.

Pages

Showing posts with label தொக்காலிக்காடு செய்திகள். Show all posts
Showing posts with label தொக்காலிக்காடு செய்திகள். Show all posts

Sunday, May 31, 2020

ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தொக்காலிக்காடு அணைக்கட்டு புனரமைக்கும் பணி!

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், மே 31
தமிழக அரசின் குடிமராமத்து திட்டப்பணிகள் 2020-2021, பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநிலக் கோட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமத்தில் தொக்காலிக்காடு அணைக்கட்டில் நீரின் வேகம் குறைக்கும் கல் அமைக்கும் பணி மற்றும் வழங்கு வாய்க்கால் தடுப்புச் சுவர் புனரமைக்கும் பணிக்காக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக அரசின் குடிமராமத்து திட்டப்பணிகள் 2020-2021, கல்லனைக் கால்வாய் கோட்டம், அதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி புனரமைக்கும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Monday, August 12, 2019

மகாராஜா சமூத்திரம் பெரிய ஏரி குடிமராமத்து பணி ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மகாராஜா சமூத்திரம் பெரிய ஏரியில் நடைபெற்றுவரும் முதலமைச்சரின் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (12.08.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை வட்டம் மகாராஜா சமூத்திரம் பெரிய ஏரியில் பாசன வசதி பெறும் வகையில 4 மதகுகள், வரத்து கால்வாய், பாசன கால்வாய் கரை பலம் படுத்தும் அகிய பணிகள்  ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்திடவும், அடிக்கடி ஆய்வு செய்திடவும் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டண் புஷ்பராஜ், பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் அன்பழகன், சண்முகவேல், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஜஸ்டின், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உடனிருந்துனர்.

Wednesday, June 12, 2019

அதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை முகத்தாடை சீரமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை மையம் சார்பில், இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள தொக்காலிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை, பள்ளி கல்விக்குழு தலைவர் தொடங்கி வைத்தார். முகாமில், அதிரை அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர்கள் டாக்டர் பா.பாரதி,  டாக்டர் பிரியங்கா பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை செய்து, இலவசமாக பற்பசை, டூத் பிரஸ், மவுத் வாஷ், மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

முன்னதாக, பல் ஆரோக்கியம் தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் பா.பாரதி,  டாக்டர் பிரியங்கா பாரதி ஆகியோர் பதிலளித்துப் பேசினார். முகாம் ஏற்பாட்டினை, மகிழங்கோட்டை ஜி. பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். இம்முகாமில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.