அதிராம்பட்டினம், ஆக.18
அதிராம்பட்டினம் அருகே உள்ள தாமரங்கோட்டை கடைமடை பாசனப் பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, சாலை மறியல் ஒப்பாரி போராட்டம் தாமரங்கோட்டை வாட்டாகுடி பாலம் அருகில் (பட்டுக்கோட்டை ~ முத்துப்பேட்டை சாலையில்) இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
போராட்டத்துக்கு, தஞ்சை மாவட்ட விவசாய சங்கத் துணை அமைப்பாளர் சி.முருகப்பன் தலைமை வகித்தார்.
போராட்டத்தில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், தாமரங்கோட்டை பகுதிக்கு தண்ணீர் திறந்து விட தேவையான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தகுமார், கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற் பொறியாளர் அன்பரசன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை அடுத்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
இதில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், தமாரங்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ராஜேந்திரன், ஆர். அண்ணாமலை, சி. கல்யாண சுந்தரம், பி.ஆர் நாதன்,
ஏ.கோவிந்த்த சாமி, கே. அய்யாவு, ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பெண்கள் உட்பட இப்பகுதி விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)