.

Pages

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Saturday, October 29, 2016

பக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அவசியம்: நரம்பியல் நிபுணர் கருத்து!

பக்கவாதத்துக்கான அறிகுறிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என்று நரம்பியல் நிபுணர் அ.வேணி தெரிவித்தார்.

உலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தை குணப்படுத்த முடியும் என்பதே நிகழாண்டு பக்கவாத தினத்தின் கருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கவாத பாதிப்பு குறித்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நரம்பியல் துறை உதவிப் பேராசிரியரும் நரம்பியல் நிபுணருமான வேணி கூறியதாவது:

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டாலோ அல்லது ரத்தக் குழாய் வெடித்து ரத்தம் மூளைக்குள் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. ஒரு பக்கமாக கை, கால் செயலிழத்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் ஏற்படுதல், பேச முடியாமல் போதல், பேச்சில் தடுமாற்றம், திடீரென ஒரு பக்கமாக கை, கால்களில் உணர்ச்சி குறைதல், ஒரு கண்ணில் பார்வை மறைதல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது இரட்டையாக தெரிதல், நடையில் திடீர் தள்ளாட்டம், திடீர் விக்கல் ஏற்பட்டு சாப்பிடும்போது புரை ஏறுவது, திடீர் தலைசுற்றல் ஏற்பட்டு நினைவு இழப்பது ஆகிய அறிகுறிகளில் எது தென்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல், உடனடி யாக நரம்பியல் நிபுணரின் ஆலோச னையைப் பெறுவது அவசியம்.

இந்த அறிகுறிகளை அலட்சி யப்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 48 லட்சம் பேர் பக்க வாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். 15 சதவீதத்தினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 88 சதவீதம் பேர் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்துக்கு ஆளாகின்றனர்.

காரணங்கள் என்ன?
பக்கவாதம் ஏற்பட உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், நீரிழிவு நோய், இதய நோய்கள், புகைப் பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், உடலளவில் குறைவாக வேலை பார்த்தல், தூக்கமின்மை ஆகியவை பிரதான காரணம். இவற்றுடன் வயது அதிகமாகும்போது பக்கவாத பாதிப்பு நேரிடுவதற்கான வாய்ப்பும் அதிகம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை 3 மணி நேரத்தில் இருந்து நான்கரை மணி நேரத்துக்குள் மூளை நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சிகிச்சைக்குப் பிறகு
பக்கவாத சிகிச்சைக்குப் பிறகு, மது, புகைப் பழக்கம் இருக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். இறைச்சிகளை தவிர்த்து காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் அப்பளம், ஊறுகாய் ஆகியற்றைத் தவிர்க்க வேண்டும். உணவிலும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தி இந்து தமிழ்

Sunday, November 22, 2015

நீங்கள் உறங்கும்போது குறட்டை விடுபவரா?

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.

இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். அப்படி உங்கள் குறட்டையை நிறுத்த வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வலையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது.


அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றி குறட்டையை தவிர்த்திடுங்கள்.

படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்.

பக்கவாட்டில் தூங்கவும் இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும். நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும். புகைப்பிடிப்பதை தவிர்ப்பது புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும். சளிக்கு நிவாரணம் அளித்தல் சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.

நன்றி: தகவல் இணையதளங்களிலிருந்து.

Wednesday, August 12, 2015

நம்மவூரு பக்கத்திலே ஒரு அக்குபஞ்சர் டாக்டர் !

இதுவோர் பரிந்துரையே அன்றி வர்த்தக விளம்பரமல்ல!

