய்யும் நபர்களோட அறிமுகமும் கிடைச்சது. அதுக்கு பின்னாடி என்னோட வீட்ல மாடித்தோட்டம் முழுமையா அமைச்சேன். இப்போ பக்கத்துல இருக்குறவங்க எங்க வீட்லையும் மாடித்தோட்டம் அமைச்சு கொடுங்கனு கேக்குறாங்க.

இதுபோக தெருக்கூத்து, நாடக கலைகள்னு எல்லாமே நல்லா தெரியும். என்கிட்ட அக்கறையோட கேட்குறவங்ககிட்ட அதை தினமும் பராமரிக்கிறவங்கதான் மாடித்தோட்டம் அமைக்க எனக்கு உதவியா இருக்கணும்னு சொல்லிடுவேன். அபோதான் மாடித்தோட்டத்தின் அருமை அவங்களுக்கு புரியும். இயற்கையை உண்டாக்குறது எவ்வளவு கஷ்டமான அனுபவம்னு அவங்களுக்கு தெரியும். மாடித்தோட்டம் அமைச்சுக் கொடுத்த பின்னாடி அவங்களுக்கு மாடித்தோட்டம் பற்றிய வகுப்பெடுப்பேன்.  தரமான 50-க்கும் மேற்பட்ட நாட்டு விதைங்க என்கிட்ட இருக்கு. நானே விதையை வச்சு காய்கறி நாத்துக்களையும் உற்பத்தி செய்து கொடுக்குறேன். இதுவரைக்கும் 10-க்கும் மேல பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கேன்" என்றவர் தொடர்ந்தார்.

“என் வீட்ல இருக்குற குப்பைகளும் காய்கறி கழிவுகளும்தான் இங்க உரமா பயன்படுத்துறேன். மாட்டு எருவையும் மண்புழு உரத்தையும் அடியுரமா பயன்படுத்துறேன். மாடித்தோட்டத்துக்கு தண்ணீரை காலை, மாலை என இரு வேளைகளிலும் தெளிக்கணும். அடியுரம் கலக்கும்போது கொஞ்சம் தேங்காய் நார்களை சேர்த்துக் கொண்டால் தண்ணீரை தேக்கி வைக்கும். மீன் கழிவுகளையும் வாங்கிட்டு வந்து அதை பதப்படுத்தி நாட்டுச்சர்க்கரையை கலந்து அந்த உரத்தை பயிர்களில் தெளிப்பது மூலமா பயிரோட வளர்ச்சி அதிகமாகும். மீன் அமிலம், பஞ்சகவ்யா, மண்புழு உரம் என இதையும் நான் தயாரிச்சு விற்பனை செய்யுறேன். இதை அப்படியே கல்லூரியிலும் அமைச்சேன். என்னோட கல்லூரி இன்ஜினீயரிங் கல்லூரி என்பதால பழைய பேட்டரி டப்பாவை வச்சு தோட்டம் அமைச்சிருக்கேன். என்னோட ஜூனியர், சீனியர்னு என்கிட்ட அதிகமான மாணவர்களும் மாடித்தோட்டத்தை பத்தி கேட்டு தெரிஞ்சுக்குவாங்க. எங்க வீட்ல மார்கெட்ல போய் காய்கறிகள் வாங்குறது இப்போ கம்மியாயிடுச்சு. இப்போ பரவலாக விவசாய ஆர்வத்தை போக்குறது மாடித்தோட்டம் மட்டும்தான். மனசுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமானது. என்னதான் பொறியியல் படிப்புல இருந்தாலும் கூட எனக்கு வேளாண்மை பத்தின புரிதலையும், இயற்கை சார்ந்த விஷயங்களையும் மக்களுக்கு எடுத்துக்கொண்டு போறதுதான் என்னோட கனவு. இயற்கைக்காக மாறணும்ங்குறதுக்காக சூரிய ஒளி மின்சார தகடுகளை வாங்கி பொருத்தியிருக்கேன். இதுமூலமா கணிசமான மின்சாரத்தேவை குறையுது" என்றபடி விடைகொடுத்தார், மாடித்தோட்ட மாணவர்.

- ஹ.ச.ஷஃபியுல்லா (மாணவ பத்திரிகையாளர்)
நன்றி: விகடன்