.

Pages

Showing posts with label காணவில்லை. Show all posts
Showing posts with label காணவில்லை. Show all posts

Saturday, June 15, 2019

காணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)

அதிராம்பட்டினம், ஜூன்.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான். இவரது உறவினர் ஒருவர் திருமண அழைப்பிற்காக தனது வீட்டில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் கீழத்தெரு மற்றும் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, தான் அணிந்து இருந்த 10 கிராம் மதிப்பிலான (1-1/4 பவுன்) பிரேஸ்லெட் செயின் (BRACELET CHAIN) அப்பகுதியில் தவறவிட்டுள்ளது தெரியவந்தது.

இன்று (ஜூன்.15) சனிக்கிழமை வரை சென்று வந்த பல இடங்களில் தேடி அலைந்தும் நகை கிடைக்காததால் அவரது குடும்பத்தார் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

பிரேஸ்லெட் நகையை யாரேனும் கண்டெடுத்தால் 9842054940 / 9043494990 ( செல்லவாப்பா ) அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Sunday, April 14, 2019

காணவில்லை ~ தங்கச்செயின் (24 கிராம்)

அதிராம்பட்டினம், ஏப்.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவரது உறவினர் ஒருவர் தனது வீட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை மாலை 12 மணியளவில், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றுவிட்டு மீண்டும் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு,  புதுப்பள்ளிவாசல், பழஞ்செட்டித்தெரு பஸ் ஸ்டாப் வழியாக சுரைக்கா கொல்லையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றாராம். அப்போது, தான் அணிந்து இருந்த 24 கிராம் மதிப்பிலான (3 பவுன்) தங்கச்செயின் (CHAIN) அப்பகுதியில் தவறவிட்டுள்ளது தெரியவந்தது.

கடந்த வியாழக்கிழமை முதல், இன்று (ஏப்.14) ஞாயிற்றுக்கிழமை வரை சென்று வந்த பல இடங்களில் தேடி அலைந்தும் நகை கிடைக்காததால் அவரது குடும்பத்தார் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

தங்கச்செயின் நகையை யாரேனும் கண்டெடுத்தால் 9003038173 ( அப்துல் ரஷீது ) அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Thursday, October 18, 2018

காணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (17.50 கிராம்)

மாதிரி படம்
அதிராம்பட்டினம், அக்.18
அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்தவர் சைஃபுதீன். இவரது மனைவி, கடந்த அக்.15 ந் தேதி, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது கையில் அணிந்திருந்த 17.50 கிராம் எடை கொண்ட 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் காணாமல் போனது தெரிய வந்தது. காணாமல் போன அன்று முதல், இன்று (அக்.18) வரை சென்று வந்த பல இடங்களில் தேடி அலைந்தும் நகை கிடைக்காததால் அவரது குடும்பத்தார் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, நகையை யாரேனும் கண்டெடுத்தால் 7200487889 என்ற அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Friday, March 2, 2018

காணவில்லை ~ 26 கிராம் நெக்லஸ்

அதிராம்பட்டினம், மார்ச் 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தட்டாரத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ராஜிக். இவரது உறவினர் ஒருவர் தனது வீட்டில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றாராம். அப்போது, தான் அணிந்து இருந்த 26 கிராம் மதிப்பிலான தங்க நெக்லஸை அப்பகுதியில் தவறவிட்டுள்ளார்.

நெக்லஸ் நகையை யாரேனும் கண்டெடுத்தால் 7200722754 என்ற அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tuesday, October 24, 2017

காணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு பின் கண்டுபிடிப்பு !

அதிராம்பட்டினம், அக்.24
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் எம். அப்துல் அஜீஸ். இவரது மகன் முஜாஹிதீன் (வயது 16). அதிராம்பட்டினத்தில் கடந்த 5 மாதங்களாக டுட்டோரியல் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்விற்கு  சிறப்பு பயிற்சி பெற்று வந்தார். 

