.

Pages

Showing posts with label சுதந்திர தின விழா. Show all posts
Showing posts with label சுதந்திர தின விழா. Show all posts

Saturday, August 15, 2020

சுதந்திர தின விழாவில் தியாகிகள் கெளரவிப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.15
தஞ்சாவூரில் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து. காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில்  நடைபெற்ற 74 வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை மாவட்ட ஆட்சித் தலைவர்  ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பறக்கவிட்டனர்.
     
இந்நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 29 துறைகளைச் சேர்ந்த 149 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணைத்தலைவர் ரூபேஷ் குமார் மீனா,  காவல் துறை கண்காணிப்பாளர் தேஸ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெஸ்டின், முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பாலசந்திரன், வட்டாட்சியர் வெங்கடேஷன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 

கடற்கரைத்தெரு ஜமாத்தார்கள் சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாடட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரை தெருவாசி மஹல்லாவாசிகள் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, ஜமாத் தலைவர் வி.எம்.ஏ அகமது ஹாஜா தலைமை வகித்து இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சாதி மத இன பாகுபாடு இல்லாத சுதந்திர இந்தியா வேண்டும் என்று அனைவரும் இணைந்து உறுதி ஏற்றுக் கொள்வோம் என்றார்.

கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் எம்.ஜி சஃபியுல்லா அன்வாரி, இந்திய சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் அரும்பாடுபட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து பேசினார்.

இந்நிகழ்வில், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், மஹல்லவாசிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 

நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில், பள்ளி கல்விக்குழு தலைவரும், முன்னாள் கவுன்சிலருமாகிய எம். முகம்மது சரீப் இந்திய தேசிய கொடி ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் வழக்குரைஞர் ஏ.முனாப், சுதந்திர தின விழா பேரூரை நிகழ்த்தினார்.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் டேவிட் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள் நிருபர் ஏ.சாகுல் ஹமீது, எச்.முகமது இப்ராஹீம், ஜாஹிர் உட்பட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 

அதிரை பைத்துல்மால் அமைப்பின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எம்.இசட். அப்துல் மாலிக், இன்ஜினியர் ஓ.சாகுல் ஹமீது, எம்.முகமது முகைதீன், அகமது ஜலீல், எம்.நிஜாமுதீன், இ.வாப்பு மரைக்காயர், எம். அப்துல் ஜலீல், எஸ்.முகமது முகைதீன், எம்.கே.எம் முகமது அபூபக்கர், ஹாஜா சரீப், ஜலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு மற்றும் 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது.
 
 
 

அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை வகித்த கல்லூரிப் பேராசிரியர் நெய்னா முகமது ஆலிம், இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா பேருரை நிகழ்த்தினார். இவ்விழாவில், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Thursday, August 15, 2019

சுதந்திர தின விழாவில் 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் (படங்கள்)

தஞ்சாவூர், ஆக. 15
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 73-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.08.2019) தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தியாகிகளை கௌரவித்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.  சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கௌரவித்து 175 பயனாளிகளுக்கு 1 கோடியே 27 இலட்சத்து 57 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.75,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில 11 பயனாளிகளுக்கு ரூ.27,500 மதிப்பிலும், தாட்கோ மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.58,21,381 மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு 49,000 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.67,674 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.4,10,000 மதிப்பிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 09 பயனாளிகளுக்கு ரூ.17,30,000 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,10,000 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.42,600 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.9,520 மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.43,37,407 மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.2,16,000 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.11,063 மதிப்பிலும், மீன்வளத்துறை   சார்பில் 01 பயனாளிக்கு ரூ.2,00,000 மதிப்பிலும், நுகர்வோர் பாதுகாப்புத் துறை   சார்பில் 20 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளையும்  ஆக மொத்தம் 175 பயனாளிகளுக்கு ரூ.1,27,57,875 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.

தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 71 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், இத்தாலி நாட்டில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். 

இவ்விழாவில்  திருவையாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் இந்திய குழந்தைகள் நலக் குழுமம், தஞ்சாவூர் யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை ரெஜினா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  கும்பகோணம் அன்னை கல்லூரி ஆகிய பள்ளி கல்லூரிகளைச்   சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன், சிவக்குமார், காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கஜா புயல் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், சுதந்திர தின விழா வியாழக்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் துணைத் தலைவர் எம்.இசட். அப்துல் மாலிக் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர் அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் இந்திய சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, அதிரை பைத்துல்மால் துணைச்செயலாளர் முகமது இப்ராஹீம் வரவேற்றுப் பேசினார். முடிவில், அதிரை பைத்துல்மால் துணைச்செயலாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் நன்றி கூறினார். விழாவில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 

அதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் சுதந்திர தின அணிவகுப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்த பள்ளித் தாளாளர் ஜெ.அமீன் நவாஸ்கான் மாணவர்களின் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதநல்லிணக்க கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

மாணவ, மாணவிகளின் சுதந்திர தின அணிவகுப்பு பள்ளியிலிருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. மாணவ, மாணவிகள் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, விபத்து தடுப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

விழாவில், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.