ரம்மியமான ஒரு மாலை பொழுதில், சிலுசிலுவென தூவிய சாரலில் இன்பமாய் நனைந்த நிலையில் 'முஹமது ரஃபி' என்ற இந்த இளைஞரை அவரது அறந்தாங்கி வீட்டில் சந்தித்தோம், ஏன் ?
மாற்றுவழி மருத்துவமாக உலகிற்கு அறிமுகமான ஆங்கில மருத்துவம் இயற்கை மருத்துவ முறைகளை பின்னுக்குத் தள்ளி, பக்கவிளைவுகள், பொருளாதார விரயம், வலியுடன் கூடிய ரண சிகிச்சை, அலைச்சல் என பல தீமைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் இன்றைய உலகில் மனிதர்களால் முதன்மை  மருத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மனித முரணே.

நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், உணவே மருந்து, ரெய்கி, மூலிகை மருத்துவம், உடற்பயிற்சி போன்று பக்க விளைவுகள் அற்ற, பணத்திற்கும் உடலுக்கும் பாதுகாப்பான மருத்துவ முறைகளில் ஒன்றே சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவம். (தொடு அக்குபஞ்சர் மருத்துவம் என்ற பெயரிலும், ஒரு சில நாள் மட்டும் அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்று விட்டும் பல போலிகள் உலா வருவது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது) இவர் அந்த தொட்டு விளையாட்டு மருத்துவரல்ல மாறாக சித்த வைத்திய பரம்பரையில் பிறந்து தனது தந்தையுடன் மும்பையில் மருத்துவ தொழில் செய்து கொண்டிருக்கையில், மும்பை மாநகரில்,

http://www.barefootacupuncturists.com/en/the-project.html

"THE BAREFOOT ACUPUNCTURISTS PROJECT" என்ற சர்வதேச திட்டத்தின் கீழ் உலகின் தலைசிறந்த வெளிநாட்டு அக்குபஞ்சர் மருத்துவர்களிடம் நேரடியாக பயின்றவர். மஹராஷ்டிரா அப்பல்லோ மருத்துவமனையில் அக்குபஞ்சரிஸ்டாக பணியாற்றியவர்.

http://www.barefootacupuncturists.com/en/about-us.html

இலங்கையில் சில ஆண்டுகளாக பல்வேறு அக்குபஞ்சர் மருத்துவ முகாம்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார், கற்று கொள்வதற்கு மிக எளிமையான அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்றுத் தருவதற்கும் அவர் தயாராகவுள்ளார்.

மேலும் இந்த மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் 'மூட்டு வலி', கை கால் கடுப்பு, கழுத்து பிடிப்பு, முதுகுவலி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பல்வேறு நோய்களுக்கும் இந்த சீன குத்தூசி வைத்திய முறையின் மூலம் தீர்வு காண்கிறார், அத்தகைய தீர்வுகளும் அல்லாஹ்வின் நாட்டத்தால் மட்டுமே ஏற்படுகின்றன என்பதையும் சேர்த்து சொல்ல அவர் மறப்பதில்லை.

பல்லாயிரக்கணக்கில் செலவு செய்தும் ஊர் ஊராக சென்றும் அல்லோபதி (ஆங்கில) வைத்தியம் பார்க்கத் தயாராகவுள்ள நாம் ஏன் இந்த எளிய, பொருளாதார விரயமில்லாத, அடாவடி கட்டணமில்லாத, மருந்தில்லாத மருத்துவ முறையை ஒரு முறை முயற்சிக்கக்கூடாது?

மாதத்தில் 3 வாரம் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்திலும், ஒரு வாரம் மட்டும் அறந்தாங்கியிலும் தங்கி இருந்து அக்குபஞ்சர் வைத்தியம் செய்யும் மருத்துவர் முஹமது ரஃபி அவர்களை 80 98 66 11 60 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு முன்பதிவின் மூலம் நேரடியாகவோ அல்லது நமது வீட்டிற்கே வரவழைத்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த எளிய மருத்துவ முறையை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சமுதாய அமைப்புக்கள் ஊர்தோறும் சிறப்பு அக்குபஞ்சர் மருத்துவ முகாம்களை நடத்த முன்வர வேண்டும்.

