.

Pages

Friday, May 29, 2015

அதிரையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் ஹாஜா கனி பங்கேற்பு !

பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப் படுவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று மாலை அதிரை  பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஜே. ஹாஜா கனி கண்டன உரையாற்றினார்.

தமுமுக மாவட்ட பொருளாளர் அதிரை அஹமது ஹாஜா, மதுக்கூர் பவாஸ், தமுமுக அதிரை நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி ஆகியோர் கண்டன கோஷங்கள் இட இவற்றை கூட்டத்தினர் வழிமொழிந்தனர். முஸ்லீம்கள் மீது படுகொலை செய்யும் பெளத்த அரசை கண்டித்தும், படுகொலைகளை ஐநா சபை மற்றும் உலக நாடுகள் தடுத்து நிறுத்த கோரியும் கோஷமிடப்பட்டது. இதில் ஏராளமான தமுமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமுமுகவினர் அதிரை தக்வா பள்ளி அருகிலிருந்து ஊர்வலமாக கண்டன கோஷங்கள் இட்டவாறு அதிரை பேரூந்து நிலையத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
 
 
 
 
 
 
 

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோதரர்களே.....

    சற்று நீண்ட பதிவு அவசியம் படிக்கவும்!!!!!

    பர்மாவில் வசித்துவந்த இஸ்லாமிய மக்கள் இன்று அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்துக்கொண்டு இருக்கின்றார்கள்....

    பர்மாவில் இஸ்லாமியர்கள் மைனாரிட்டி எனப்படும் சிறுபாண்மையினர் என்றுதான் நாம் நினைத்து வந்தோம் ஆனால் உண்மை அதுவல்ல...
    விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.....
    பர்மாவில் வாழும் இஸ்லாமிய மக்களை ஒடுக்குவதற்க்கு பல ஆண்டுகளாக பல திட்டங்களை பர்மா அரசு தீட்டி இன்று வெற்றி கண்டுள்ளது இது சுமார் 70 ஆண்டுகாள திட்டம்....
    ஆம் இதோ புள்ளி விவரங்களை பாருங்கள்.....
    இஸ்லாமிய இன அழிப்பை கொண்டு வருவதற்க்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பிண்வருமாறு:

    1: மிலிட்டரி ஆப்ரேசன்- நவம்பர் 1948

    2: பர்மா டெரிடோரியல் ஃபோர்ஸ் ஆப்ரேசன்-1949-50

    3: மிலிட்டரி ஆப்ரேசன் செகன்டு எமர்ஜென்சி- மார்ச் 1951-52

    4: மயூ ஆப்ரேசன்- அக்டோபர் 1952-53

    5: மோனே தோனே ஆப்ரேசன் - அகடோபர் 1954

    6: கம்பைண்ட் இமிக்ரேசன் அன்ட் ஆர்மி ஆப்ரேசன் - ஜனவரி 1955

    7: யூனியன் மிலிட்டரி போலீஸ் ஆப்ரேசன்- 1955-58

    8: கேப்டன் ஹ்தின் க்யாவ் ஆப்ரேசன்- 1959

    9: ஷ்வீ க்யீ ஆப்ரேசன்- அக்டோபர் 1966

    10: க்யீ கன் ஆப்ரேசன்- அக்டோபர்-டிசம்பர்1966

    11: ந்கசின்கா ஆப்ரேசன்- 1967-69

    12: ம்யாத் மான் ஆப்ரேசன்- பிப்ரவரி 1969-71

    13: மேஜர் ஆங் தான் ஆப்ரேசன்- 1972

    14: சபே ஆப்ரேசன்- 1973

    15: நாகா மின் கிங் ட்ராகன் ஆப்ரேசன்- 1978-79

    இந்த ஆப்ரேசனில் மட்டும் சுமார் 3 இலட்சம் இஸ்லாமியர்கள் பர்மாவை விட்டு வெளியேற்றப்பட்டு அகதிகளாக பங்களாதேஷ் சென்றார்கள்