இந்நிலையில், கடந்த அக்.19 ந் தேதி காலை முத்துப்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் அதிராம்பட்டினம் செல்வதாக கூறிச் சென்றாராம். பின்னர் பல மணி நேரமாகியும் மாணவனிடமிருந்து எவ்வித தகவலும் வராததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு பின், மாயமான மாணவன் தஞ்சையில் இருந்ததும், பின்னர் சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மாணவனின் தந்தை இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் இருந்த மகனை அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

காணாமல் போயிருந்த மகனை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் எம். அப்துல் அஜீஸ் நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

Sunday, October 22, 2017

டுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)

அதிராம்பட்டினம், அக்.22
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் எம். அப்துல் அஜீஸ். இவரது மகன் முஜாஹிதீன் (வயது 16). அதிராம்பட்டினத்தில் கடந்த 5 மாதங்களாக டுட்டோரியல் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்விற்கு  சிறப்பு பயிற்சி பெற்று வந்தார். 

இந்நிலையில், கடந்த அக்.17 ந் தேதி இரவு முத்துப்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் அதிராம்பட்டினம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். பின்னர் பல மணி நேரமாகியும் மாணவனிடமிருந்து எவ்வித தகவலும் வராததால் பதற்றமடைந்த தந்தை, இதுதொடர்பாக அதிராம்பட்டினத்தில் உள்ள டுட்டோரியல் பள்ளி ஆசிரியரிடம் விசாரித்த போது, மாணவன் மீண்டும் அதிராம்பட்டினத்திற்கு வராதது தெரியவந்தது. 

காணாமல் போன அன்று கிரே கலர் டீசர்ட், கரு நீல ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தானாம். இவனது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுவரையில் முஜாஹிதீன் வீடு திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து இவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க மாணவனின் குடும்பத்தினர் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9159277788 / 9585159881 / 9976661604 

Tuesday, July 4, 2017

காணவில்லை !

அதிராம்பட்டினம், ஜூலை 04
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கருப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65). தச்சர். இவரது மகன் இறந்து விட்டார். மனைவி காந்திமதி, மகள் தமிழரசி, மருமகன் செந்தில்குமார் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வேதாரண்யம் போய்விட்டு வருவதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். பழனிவேல் இதுவரையில் வீடு திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க பழனிவேல் குடும்பத்தினர் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 
 காந்திமதி (மனைவி): 9750331368
கலியமூர்த்தி (மைத்துனர்): 7868823794
 செந்தில் குமார் (மருமகன்): 9688793026

Monday, May 8, 2017

பள்ளி மாணவனை காணவில்லை !

அதிராம்பட்டினம், மே-08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிமன்ற கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி. மீனவர். இவரது மகன் கிருஷ்ணன் ( 17 ) பதினோராம் வகுப்பு மாணவன். இந்நிலையில் கடந்த மே 5 ந் தேதி முதல் திடீரென மாயமானான். காணாமல் போன அன்று ரோஸ் கலர் சட்டையும், ஊதா கலர் லுங்கியும் அணிந்து இருந்தான். இவனது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுவரையில் கிருஷ்ணன் வீடு திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து இவரது குடும்பத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க கிருஷ்ணன் குடும்பத்தினர் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 8489492166 / 9095345844 

Sunday, April 23, 2017

காணாமல் போன அதிரை வாலிபர் சென்னையில் மீட்பு !

அதிராம்பட்டினம், ஏப்-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜிக் அகமது. சுற்று மனநிலை பாதிக்கப்பட்டு சென்னை அருகே உள்ள மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

மருத்துவ கிச்சைக்காக இவரது உறவினர் பைசல் அகமது கடந்த சிலவாரங்களுக்கு முன்பு காப்பகத்திலிருந்து ராஜிக் அகமதை அழைத்துச்சென்று பெரியமேட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது மண்ணடி பகுதிக்கு தன்னை அழைத்துச்செல்லும் படி கூறி வந்தாராம். இந்நிலையில் கடந்த ஏப்-7 ந் தேதி முதல் திடீரென மாயமானார்.

இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வந்தனர். இவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால் மிகுந்த கவலை அடைந்தனர். இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அதிரை நியூஸ் இணையதள ஊடகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஓஎம்ஆர், காரப்பாக்கம் பள்ளிவாசல் இமாம், நிர்வாகிகள் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை பத்திரமாக மீட்டு வந்தனர். இளைஞரின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் பள்ளிவாசல் இமாம், நிர்வாகிகள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Sunday, April 9, 2017

அதிரை வாலிபர் சென்னையில் மாயம் !

