.

Pages

Showing posts with label ADMK. Show all posts
Showing posts with label ADMK. Show all posts

Sunday, May 31, 2020

முடுக்குக்காடு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ சி.வி சேகர் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 31
அதிராம்பட்டினம் அருகே உள்ள நரசிங்கபுரம் ஊராட்சி முடுக்குக்காடு பகுதி தனபால் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் பற்றி எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவல் அறிந்ததும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  எம்எல்ஏ சி.வி சேகர், பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது, அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பி.சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப. ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, துணைச் செயலாளர் எம்.ஏ முகமது தமீம், வீ.சேதுராமன், முன்னாள் கவுன்சிலர் கே.சிவக்குமார், ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

Tuesday, May 19, 2020

எம்.எல்.ஏ சி வி சேகர் சார்பில், அதிராம்பட்டினத்தில் 100 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.19
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

அவற்றை, தனது சொந்த நிதியில் இருந்து பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் வழங்கினார். முன்னதாக, கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாகப் களப்பணியாற்றிய சுகாதரத்துறையினர், செவிலியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோரின் பணியைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் எம்.ஏ முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர் கே.சிவக்குமார், சேதுராமன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Monday, March 16, 2020

அதிராம்பட்டினம்~மதுக்கூர் அரசுப் பேருந்து, அதிரை பேருந்து நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சட்டப்பேரவையில் சி.வி சேகர் எம்எல்ஏ பேச்சு (முழு விவரம்)

அதிராம்பட்டினம், மார்ச் 15
அதிராம்பட்டினம்~மதுக்கூர் இடையே அரசுப் பேருந்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் விரிவாக்கப்பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர் பேசினாா்.

தமிழக சட்டப் பேரவையில் (12-03-2020) வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர் பேசியது:
அதிராம்பட்டினம்  ~ மதுக்கூர் இடையே அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும், அதிராம்பட்டினத்தில் கால்நடை தடுப்பு மையம் அமைத்து தரவேண்டும், அதிராம்பட்டினம் பொது நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும், அதிராம்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டித்தரவேண்டும், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், செல்லிக்குறிச்சி ஏரிக்கு மாளியக்காடு கிராமம் அருகில் மகராஜ சமுத்திரம் ஆற்றில் நீரேற்றுத் திட்டம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

Thursday, December 5, 2019

அதிராம்பட்டினத்தில் ஜெ. நினைவு நாள் அமைதிப்பேரணி (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.05
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினத்தில் அதிமுக சார்பில் அமைதிப் பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்சிக்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, தலைமை வகித்த, பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 2 நிமிட மவுண அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக அக்கட்சியினர் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகம் வரை பேரணியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் திரும்பினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச்செயலர் பி. சுப்ரமணியன், அதிரை பேரூர் துணைச்செயலாளர் எம்.ஏ முகமது தமீம், வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், வார்டு பொறுப்பாளர்கள் ஹாஜா பகுரூதீன், துரை.பாஞ்சாலன், கு. பாஞ்சாலன். செல்வம், முத்துகருப்பன், சங்கர், யஹ்யா கான், அப்டா தமீம், அப்துல் ரஹ்மான், அபூபக்கர், லியாகத் அலி, அகமது ஹாஜா, அசோக், துரை. முருகானந்தம், சண்முகம், தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

Monday, November 18, 2019

அதிரை பேரூர் சேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிட விரும்பும் பிரபலங்கள்!

வலது புறத்தில் அதிரை அப்துல் அஜீஸ், இடது புறத்தில் எம்.ஏ  முகமது தமீம்
அதிராம்பட்டினம், நவ.18
அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு மாவட்டச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் அதிரை அப்துல் அஜீஸ். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில், அதிராம்பட்டினம் பேரூர் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டு 2-ஆம் இடத்தை பிடித்தார்.

அதேபோல், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளராக பொறுப்பு வகிப்பவர் எம்.ஏ முகமது தமீம். இவர், அதிமுகவில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் இணைந்து தீவிரமாக களப்பணியாற்றி வருபவர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப மனு விநியோகம் கடந்த (நவ.15) அன்று தொடங்கியதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் சேர்மன் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பியிடம், அதிரை அப்துல் அஜீஸும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என் ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.காந்தி ஆகியோரிடம் எம்.ஏ முகமது தமீமும் வழங்கினர். இரு பிரபலங்களில் யாருக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது அக்கட்சி தலைமையகம் வெளியிடும் அறிவிப்பை பொறுத்து அமையும். 

Tuesday, October 1, 2019

அதிராம்பட்டினத்தில் எம்.எல்.ஏ சி.வி சேகர் முதியோர் உதவித்தொகை விண்ணப்ப மனு பெற்றார்!

அதிராம்பட்டினம், அக்.01
முதியோர் உதவித்தொகை கோரிய 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரரிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று செவ்வாய்க்கிழமை மனு பெற்றார்.