    16: ஷ்வீ ஹிந்தா ஆப்ரேசன்- ஆகஸ்ட் 1978-80

    17: கலோன் ஆப்ரேசன்- 1979

    18: ப்யி தயா ஆப்ரேசன்- ஜூலை 1991-92

    இந்த ஆப்ரேசனில் 2 இலட்சத்து 70 ஆயிரம்பேர் அகதிகளாக பங்களாதேஷ் சென்றனர்

    19: நா சா கா ஆப்ரேசன்- 1992-2013

    இந்த ஆப்ரேசன்தான் விராத்து உடைய தீவிவாத அமைப்பான இஸ்லாமிய ஒழிப்பு இயக்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது அதன் பின்பு இயக்கத்தின் பெயர் பி ஜி பி என்று மாற்றப்பட்டது

    20: 969 இஸ்லாமிய ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் 2012 ஆம் ஆண்டு முதல் நா சா கா மற்றும் தேசிய இராணுவத்துடன் இனைந்து இன அழிப்பு போர் அதிகமானது
    இதில் ஆயிரக் கணக்கான முஸ்லீம்கள் மற்றும் குழந்தைகள் ஈவு இறக்கமின்றி கொல்லப்பட்டனர்
    பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு உயரோடு கொழுத்தப்பட்டனர்


    இதில் சுமார் 4 இலட்சம் இஸ்லாமிய மக்கள் வெவ்வேறு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்
    மலேசியா அரசு சுமார் 50 ஆயிரம் பேருக்கு தர்காலிக குடியுரிமை வழங்கியது
    சில அரபு நாடுகளும் அடைக்களம் கொடுத்தனர் அப்போதயை சவுதி மன்னர் அப்துல்லாஹ் பல உதவிகளை செய்தார்

    பல நூற்றுக்கணக்கான மக்கள் கடலிலேயே மாண்டு பிணமாக மிதந்தனர்

    21: பி ஜி பி ஆப்ரேசன்- 2013 முதல் இன்றுவரை நடந்து வருகிறது
    இந்த ஆப்ரேசன் படை ஆயுதங்களுடன் முஸ்லீம்கள் வாழும் பகுதியை தேடி தேடி சென்று கொத்து கொத்து கொன்று வருகிறது

    22: தற்பொழுது புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆப்ரேசன் மேல் நாம் கூறிய அனைத்தையும்விட பயங்கரமானது
    எந்த மீடியாவும் வாய் திறக்காத வன்னம் இது செயல்படுகிறது

    இந்த செயலுக்கெல்லாம் இர்கள் வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா சகோதரர்களே....???

    "நம் மதத்தையும் நம் தேசத்தையும் பாதுகாப்போம்"

    இந்த கொடுமைகளை அதிகமாக பகிர்ந்து அனைத்து மக்களிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்...
    முஸ்லிம் ஓட்டு வங்கிகளை கேட்டு பெரும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி பர்மாவிற்கு பொருளாதார தடைகளை விதித்து அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் .
    இந்தியாவைச் சுற்றிலும் இனப்படுகொலைகள் அரங்கேறுகின்றன. தற்போது பர்மாவில் நிகழும் ரொஹிங்கியா இனப்படுகொலை க்டந்த மூன்று வருடங்களின் தொடர்ச்சியாக நிகழ்கிறது. இதற்கு முன்னர், கச்சின், கரேன் தேசிய இனமக்கள் மீது இனப்படுகொலை தாக்குதலை பர்மா அரசு நடத்தியது.

    பர்மாவில் தலைவிரித்தாடும் பெளத்த பேரினவாதமும், முன்னனியில் செயல்படும் பெளத்த பயங்கரவாத அமைப்பான 969 இயக்கம் , இலங்கையின் பெளத்த பேரினவாத பயங்கரவாத அமைப்பான பொதுபலசேனாவோடு புரிந்துணர்வினை கடந்த வருடங்களில் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளும் இந்தியாவின் இந்து பயங்கரவாத அமைப்பான “ஆர்.எஸ்.எஸ்” அமைப்போடு புரிந்துணர்வினை ஏற்படுத்தி இருக்கின்றன...

    பேரினவாத அமைப்புகள் ஒன்றினைந்து வலிமையாகும் இத்தருணத்தில் முற்போக்குஆற்றல்கள் கைகோர்த்து இனப்படுகொலைக்குள்ளாகும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.

    பர்மாவின் பயங்கரவாத 969 அமைப்பின் சின்னத்தில் இருக்கும் மூன்று சிங்க தூபி இந்தியாவின் கள்ள மெளனத்தினை புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.