சந்திப்பில் உதவி
அப்துல் ஹக்கீம் - அறந்தாங்கி

புகைப்படங்கள்
ஜமால் முஹமது - அதிரை

தோள்பட்டை வலிக்கு ஒரு நாள் அக்குபஞ்சர் வைத்தியம் மூலம் குணமடைந்தவன் என்ற வகையில் நன்றியுடன் பரிந்துரைப்பது

அதிரை அமீன்

Wednesday, September 17, 2014

செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள் ! - இதை முடிந்த வரை Share செய்க...

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு, Immunize Isra 12-06-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.

நன்றி : விகடன்

Saturday, September 21, 2013

கண்படுமே பிறர் கண்படுமே.

பிறர் கண் படுதோ இல்லையோ, நம் கண் கெடாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை.

நம் எல்லோருக்கும் தெரியும் வலிகளில் ஒன்று தலைவலி. தலைவலி வந்துவிட்டால் போதும் அப்புறம் என்ன பறக்க பறக்க சில வலி நிவாரணிகளை எடுத்து நெற்றியை சுற்றி தடவுவோம். அந்த வலி நிவாரணிகளில் ஒன்றுதான் கோடாலி தைலம் என்று சொல்லக்கூடிய திரவ நிலையில் உள்ள ஒருவகையான தெளிவான தைலம். பக்கத்து வீட்டில் இந்த தைல பாட்டிலை திறந்தால் மற்ற வீடுகளுக்கும் இதன் வீரியம் பரவும், அவ்வளவு வீரியம் கொண்ட தைலம்தான் இந்த கோடாலி தைலம்.

இந்த தைலம் மூட்டு வலி, தசை பிடிப்பு, தசை வலி, கால் கடுப்பு போன்ற வலிகளுக்கு ஏற்ற மருந்து. அதே சமயம் தலை வலிக்கு ஏற்ற மருந்தாக இருந்தாலும் இதை நெற்றியில் தடவும் போது கடுமையான பாதிப்பை அடைவது கண்கள். இந்த தைலத்தில் கலந்து இருக்கும் மருத்துவ வீரியம் கண்களை பாதித்து நாளடைவில் கிட்டப்பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளை உண்டு பண்ணிவிடுவதாக கண் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆகவே, இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ. மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

Thursday, September 12, 2013

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு டாக்டர் D.முஹம்மது கிஸார் அவர்களின் கனிவான ஆலோசனை !

புனித ஹஜ் பயணம் செல்வோருக்கு டாக்டர் D முஹம்மது கிஸார் அவர்கள் கூறும் சிறந்த மருத்துவ ஆலோசனைகள். இதோ.....    

     புனித மிக்க ரமலான் மாதம் முடிந்து , நாம் எல்லோரும் ஹஜ்ஜை எதிர் நோக்கி உள்ளோம். இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள், மனதளவில் ஹஜ் செல்வதற்கு தங்களை தயார் படுத்த துவங்கி விட்டார்கள். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு  தர விரும்புகிறேன். இதில் நான் 1997 ஆம் ஆண்டு , சவுதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது களபபணியாற்றிய எனது அனுபவத்தின் சில தாக்கம் களையும் இணைத்து உள்ளேன்.

   1 ஹஜ் செல்ல நாடி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்கு  செல்லு முன் தங்கள் உடல் நலன்களை நல்ல முறையில் பரிசோதித்து, ஹஜ்ஜுக்கு  செல்ல தயார் பண்ணி கொள்ள வேண்டும்.

