இதையடுத்து நாளை தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு கல்லூரி சாலையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கவும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தவிரவும், தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இணைய தள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

பல வீடுகளிலும், பள்ளிகளிலும், மாணவர்களிடம் தோல்வி என்ற ஒன்றே இருக்க கூடாது என்று எதிர்பார்க்கின்றனர். தோல்வி தானே வெற்றியின் முதல் படிக்கட்டு. எந்தக்குழந்தைக்கு தன்னம்பிக்கையும், வீழ்ந்தால் தாங்கி பிடிக்க குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார் குறைவாக இருக்கிறதோ அந்த குழந்தைகளே தற்கொலை முடிவை எடுக்கின்றனர் என்று உளவியல் ஆய்வு சொல்கிறது.
ReplyDeleteஇவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சி அவசியம் தேவை. உங்கள் குழந்தையின் படிக்கும் திறனை கண்டு கொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். அவர்கள் தோல்விகளை சந்திக்கும் போது, தாங்கிப்பிடிக்கும் சக்தியாய் உங்கள் அன்பு இருக்கட்டும்.
தேர்வின் முடிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மாணவ மாணவிகளே ரிலாக்ஸ். வீழ்ந்தாலும் வீறு கொண்டு எழுவோம்!