.

Pages

Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Wednesday, November 9, 2016

வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை கொடுத்து முழு மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் பெறுவது எப்படி ? ( முழு விவரம் )

நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில்,

1. கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவில் பயங்கரவாதம் வேரூன்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவே 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு இனி எந்த பரிவர்த்தனையும் நடைபெறாது. ஆனால், அதனை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து முழு மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

3. பழைய நோட்டுக்களின் மதிப்பு என்ன?
பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதன் முழு மதிப்பிலான புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

4. அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக் கொள்ள முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில் தனி ஒரு நபர் ரூ.4,000ஐ மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். மீதத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

5. முழுத் தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாதா?
தற்போதைய திட்டப்படி, முழு தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாது. மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை.

6. 4 ஆயிரம் ரூபாய் எனக்குப் போதாது என்றால் நான் என்ன செய்வது?
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து, அதனை காசோலை, டிடி, நெட் பேங்கில் டிரான்சாக்ஷன்களின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.

7. வங்கிக் கணக்கு இல்லை என்றால்?
வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள முடியாது. வங்கியில் கணக்குத் தொடங்கிய பிறகே பணத்தை மாற்ற முடியும்.

8. ஜன்-தன் யோஜனா கணக்கு மட்டும் வைத்திருப்போர், வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

9. பணத்தை மாற்றிக் கொள்ள எங்கே செல்ல வேண்டும்?
ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கி மற்றும் வங்கிக் கிளைகள், கூட்டுறவு வங்கிகள், தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

10. என்னுடைய வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?
ரூ.4 ஆயிரம் வரை பணத்தை மாற்றிக் கொள்ள எந்த வங்கிக் கிளைக்கும், அடையாள அட்டையுடன் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

ரூ.4 ஆயிரத்துக்கும் மேலான தொகையை மாற்றிக் கொள்ள, வங்கிக் கணக்கில் வரவு வைக்க நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலோ அல்லது வங்கியின் பிற கிளைக்கோ தான் செல்ல வேண்டும்.

நன்றி:தினமணி

Tuesday, November 8, 2016

புதிய வடிவில் வர இருக்கும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் !

புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் எப்போது என்பது குறித்து ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

புதிய பாதுகாப்பு வசதிகளுடனான 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10-ல் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் உரிய அடையாள அட்டையை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை கொண்டுசெல்லும் பொருட்டு வங்கிகளுக்கு நவம்பர் 9 ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக போதிய ரூபாய் நோட்டுகள் தயாராக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

Wednesday, June 8, 2016

மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி? அரசாணை வெளியீடு!

முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்ட படி, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அரசாணையை எரிசக்தித்துறை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, 6-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவி யேற்றார். முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட் டார். அதில், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் அறிவிப்பும் ஒன்று.

இத்திட்டம், ஜெயலலிதா பதவி யேற்ற மே 23-ம் தேதி முதலே அமலுக்கு வந்தது. இந்நிலையில், கட்டண விவரம் தொடர்பான அர சாணையை எரிசக்தித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அத் துடன் புதிய கட்டணம் தொடர்பான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பயன்பாட்டு வகையிலும் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

மின் கட்டண விவரம்:

நன்றி: தி இந்து தமிழ்

Friday, April 29, 2016

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி !

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல், சிறுவனின் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.

காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 10.35 மணிக்கு வந்தது.

‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுவிட்டது.

‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.

விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு காரணம்.

இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:

கணினிமயம்

பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.

21 நாட்கள்

காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கிடைத்து விடும்.

ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப் பட்டுவிட்டது.

சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தி தமிழ் இந்து

Wednesday, March 30, 2016

அனைத்து அவசர உதவிக்கும் 112 விரைவில் அமல் !

அனைத்து அவசர உதவிக்கும் மக்கள் ஒரே எண்ணை தொடர்பு கொள்ளும் வகையில் நாடு முழுவதும் விரைவில் எண் ‘112’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் காவல்துறைக்கு 100, தீயணைப்பு துறைக்கு 101, ஆம்புலன்ஸ் சேவைக்கு 102, பேரிடர் நிர்வாக உதவிக்கு 108 என பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதுதவிர பல்வேறு மாநிலங் களும் தனித் தனியே அவசர உதவி எண்களை பயன்படுத்தி வருகின்றன.

