.

Pages

Showing posts with label நன்றி அறிவிப்பு. Show all posts
Showing posts with label நன்றி அறிவிப்பு. Show all posts

Tuesday, August 23, 2016

குலாப் ஜாமுன் அன்சாரியின் நன்றி அறிவிப்பு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 23
தஞ்சாவூர், அதிராம்பட்டினம் பேரூராட்சி 11 வது வார்டு பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை ( திலகர் தெரு ) முதல் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வரையிலான சாலையோரத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 5.75 லட்சம் மதிப்பீட்டில் 135 மீட்டர் நீளத்தில் புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணி நடைபெற பல்வேறு கட்டங்களில் தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வருகிறார் அதிரை நல மேம்பாட்டுக்கழகம் பொறுப்பாளர் குலாப் ஜாமுன் எஸ்.கே.எம் அஹமது அன்சாரி அவர்கள்.

இதுதொடர்பாக இவர் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
 

Wednesday, November 18, 2015

'சமூக ஆர்வலர்' ராஃபியா அவர்களுக்கு பேராசிரியரின் வாழ்த்துச்செய்தி !

அதிரையை சேர்ந்தவர் 'சமூக ஆர்வலர்' ராஃபியா. இவர் சவூதி ஜித்தாவில் பணியாற்றி வருகிறார். பல்வேறு பொது அமைப்புகளில் நிர்வாகியாகத் தொடர்ந்து அங்கம் வகித்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக அதிரை பைத்துல்மாலின் ஓவர்சீஸ் பிரதிநிதி-அய்டாவின் தலைவர்-மெப்கோ பொது நிதி கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர்  - மற்றும் ஜித்தா தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

திருச்சி தென்னுரை சேர்ந்தவர் ஜாகிர். இவர் ஜித்தாவில் உள்ள ஒரு வீட்டில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜித்தா தமிழ் சங்கம் தலையீட்டின் பேரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இறந்த ஜாஹிரின் குடும்பத்திற்கு இரத்த இழப்பிட்டு தொகையை பெற்று தந்துள்ளது. இந்த பணிகளை முன்னின்று செய்து கொடுத்த ஜித்தா தமிழ் சங்க பொறுப்பாளர்கள் குறிப்பாக ராஃபியா, ஜாவித் ஆகியோகளின் சேவையை பாராட்டி காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் வாழ்த்து செய்தியை சமூக ஆர்வலர் ராஃபியா அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள ரபியா மச்சான் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).

தாம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் ஒன்றை இன்றுதான் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

2011 - ஆம் ஆண்டு விபத்தில் இறந்துபோன ஜாகிரின் மனைவிக்கு அல்லாஹ்வின் உதவியும் தம்முடைய மற்றும் பேராசிரியர் எம் எம் எஸ் போன்ற நல்லுள்ளம் கொண்ட நண்பர்களின் ஒத்துழைப்போடு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் ஐம்பத்தி எட்டு இலட்சம் நஷ்டஈடு பெற்றுக் கொடுத்திருப்பது உண்மையில் பாராட்டுக் குரிய செயல்.

தமக்கும் தமது நண்பர் ஜாவித்துக்கும் எனது பாராட்டுக்களை சொல்வதைவிட நீங்கள் யாவரும் நல்ல உடல் நலத்துடனும் நிறைந்த செல்வத்துடனும் என்றும் குறையாத செல்வாக்குடனும் நெடுநாள் வாழ்ந்து இதுபோல் பல அறப்பணிகளை ஆற்றிட வல்ல இறைவனிடம் து ஆச் செய்கிறேன்.

இது காலம் தாழ்ந்த வாழ்த்துச் செய்தியானாலும் இதயத்தின் அடித்தளத்திலிருந்து இன்று சுபுஹுத்  தொழுகைக்குப் பின் உங்கள் அனைவருக்காகவும்  துஆச் செய்து எழுதப்பட்ட வாழ்த்துச் செய்தியாகும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, February 3, 2015

ஹஜரத்தின் துஆவும், நன்றி அறிவிப்பும் !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் 'நீதி போதனையை' கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்.எஸ் ஜமால் முஹம்மது ( வயது 74 ). அனைத்து சமுதாய மாணவர்களிடமும் இன்முகத்துடன் பழகக்கூடியவர். 'ஹஜரத்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். தற்போது முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி அருகே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 04-01-2015 அன்று ஹஜரத்தை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஹஜரத்தின் இல்லத்திற்கு சென்ற நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் இவரது உடல் நிலையை அறிந்து வேதனை அடைந்தனர்.