 2  நெடுநாளைய  நோய்களான  சர்க்கரை என்னும் நீரழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம்  , ஆஸ்த்மா , வலிப்பு,இருதய நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் , தங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து, தங்கள் நோயை முழுக்கட்டு பாட்டில் வைத்து கொள்ள வேண்டும.முறையான உணவு கட்டுபாடுகளை ஒழுங்காக பின்பற்ற வேண்டும்

3   நெடுநாளைய  நோய்களான  சர்க்கரை என்னும் நீரழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம்  , ஆஸ்த்மா , வலிப்பு,இருதய நோய், மாத்திரை களை தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே  கொண்டு செல்ல வேண்டும். அனைத்து மாத்திரைகளும், ஒரே பேக்கில் வைக்காமல், பல பேக்குகளில் பிரித்து வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு பேக் தொலைந்து போனால் கூட, இடை வெளி இல்லாமல் தொடர்ந்து போட மாத்திரை கள் இருக்கும். தங்கள் மாத்திரைகளின் பெயர்களையும் (BRAND NAME ) ,அதன் மூலக்கூறு பெயர்களையும்(CHEMICAL OR  MOLECULE NAME ) தெரிந்து வையுங்கள். அப்போது தான் மாத்திரை முடிந்தது விட்டாலோ  அல்லது தொலைந்து விட்டாலோ , சவுதியில் அந்த மாத்திரைகளை

 மருத்துவரிடம் கூறி மாற்று மாதிரியோ அல்லது மருந்தகங்களில்   கேட்டு பெற வசதியாக  இருக்கும் (எல்லா நாடுகளிலும் மூலக்கூறு மருந்தின் பேர் ஒன்று தான், brand name தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்,ஒரு நாட்டு மருத்துவருக்கு, மற்ற நாட்டில் உள்ள எல்லா brand name  களும் தெரிந்துஇருக்க வாய்ப்பு குறைவு,.மூலக்கூறு பெயர்கள் உலகம் முழுவதும் ஒன்று தான் )

4  சவுதி அரசும் அதன் சுங்கததுறையும், அந்நாட்டு மருந்து கட்டுபாட்டு துறையின் அனுமதி இல்லாத மற்ற நாட்டு மருந்துகளை , தங்கள் நாட்டில் அனுமதி அளிப்பது இல்லை.என்றாலும் , நீங்கள் உபயோகபடுத்தும் மருந்துகளை கொண்டு செல்லலாம். ஆனால் அந்த மருந்து களுக்கு தேவையான் டாக்டர் prescription என்னும் சீட்டுகளை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும. அந்த டாக்டர் சீட்டில் , உங்கள் பெயர் உங்கள் பாஸ்போர்ட்டில்  எப்படி  உள்ளதோ ,அதே பெயர் அப்படியே, ஸ்பெல்லிங்  தவறு இல்லாமல் குறிப்பிடுவது அவசியம் டாக்டர் சீட்டில் பாஸ்போர்ட்   நம்பர் பதிவு  செய்வது இன்னும் நல்லது.

மிக முக்கியமாக, வலிப்பு நோய் மருந்துகள், தூக்க மாத்திரைகள், மற்றும் மன  நல நோய்க்கான மாத்திரைகள் கொண்டு செல்ல நேர்ந்தால், சரியான மருத்துவ சீட்களுடன் செல்ல வேண்டும். இது போன்ற மாத்திரைகளுக்கு, சீட்டு இல்லாமல் சென்றால், சவுதி சட்டப்படி, சிறை தண்டனை வரை தர விதி உண்டு. டாக்டர் சீட்டில், மாத்திரை களின் எண்ணிக்கை களையும் பதிவு செய்ய  வேண்டும்.இதுபோன்ற மாத்திரைகளின்  டாக்டர் சீட்டுகளில்,உங்கள் பெயர் மற்றும் வயதை பாஸ்போர்ட்டில் உள்ளவாறு  சரியாக  , ஸ்பெல்லிங் தவறு  இல்லாமல் இருப்பது அவசியம்.

5  பொதுவாக ஹஜ்ஜின் போது மக்காவிலும், மதீனாவிலும் , இந்திய மற்றும் சவுதி அரசின் கீழ் செயல் படும் மருத்துவ மையங்களும்   மற்றும் மருந்து கூடங்களும் , தேவையான அளவில் உள்ளன. எனவே சிறிய சிறிய நோய்களான சளி, ஜுரம் போன்றவைகளுக்கு மருத்துவம் பெறுவதில் , அதற்கான மாத்திரைகளை பெறுவதிலும் சிக்கல் இருக்காது. உங்கள் தேவைகேற்ப  குறைந்த அளவு , சிறு நோய்களுக்கான மாததிரிகளை, மருத்துவ சீட்டுகளுடன் எடுத்து செல்லலாம்.

