.

Pages

Showing posts with label திருட்டு. Show all posts
Showing posts with label திருட்டு. Show all posts

Tuesday, November 3, 2020

அதிராம்பட்டினம் பகுதியில் தொடர் ஆடுகள் திருட்டு: காவல் நிலையத்தில் தமுமுக புகார்!

அதிராம்பட்டினம், நவ.03
அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆடுகளை திருடிச்செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் நியாஸ் அகமது அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது;

அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் ஆடுகள் திருடப்பட்டு வருகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆடுகளை திருடிச்செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tuesday, March 17, 2015

என்னப்பா ... சொல்றே... நம்மூரில்லா?

"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" பாடிவிட்டு சென்றான் ஆனால் திருட்டை விட மாட்டேன்றானுங்க அதற்கு முழு காரணம் வேலையின்மையா?... அல்லது தாறுமாறான விலைவாசியின் ஏற்றமா?.. எதுவாக இருந்தாலும் அடுத்தவனின் பொருட்களை எடுப்பது குற்றமில்லையா? அச்செயல் செய்யும் பொழுது மனதில் தோன்றவில்லையா இது பாவமென்று...திருடுபவனும் சரி மற்றும் இன்னும் பிற தீச்செயல் செய்தாலும் சரி.. கைதானவன் சட்டத்தின் எந்த ஓட்டை வழியாக வெளியில் வந்துவிடலாம் என்று தைரியமாக ஊளாவிக்கொண்டு இருக்கிறார்கள். 

திருட்டைபற்றி புலம்பித்தள்ளுகிறேன் என்று நினைக்கிறீர்களா?...ஆம் ஒர் சம்பவம் நமதூ
ரில் நடந்தெரியது சிஎம்பி லைன் மட்டுமில்லா அனைத்து தெருக்களிலும் ஒரு சில வீடுகளில் பூட்டியும் ஆண்கள் அல்லாத வீட்டையும் தான் தற்பொழுது நோட்டமிட்டு தன் திருட்டுக்கைவரிசையை காண்பிக்கிறார்கள். 

அனேக தெருக்களில் இரவு நேரத்தில் ஏன் மதியம் பட்டப்பகலில் கூட ஆட்களின் நடமாட்டம் தென்படுவதில்லை. இரவு நேரத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள யாருமில்லை வீட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருஹ்க்கும் தன் கணவருக்கோ அல்லது சகோதரர்களுக்கோ தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு பாதுகாப்பை தேடும் அவல நிலை பல வீட்டில் நடந்து வருகின்றது.

* வெளிமாநிலத்தில் இருந்து கட்டுமான பணி செய்யும் ஊழியர்களை கண்கானிக்க வேண்டும்.

* தங்களது பகுதியில் உள்ள குடியிருப்பு நல சங்கங்களின் வாயிலாக தனியார் பாதுகாவலர்களை பயன்படுத்தி கொள்ளவும்.

* சந்தேக நபர்களை அடையாளம் காணும் வகையில் தங்கள் பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்திட வேண்டும்.

* குடியிருப்புவாசிகள் சந்தேகப்படும் படியான நபர்கள் எவரேனும் சுற்றித்திரிந்தால், உதாரணமாக ஸ்டவ் ரிப்பேர் செய்பவர், பெட்சீட் தலையணை விற்பவர் போன்ற தோற்றங்களில் சுற்றித்திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* பொதுமக்கள் தங்களது பகுதியில் கவனிப்பாரற்று அல்லது கேட்பாரற்று சந்தேகப்படும் படியாக கிடக்கும் வாகனங்கள் பற்றி உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்பகுதியில் குறைந்த ஒளி அளவு பல்பு களை எரியவிட வேண்டும். வீட்டினை இருட்டாக வைக்கக் கூடாது.

* பொதுமக்கள் தங்களது பகுதியில் குற்றச்செய்கையினை தடுப்பதற்கு உதவிடும் வகையில் தகுந்த தகவல் களை காவல் கட்டுப்பாட்டறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

-பொதுநலன் கருதி வெளியுடும்.

அதிரை தென்றல் (Irfan)