இதையடுத்து ஹஜரத் குறித்து 'தோள் கொடுப்போம் நம்ம ஹஜரத்துக்கு !' என்ற தலைப்பில் அதிரை நியூசில் செய்தி பதிவிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வசிக்கும் இவரது பாசமிகு மாணவர்கள் பலர் ஹஜரத்துக்கு உதவ முன் வந்தனர். ஹஜ்ரத்தை முத்துப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து மருத்துவ உதவிகளை நேரடியாக வழங்கினர்.

இதில் துபாய், சவூதி, சென்னை, அதிரை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இவரிடம் கல்வி பயின்ற இவரது பாசமிகு மாணவர்கள் மற்றும் இவரது நல விரும்பிகள் நேரடியாகவும், ஹஜரத்தின் வங்கி கணக்கு வழியாகவும், ஒரு சிலர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் மூலமாகவும் நிதி உதவியை வழங்கினார்கள். இதில் நேற்றைய ( 02-02-2015 ) நிலவரப்படி மொத்தம் ₹ 140,500/- வந்துள்ளதாக ஹஜரத்தை சந்திக்க சென்ற நம்மிடம் தெரிவித்தார்.

உதவியவர்கள் விவரங்கள்:
வங்கி கணக்கின் வழியாக
08-01-2015 - ₹ 5000
09-01-2015 - ₹ 5000
14-01-2015 - ₹ 2000
19-01-2015 - ₹ 5000
21-01-2015 - ₹ 2000
28-01-2015 - ₹ 500

ஆக கூடுதல் ₹ 19,500

ஹஜரத்தை சந்தித்து நேரடியாக நிதியை வழங்கியவர்களின் விவரங்கள்:
செக்கடி மேடு நண்பர்கள் ₹ 5000
அன்வர் - ஜஹாங்கீர் ₹ 5000
நசீர் அஹமது ₹ 5000 ( தமுமுக  தமீம் மூலமாக )
பெயர் சொல்ல விரும்பாத சகோதரர் ( தமுமுக  தமீம் மூலமாக ) ₹ 2000
சரபுதீன் - அமெரிக்கா ( தமுமுக  தமீம் மூலமாக ) ₹ 2000
இஸ்மாயில் ₹ 1500
எம்.எம்.எஸ் குடும்பத்தினர் ₹ 7500
துபாய்வாழ் அதிரையர்கள் ( முத்துப்பேட்டை 'சமூக ஆர்வலர்' சுனா ஈனா காக்கா மகன் அப்துல் ஹமீது சுல்தான் மூலம் ) அனுப்பிய ₹ 30,000
யாசர் ₹ 5000
முகைதீன் ₹ 1000
ரவூப் ( முத்துப்பேட்டை ) ₹ 1000
ஆதம் ₹ 500
பாரூக் ₹ 500
ஜமால் முஹம்மது ₹ 7500
முஹம்மது அலி ₹ 2000
கலீல் ஹாப்சா ₹ 5000
மூன் ஆர்ட்ஸ் முகைதீன் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 15,000
பத்தாஹ் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 2000
சாகுல் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 500
பேராசிரியர் மேஜர் கணபதி ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 500
நசுருதீன் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 1000
ஷமீருத்தீன் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 1000
அய்டா - சவூதி ஜித்தா ( சேக்கனா நிஜாம் மூலம் ) ₹ 10,000
ஷஃபாத் - அமெரிக்கா  ( சேக்கனா நிஜாம் மூலம் ) ₹ 2000
அப்துல் ஹாதி - அப்பியான்  ( சேக்கனா நிஜாம் மூலம் ) ₹ 5000
அதிரை முஜீப் ( ஜஹபர் சாதிக் ) ( சேக்கனா நிஜாம் மூலம் ) ₹ 1000
மீரா மெடிக்கல்ஸ் ( தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் மூலம் ) ₹ 1500
முத்துப்பேட்டை ஷாஜஹான் ( அதிரை பேருந்து நிலைய ஈசிஆர் சாலையில் காய்கறி வார சந்தையில் வியாபாரம் செய்து வரும் சகோதரர் ) ₹ 1000

