.

Pages

Showing posts with label பிரார்த்தனை. Show all posts
Showing posts with label பிரார்த்தனை. Show all posts

Tuesday, June 12, 2018

ஹாஜி அ.மு.க ஜெக்கரியா ஆலிம் நலம் பெற துஆ செய்வோம்!

அதிராம்பட்டினம், ஜூன் 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மவ்லவி. ஹாஜி அ.மு.க ஜெக்கரியா (வயது 65). இவர், நேற்று திங்கட்கிழமை  தனது குடும்பத்தாருடன் சென்னை சென்ற போது, அரியலூர் அருகே நடந்த வாகன விபத்தில் படுகாயம் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மவ்லவி ஹாஜி அ.மு.க ஜெக்கரியா மற்றும் அன்னாரது குடும்பத்தார் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவதற்கு இப்புனிதமிகு ரமலான் மாதத்தில் எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கும் படி வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தகவல்: எஸ். அபுல் ஹசன்

Wednesday, July 12, 2017

மருத்துவ சிகிச்சை பெரும் அதிரை சிறுவன் நலம் பெற பிரார்த்திப்போம் !

அதிராம்பட்டினம், ஜூலை 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், திலகர் தெருவை சேர்ந்தவர் ராஜிக் அகமது. இவரது மகன் அகமது மர்ஜூக் (வயது 18). பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். இந்நிலையில் சிறுவனின் சிறுநீரகம் திடீரென பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 தினங்களாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவக் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். சென்னையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க மருத்துவர்களால் இன்று புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சிறுவன் அகமது மர்ஜூக், பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கும் படி அன்னாரது ( ஓ.கே.எம் ) குடும்பத்தினர் நம்மிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Friday, February 3, 2017

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிரையர் நலம் பெற பிரார்த்திப்போம் !

அதிராம்பட்டினம், பிப்-03
அதிராம்பட்டினம், கீழத்தெரு மஹல்லாவை சேர்ந்த சமூக ஆர்வலர் எம். முஹம்மது மக்கம். இவரது சகோதரர் எம். அகமது அலி ( வயது 44 ). கடந்த ஜன. 21ந் தேதி முதல் உடல் நலம் கடுமையாக பாதிப்படைந்து தஞ்சாவூர் எம்.ஆர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு டாக்டர் மைக்கேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் எம். அகமது அலி அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கும் படி அன்னாரது குடும்பத்தினர் நம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
எம். முஹம்மது மக்கம் - 0091 8870912848

Tuesday, December 15, 2015

அமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நலம்பெற பிரார்த்திப்போம் !

நமதூர் செட்டித்தெருவை சேர்ந்த அமெரிக்கா வாழ் அதிரையரும், அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் தலைவருமாகிய சேக் அலி அவர்கள் திடீர் சுகவீனம் ஏற்பட்டு கலிபோர்னியாவில் உள்ள நார்த் பே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் [ ICU ] அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சகோதரர் சேக் அலி அவர்கள் சமூக சிந்தனை உள்ள அமைதியான மனிதர். பல்வேறு சமூக பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருபவர். இவர் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி துஆ ( பிரார்த்தனை ) செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: அதிரை ஏ.ஆர். அப்துல் லத்திப், அமெரிக்கா

Tuesday, November 3, 2015

அதிரை திமுக அவைத்தலைவரிடம் சேர்மன் உடல் நலம் விசாரிப்பு !

அதிரை நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்தவர் ஹெச். அப்துல் காதர். திமுக அதிரை பேரூர் அவைத்தலைவராகவும், அதிரை பேரூர் மன்ற 13 வது வார்டு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திடீரென உடல் சுகவீனம் ஏற்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஊர் திரும்பி தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று இரவு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது, தமிழ்மாநில காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், சவூதிவாழ் அதிரையர் ஹாஜா ஆகியோர் ஹெச். அப்துல் காதர் அவர்களை நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். விரைவில் பூரண குணமடைய இறைவனிடம் துஆ செய்தனர். மேலும் அதிரையின் அரசியல் பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள் ஹெச். அப்துல் காதர் அவர்களை நேரடியாக சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வரும் ஹெச். அப்துல் காதர் நம்மிடம் கூறுகையில்...
'எனது உடல் நலம் பூரண நலம் பெற துஆ செய்த அனைவருக்கும் எனது நன்றி. சிகிச்சை முடிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறேன். எனது உடல் முன்பு இருந்ததை வீட முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ஒவ்வொருவரும் தினமும் நடை பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அதேபோல் வருடம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இவற்றை செய்யத்தவறினால் பின்னாளில் நமக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும் உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை பெரும் போது மனவலிமை ஒவ்வொருவருக்கும் அவசியம். இவை உடல் விரைவில் பூரண குணமடைய உதவும்' என்றார்.
 
