.

Pages

Showing posts with label ராஜாமடம் செய்திகள். Show all posts
Showing posts with label ராஜாமடம் செய்திகள். Show all posts

Thursday, September 26, 2019

அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்!

அதிராம்பட்டினம், செப்.26
பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம், அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு, மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் என்.என் நடராஜன் தலைமை வகித்தார். கல்லூரி புல முதல்வர் ஜி. இளங்கோவன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க மண்டலச் செயலாளர் ஆர்.அண்ணாதுரை வரவேற்றார். 

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. ராஜப்பா, பேராசிரியர்கள் கார்த்திகேயன், தமிழரசன், செந்தில்நாதன், ஈழத்தரசன்  . மனோரா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் எம்.எஸ். செல்வராஜ், மகேந்திரன், ஏ.கே குமார், ஏ.என் கண்ணன், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் டாக்டர் திவ்யா ரத்த தானம் செய்வதின் சிறப்பு , அவசியத்தை பற்றி விளக்கினார். சுமார் 60 மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனர். முடிவில், மனோரா ரோட்டரி சங்கச் செயலாளர் சிவ. சரவணன் நன்றி கூறினார்.
 

Wednesday, August 7, 2019

அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி புல முதல்வர் ஜி. இளங்கோவன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினார். கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் பேராசிரியை என்.கவிதா வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு தொடக்க விழா உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

Friday, January 4, 2019

பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப்பயணம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.04
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், இளம் அறிவியல் விஞ்ஞானிகள் திட்ட முகாம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த டிச.24 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாமில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று வருகின்றனர். இதில், கணிதம், கணினி, இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் குறித்த பாடங்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு அறிவியல் ஆய்வக களப்பயணத்தை மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.

இதில், கல்லூரி புல முதல்வர் இளங்கோவன் இயந்திரங்களின் செயல்முறை, இயக்கும் முறை, கணினி இயக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும், பொறியியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே எடுத்துரைத்தார். பின்னர், கல்லூரியில் உள்ள மெக்கானிக்கல் ஆய்வகம், இயற்பியல், வேதியியல், கணினி, மின்மோட்டார், சிவில் ஆய்வகங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.

ஏற்பாடுகளை, திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. குமாரசாமி, திட்ட அமைப்பாளர் பேராசிரியர் அ.அம்சத், துணை ஒருங்கிணைப்பாளர் கே. முத்துக்குமரவேல் ஆகியோர் செய்து இருந்தனர்.
 

Thursday, November 1, 2018

அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல்பசு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.01-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் புதன்கிழமை அன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் வலையில் விசித்திரமான எடை அதிகமான ஏதோ ஒன்று சிக்கியது. ராட்சத மீன் கிடைத்திருக்கலாம் என மகிழ்ச்சியோடு, வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பிய மீனவர்களுக்கு, தங்கள் வலையில் சிக்கியது கடல் பசு என தெரியவந்தது.

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி வன உயிர்க்கோளப்பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த அபூர்வ வகை கடல்பசுக்களை பிடிப்பது, அரசால் தடைசெய்யப்பட்டதாகும். அவ்வாறு பிடிபடும் கடல்பசுக்களை மீண்டும் உயிரோடு மீனவர்கள் கடலில் விட்டு விடுவது வழக்கமாகும். இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடல்பசு வலையில் சிக்கியதையடுத்து ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம்.பி.மோகன், இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மதுமகேஷ், ருக்மிணி சேகர் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் நிர்வாகிகள் டாக்டர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் அன்பு, கடல் பசு நண்பர்கள், மீனவர்கள் ஒருங்கிணைந்து கடல்பசுவை ஆழமான பகுதிக்கு சென்று விடுவித்தனர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்பசு சுமார் 10 அடி நீளமும், 500 கிலோ எடை கொண்டதாகவும் உள்ள பெண் கடல் பசுவாகும். இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு கடல்பசு மீனவர்கள் வலையில் சிக்கி, பின்னர் உயிரோடு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 

Thursday, September 27, 2018

ராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் !

அதிராம்பட்டினம், செப்.27
அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1969-2019 பொன்விழா ஆண்டையொட்டி, நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் இன்று (செப்.27) வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக  பள்ளி முன்னாள் மாணவரும், அதிராம்பட்டினம் அட்சயா பல் மருத்துவமனை பல் மருத்துவருமாகிய டாக்டர் பி. பாரதி கலந்துகொண்டு, "பல் ஆரோக்கியம், பல் பாதுகாப்பு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

முகாம் ஏற்பாட்டினை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜேந்திரன் செய்து இருந்தார்.

விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

Sunday, February 14, 2016

அதிரை அருகே ரூ 5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கூடிய புதிய விடுதி கட்டிடம் திறப்பு !

அதிராம்பட்டினம், பிப் 14
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயிலும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 33 அறைகளைக் கொண்ட தரை மற்றும் முதல் தளங்களை உள்ளடக்கிய விடுதி கட்டிடம் ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த விடுதி கட்டிடங்களை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் இளங்கோவன், சீனியர் வார்டன் தமிழரசன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.