உதவி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு தாம் நன்றி கூறுவதாகவும், அவர்களுக்காக இறைவனிடம் இருகரமேந்தி துவா செய்வதாகவும் நம்மிடம் தெரிவித்துக்கொண்டார்.

முன்னதாக ஹஜரத்துக்கு நள்ளிரவில் இருமுறை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில், இருதயத்தின் வால்வில் இரு இடங்களில் அடைப்புகள் உள்ளது என்றும், இவற்றை ( பைபாஸ்) அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும் என்றும், ஆனால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு உடல்கூறு அமையபெற்றில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிவுரையின் பேரில் சென்னை சென்று தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஹஜரத் நம்மிடம் தெரிவித்தார்.

இதற்காக இன்னும் சில தினங்களில் சென்னை செல்ல இருப்பதாகவும் கூறினார். ஹஜரத்தின் மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக அமைந்திடவும், பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம்.

Tuesday, December 16, 2014

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு சமூகநல சங்கம் பாராட்டு !

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு சமூக நல சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதிரை பேரூராட்சி எல்லைக்குப்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களை ஆற்றுநீர் கொண்டு முறையாக நிரப்பிய பேரூராட்சி நிர்வாகத்திற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக சமூகநல சங்கத்தின் செய்தி தொடர்பாளர் முகம்மது சாலிஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... 
" கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு கொண்டிருக்கும் சமூகநல சங்கம் சென்னை மற்றும் அதிரைக்கு தேவையான அரசு திட்டங்களை பெற்று அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து வருகிறது. இதில் குறிப்பாக அதிரை மின்வாரியம், புதிய தொலைபேசி தொடர்பகம், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற மக்களுக்கு தேவைப்பட கூடிய அரசு அலுவலங்களும் அடங்கும்.

மேலும் நமதூர் பகுதிகளுக்கு குளங்களை நிரப்ப ஆற்றுநீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டன. கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்  நீர் திறந்துவிடப்பட்டது. அதனை முறையாக பயன்படுத்தி குளங்களை நிரப்பிய பேரூராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் சமூகநல சங்கத்தின் சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம். சமூகநல சங்கத்தின் சார்பில் திருவாரூர்-காரைக்குடி அகலரயில் பாதை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்றுவருகிறது. இருப்பினும் இந்த ரயில்வே பணிகளை விரைந்து முடித்து தர வலியுறுத்தி அமைச்சர்களை நேரில் சந்திக்க உள்ளோம் அதற்கு இந்த ரயிவே வழித்தடத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்

Friday, August 1, 2014

நமக்காக கஃ ப்ர்ஸ்தானில் குழி தோண்ட காத்திருக்கும் பீஹார் சகோதரர்களுக்காக 1 லட்சத்திற்கும் குறையாமல் உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி அறிவிப்பு !

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) ஏற்பாட்டின் பேரில் நமதூரில் கடந்த சில வருடங்களாக கபுர் தோண்டும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பீகாரை சேர்ந்த சகோதரர்களுக்கு ஜக்காத் மற்றும் சதக்கா நிதியினை வாரி வழங்க கடந்த [ 15-07-2014 ] அன்று அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

உதவ எண்ணுவோர் நமதூர் தக்வா பள்ளியில் தங்கியிருக்கும் இந்த சகோதரர்களிடம் நேரிடையாகவோ அல்லது அறிவிப்பு தட்டியில் குறிபிடப்பட்டுள்ள AAMF நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு உதவலாம் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

அதிரையின் அனைத்து மஸ்ஜீத்களிலிருந்தும், முக்கிய பகுதிகளிலிருந்தும் திரட்டப்பட்டதன் மூலம் சகோதரர்களின் கைக்கு ரூபாய் 1 லட்சத்திற்கும் குறையாமல் நிதி வந்தடைந்தது. இதற்காக நிதி உதவி வாரி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறார். நன்றி அறிவிப்பின் போது பீஹார் சகோதரர்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் AAMF நிர்வாகி S.S. சேக்தாவூது மற்றும் பீஹார் சகோதரர்கள் உடனிருந்தனர்.