சென்னையில் மாயமான ராஜிக் அகமது
அதிராம்பட்டினம், ஏப்-09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜிக் அகமது. சுற்று மனநிலை பாதிக்கப்பட்டு சென்னை அருகே உள்ள மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

மருத்துவ கிச்சைக்காக இவரது உறவினர் பைசல் அகமது கடந்த வாரம் காப்பகத்திலிருந்து ராஜிக் அகமதை அழைத்துச்சென்று பெரியமேட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது மண்ணடி பகுதிக்கு தன்னை அழைத்துச்செல்லும் படி கூறி வந்தாராம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென மாயமானார்.

இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க இவரது தந்தை மற்றும் உறவினர்கள் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:
9944031031
9597466693

Thursday, January 5, 2017

முக்கிய அறிவிப்பு !

அதிராம்பட்டினம், ஜன-05
அதிராம்பட்டினம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் இப்ராஹீம். தனது இல்லத் திருமண அழைப்பிற்காக இவரது சகோதரி புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தாராம். அப்போது இவரது கழுத்தில் அணிந்து இருந்த 24 கிராம் ( 3 பவுன் ) மதிப்புள்ள நெக்லஸ் நகை தானாக அறுந்து கீழே விழுந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் நெக்லஸ் நகை இதுவரையில் கிடைக்கவில்லையாம். யாரேனும் நகையை கண்டெடுத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு:
இப்ராஹீம் 9600588315

Friday, June 10, 2016

காணவில்லை !

அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்காரத் தெருவை சேர்ந்தவர் ஏ. நசுருதீன். தமுமுக அவசர மருத்துவ சேவை பிரிவு ( ஆம்புலன்ஸ் ) பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரது மகன் முஹம்மது இப்ராஹீம்.

இந்நிலையில் தனக்கு சொந்தமான ரேஷன்கார்டு ( ஒரிஜினல் ), ஆதார் கார்டு ( ஒரிஜினல் ), வங்கி கணக்கு புத்தகம் ( ஒரிஜினல்), போட்டோ ஆகியவற்றை பாலித்தீன் கவரில் போட்டு நேற்று இரவு தனது மகனிடம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். சைக்கிளில் கடைத்தெரு தமுமுக அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நடுத்தெரு வழியாக வீடு சென்றுள்ளார். வீடு திரும்பிய போது சைக்கிளில் தொங்கவிடப்பட்ட பாலித்தீன் கவர் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இடைப்பட்ட பகுதியில் பாலித்தின் கவர் தவரவிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விசாரித்து வருகிறார். இதுவரையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கிடைக்காததால் வருத்தமடைந்துள்ளார்.

ரேஷன் கார்டு - ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கண்டெடுத்துவர்கள் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏ. நசுருதீன் 7845159434 / 9750505094

Saturday, February 6, 2016

காணவில்லை !

அதிராம்பட்டினம், சுப்பிரமணியகோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். வாகன ஓட்டுனராக சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா ( வயது 24 ). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள், 2 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த [ 19-12-2015 ] அன்று முதல் இவரது மனைவி திடீரென மாயமானார். இதுகுறித்து இவரது குடும்பத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுவரையில் சரண்யா வீடு திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க சரண்யா கணவர் மகேந்திரன் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு  9095460339

Wednesday, January 6, 2016

காணவில்லை ! 'தோழன்' என்கிற முஹம்மது அலி( வயது 60 )

மதுக்கூர் செவ்வாய் கொல்லை பெரிய ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் முஹம்மது அலி ( வயது 60 ). 'தோழன்' என்ற பெயரில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். சற்று மனநிலை பாதிப்படைந்து காணப்பட்ட இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை.

காணாமல் போன அன்று வெள்ளை நிற சட்டையும், கைலியும் அணிந்து இருந்தார். இவரது குடும்பத்தினர் மற்றும் மதுக்கூர் தமுமுகவினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுவரையில் வீடு திரும்பாததால் இவரது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கின்றனர். இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 99407 64710

Thursday, October 22, 2015

காணவில்லை !

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் ரிஜ்வான், சிஎம்பி லேன் ( அம்பேத்கார் நகர் ) பகுதியை சேர்ந்தவர் ஹலிமா அம்மாள். இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடந்த 5 தினங்களுக்கு முன்பு அதிரை செக்கடி மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கச்சென்றனர். ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது தங்களது இரண்டு ரேஷன் கார்டுகளும் காணாமல் போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுவரையில் ரேஷன் கார்டுகள் கிடைக்காததால் வருத்தமடைந்துள்ளனர்.

