.

Pages

Showing posts with label லாரல் பள்ளி. Show all posts
Showing posts with label லாரல் பள்ளி. Show all posts

Wednesday, August 16, 2017

லாரல் பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மாணவர்கள் கெளரவிப்பு !

பட்டுக்கோட்டை, ஆக.16
அதிராம்பட்டினம் அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளியில் 71 வது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் என்.அன்பழகன் கலந்து கொண்டு கொடியேற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் வி.பி.சந்திரசேகர் மற்றும் பள்ளி இயக்குனர்கள் பாரத், எலிசபெத் தேவஆசிர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் எம்.ஆலன் மாணவி அ.அஞ்சலி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கினார்கள்.

முன்னதாக தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.கிட்டப்பா நன்றி கூறினார்

Saturday, October 1, 2016

லாரல் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் !

அதிராம்பட்டினம், அக். 01
அதிரை அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

4-வது நாளான வெள்ளிக்கிழமை காலை அவ்வூரிலுள்ள பாசன வாய்காலில் மண்டிக் கிடந்த புல் பூண்டுகளையும், குப்பைகளையும் அகற்றி மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் பி. சந்திரசேகரன், துணை முதல்வர் வி.பி. சந்திரசேகர், இயக்குநர் எலிசபெத் தேவாசீர்வாதம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் டி. ஆறுமுகம் சுற்றுச்சூழல் என்ற  தலைப்பில் பேசினார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்  ஆர். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Saturday, September 3, 2016

லாரல் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி !

அதிராம்பட்டினம், செப். 3:
அதிராம்பட்டினத்தை அடுத்த பள்ளிகொண்டான் லாரல் சிபிஎஸ்இ பள்ளியில் 4-வது ஆண்டு அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

பள்ளி அறக்கட்டளைத் தலைவர் வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிபிஎஸ்இ பள்ளித் தாளாளர் பி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சீனியர் முதல்வர் சத்தியவதி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.எம். உதுமான் முகையதீன் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

பள்ளி இயக்குநர்கள் கே. பாரத், ஏ.பி.டி. எலிசபெத், லாரல் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் வி.பி. சந்திரசேகர், தலைமை ஆசிரியர் டி. ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் சிறந்த 3 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Thursday, May 7, 2015

+2 தேர்வில் லாரல் பள்ளியில் அதிரை மாணவ, மாணவி சாதனை !

தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. அதிரை அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நமதூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதில் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ள நமதூர் மாணவ மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர் : யாஸ்மின்
த/பெ : முபீன்
பெற்ற மதிப்பெண்கள் : 1131

இரண்டாம் இடம் :
பெயர் : முஹம்மது அஃப்சர்
த/பெ : முஹம்மது தம்பி
பெற்ற மதிப்பெண்கள் : 1110

Friday, May 9, 2014

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் லாரல் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை !

இன்று வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அதிரை அருகே உள்ள லாரல் பள்ளி மாணவி அனாமிகா 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடமும், வருவாய் மாவட்ட அளவில் முன்றாம் இடமும் பெற்றுள்ளார்.

இவர் பாடவாரியா பெற்ற மதிப்பெண்கள் விபரம்: 
தமிழில் 190, ஆங்கிலம் 192, இயற்பியல் 200, வேதியியல் 199, உயிரியல் 198, கணிதம் 198 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்த பள்ளியின் மாணவி பவித்ரா 1174 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றார்.

பாடவாரியா இவர் பெற்ற மதிப்பெண் விபரம் வருமாறு: 
தமிழில் 183, ஆங்கிலம் 194, இயற்பியல் 200, வேதியியல் 198, உயிரியல் 199, கணிதம் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அருண்மொழிராஜன் 1171 மதப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.

பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் : 
தமிழில் 182, ஆங்கிலம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 199, கணிதம் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இம்மாணவன் பொறியியல் துறை படிப்பிற்கு கட்ட ஆப் மதிப்பெண்கள் 200-200 பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவராக உள்ளார்.

மேலும். பள்ளயில் கணிதப்பாடத்தில் 16 பேரும், இயற்பியல் பாடத்தில் 13 பேரும்,வேதியியல் பாடத்தில் 9பேரும், உயிரியியல் பாடத்தில் 8 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாலசுப்ரமணியன், முதல்வர் சந்திரசேகரன், இயக்குனர்கள் பாரத், எலிசபெத் தேவாசிர்வாதம், துணை முதல்வர் வி.பி. சந்திரசேகரன், தலைமையாசிரியர் ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.

நன்றி : 'நிருபர்' பட்டுக்கோட்டை ராஜா