உதாரணத்துக்கு டெல்லியில் அவசர உதவி கோரும் பெண்களுக்கு 181, பெண்கள், குழந்தை கள் காணாமல் போனது தொடர்பான புகார்களுக்கு 1094, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 1096 என பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த எண் நடைமுறைக்கு வந்தபின், இதுகுறித்து விழிப்புணர் வின் அடிப்படையில் ஓராண்டுக்குள் மற்ற அனைத்து எண்களும் முடக் கப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:தமிழ் தி இந்து 

Friday, September 25, 2015

ஹாஜிகள் நலமுடன் இருக்கின்றனர்: அல் நூர் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் தகவல் !

புனித நகரான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 149 ஹாஜிகள் பிரபல அல் நூர் ஹஜ் சர்வீஸ் மூலம் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், ஹஜ் புனித யாத்திரைக்கு வந்தவர்களின் கூட்டம் அதிகமானதால், திடீரென மெக்கா மசூதிக்கு வெளியே கடும் நெரிசல் ஏற்பட்டதில் 717 பேர் சிக்கி பலியாகி உள்ளதாகவும், 805க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.

இதையடுத்து சவூதி மெக்காவில் புனித ஹஜ் கடமை நிறைவேற்றி வரும் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி ஹாஜிகளின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக உறவினர்கள் - நண்பர்கள் அலைபேசிகளின் வாயிலாக பயண ஏற்பாட்டாளர்களிடம் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருக்கின்றனர்.

இதுதொடர்பாக அதிரையின் பிரபல தொழில் அதிபரும், அல் நூர் ஹஜ் சர்வீஸ் நிறுவன உரிமையாளருமாகிய ஹாஜி முஹம்மது அலி நம்மிடம் தொலைபேசியில் கூறியதாவது...
'நமது அல் நூர் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் மூலம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 149 ஹாஜிகள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் இறைவனின் பேருதவியால் பாதுகாப்பாகவும், நலமுடன் இருக்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் சவூதி மெக்காவில் முகாமிட்டுள்ள நானும், எனது குழுவினர்களும் உடனிருந்து செய்து வருகிறோம்.

இன்ஷா அல்லாஹ் அல் நூர் மற்றும் அல் தாஜ் ஆகிய நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொண்ட அனைத்து ஹாஜிகளும் புனித ஹஜ் கடமை நிறைவேற்றிய பிறகு எதிர்வரும் 02-10-2015 அன்று பாதுகாப்பாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் அனைத்து ஹாஜிகளும் நலமுடன் ஊர் திரும்பவும் - பயணம் பாதுகாப்பாக அமையவும் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
 

Monday, September 21, 2015

பாஸ்போர்ட் எடுக்க தாலுகா அலுவலகங்களில் ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி !

பாஸ்போர்ட் எடுப்பதற்கு எளிமையான விதிமுறைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் 3 பாஸ்போர்ட் சேவை மையங்களும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை நகரங்களில் தலா ஒரு சேவை மையம் வீதம் மொத்தம் 8 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர்புறங்களை சேர்த்து மக்கள் படித்தவர்களாக இருப்பதால் ஆன்–லைன் மூலம் வீட்டில் இருந்த படியோ, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றோ பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கிறார்கள்.

ஆனால் கிராமப்புறங்களில் படிப்பு அறிவு இல்லாதவர்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க பெரும் சிரமமும், கஷ்டமும் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி தரகர்கள் பாஸ்போர்ட் எடுக்க ரூ.5000 முதல் ரூ.8000 வரை வசூலிக்கிறார்கள். கிராம மக்கள் எளிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வழிவகை காண வேண்டும் என மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.

இதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரனுடன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பாஸ்போர்ட் சேவையை கிராமப்புற மக்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 264 தாலுகா அலுவலகங்ளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இ–சேவை மையத்தில் ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை (21–ந்தேதி) முதல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட்டிற்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்குகிறது.