தமிழக அரசின் ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்ப மனுவினை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ பெற்றார். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மனுவை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

Thursday, September 26, 2019

பம்பிங் ஸ்டேஷனுக்கு மும்முனை மின்சாரம்: மின்சார வாரிய அதிகாரிகள் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.26
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு நசுவுனி ஆற்று ஓடைலிருந்து தடையின்றி நீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட பம்பிங் ஸ்டேஷனுக்கு, 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் கடந்த (செப்.18) அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை, நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை மின்சார வாரிய கோட்டபொறியாளர் மாறன் தலைமையில், அதிராம்பட்டினம் மற்றும் துவரங்குறிச்சி மின்சார வாரிய அலுவலர்கள் இன்று வியாழக்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் திட்ட வரைவு  தயார் செய்து அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

அப்போது, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர், பம்பிங் ஸ்டேஷனுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் வரையில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் கோரிக்கை ஏற்று, கடந்த 3 தினங்களாக வழங்கி வருகிற மும்முனை மின்சாரத்தை வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

Thursday, September 19, 2019

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு: எம்.எல்.ஏ சி.வி சேகர் தகவல்!

அதிராம்பட்டினம், செப்.19
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைப்பதற்கு ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  சி.வி சேகர் எம்.எல்.ஏ தகவல் தெரிவித்துள்ளார்.

2018-2019 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வடக்கு பகுதியில் நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தகவல் தெரிவித்துள்ளார்.

Wednesday, September 18, 2019

பம்பிங் ஸ்டேஷனுக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை!

அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு தடையின்றி நீர் நிரப்ப பம்பிங் ஸ்டேஷனுக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ விடம் இன்று புதன்கிழமை காலை கோரிக்கை வைக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொதுநிதி சுமார் ₹ 50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு பணிகள் நடந்து முடிந்து செயல்பாட்டுக்கு வந்தது. கிராமப்புற மின் இணைப்பு என்பதால், பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பெற முடிந்தது. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, குளங்களுக்கு நீர் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டன.

இந்நிலையில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் சந்தித்து
நகர்புற மின்னூட்டிகளில் இருந்து மும்முனை மின்சாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ சி.வி சேகர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அப்போது, அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், எம்.எஸ்.எம் முகமது யூசுப், சேக்கனா எம்.நிஜாமுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷை சந்தித்து மின்சார வாரியம் மூலம் தடையில்லா மும்முனை மின்சாரம் பெற வேண்டிய அலுவல் பூர்வ பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

AAF பிரதிநிதிகள் எம்.எல்.ஏ சி.வி சேகருடன் சந்திப்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, செப்.18
அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை இன்று புதன்கிழமை காலை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை AAF அமைப்பின் சார்பில், அதன் நிர்வாகிகள் ஷிப்லி, அப்துல் கபூர், மீயண்ணா சலீம் உள்ளிட்டோர் கலிபோர்னியா மாகாணம் சான் ஹொசே, ஃபேர்மோன்ட் ஹோட்டலில் சந்தித்து அதிராம்பட்டினம் பொதுநலன் சார்ந்த 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பேராசிரியர் எம்.ஏ  அப்துல் காதர், எம்.எஸ்.எம் முகமது யூசுப், சேக்கனா எம்.நிஜாமுதீன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் உடனிருந்தனர்.

மனுவில்,  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினத்தில் 110/11 KVA துணை மின் நிலையம் அமைக்கவும், அதிராம்பட்டினம் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும்,  அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவையை தொடங்கவும், அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், பழுதடைந்த அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலை சீரமைப்பு, அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் வழியாக மன்னார்குடி மற்றும் சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு நேரடி அரசுப் பேருந்து இயக்கவும், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து ரயில் நிலையம் வரையிலான சுமார் 650 மீட்டர் நீளம் கொண்ட சாலையை சீரமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டன.

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சி.வி சேகர் மனுவில் கூறியிருக்கும் கோரிக்கைகள் நிறைவேற தாம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
 

Sunday, September 15, 2019

அதிரையில் ஏரி, வடிகால் தூர் வாரும் பணிகள் எம்எல்ஏ சி.வி சேகர் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.15
அதிராம்பட்டினத்தில் நடந்து வரும் மழைநீர்/கழிவு நீர் வடிகால், ஏரி தூர் வாரும் பணிகளை எம்.எல்.ஏ., சி.வி சேகர் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்ட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில், கடற்கரைத் தெரு ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு  மழைநீர் / கழிவு நீர் வடிகால் மற்றும் பட்டுக்கோட்டை சாலை கரிசல்மணி ஏரி ஆகியவற்றை தூர் வாரும் பணிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு நடந்து வருகிறது.

இப்பணிகளை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் எம்.ஏ முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.