6 .குறிப்பாக பெண்கள் பலர், தங்கள் மாதவிடாயை, இயற்கையாக வருவதை  தள்ளி போடும் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். காரணம், தங்கள் மாதவிடாய் சுழற்சி , ஹஜ் கிரியை செய்யும் காலத்தில் வந்து , தாங்கள் அமல் செய்வது கேட்டு பொய் விடுமோ என்ற எண்ணத்தில். மாதாவிடாவின் போது, தொழுகை மற்றும் கஹ்பாவை தவாப் சுற்றுவது,மஸ்ஜிதுல் ஹரம்க்குள்  நுழைவது தவிர, மற்ற எல்லா ஹஜ்ஜின் செயல் களும் ஆகுமானது தான்.அதனால் நாற்பது நாளைக்கு மதாவிடாய் வராமல் மருந்துகள் மூலம் தள்ளி போவது நல்லது இல்லை. பொதுவாக இந்த மாத்திரைகளில் ESTROGEN மற்றும் PROGESTERONE  எனும் ஹார்மோன் உள்ளதால், இந்த மாத்திரைகளை எடுக்கும்போது , குமட்டல், வாந்தி, உடல் கனத்து போதல் , போன்ற சில கஷ்டங்கள் வரலாம். இந்த மருந்துகள் எடுக்கும் போது, ஒரு வகையான மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு,  அமல் செய்வதை பாதிக்கலாம்.சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிகம் கனத்தும் வலியுடன் காணப்படும்.(ஓர் ஆய்வின் படி , தேர்வுக்காக தங்கள் மாதவிடாயை தள்ளி போட , மாத்திரை போட்ட மாணவிகளின் ,தேர்வின் தேர்வு முடிவு, மாத்திரை போடாத மாணவிகளின் முடிவை விட மோசமாக இருந்தது. காரணம், மன நிலை மாற்றம்  ). ஒருவேளை, மாதவிடாயை தள்ளி  போடும் மாத்திரையை தொடர்ந்து போடாமல் போகும் நிலை ஏற பட்டாலோ அல்லது  மாத்திரை தொலைந்து போனாலோ அல்லது மாத்திரை போட சில நாட்கள் மறந்தாலோ , மாத்திரை நிறுத்திய சில நாளில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு, அமல்களை அதிகம் பாதிக்கலாம். இந்த  நிலைமை 1997 ஆண்டு ஹஜ்ஜின் போது, தீ விபத்து ஏற பட்டு , பல பெண்கள் தங்கள் மாத்திரைகளை இழந்து விட்ட பின், அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள். எனவே இயற்கையாக மாதவிடாவை தள்ளி போடும் மாத்திரைகளை தவிர்ப்பது தான் எல்லா நிலையிலும் நல்லது. அல்லாஹ  எந்த ஆத்மாவையும் அவர்களின் சக்திக்கு மீறி சோதனை தர மாட்டான்.(குறிப்பு : அதிக நாள்கள் இந்த மாத்திரைகள் உட்கொண்டால், மார்பகம் மற்றும் சினைப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.)