இதுதவிர தலைமை செயலகம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை மற்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 285 இடங்களில் ஆன்–லைன் சேவை தொடங்குகிறது.

ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு கட்டணமாக மொத்தம் ரூ.1655 ரொக்கமாக வசூலிக்கப்படும். இதில் ரூ.1500 பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் ரூ.100 அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கும் ரூ.55 ஸ்டேட் பாங்கிற்கும் கமிஷனாக பெறப்படுகிறது. இந்த இ–சேவை மையங்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நிறுவகித்து வருகிறது.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலகுரு கூறியதாவது:–
கிராமப்புற மக்களுக்காக பாஸ்போர்ட் இ–சேவை மையங்கள் நாளை முதல் செயல்படுகின்றன. அங்கு சரியான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் சென்றால் அதனை சரி பார்த்து ஆன்–லைன் மூலம் பதிவு செய்வார். பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி (ஆன்– லைன் வழியாக) கொடுப்பார். இதற்கான கட்டணம் ரூ.1655 மட்டுமே. இதுபோக எவ்வித செலவும் இல்லை. புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களும், புதுப்பிக்க தவறியவர்களும், குறிப்பிட்ட காலம் முடிந்து மீண்டும் பாஸ்போர்ட் பெற விரும்புவர்களும் அங்கு விண்ணப்பிக்கலாம்.

பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும். கிராமப்புற மக்கள் எவ்வித சிரமமின்றி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க அரசு இ–சேவை மையங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இடைத்தரகர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை. விண்ணப்பதாரர்களே நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:மாலை மலர்

Tuesday, September 1, 2015

கலாம் காலிபர் ஷூ’வுக்காக CMN சலீம் தரும் யோசனை !

போலியோவால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் பயன்படுத்தும் காலிபர் ஷூ, 3 முதல் 5 கிலோ எடையில் மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆனதாக இருக்கும். இந்த காலிபர்களை அணியவும், நடக்கவும் மாற்றுத்திறனாளிகள் படும் வேதனையை மற்றவர்களால் உணர முடியாது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் காலிபரின் மேல் விளிம்பு தொடையிலும், மூட்டிலும் முட்டி மோதி கடுமையான வலியை ஏற்படுத்தும்.

இத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏவுகணையின் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படும் பாலி புரோபைலின் எனப்படும் ‘தெர்மோ பிளாஸ்டிக் பாலிமரை’ கொண்டு வெறும் 400 கிராம் எடையில் காலிபர் ஷூவை மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் உருவாக்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினர் தற்போது வழங்கும் எடை அதிகம் கொண்ட மெட்டல், பிளாஸ்டிக் காலிபர்களைத் தவிர்த்து, கலாம் பரிந்துரைத்த எடை குறைவான காலிபர் ஷூவை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக நீதி அறக்கட்டளை நிறுவனரும், பிரபல கல்வியாளருமாகிய  CMN சலீம் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிந்திருக்கும் யோசனை:
'தமிழகத்தில் 1.5 இலட்சம் மாற்றுத்திறநாளிகள் வாழ்கின்றனர். சாலை விபத்துகளில் கை, கால்ககளை இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு இலவசமாக செயற்கை மெட்டல் ஷூ வழங்குகின்றனர்.

அதிக எடை கொண்ட (4 kg) இதை அணிந்துகொண்டு வலியோடும் வேதனையோடும் வாழ்வை ஓட்டுகின்றனர். ஓடி ஆடி உழைப்பதற்கு உள்ளம் துடிக்கின்றது.ஆனால் உடல் முடங்கிபோய் கிடக்கின்றனர்.

அப்துல் கலாமின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பு தான் எடை குறைந்த
பாலி புரோபைலின் ஷூ (400 g) மாற்றுத் திறனாளிகள் வாழ்வில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். விலை ஏறக்குறைய 10 ஆயிரம் ரூபாய்.

