.

Pages

Showing posts with label தகவல் தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தகவல் தொழில்நுட்பம். Show all posts

Sunday, March 19, 2017

ஜீமெயில் கணக்குகளில் இருந்து இனி தாயகத்திற்கு பணம் அனுப்பலாம், எடுக்கலாம்!

அதிரை நியூஸ்: மார்ச்-19
நம்முடைய பல வகையான குடும்பத் தேவைகளுக்கும் பணம் அனுப்ப எக்ஸ்சேஞ்சுகள், வங்கிகள், ஆன்லைன் சேவைகள் போன்றவற்றையே நம்பியுள்ளோம், அதிலும் பெரும்பாலோர் எக்ஸ்சேஞ்சுகளையே பெரிதும் நாட வேண்டியுள்ளது.

இனி நம்முடைய ஜீமெயில் (Gmail Account) எனும் ஈமெயில் கணக்குகள் வழியாகவே நம்முடைய வங்கி கணக்கிற்கு சேவைக்கட்டணமின்றி பணத்தை அனுப்பவும், வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவும் (Send & Receive Money) தேவையான ஆண்ட்ராய்ட் போன் செயலி (Android App) ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது ஜீமெயில் நிறுவனம்.

பணம் அனுப்புவது பெறுவது எவ்வாறு?
1. உங்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்ட் போன்கள், (Android Phones) டேப்லட்டுகள் (Tablets) போன்ற நவீன சாதனங்களின் வழியாக ஜீமெயில் செயலியை பதிவிறக்கம் (Download Gmail App) செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

2. ஜீமெயில் வழியாக கடிதங்கள் அனுப்புவதற்கு உள்ள COMPOSE பட்டனை தட்டுங்கள் (like how it's done for composing an e-mail), பணம் பெறுபவரின் முகவரியை தேர்வு செய்யுங்கள் (The address of the one receiving the money is to be entered), பின்பு எந்த நாட்டுப் பணம் என்பதற்கான பண குறியீட்டை தேர்ந்தெடுங்கள்the (Dollar ($) icon is to be clicked).

3. எவ்வளவு பணம் அனுப்புகிறோம் என்பதை குறிப்பிட்டு (The amount has been specified) பதிந்து  (The user should click on ATTACH) எனும் பட்டனைத் தட்டி இணைக்கவும், இறுதியாக SEND என்ற பட்டனை தட்டி அனுப்பவும் (SEND the money).

அதேபோல், (You just do it like you check your e-mails) பணத்தை பெறுபவர்கள் தங்களுடைய ஜீமெயில் இன்பாக்ஸிற்கு சென்று வழமையாக ஈமெயிலை வாசிக்க திறப்பது போல் திறந்து பின் CLAIM என்ற பட்டனை தட்டி உங்கள் கணக்கில் வந்துள்ள பணத்தை பெற்றுக்கொள்ளவும். Click to CLAIM the money).

ZDNet என்ற நிறுவனமும் இப்படி பணத்தை அனுப்பும், பெறும் வசதிகளை வழங்கி வருகிறது.

மேலும் விபரங்களுக்கு:
Send & request money in your Gmail app on Android https://t.co/XlsbSr8Qyj pic.twitter.com/ZYULmS5uTH- Gmail (@gmail) March 14, 2017

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

Saturday, August 27, 2016

ஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் அப் !

வாட்ஸ் அப் தன்னுடைய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் தனது பயனாளிகளின் செல்பேசி எண்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளது. இதன்மூலம் வாட்ஸப் பயனர்கள் இனி, ஃபேஸ்புக்கில் குறிப்பிடத்தக்க விளம்பரங்களை அதிக அளவில் காண வேண்டி வரும்.

உலகம் முழுக்க 100 கோடி பயனர்களைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமானப் பரிமளித்திருக்கும் வாட்ஸ் அப், தனது பயனர்களின் ப்ரைவஸியை முழுமையாகப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால் 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்பைக் கையகப்படுத்திய பிறகு இந்த கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இரு வருடங்களுக்கு முன்னால் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது ஃபேஸ்புக். அதே நேரத்தில் வாட்ஸ் அப்பிடம் அதன் பயனர்களின் ப்ரைவஸியை மதிப்போம் என்று உறுதி அளித்திருந்தது. ஆனால் வாட்ஸ் அப் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த முடிவை எடுத்திருக்கிறது ஃபேஸ்புக்.

இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள், சலுகைகள், செய்திகளை தனிநபர் பயனாளிக்கு அனுப்ப முடியும். அதே நேரம் பயனாளிகள் அவற்றை பிளாக் செய்து கட்டுப்படுத்தவும் முடியும். வாட்ஸ் அப், வழக்கமான விளம்பரங்களைத் தடை செய்யும் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

அதே நேரம் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் செல்பேசி எண்களை ஆன்லைனில் பதிவிடாது எனவும், விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் எண்கள் பகிரப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக் கிழமை) தனது நிறுவனத்தின் ப்ரைவஸி கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ள வாட்ஸ் அப், பயனர்கள் அதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் முன்னதாக 2012-ல் (ஃபேஸ்புக்குடன் இணைவதற்கு முன்பாக) சேவை விதிமுறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக்குடன் இணைந்து இரண்டு கணக்குகளையும் ஒருங்கிணைக்க உள்ளது. இதன்மூலம் வாட்ஸ் அப் பயனர்களின் தொலைபேசி எண்கள், பயன்படுத்தும் சாதனம் குறித்த தகவல்கள், இயங்குபொருள் (OS) வகைப்பாடு, ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.

ஃபேஸ்புக் பயனர்களில் பலரே, தங்களின் செல்பேசி எண்ணைக்கொண்டுதானே கணக்கைத் தொடங்கியிருப்பர். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற கேள்வி எழலாம். செல்பேசி மூலம் ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுதும் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த தற்போதைய எண்ணையே அவர்கள் கொடுக்க வேண்டும். இதனால் வாட்ஸ் அப்பின் தகவல்கள் ஃபேஸ்புக்குக்கு முக்கியமானவை.

வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தியபோது அனைத்து ப்ரைவஸி அமைப்புகளும் அதை வரவேற்றன. அதைத்தொடர்ந்து என்க்ரிப்ஷன் முறை இதிலும் தொடரும் என்று வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.

இந்த கணக்குகள் ஒருங்கிணைப்பு, தனிநபர் உரிமையைப் பாதிப்பதாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வாட்ஸ் அப், தற்போதைய பயனாளிக்கு புதிய கொள்கையை ஒத்துக்கொள்ளவோ அல்லது சேவைப் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளவோ ஒரு மாத அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட பிறகு, உங்களது வாட்ஸ் அப் மெசஞ்சருக்கு சென்று 'செட்டிங்ஸ்' கிளிக் செய்து 'அக்கவுன்ட்'-ல் உள்ள 'பிரைவஸி' ஆப்ஷனுக்குள் நுழைந்தால் கடைசியாக ஃபேஸ்புக் இணைப்பு குறித்த பகுதி இருக்கும். அதில், டிக் ஆப்ஷனை நீக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

நன்றி: தி இந்து தமிழ்

Tuesday, March 29, 2016

வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம்!

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் செல்போன், இணையதளம், வாட்ஸ் அப், சாட்டிங், வீடியோ அழைப்பு போன்றவற்றால் ஒரு நொடியில் தொடர்பு கொண்டு பேசும் வசதி உள்ளது.

ஆரம்பத்தில் கம்ப்யூட்டர், லேப்–டாப் போன்றவற்றின் மூலம் பேசுபவர்களின் உருவத்தை பார்த்து கொண்டே பேசும் வசதி இருந்தது.

இப்போது செல்போன், ஐபோன், டேப் போன்ற சாதனங்கள் மூலமாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசும் உணர்வை ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம் பரிணாமம் பெற்றுள்ளது.

‘வாட்ஸ் அப்’ என்னும் நவீன தகவல் தொடர்பு சாதனம் தற்போது உலகம் முழுவதும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து விட்டது.

உலகின் எந்த பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை படத்துடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை வெகுவாக சென்றடைந்துள்ளது.

செல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்’ வசதியை பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. முற்றிலும் இலவசமாக்கப்பட்ட இந்த வசதியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் (டெலிபோன்) பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோனுக்கு பேசும் வசதியை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறார்.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் டெலிபோன் சரண்டர்களை குறைப்பதோடு புதிய இணைப்புகளுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பி.எஸ்.என்.எல். கருதுகிறது.

நன்றி:மாலை மலர்

Wednesday, March 2, 2016

வாட்ஸப்பில் ஆவணங்களை அனுப்ப புதிய வசதி!

வாட்ஸப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸப் புதிய வெர்சன் - v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும் v 2.12.14 ஆப்பிள்  ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாகுமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்சப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்புகளில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில்  வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக  இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஆவணங்களை யாருக்கு அனுப்புகிறமோ? அவரும் வாட்ஸப் அப்டேட் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும். 

Thursday, February 4, 2016

வாட்ஸ்அப் குரூப்பில் இனி 256 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம்!

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஆன்லைனில் இணைந்திருக்க 'வாட்ஸ் அப்' குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர்.