ரேஷன் கார்டுகளை கண்டெடுத்துவர்கள் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஹாலித் முகம்மது 9894964356

Tuesday, August 11, 2015

இளம்பெண் மாயம்: தஞ்சை எஸ்.பி.யிடம் தாய் புகார் !

தஞ்சாவூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன தனது 17 வயது மகளை கண்டுபிடித்துத் தரும்படி அப்பெண்ணின் தாய் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் அதிரை அருகேயுள்ள கரிசைக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெ. ராதிகா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. தர்மராஜனிடம் அளித்த மனு:
நான் கரிசைக்காடு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். என் 17 வயது மகள் அதிராம்பட்டினத்தில் உள்ள எனது தந்தை வீட்டில் தங்கி படித்து வந்தார். அவளை கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு முதல் காணவில்லை. இதையடுத்து நான் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். 2 நாட்களில் மகளை கண்டுபிடித்து தருவதாக போலீஸார் உறுதி அளித்திருந்தார். ஆனால், எனது மகள் காணாமல் போய் இதுவரை 18 நாட்கள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினர் சரியாக பதில் கூற மறுக்கின்றனர். ஆகையால் எனது மகளை விரைவில் கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும், மகளை கண்டுபிடித்துத் தரக் கோரி ராதிகா மனு அளித்தார்.

நன்றி:தினமணி

Wednesday, April 22, 2015

அதிரை அருகே பெண் திடீர் மாயம் !

அதிரை அடுத்து நடுவிக்காடு கிராமம் ராஜாமடம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல் இவரது மகள் தேன்மொழி (வயது 26), இவர் கடந்த 13–ந் தேதி வெளியில் சென்று வருவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.

அவரது தந்தை வடிவேல் அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தனது மகள் தேன்மொழி கிடைக்காததால் இதுகுறித்து அதிரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sunday, March 1, 2015

காணாமல் போன அதிரை வாலிபர் மீட்பு !

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில். இவரது மகன் ஜமால் முஹம்மது [ வயது 38 ] நமதூர் ரஹ்மானியா மதராஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர். காலியார் தெருவில் உள்ள தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சற்று உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 26-02-2015 அன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் கடந்த 3 நாட்களாக ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் பட்டுக்கோட்டை பண்ணைவயல் ரோட்டில் தென்பட்டுள்ளார். அந்தவழியே சென்ற சம்பைபட்டினத்தை சேர்ந்த சைபுல்லாஹ் என்ற சகோதரர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். நலமுடன் ஊர் திரும்பியதை அடுத்து இவரது குடும்பத்தினர் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். 

Saturday, February 28, 2015

காணாமல் போன வாலிபர் ஊர் திரும்பாததால் பெற்றோர்கள் மிகுந்த கவலை !

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில். இவரது மகன் ஜமால் முஹம்மது [ வயது 38 ] நமதூர் ரஹ்மானியா மதராஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர். காலியார் தெருவில் உள்ள தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சற்று உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 26-02-2015 அன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் இன்று காலை வரை ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஊர் திரும்பாததால் இவரது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மகன் காணாமல் போனது குறித்து ஜமால் முஹம்மது தகப்பனார் முஹம்மது இஸ்மாயில் நம்மிடம் கவலையுடன் கூறுகையில்...
'நான் கடைதெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாக எனது மகனை காணவில்லை. பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகிறோம். இதுவரையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனது மகன் ஆலிம் பட்டம் பெற்றவன். எனது மகன் விரைவில் வீடு திரும்ப இறைவனிடம் துஆ செய்யுங்கள்' என்றார்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு 7418596423

Thursday, February 26, 2015

அதிரை வாலிபரை காணவில்லை !

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில். இவரது மகன் ஜமால் முஹம்மது [ வயது 38 ] நமதூர் ரஹ்மானியா மதராஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர். காலியார் தெருவில் உள்ள தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சற்று உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக இன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் இதுவரையில் ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஊர் திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அதிரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கின்றனர். இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு 7418596423