.

Pages

Showing posts with label தேர்தல் களம் 2016. Show all posts
Showing posts with label தேர்தல் களம் 2016. Show all posts

Friday, May 20, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்சாக கொண்டாட்டம் !

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 134 அதிமுக இடங்களை பிடித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அதிமுகவினர் அதிரை பேரூந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி, வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் அதிரை பேரூர் அதிமுக அவைத்தலைவர் முண்டாசு காதர், செயலாளர் பிச்சை, துணைச் செயலாளர் முஹம்மது தமீம், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், அதிமுக வார்டு பொறுப்பாளர் ஹாஜா பகுருதீன், இளைஞர் பாசறை செயலாளர் அஹமது தாகிர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 

அதிராம்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் !

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சி.வி சேகர் 70631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாக்குகள் மொத்தம் 19 சுற்றுகள் எண்ணப்பட்டன. இதில் 17 மற்றும் 18 வது சுற்றுகள் அதிராம்பட்டினம் பகுதி ஆகும். இதில் ஒவ்வொரு சுற்றுகளிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள்.

Thursday, May 19, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் !

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் இன்று தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிமுக கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அதிரை வி. சேதுராமன் தலைமையில் அதிமுகவினர் அதிரை பேரூந்து நிலையம் அருகே இனிப்பு வழங்கி, வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
 

பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் !

பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
1) சி.வி. சேகர் ( அதிமுக ) 70631
2) கே. மகேந்திரன் ( காங்கிரஸ் ) 58273
3) என். செந்தில்குமார் ( தேமுதிக ) 11231
4) எம். முருகானந்தம்  ( பாஜக ) 11039
5) இசட். முகமது இலியாஸ் ( எஸ்டிபிஐ ) 3923
6) சி. லெட்சுமி ( பாமக ) 3607
7) கே. கீதா ( நாம் தமிழர் ) 2940
8) கே. சஞ்சய்காந்தி ( சுயேச்சை ) 1103
9) சி. குபேந்திரன் ( சிவசேனா ) 1089
10) ஜெ. விவேகானந்தன் ( தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ) 513
11) NOTTA 1541

* Last Updated at 14:34 On 19/05/2016

[ 12:00 PM ] அதிமுக 133, திமுக 85 காங்கிரஸ் 10, பாமக 2, புத 1 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் நடந்த முடிந்த 232 சட்டமன்றத் தொகுதி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 68 மையங்களில் வாக்கு எண்ணும் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.



இன்று பகல் 12 மணி நிலவரப்படி அதிமுக 133 தொகுதிகளிலும் திமுக 85 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10, பாமக 2, புதிய தமிழகம் 1 ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

பட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி சேகர் முன்னிலை !

பட்டுக்கோட்டை தொகுதியில் அதி.மு.க. வேட்பாளர் சி.வி சேகர் முன்னிலையில் உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 10.52 மணி நிலவரப்படி, பட்டுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி சேகர் 28,794 வாக்குகளும், தி.மு.க.கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 22,959 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், சி.வி சேகர் 5,835 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

நாகப்பட்டினம் தொகுதியில் தமீமுன் அன்சாரி முன்னிலை !

நாகபட்டினம் தொகுதியில் அதி.மு.க. கூட்டணி மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர் தமீமுன் அன்சாரி முன்னிலையில் உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 10.46 மணி நிலவரப்படி, நாகப்பட்டினம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தமீமுன் அன்சாரி 4,345 வாக்குக்களும், தி.மு.க.கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி  வேட்பாளர் ஜபருல்லா 3,266 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், தமீமுன் அன்சாரி 1079 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

[ 10:30 AM ] அதிமுக 140, திமுக 70 காங்கிரஸ் 5, பாமக 5, விசி1 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் நடந்த முடிந்த 232 சட்டமன்றத் தொகுதி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 68 மையங்களில் வாக்கு எண்ணும் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

இன்று காலை 10.30 மணி நிலவரப்படி அதிமுக 140 தொகுதிகளிலும் திமுக 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5, பாமக 5  விசி 1 ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

கடையநல்லூர் தொகுதியில் முஸ்லீம் லீக் K.A.M முஹம்மது அபூபக்கர் முன்னிலை !

கடையநல்லூர் 2வது சுற்று திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் K.A.M முஹம்மது அபூபக்கர் 6643, அதிமுக சேக்தாவூத் 6304 வாக்குகள் பெற்றுள்ளனர்.

[ 10:00 AM ] அதிமுக 120, திமுக 77, காங்கிரஸ் 4, பாமக 4 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் நடந்த முடிந்த 232 சட்டமன்றத் தொகுதி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 68 மையங்களில் வாக்கு எண்ணும் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

இன்று காலை 10 மணி நிலவரப்படி அதிமுக 69 தொகுதிகளிலும் திமுக 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4, பாமக 4  ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

[ 09:30 AM ] அதிமுக 102, திமுக 77 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் நடந்த முடிந்த 232 சட்டமன்றத் தொகுதி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 68 மையங்களில் வாக்கு எண்ணும் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி அதிமுக 102 தொகுதிகளிலும் திமுக 77 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா முன்னிலை!

ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா முன்னிலையில் உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களிலும் தொடங்கப்பட்டு, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்றில், ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லா 3,922 வாக்குக்களும், அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் 3,222 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், ஜவஹிருல்லா 700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

[ 9:00 AM ] அதிமுக 69, திமுக 65 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் நடந்த முடிந்த 232 சட்டமன்றத் தொகுதி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 68 மையங்களில் வாக்கு எண்ணும் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

இன்று காலை 9 மணி நிலவரப்படி அதிமுக 69 தொகுதிகளிலும் திமுக 65 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

Monday, May 16, 2016

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ்- சி வோட்டர், இந்தியா டுடே, ஏபிபி, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ் ஆகியவற்றின் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பதால் இவை கவனம் பெறுகின்றன.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக- ம.ந.கூட்டணி - தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என ஆறுமுனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலும் சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாலை 7 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டன.

அதிமுக பெரும்பான்மை: டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு

அதிமுக - 139, திமுக - 78, பிற கட்சிகள் - 17.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 139, திமுக கூட்டணிக்கு 78, மற்ற கட்சிகளுக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திமுக பெரும்பான்மை: ஏபிபி கருத்துக்கணிப்பு

திமுக - 132, அதிமுக - 95, பாஜக - 1, பிற கட்சிகள்- 6.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 95, திமுக கூட்டணிக்கு 132, பாஜகவுக்கு 1, மற்ற கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பெரும்பான்மை: நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு

திமுக : 114 -118, அதிமுக: 95 - 99, பிற கட்சிகள் 27.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 95- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 114- 118 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பெரும்பான்மை: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

திமுக: 124- 140, அதிமுக: 89 - 101, பிற கட்சிகள்: 4- 11

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 89- 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124- 140 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-11 இடங்களும் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பெரும்பான்மை: நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு

திமுக : 129 -151, அதிமுக: 81 - 99, பிற கட்சிகள்: 2 - 6

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 81- 99 இடங்களும், திமுக கூட்டணிக்கு 129- 151 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 2- 6 இடங்களும் கிடைக்கும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட 5 கருத்துக்கணிப்புகளில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை பெறும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி, இந்தியா டுடே, நியூஷ் நேஷன், நியூஸ் எக்ஸ் ஆகிய நான்கு கருத்துக்கணிப்புகளிலும் திமுக பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தி இந்து தமிழ்

அதிரையில் தொடர் மழையால் வாக்குப்பதிவதில் சிரமம்: தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை !

அதிராம்பட்டினம் மே-16
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் தொடர் தூறல் மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இடி இடித்து வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகமெங்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாக்காளர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு சதவீதம் குறையவும் வாய்ப்புள்ளதால் இன்று நடைபெறும் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதி தேர்தல் 23ந் தேதிக்கு ஒத்திவைப்பு !

தேர்தல் விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து. தமிழகத்தில் தஞ்சாவூர் தொகுதிக்கு திங்கள்கிழமை (மே 16) நடைபெறவிருந்த தேர்தலை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சனிக்கிழமை (மே 14) தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும் தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் தேதியை மே 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளிவைத்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரி தெரிவித்தார்.

Sunday, May 15, 2016

அதிரையில் பதற்றமான 8 வாக்குச் சாவடிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு!

அதிராம்பட்டினம் மே-15
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 92 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில் மொத்தம் 26 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாக்கு சாவடி எண் 232, 233, 234 ( 1 ம்  நம்பர் ) அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாக்கு சாவடி எண் 227, 228 ( 2 ம் நம்பர் ) மற்றும் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடி எண் 250, 251, 252 ஆகிய 8 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் நுண் பார்வையாளர், இரண்டாம் அடுக்கில் வெப்கேமரா கண்காணிப்பில் இருக்கும். இந்த கேமரா நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அலுவலகம், சென்னை மற்றும் டெல்லி அலுவலகம் மூலம் கண்காணிக்கப்படும். 3வது அடுக்கு பாதுகாப்பில் மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவம் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும். 4வது அடுக்கில் மொபைல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

Saturday, May 14, 2016

இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தமாகா !

அதிராம்பட்டினம் மே-14
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமார் அவர்களை ஆதரித்து தமாகா - தேமுதிக-இந்திய கம்யூனிஸ்ட்- மதிமுக-விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இணைந்து அதிரை பேருந்து நிலையப் பகுதி, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 
 

இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அதிரை சேர்மன் !

அதிராம்பட்டினம் மே-14
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஈடுபட்டார்.

அப்போது திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், மருதையன் மற்றும் காங்கிரஸ் கட்சி பட்டுக்கோட்டை நகரத் தலைவர் மணிகண்டன், வைரக்கண்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

அதிரையில் அதிமுக வார்டு செயலாளர் ஹாஜா பகுருதீன் வீட்டில் திடீர் ரெய்டு !

அதிராம்பட்டினம் மே-14
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக 14 வது வார்டு செயலாளர் மற்றும் தக்வா பள்ளி டிரஸ்டி உறுப்பினராக பொறுப்பில் இருப்பவர் ஹாஜா பகுருதீன்.

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அதிராம்பட்டினம் நடுத்தெரு வீட்டில் அதிகாரிகள் இன்று பகல் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.