அதிராம்பட்டினம், டிச.12
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் துயரத்திற்கு நீதி வழங்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். அவ்வமைப்பின் வட்டார நிர்வாகி நடராஜன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முரளி, வழக்குரைஞர் ஜெயபாண்டியன், வேதாரண்யம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தனியரசு, மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஓகிபுயல் பாதிப்பில் கரை சேராத மீனவர்களை விரைந்து கண்டு பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவ மக்களை முதல்வர் உடனடியாக நேரில் சென்று சந்திக்க வேண்டும், போராடியவர்கள் மீது வழக்கு போடுவதை உடனே கைவிட வேண்டும், மக்கள் அதிகாரம் அமைப்பினரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓகி புயலில் இறந்த மீனவ குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதி உதவி, ஒருவருக்கு அரசு வேலை, சேதமான படகுக்கு நிவராணம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்பாட்டத்தில், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்துகொண்டனர்.