ஒரு 'வாட்ஸ் அப்' குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கையை 256-ஆக அதிகரித்துள்ளது 'வாட்ஸ் அப்'. ஆனால், இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு 'வாட்ஸ் அப்'-ஐ பேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அதன்பிறகு, அமோக வளர்ச்சியை கண்டு வரும் 'வாட்ஸ் அப்' தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு டாலர் கட்டணத்தையும் 'வாட்ஸ் அப்' ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sunday, July 12, 2015

வாட்ஸ் அப்பில் விரைவில் லைக் பட்டன் !

வாட்ஸ் அப் - ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேப்போல்  கணினி பதிப்பான வாட்ஸ் அப் வெப் - ம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

செல்பேசியில் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி மூலம் எழுத்து, படம், காணொளி ஆகிய வடிவில் செய்திகளை அனுப்பலாம்.

இது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் செய்தி தொடர்பு செயலியாக ஸ்மார்ட் போன்களில் வலம் வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல், வாட்ஸ் அப் செயலியானது கணினியில் பயன்படுத்தக்கூடிய வசதியை வழங்கியது. ஆனால், செல்பேசியில் உள்ள வசதிகள் அனைத்தும் கணினி பதிப்பில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

தற்போது, வாட்ஸ் அப் தனது கணினி பதிப்பை மேம்படுத்தியுள்ளது. அதன் படி, ஸ்டேடஸ் மாற்றலாம், ஃப்ரபைல் படத்தை மாற்றியமைக்கலாம். அரட்டையை நீக்கலாம், ஆவணப்படுத்தலாம், குழுவை நிர்வகிக்கலாம். ஆனால் இந்த மேம்படுத்தல்கள் அண்டிராய்ட் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் பயனர்கள் இந்த அம்சங்களை பயன்படுத்த முடியாது.

கூடுதல் தகவலாக, வாட்ஸ் அப்பில் பார்த்து படித்த செய்தியை படிக்காததாக குறிக்கவும் வகையில் வசதிகளை மேம்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேப்போல், லைக் பட்டன் வசதியையும் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இது தொடர்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. எனினும், அதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:ns7

Sunday, July 5, 2015

இணையத்தை கலக்கும் எக்ஸ்குளூசிவ் இணையதளம்!

ஒரு இணையதளத்தை பயன்படுத்தி பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணைய உலகை இப்போது கலக்கி கொண்டிருக்கும் 'மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்' எனும் இணையதளத்தின் உள்ளே நுழையும் அனுமதிக்காகதான் இப்படி ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நீங்களும் அந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்க விரும்பினால், அதில் அனுமதி சீட்டு வாங்கி இணைய வரிசையில் நின்றாக வேண்டும். ஆச்சர்யமாக இருக்கலாம். அப்படி அந்த இணையதளத்தில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று வியப்புடன் கேட்கலாம். ஆனால், அந்த இணையதளத்தில் ஒன்றுமே கிடையாது என்பதுதான் இன்னும் ஆச்சர்யமானது. உண்மையில் அது ஒரு பயனில்லா இணையதளம் - ஆனால், அதுதான் இன்று உலகின் பிரத்யேக இணையதளமாகி இருக்கிறது.

எப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் அந்த இணையதளம் அமைக்கப்பட்ட விதத்தில் இருக்கும் புத்திசாலித்தனத்தில்தான் இருக்கிறது.

பெயரிலேயே பாதி வெற்றி என்பது போல அந்த இணையதளத்தை உருவாக்கியவர், இணைய உலகின் மிகவும் பிரத்யேக தளமாக உருவாக்கும் எண்ணத்துடன், அதற்கு 'மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்' என பெயர் வைத்தார். அந்த தளம் பிரத்யேக தன்மை கொண்டதாக இருக்கும் வகையிலும் அதை அமைத்திருந்தார். அதன் பிரத்யேக தன்மை என்ன தெரியுமா? அந்த தளத்தை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அந்த ஒருவரும் ஒரு நிமிடம் மட்டும்தான் தளத்தை பயன்படுத்த முடியும். ஒருவர் பயன்படுத்தி முடிக்கும் வரை மற்றவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும். இதற்காக முகப்பு பக்கத்தில் இருந்து அனுமதி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட எந்த நேரத்தில் இந்த தளத்தில் நுழைந்தாலும், இத்தனை ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர், நீங்களும் வரிசையில் நிற்க அனுமதிச்சீட்டு வாங்கி கொள்ளவும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்படி காத்திருக்க வேண்டியிருப்பதும், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே தளத்தை பயன்படுத்தலாம் எனும் பிரத்யேக தன்மையும்தான் இணையவாசிகளை இந்த தளத்தை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.