இப்படி சிந்தித்துதான் பார்ப்போமே. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,620 கிராம பஞ்சாயத்துகள் எப்படி பார்த்தாலும் குறைந்தது 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் வெள்ளி தோறும் ஜும்ஆ நடைபெறுகிறது. கிராம புறங்களில் உள்ள 4 ஆயிரம் பள்ளிகளை தவிர்த்துவிட்டு மீதம் உள்ள 6 ஆயிரம் பள்ளிகளில், இறைவன் நாடினால், வருகின்ற ரமலான் மாதத்தின் ஒவொரு ஜும்ஆ விலும் குறைந்தது 6 நபருக்கு இந்த அப்துல் கலாம் காலிபர் ஷூ வை பள்ளிவாசல் சார்பாக வழங்கினால், தமிழகத்தில் உள்ள 1.5 இலட்சம் மாற்றுத்திறனாளிகளும் 4 வெள்ளிக் கிழமைகளில் மறுவாழ்வு பெறுவார்.

மக்கள் தங்கள் உள்ளங்களில் பள்ளிவாசல்களை காட்டுவர் இந்திய சமூகத்திற்கு இயல்பாகவே ஒரு குணம் உண்டு. நெருக்கடியான நேரத்தில் தனக்கு உதவியவனை தான் இங்கே குல தெய்வமாக கும்பிடுகின்றனர்' என யோசனை கூறியுள்ளார்.

Wednesday, August 12, 2015

தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு தடுப்பு ஊசி முகாம் !

தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணியருக்கு தடுப்பூசி முகாம் நாளை காலை 9 மணியளவில், தஞ்சை மாஸ் திருமண மண்டபத்தில் ( ராமநாதன் ஆஸ்பிட்டல் - மணிமண்டபம் அருகில் ) நடைபெற உள்ளது.

தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் அனைவரும் தடுப்பு ஊசி முகாமில் தவறாது கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் தொடர்புக்கு 
தமீம் அன்சாரி 9790282508

பரிந்துரை: 
'மரைக்கா' இத்ரீஸ் ( சேர்மன், இந்தியன் ரெட் கிராஸ், அதிரை )

Monday, July 27, 2015

தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை !

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டு, நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிகிறது.

அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 7 நாட்கள் நாடுதழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Monday, July 20, 2015

வதந்தியை நம்ப வேண்டாம் !

செல்பேசி வாயிலாக சிலிண்டரை பதிவு செய்யும் போது, தெரியாமல் '0'-ஐ அழுத்திவிட்டால், வாடிக்கையாளரின் கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்ற வதந்தி கிளம்பியது.

சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, ஐவிஆர்எஸ் முறையில் ஒலிக்கும் குரல், உங்களால் முடிந்தால், கேஸ் மானியத்தை திரும்ப அளித்துவிடுங்கள். அதற்கு '0'-ஐ அழுத்துங்கள். உங்களுக்கு சிலிண்டர் பதிவு செய்ய எண் 1 ஐ அழுத்துங்கள் என்று கூறுகிறது.

வாடிக்கையாளர்கள்  தவறுதலாக '0'-ஐ அழுத்திவிட்டால் உடனடியாக அவர்களது கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஐஓசி அதிகாரிகள் கூறியதாவது, 
தெரியாமல் பூஜ்யத்தை அழுத்தினாலே கேஸ் மானியம் ரத்தாகாது. '0'-ஐ அழுத்திய பிறகு அடுத்த கேள்விகள் வரும். அதில் எண் 7 ஐ அழுத்தினால் மட்டுமே கேஸ் மானியம் ரத்தாகும்.

அப்படியே தவறி 7ஐயும் அழுத்திவிட்டாலும் கூட, உடனடியாக சிலிண்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மீண்டும் கேஸ் மானியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை' என கூறுகின்றனர்.

நன்றி:தினமணி

Monday, July 13, 2015

போலீசாரின் பாஸ்போர்ட் விசாரணையை ஆன்லைனில் செயல்படுத்த திட்டம் !