7 . நீரழிவு நோய்  உள்ளவர்கள், முடிந்தால் தங்கள் சுகர் அளவை அடிக்கடி சோதித்து கொள்ள , பாக்கெட் GLUCOMETER கொண்டு செல்லலாம். ஆனால் அதில் BATTERY  உள்ளதால்,அதை , காபின் லக்கேஜுக்குள் விமான நிறுவனம் அனுமதி அளிப்பது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்

8 ஹஜ் செல்லும் போது, பலர்க்கு தங்களை அறியாமலே, சிறிது மன படபடப்பு   ஏற்படுவது உண்டு .(காரணம்)   தங்கள் சொந்தங்களை  சொந்த ஊரில் விட்டு பிரிந்து வந்தது ,கடந்த காலங்களில் ஹஜ்ஜின் போது ஏற்பட்ட தீ விபத்து ,கூட்ட நெரிசல் விபத்தால்  உயிரிழப்பு  போன்ற சம்பவங்களை நினைத்து,இவ்வளவு  செலவழித்து வந்து இருக்கும் தங்களின் புனித பயணம் வெற்றியாக முடிமோ என்ற மனநிலை,  தங்கள் ஊரில் விட்டு வந்த தங்களின் வியாபாரம் என்ன ஆகுமோ  என்ற மனநிலை,முற்றிலும் வித்தியாசமான சூழ்நிழையில் 40 நாள் இருப்பது,புதிதான விமான பயணம்,அளவுக்கு அதிகமான கூட்டத்தை முதன் முதலில் சந்திப்பது, அதிகம் அதிகம் உம்ரா மற்றும் தவாப் செய்ய வேண்டும் என்ற படபடப்பு , ஹஜரல் அஸ்வத் கல்லை அடிக்கடி முத்தமிடும் வாய்ப்பு கிடைக்குமா என்ற  ஏக்கம் போன்றவற்றால் , மனநிலையில் சிறிது பட படப்பு ஏற்படுவது இயற்கை என்றாலும்,ஊரில் இருக்கும்போதே இதை எல்லாம் சமாளிக்க கூடிய மனநிலையை  கொண்டு வந்து விட்டால், மன சார்ந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம். ஏற்கனவே மனநோயால் பாதிக்க பட்டவர்கள் , ஹஜ்ஜின்போது மேற்கூறிய காரணங்களினால் தங்களின்  மன நோய் அதிகமாக வாய்ப்பு அதிகம் உள்ளதால், ஊரில் இருக்கும்போதே தங்கள் மன நல மருத்துவரை கலந்து ஆலோசித்து, தான் ஹஜ் செல்ல உள்ளதை விளக்கி , அதற்க்கு ஏற்றார் போல் மாத்திரைகளை மாற்றி எடுப்பது நல்லது.

8  கற்பமாக உள்ள பெண்கள்  தங்கள்  மகப்பேறு  மருத்துவரை கலந்து ஆலோசித்து , ஹஜ் செல்வதை பற்றி  முடி எடுப்பது நல்லது. முடிந்த வரை பிரசவம் ஆகும் வரை ஹஜ் தவிர்ப்பது நல்லது. இதில் அரசு விதிகள், மற்றும் விமான நிறுவனகள் விதிகளை பின்பற்ற வேண்டும். தான் கருவுற்று இருப்பதை மறைத்து ஹஜ் செல்வதை தவிர்க்க வேண்டும்.ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த பின் கருவுற்று இருந்தால் , கருவுற்ற தகுந்த ஆதாரத்துடன் விண்ணபித்து, ஹஜ் செல்வதை தவிர்த்து , ஏற்கனவே கட்டிய பணத்தை வாபஸ் பெற வழி உண்டு.

 சவுதி அரசின் சுகாதார அமைச்சகம் , ஹஜ்ஜின் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடை முறைகளை அறிவித்து உள்ளது. அது பற்றி சில குறிப்புகள்

 இது சென்ற வருடத்திற்கான வழிமுறை.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி :(YELLOW FEVER  VACCINE  ) இது மஞ்சள் காமாலை என்னும் JAUNDICE  அல்ல

 சர்வதேச சுகாதார விதிகள் ஏற்ப மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க, (நோய்  உள்ள நாடுகளின் பட்டியலில்) ஆபத்து நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகள், குறைந்தது 10 நாட்கள் முன்பு , பத்து வருடங்களுக்கு மிகாமல் உள்ள ,  மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். இந்த லிஸ்டில் இந்தியா இடம் பெற வில்லை. எனவே இது இந்தியர்களுக்கு பொருந்தாது. இந்த லிஸ்டில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இந்தியர்களுக்கும் இது பொருந்தும்