 

Thursday, October 22, 2015

அதிரை திமுக அவைத்தலைவர் உடல் நலம் பெற துஆ செய்வோம் !

அதிரை நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்தவர் ஹெச். அப்துல் காதர். திமுக அதிரை பேரூர் அவைத்தலைவராகவும், அதிரை பேரூர் மன்ற 13 வது வார்டு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உடல் சுகவீனம் ஏற்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் விரைவில் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை ( துஆ ) செய்வோம். 

Monday, January 19, 2015

ஹஜரத் நலம் பெற துஆ செய்வோம் !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் 'நீதி போதனையை' கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்.எஸ் ஜமால் முஹம்மது ( வயது 74 ). 'ஹஜரத்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி அருகே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 04-01-2015 அன்று ஹஜரத்தை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஹஜரத்தின் இல்லத்திற்கு சென்ற நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் இவரது உடல் நிலையை அறிந்து வேதனை அடைந்தனர்.

இதையடுத்து ஹஜரத் குறித்து 'தோள் கொடுப்போம் நம்ம ஹஜரத்துக்கு !' என்ற தலைப்பில் அதிரை நியூசில் செய்தி பதிவிட்டப்பட்டது. இவற்றை பார்வையிட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வசிக்கும் இவரது பாசமிகு மாணவர்கள் பலர் ஹஜரத்துக்கு உதவ முன்வந்தனர். ஹஜ்ரத்தை நேரடியாக முத்துப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து மருத்துவ உதவிகளை வழங்கினர்.

துபாய், சவூதி, சென்னை, அதிரை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இவரது பாசமிகு மாணவர்கள் மற்றும் இவரது நல விரும்பிகள் நேரடியாகவும், ஹஜரத்தின் வங்கி கணக்கு வழியாகவும், ஒரு சிலர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் மூலமாகவும் நிதி உதவியை வழங்கினார்கள். இதில் கடந்த அன்று நிலவரப்படி மொத்தம்  ₹ 94,500/- வந்துள்ளதாக ஹஜரத் நம்மிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இவருக்கு இருதயம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம்.

Thursday, January 15, 2015

சுகவீனமடைந்த அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் அவர்கள் பூரண நலம்பெற துஆ செய்வோம் !

அதிரையை சேர்ந்தவர் எஸ்.எஸ்.பி நசுருதீன். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணை தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு, பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அங்கே மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம்.

Friday, January 9, 2015

விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த மற்றொரு மாணவர் பூரண நலம்பெற துஆ செய்வோம் !

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் சேக் தம்பி. இவரது மகன் இப்ராஹீம் ( வயது 16 ). பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இன்று மாலை பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த இவருக்கு தஞ்சை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம்.

Monday, January 20, 2014

அமெரிக்கா கலிபோர்னியாவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நலம்பெற பிரார்த்திப்போம் !

நமதூர் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீரான் அவர்களின் புதல்வர் நெய்னா முஹம்மது அவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து, கலிபோர்னியாவில் உள்ள மெர்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் [ ICU ] அனுமதிக்கப்பட்டு உள்ளார். சுயநினைவிழந்து காணப்படும் சகோதரருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி அன்னாரின் குடும்பத்தினர் நம்மை அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

இப்ராஹீம்
A.R. அப்துல் லத்திப்

Tuesday, July 16, 2013

பிரார்த்திப்போம் அலியார் சார் அவர்களுக்காக !

அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]

நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி M. முகம்மது அலியார் அவர்கள் கடந்த சில வாரங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் பூரண குணம் அடைந்து நற்சுகம் பெற இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் நாம் அனைவரும் தற்தமது ஹக்கில் துவா செய்வோம்.

[ இப்புனித மிக்க ரமலான் மாதத்தில் மூமினுக்கு மூமின் மனமுவந்து கேட்கப்படும் துவாவை அல்லாஹ் உடனே அங்கீகரிக்கிறான் ]

தகவல் : M. அப்துல் ஜலீல்
அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர்
தொகுப்பு : அதிரை நியூஸ்க்காக அதிரை மெய்சா