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக அவர்களது விண்ணப்ப நகல்கள், இறுதியாக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த விண்ணப்பங்களை சரி பார்த்து உரிய சான்றிதழ்கள் வழங்குவதற்கென்றே போலீசில் தனியாக ‘‘பாஸ்போர்ட் பிரிவு’’ ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் தலைமையகங்களில் செயல்படும் இப்பிரிவு உளவு துறை அதிகாரிகளின் கீழ் இயங்குகிறது.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் வீட்டுக்கு சென்று உளவு பிரிவு போலீசார் நேரடியாக விசாரணை நடத்துவார்கள். அவர்கள் வசிக்கும் எல்லைக்குட்பட்ட பகுதி காவல் நிலையங்களில் வழக்கு ஏதும் உள்ளதா ? என்பது பற்றியும் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்கள். சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லாத பட்சத்தில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கலாம் என்று போலீசார் பரிந்துரை செய்வார்கள். இதன் பின்னரே பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகள் நிறைவு பெறும். பாஸ்போர்ட் அதிகாரிகளிடமிருந்து பாஸ்போர்ட்டை பெற முடியும்.

இப்பணிகளை எளிமையாக்கும் வகையில் பாஸ்போர்ட் விசாரணைகள் அனைத்தையுமே ஆன் லைனிலே செய்து முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் தேசிய மக்கள் தொகை பட்டியல், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் புதிய சர்வர் ஒன்று தொடங்கப்பட உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை ஆன் லைனிலேயே கண்டறியும் வகையில் கிரைம் அண்டு கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் என்ற பெயரில் புதிய முறையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக பாஸ்போர்ட் விசாரணையை போலீசார் இருந்த இடத்தில் இருந்தே முடித்து விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொழில் நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இப்பணிகளை செய்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு திரும்பியதும் இப்பணிகள் அனைத்தும் முழு வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவம்பர் மாதம் முதல் ஆன் லைன் மூலமாக போலீசார் பாஸ்போர்ட் விவரங்களை சரிபார்க்கும் பணியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நேரடியாக சென்று போலீசார் பாஸ்போர்ட் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுவதால் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. 7 நாட்களில் இருந்து 20 நாட்கள் வரையிலும் இதற்காக பொது மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்து வருகிறது. ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் காலதாமதம் ஏற்படாது. போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் இப்பணிகளை செய்து முடிப்பார்.

பாஸ்போர்ட் சேவையை விரைந்து முடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் அறிவுரை வழங்கினார்.

இதை தொடர்ந்தே ஆன்லைனில் பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் அமலுக்கு வந்த பின்னர், பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரி ஒருவர், கம்ப்யூட்டரை தட்டினாலே போதும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் போட்டோ உள்ளிட்ட அனைத்து விவரங்களுமே அவரது விரல் நுனிக்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலைமலர்
Image Credit:thehindu

Thursday, June 25, 2015

ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 31 வரை காலக்கெடு நீடிப்பு !

கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவகாசம் டிசம்பர் 31 வரை காலக்கெடு நீடிகப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து  கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவித்தது. இதற்கான இறுதி கெடு கடந்த ஜனவரி 1ம் தேதி வரை இருந்தது. இருப்பினும் பெரும்பாலானோர் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றவில்லை. பின்னர் இந்த மாதம் 30ம் தேதி வரை காலக்கேடு நீட்டிக்கப்பட்டது.

ஆனால் தற்போது டிசம்பர் 31 வரை நீடிகப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து  பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். போலி ரூபாய் நோட்டுக்களை தடுக்கவும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே திரும்பப்பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. வங்கிகளும் 2005க்கு முந்தைய நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

பொதுமக்கள் வங்கிகளில் எத்தனை ரூபாய் நோட்டு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.  எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லை.  ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றுபவர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. 2005க்கு முந்தைய நோட்டுக்களுக்கு பதில் வேறு நோட்டுக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நன்றி:தினகரன்

ஆதார் அட்டை இல்லாத பள்ளி மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி !

தமிழக கல்வித்துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் அட்டை இல்லாத மாணவ, மாணவிகளைக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 60 முதல் 70 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

தமிழக அரசின் கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளைப் பெற வரும் காலங்களில் ஆதார் அட்டை வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு கல்வித்துறை மூலமாகவே ஆதார் அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எவ்வளவு பேருக்கு ஆதார் அட்டை இல்லை என்பதை கணக்கெடுத்து, அந்த புள்ளிவிவரங்களை வரும் 30-க்குள் அனுப்பி வைக்க, தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் அட்டை இல்லாத மாணவ, மாணவிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதில் மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
* Image Credit: Google

Monday, June 22, 2015

ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஜூன் 30 ம் தேதி வரை காலஅவகாசம் !

கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து  கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவித்தது. இதற்கான இறுதி கெடு கடந்த ஜனவரி 1ம் தேதி வரை இருந்தது. இருப்பினும் பெரும்பாலானோர் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றவில்லை. பின்னர் இந்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே இன்னும் 9 நாட்களே அவகாசம் உள்ளது. 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். போலி ரூபாய் நோட்டுக்களை தடுக்கவும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே திரும்பப்பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. வங்கிகளும் 2005க்கு முந்தைய நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

பொதுமக்கள் வங்கிகளில் எத்தனை ரூபாய் நோட்டு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.  எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லை.  ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றுபவர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. 2005க்கு முந்தைய நோட்டுக்களுக்கு பதில் வேறு நோட்டுக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. விருப்பப்பட்டால், ஒருவரது கணக்கில்  டெபாசிட் செய்துகொள்ளலாம். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை  ரிசர்வ் வங்கி இவ்வாறு  மாற்றுவதும், வடிவத்தை மாற்றி அமைப்பதும் புதிதல்ல. 2011ம் ஆண்டு 25 பைசா நாணயங்கள் செல்லாது என ரிசர்வ் அறிவித்தது. பண வீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறிப்பாக 25 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பின்றி போய்விட்டது. சில கடைக்காரர்களும் அதை வாங்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அழித்தது எவ்வளவு?
கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஜனவரி வரையிலான 13 மாதங்களில் 2005க்கு முந்தைய 164 கோடி ரூபாய் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் பெறப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இதில் 1,000 நோட்டுக்களும் அடங்கும் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி 21,750 கோடி மதிப்புக்கு 2005க்கு முந்தைய நோட்டுக்கள் பெறப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதில், 86.87 கோடி 100 நோட்டுக்கள், 56.19 கோடி 500 நோட்டுக்கள், 21.75 கோடி 1,000 நோட்டுக்களும் அடங்கும்.

நன்றி:தினகரன்

Monday, June 1, 2015

புகை பிடித்தால் ₹ 1 லட்சம் அபராதம் !

புகை உயிருக்கு பகை என்று என்ன தான் கரடியாக கத்தினாலும், புகைப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாக இல்லை. இந்நிலையில் அவர்களை வழிக்கு கொண்டு வரும் அதிரடி முடிவை சீனா கையிலெடுத்துள்ளது. அதன்படி புகை பிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டம் இன்று முதல் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இனி பொது இடங்களான அலுவலகம், உணவகம், ஓட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட இடங்களில் இனி யாராவது புகை பிடித்தால் அவர்களுக்கு 10000 யுவான்கள்  ( இந்திய ரூபாயின் மதிப்பில் 1 லட்ச ரூபாய் ) அபராதம் விதிக்கப்படும். அதே போல் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசின் இச்சட்டத்தை பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக அலுவலகங்கள் மற்றும் ஓட்டல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தடையை நடைமுறைப்படுத்தாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட லைசென்சு ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவின் இம்முடிவை இந்திய அரசும் பின்பற்றுமா என்பதே நம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி: மாலை மலர்

Wednesday, May 6, 2015

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதை இணைய தளத்தில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுதிய மாணவ, மாணவர்கள் தாங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இன்டர்நெட் சென்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், வரும் 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தன. ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணியும் முடிந்துள்ளன.

இதையடுத்து நாளை தேர்வு  முடிவுகளை வெளியிடுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு கல்லூரி சாலையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கவும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும், அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தவிரவும், தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் படித்த  பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

இணைய தள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

Tuesday, May 5, 2015

வீடுகளில் சூரிய மின்தகடு அமைக்க ஆன்-லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஒருவர் தனது வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் http://teda.in/apply/ இ-பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்-லைனிலேயே அனுப்பப்படும்.

இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள 17 கம்பெனிகளின் பட்டியலும் இடம் பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும். இந்த திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக விண்ணப்பங்கள் 30 நாள் கால அவகாசத்தில் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்த பிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும். 