இதுவரை 2,65,000 பேருக்கு மேல் இந்த தளத்தை பயன்படுத்த அனுமதிச்சீட்டு பெற்றுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவின் ஜஸ்டின் போலே என்பவர் இந்த தளத்தை அமைத்திருக்கிறார். இணையதள வடிவமைப்பாளராக இருக்கும் போலே, இணையம் திறந்தவெளி தன்மை கொண்டதாக இருக்கும் நிலையில், அதற்கு நேர் எதிரான தன்மையுடன் ஒரு இணையதளத்தை அமைத்தால் என்ன என்று யோசித்து இந்த பிரத்யேக தளத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

மார்ச் மாதவாக்கில் இந்த தளத்தை உருவாக்கினார். ஆனால், அதன் பிரத்யேக தன்மையை மீறி அது உடனடியாக கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னர் ஜானி வெப்பர் எனும் வலைப்பதிவாளர் தனது பட்டியல் இணையதளத்தில், இணையத்தின் பயனில்லா இணையதளங்கள் எனும் பட்டியலை வெளியிட்டு இதை அடையாளம் காட்டியிருந்தார். அதன் பிறகு இந்த தளம் பிரபல இணைய சமூகமான ரெட்டிட்டிலும் இடம்பெற மெல்ல இணையவாசிகள் மத்தியில் பிரபலமானது.

அப்புறம் என்ன, இதன் விநோதமான விஷேசத்தன்மை பலரையும் பேச வைத்து இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

எல்லாம் சரி, இந்த இணையதளத்தை ஒரு நிமிடம் பயன்படுத்தும் போது என்னதான் செய்ய முடிகிறது என கேட்கலாம்? அது சஸ்பென்ஸ்! நீங்களும் முயன்று பாருங்களேன்!. ஆனால் ஒன்று ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிடுவதால் தளம் முடங்கி நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இணையதள முகவரி: http://mostexclusivewebsite.com/

-சைபர்சிம்மன்

Friday, July 3, 2015

உங்கள் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் தமிழில் டைப் செய்ய முடியவில்லையா ?

ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளவர்களும் அவர்களது தாய்மொழியில் டைப் செய்ய புதிய வசதிகளுடன் 'சுவிப்ட் கீ' அப்ளிகேஷன் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் டைப் செய்ய அடாப்டிவ் லே அவுட்களை வழங்கி வரும் 'சுவிப்ட் கீ' ஆப் தற்போது ஆர்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ தொழில்நுட்பத்துடன் கூடுதலாக 9 இந்திய மொழிகளில் டைப் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில், நாம் எழுத்துக்களை டைப் செய்து கொண்டிருக்கும் போதே அடுத்து நாம் என்ன எழுத்துக்களை டைப் செய்வோம் என கண்டறிந்து  வார்த்தைகளை முன்கூட்டியே வழங்கும் 'எமோஜி பிரிடிக்சன்' வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்த 'ஆப்'பில் வழங்கப்படும் அனைத்து இந்திய மொழிகளிலும் இயங்கும்.

ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் மொழிகளுடன் இப்போது பெங்காலி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், அஸாமிஸ், ஒரியா, கொங்கனி மற்றும் மணிப்பூரி, உருது, சின்ஹலா மொழிகளிலும் இந்த டைப்பிங் வசதியை 'சுவிப்ட் கீ' வழங்குகிறது. பார்ப்பதற்கு அழகாக டார்க் தீமுடன் புதிய இண்டர்பேஸையும் அறிமுகம் செய்துள்ளது சுவிப்ட் கீ.

நன்றி:தினத்தந்தி

Wednesday, June 24, 2015

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி !

பல நேரங்களில், 'அந்த இ-மெயிலை' அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் 'செட்டிங்ஸ்'-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

'undo send' (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் 'undo send' (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.

நன்றி:தமிழ்ஹிந்த்

Thursday, April 16, 2015

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுளில் புதிய வசதி !

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம் கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.

உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக்கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ரோய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிகேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும்.

ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிகேஷனை ஆண்ட்ரோய்ட் பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தரவிறக்கம் செய்தவுடன் வாட்ஸ் அப் அல்லது மற்ற மெசேஜிங் அப்ளிகேஷன்களில் விரலால் எழுதி அனுப்பும் கீ பேடை செயல்படுத்த முடியும்.

எழுத்துக்களை ஸடைலஸ் எனப்படும் எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும். இந்த வசதியை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை சொடுக்கவும்.

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.handwriting.ime

நன்றி: தமிழ் ஹிந்து

Friday, March 27, 2015

அடுத்தவர் செல்போனுக்கு அனுப்பிய வேண்டாத செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம் !

கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு அது சென்றவுடன் அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க 'ராகெம்' என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த புதிய அப்ளிகேஷன் பற்றி, நியூயார்க்கில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு கூறுகையில் “இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும். மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்“ என்றார். செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, ராகெம் (RakEM) தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது.

நன்றி:தினகரன்