.

Pages

Showing posts with label புதிய பள்ளிவாசல் திறப்பு விழா. Show all posts
Showing posts with label புதிய பள்ளிவாசல் திறப்பு விழா. Show all posts

Friday, January 18, 2019

திருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (படங்கள்)

பேராவூரணி, ஜன.18
அதிராம்பட்டினம் அடுத்து கிருஷ்ணாஜிபட்டினம் அருகில் உள்ள திருமங்கலப்பட்டினத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, திருமங்கலப்பட்டினம் ஜமாஅத் தலைவர் கே.எம் ஹபீப் முகமது தம்பி தலைமை வகித்தார். தமிழ்மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் பேராசிரியர் பி.ஏ காஜா முயீனூத்தீன் பாக்கவி புதிய பள்ளிவாசலை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர். பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் திருமங்கலப்பட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், பி.ஆர் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பின் பேரில், அதிராம்பட்டினம் அகமது அன்வர் கலந்துகொண்டு மஹ்ரிப் தொழுகைக்கான பாங்கொலியை எழுப்பி னார். விழாவில், அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் முன்னாள் பொருளாளர் முகமது ஜமீல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அதிரை ஏ.சாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில், திருமங்கலப்பட்டினம் ஜமாஅத் தன்னார்வலர்கள் வாகன நெருக்கடியை சீர் செய்வது, தொழுகையாளிகளுக்கு குளிர்பானம், தண்ணீர், உணவு வழங்குவது, இடத்தில் அமரவைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாட்டினை திருமங்கலப்பட்டினம் ஜமாஅத் ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Friday, January 4, 2019

கழனிவாசல் கிராமத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (படங்கள்)

பேராவூரணி, ஜன.04
அதிராம்பட்டினம் அடுத்து உள்ள பேராவூரணி தாலுகா கழனிவாசல்  கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர். பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம், பேராவூரணி, மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வலர்கள் வாகன நெருக்கடியை சீர் செய்வது, தொழுகையாளிகளுக்கு தண்ணீர், உணவு வழங்குவது, இடத்தில் அமரவைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாட்டினை கழனிவாசல் ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினர் செய்து இருந்தனர்.


Friday, May 11, 2018

அதிரையில் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மஸ்ஜித் ஆயிஷா (ரலி) பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில், ஹாஜி எம்.ஏ முகமது முகைதீன் தலைமை வகித்து, 1500 சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை, அதிராம்பட்டினம் பகுதி இஸ்லாமியர்களின் தொழுகைக்கு பயன்படுத்திக்கொள்ள வக்ஃபு செய்தார்.

அதிராம்பட்டினம் அல் மதரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. சபியுல்லா அன்வாரி, காதிர் முகைதீன் கல்லூரி அரபிக் பேராசிரியர் மவ்லவி. முகமது இத்ரீஸ் ஆகியோர் விழா பேரூரை நிகழ்த்தினர். பின்னர், பள்ளிவாசலில் மஹ்ரிப் நேர தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையில், அதிராம்பட்டினம் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாட்டினை, ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக் செய்தார்.

பள்ளிவாசல் சிறப்பு அம்சங்கள்:
1. அதிராம்பட்டினத்தை அலங்கரிக்கும் இறை இல்லங்கள் வரிசையில் 36-வது இடத்தைப் பெற்றுள்ளது இப்பள்ளி.

2. 1500 சதுர அடியில் 3 தளங்கள்.  குளிரூட்டப்பட்ட தொழுகைக்கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒதுக்கூடம், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது.

2. தரை தளம் மற்றும் முதல் தளம் தொழுகைக்கும், 2-வது தளம் மக்தப் வகுப்பு நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

3.  சேர்மன் வாடி பஸ் நிறுத்தம், அதிரை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது.

4. இப்பள்ளியில், தொழுகை, தாலிம், திக்ர், குர் ஆன் ஓதுதல், தீன் பேச்சு, தாவத் பேச்சு போன்ற நற்செயல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)

 
 
 
 

அதிராம்பட்டினம் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) எழில்மிகு தோற்றம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவில் (வ.ஊ.சி தெரு) புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மஸ்ஜித் ஆயிஷா (ரலி) பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

இந்நிலையில், அதிரை நியூஸ் வாசகர் 'முகமது அஜீம்' நமக்கு எடுத்தனுப்பிய இறை இல்லத்தின் எழில்மிகு தோற்றத்தின் படங்கள்.