Friday, May 1, 2015

அதிரையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி !

அதிரை இளைஞர்கள் மற்றும் Terri Wear இணைந்து நடத்தும் 10th,11th,12th முடித்த மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் (08-05-2015) வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி  காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியர் M. ஆசியதாரா M.A.,M.Phil.,Ph.D., அவர்கள் ( அடுத்து என்ன படிக்கலாம்? ) என்ற தலைப்பிலும் ,ACCESS INDIA COUNSELLOR வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி B.A.,B.L., அவர்கள் (கல்வி சம்மந்தமாக பெற்றோர்கள்,மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்) அளிப்பார்.

மேலும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி சம்மந்தமான சிறப்பு பயிற்சிகளும் இந்த நிகழ்ச்சியில் அளிக்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு:பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

Tuesday, April 28, 2015

தஞ்சையை பூகம்பம் தாக்கும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை !

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் பல்லாயிரம் மக்கள் உயிரை பலி வாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஆனாலும் தமிழ்நாடு பாதுகாப்பான பகுதி இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிலநடுக்கம் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 5–வது எண் அதிக பாதிப்புக்கொண்டதாகும். தமிழ்நாடு 3–வது நிலநடுக்க அளவீட்டில் வருகிறது. இதன்படி 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த அளவுக்கு நிலநடுக்கம் வந்தால் சென்னை, கோவை, மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னையை பொறுத்தவரை ஏராளமான பழங்கால கட்டிடங்கள் உள்ளன. இவை 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு நிலநடுக்கம் வந்தால் அதை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இதனால் சென்னையில் பேராபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான கட்டிடங்கள் சென்னையில் கட்டப்படுகின்றன. அவை பூகம்பத்தை தாங்கும் அளவிற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் டீன் பேராசிரியர் சாந்தகுமார் கூறியதாவது:–
தற்போது சென்னையில் கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களின் கீழ் பகுதியில் கார் பார்க்கிங் வசதிக்காக தூண்கள் அமைத்து கட்டப்படுகின்றன. இந்த தூண்கள் சரியான தாங்கும் திறனை கொண்டுள்ளதா என்பதில் சந்தேகங்கள் இருக்கிறது.

இதுபோன்ற தூண்கள் அமைத்து கட்டப்படும் கட்டிடங்களில் ஒவ்வொரு தூணும் குறைந்தபட்சம் ஒரு அடி அகலத்தில் இருக்க வேண்டும். 10 மாடி கட்டிடம் மற்றும் அதற்கு மேற்பட்டதாக இருந்தால் ஒரு மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும்.

பூகம்பத்தை தாங்கும் அளவுக்கு தூண்கள் அமைக்கப்படும்போது கட்டிட செலவில் 25 சதவீதம் தூண்களுக்கே செலவிட வேண்டியது வரும். மேலும் ஒட்டுமொத்தமாக நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிடம் கட்டுவதாக இருந்தால் 15 சதவீதத்துக்கு மேல் அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் அடையாறு கரையோரத்தில் உள்ள கட்டிடங்களுக்கு மிகுந்த பாதிப்புக்கு ஏற்படும் என்று கணித்துள்ளனர். ஏனென்றால் இந்த பகுதியில் மண்கள் நெகிழ்வு தன்மையுடன் இருக்கிறது. அதேபோல கடற்கரை பகுதியில் உள்ள கட்டிடங்களும் பூகம்பத்தை தாங்குவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆலோசகர் எமராஜிடம் கேட்டபோது, கடந்த 10 ஆண்டில் சென்னை நகரில் ஒவ்வொரு ஆண்டும் 1000 கோடி ரூபாய் அளவுக்கு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவை நிலநடுக்கத்தை தாங்கும் அளவிலேயே கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

இந்திய தர அமைப்பு ஆய்வில், தமிழ்நாட்டில் காவிரி, வைகை கரையோர பகுதிகள், கன்னியாகுமரி பகுதி போன்றவற்றில் பூகம்பம் வந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

நன்றி: மாலைமலர்