Thursday, July 31, 2014

புனித ரமலான் மாதத்தில் 570 நிமிடங்கள் மாத்திரம் மின்தடை செய்த மின்சார வாரியத்திற்கு நன்றி அறிவிப்பு !

நோன்பு காலத்தில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்று ஒரு விண்ணப்பப் படிவத்தை பொதுமக்கள் சார்பாக மின்சார வாரியத்துக்கு அஞ்சல் துறை மூலமாக அனுப்பட்டது, அதை “(ரமழான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி என்ற தலைப்பில் 21ஜூன்2014 அன்று

http://www.adirainews.net/2014/06/blog-post_8052.html

இந்த வலைத்தளத்திலும் பதிந்து இருந்தோம்.

பொதுமக்களின் உணர்வுகளையும், நோன்பின் மகிமையையும் உணர்ந்த மின்சார வாரியம் நமக்கு பேருதவியாக செயல்பட்டதை இதில் பதியப்பட்டுள்ள பட்டியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

ஆகவே, பொதுமக்கள் சார்பாக மின்சார வாரியத்துக்கு நன்றிகலந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரியப்படுத்துகின்றேன்.

வாழ்க மின்சார வாரியம், வளர்ந்து செழிக்க உங்களின் அன்பான சேவை.

இப்படிக்கு,
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.


Friday, January 31, 2014

மரண அறிவிப்பிற்கு நன்றி அறிவிப்பு !

அன்புக்குரிய அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ]  நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதரர்கள்-சகோதரிகள் மற்றும் அதிரை வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த பத்து தினங்கள் என் மாமா நெய்னா முஹம்மது அவர்கள் திடீர் சுகவீனப்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி மரணமடைந்தது வரை, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் அனைவரும் காட்டிய பாசம்,நேசம்,உபசரிப்பு,உதவி,துஆ இப்படி எங்களை ஆறுதல் படுத்தினீர்கள்.மருத்துவமனை,ஜனாஸா தொழுகை,நல்லடக்கம் என்று பெருந்திரளாக கலந்து கொண்டீர்கள்.உங்கள் வேலைகளை ஒதுக்கினீர்கள்,தூக்கம் தொலைத்தீர்கள்.இப்படி எல்லா வகையிலும் ஆறுதல் தந்தீர்கள், இதற்கு கைமாறு கிடையாது.மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செய்ய முடியாது.

இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும்,உங்கள் குடும்பங்களுக்கும் இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்.

இன்ஷா அல்லாஹ்,இன்னும் இந்த அமைப்பை அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ]  கட்டி எழுப்ப வேண்டும்.நாமும்,நம் சந்ததிகளும் பயன் பெற வேண்டும்,இன்ஷா அல்லாஹ் முஸ்லிமாக வாழ்ந்து,முஸ்லிமாக மரணிக்க வேண்டும்.ஆமீன்.

மேலும் அதிரை நியூஸ், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் போன்ற தளங்கள் மரணம் பற்றிய செய்தியை வெளியிட்டு,உலக முழுதும் உள்ள அதிரை மக்களின் துவாக்கள் கிடைக்க காரணமாக அமைந்தன,அவைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் மக்ஃபிரத்துக்கு துவா செய்யுங்கள்.

அல்லாஹ் மட்டுமே என்றென்றும் உயிரோடு இருப்பவன்,நாம் அனைவரும் மரணமடைய வேண்டியவர்களே.அல்லாஹ்வுக்காக,இந்த மரணத்தை-இழப்பை பொருந்திக் கொண்டோம், அல்லாஹ் நமக்கு முன் சென்ற அன்னாரையும்,பிறகு போக போகிற நம்மையும் மன்னிப்பானாக,ஆமீன்.

அர. அப்துல் லத்தீப்