இன்றைய வணிகப் போட்டிகள் நிறைந்த உலகில் மக்களின் கவனத்தை தங்களின் பக்கம் ஈர்ப்பதற்காகவும், வியாபாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் என்னென்ன வழிகள் உள்ளதோ அத்தனையையும் வணிகர்கள் முயற்சிப்பர், அதில் பல விளம்பரங்கள் அந்நிறுவனங்கள் விற்கும் பொருளுக்கும் செய்யப்படும் விளம்பரத்திற்கும் சம்பந்தமே இருக்காது.
மேலும் பல டுபாக்கூர் ஆசாமிகள் தங்களின் தோற்றத்தை, நடையுடையையே மூலதனமாக்கி கண்ட கருமத்தையும் மக்களின் தலையில் கட்டிவிடுவார்கள் அப்படிப்பட்ட ஆட்களில் ஒருவரே பதஞ்சலி வியாபாரி, இவரைப் போன்றவர்களுக்கு அரசியல் பின்புலமும் ஆட்சியாளர்களின் ஆசியும் எப்போதும் இருக்கும், காரணம் 'கமிஷன்'.
சரி நாம் சொல்ல வந்த விளம்பர யானையைப் பற்றி பார்ப்போம்....
தஞ்சையில் செயல்படும் பிரமாண்ட ஜவுளி நிறுவனங்களில் ஒன்று தற்போதைய கிருஸ்துமஸ், கிருஸ்தவ புத்தாண்டு, பொங்கல் போன்று வரிசையாக வரும் சீசன் வியாபாரத்தை குறிவைத்து மக்களை ஈர்க்கும் வகையில் ஓர் யானையை தன் நிறுவன வாசலில் கட்டி வைத்துள்ளது!
இந்த யானையை பார்க்கும் எவரும் முதல் பார்வையிலேயே காதலில் விழும் காதலர்களை போல புறத்தோற்றத்தை கண்டு ஏமாறுவது நிச்சயம், அவ்வளவு தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது இந்த எலக்ட்ரானிக் யானை பொம்மை. தலையை அசைத்தும் துதிக்கையை உயர்த்தியும் முன்பகுதி மட்டும் யானை அசைவதைப் போலவே ஒரளவு அசைந்தும் கண்ணாமூச்சி காட்டும் இந்த பிரமாண்ட பொம்மை சைனாக்காரனின் திறமையை? ஞாபகப்படுத்துகின்றது.
அசல் யானையை கண்டு அலறும் குட்டீஸ்களும் பெண்களும் கூட தைரியத்துடனும் குதூகலத்துடனும் தொட்டுத் தழுவி உற்சாகத்துடன் செல்கின்றனர், வெற்றிகரமானதோர் விளம்பரம்.
J. ஆசிக் அஹமது
(மாணவ செய்தியாளர்)