Meningococcal மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

மூளைக்காய்ச்சல் எதிராக தடுப்பூசி  , சவூதிக்கு வருவதற்கு ,3 ஆண்டுகளுக்கு மேற்படாமல்  மற்றும்  10 நாட்கள் குறைவு  இல்லாமல்   MENINGOCOCCAL  quadruvalent  தடுப்பூசி போட்ட  சான்றிதழ் (ACYW135) அவசியம் .\

2 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்கள் menigococcal   quadrivalent (ACYW135) தடுப்பூசி 1 டோஸ் கொடுக்கப்பட வேண்டும்;

சவுதி உள்நாட்டு ஹஜ் பயணிகள் meningococcal  Quadrivalent (ACYW135) தடுப்பூசி உடன்  தேவை:

1.-அனைத்து கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி போடாத  Madina and  Makka குடிமக்கள்(citizen ) மற்றும் குடியிருப்பாளர்கள்.(resident )-

2. ஹஜ் மேற்கொள்ளும் அனைத்து சவுதி குடிமக்கள்(citizen )  மற்றும் குடியிருப்பாளர்கள்..(resident )-

3.கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி போட படாத  அனைத்து ஹஜ் பணியாளர்கள் .

 இளம்பிள்ளை வாதம்:(oral polio drops ) polio சொட்டு மருந்து

 ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா, பாக்கிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, சாட், அங்கோலா மற்றும் சூடானில் இருந்து வரும்  அனைத்து ஹஜ் பயணிகள்,எல்லா வயதினர்களும்  (முன்பு டிரோப்ஸ் போட்டு இர்ந்தாலும் சரியே), சவுதி அரேபியாக்கு கிளம்ப   6 வாரங்ககளுக்கு முன்பு  1 டோஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் சவுதி அரேபியா வந்து அடைந்ததும், அதன் எல்லையில் வைத்து இன்னொரு dose சவுதி அரசு வழங்கும் .

seasonal  flu  பருவகால ஃப்ளு தடுப்பூசி
அதிக ஃப்ளு வருவதற்கு ரிஸ்க் உள்ள ஹஜ்  யாத்ரீகர்கள்(எ.கா. முதியோர், நாள்பட்ட நுரையீரல்  அல்லது இதய நோய் அல்லது, கல்லீரல் நோய்  அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு).

 ,ஹஜுக்காக சவுதி வருமுன் தங்கள் நாட்டில் ஒரு டோஸ் ஃப்ளு தடுப்பூசி போட,சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் , பரிந்து உரைக்கிறது.

(இந்த ஃப்ளு தடுப்பூசியில்  பன்றி காய்ச்சல்(H1N1 ) தடுப்பு ஊசியும் அடக்கம்)

 ஹஜுக்கு செல்லும் முன் நீங்கள் தயார் படுத்துவதில் மிக முக்கியமானது இறை அச்சமே. எல்லா வல்ல அல்லா எல்லோரின் ஹஜ் கிரியைகள் முழுவதுமாக நிறைவேறி, ஏற்க்கபட்ட ஹஜ்ஜாக ஆக்க அருள் புரியட்டும், ஆமீன். ஹஜ் செல்வோர் எனக்காகவும், இந்த ஜாமாதிர்க்காகவும் மற்றும் உலக முஸ்லிம்களுக்காவும், இம்மை மறுமை வெற்றிக்காக  துவா செய்யவும்
தகவல் டாக்டர் D.முகம்மது கிஸார் இர்ஸாத்
செல் நம்பர் 9444114664
 

Friday, June 7, 2013

சென்னை அப்போலோ சிறப்பு மருத்துவர் அதிரைக்கு வருகை !

சென்னை அப்போலோ மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அதிரைக்கு வருகை தர இருக்கின்றார்.