.

Pages

Showing posts with label விளையாட்டுச் செய்திகள். Show all posts
Showing posts with label விளையாட்டுச் செய்திகள். Show all posts

Monday, October 19, 2020

ESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியில் WSC அணி சாம்பியன் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.19
அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பாக 10 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி காட்டுப்பள்ளி மைதானத்தில் அக்.16, 17 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, திருவாரூர், பேய்கரும்பன்கோட்டை, காரைக்கால், தொண்டி, கீழக்கரை, நாகப்பட்டினம், திட்டச்சேரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

விறுவிறுப்பாக நடைபெற்ற தொடர் போட்டியின் முடிவில், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற அதிரை WSC அணிக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த பேய்கரும்பன்கோட்டை அணிக்கு ரூ.12 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த அதிரை ESC அணிக்கு ரூ.9 ஆயிரம், நான்காம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு ரூ. 6 ஆயிரம் ஆகிய ரொக்கப்பரிசுகளும், சுழற்கோப்பை பரிசுகளும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Thursday, February 20, 2020

மாநில கைப்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற அதிரை ESC அணி வீரர்களுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், பிப்.20
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் கடந்த (18.02.2020) அன்று தொடங்கியது. இதில், மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் போட்டியை தொடங்கி வைத்தார்.

கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பட்டிஸ்வரன், மேலஉளூர், கும்பகோணம், தஞ்சாவூர், அய்யம்பேட்டை, வல்லம், பேய்கரம்பன் கோட்டை, பூண்டி உள்ளிட்ட 11 ஆண்கள் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் (228 நபர்கள்) கலந்துகொண்டு விளையாடின.

இதில், இறுதிப்போட்டியில் அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப், பட்டுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய இரு அணிகள் மோதின. ஆட்ட இறுதியில், பட்டுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வின்னர் பட்டத்தையும், அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் ரன்னர் பட்டத்தையும் தட்டிச்சென்றன. முதலிடம் பிடித்த வீரர்களுக்கு தலா ரூ.1000/-வீதமும், இரண்டாமிடம் பிடித்த வீரர்களுக்கு தலா ரூ.750/-வீதமும், பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் நட்சத்திர வீரர்கள் எம்.அல் அமின், மஹ்ரூப், டி.அல் அமின் ஆகியோர் மாநில அளவில் நடைபெறும் கைப்பந்து போட்டிக்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வீரர்கள் எம். அல் அமீன் (கேப்டன்), மஹ்ரூப். டி. அல் அமீன், தவ்பீக், சபீக், அகமது ஜாஸ், அஸ்லம், ஜிப்ரில், சேக் நசுருதீன், முனாஸ், சேக் நசுருதீன் மற்றும் அணியின் பயிற்றுநர் முகமது சாலிகு உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி மகிழ்ந்தனர்.

மாநில அளவில் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா தொகை ரூ.1,00,000/-வீதமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.75,000/-வீதமும், மூன்றாம் பரிசாக தலா தொகை ரூ.50,000/- வீதமும் வழங்கப்படும்.
 

Monday, February 17, 2020

கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC ஜூனியர் அணிக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், பிப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பில், மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிராம்பட்டினத்தில் கடந்த பிப்.15ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், அதிராம்பட்டினம், கரம்பயம், பட்டுக்கோட்டை, கண்டனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இதில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி போட்டியில் உள்ளூர் அணிகள் அதிராம்பட்டினம் ஏ.எப்.எப்.ஏ ஜூனியர், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் ஆகிய இரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலை பெற்று இருந்தனர். பின்னர், இரு அணிகளுக்கும் டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் அணி 4-3 என்ற கணக்கில் கோல் அடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். முதல் பரிசாக ரூ.4004 ரொக்கம் மற்றும் கோப்பை பரிசளிக்கப்பட்டன. தொடர் போட்டியில் அதிராம்பட்டினம் ஏ.எப்.எப்.ஏ ஜூனியர் அணி இரண்டாமிடமும், கண்டனூர் அணி மூன்றாமிடமும், பட்டுக்கோட்டை அணி நான்காமிடமும் பிடித்தனர். இந்த அணிகளுக்கு முறையே ரூ.3003, ரூ.2002, ரூ.1001 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில், நடந்த பாராட்டு விழாவில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் அணி வீரர்கள் ஜுபைர் (கேப்டன்), அபூபக்கர் (கோல் கீப்பர்), இம்ரான், அல்வாஸ், ராசித், ரியாஸ், ஜசிம், ஹாசிம், சுஹைல், காதர், உஜைர், அலி (கோல் கீப்பர்), அக்மல், அஸிம், பாஸித், ஹசன், அணி பயிற்றுநர் லியாகத் அலி, அணி மேலாளர் மஹ்சின் ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

Sunday, January 19, 2020

கால்பந்து போட்டியில் சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC ஜூனியர், சீனியர் அணிகளுக்குப் பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.19
கோவை புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில், 20 ஆம் ஆண்டு, பி.எப்.சி., கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி, புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில், பொது, 17 மற்றும் 19 வயதுக்குட்டோர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதில், 19 வயதுக்குட்பட்டோருக்கான லீக் போட்டியில், கேரளா, சென்னை, கோவை, காரைக்குடி, தஞ்சாவூர், தூத்தூர், போத்தனூர், ஈரோடு, ஊட்டி உள்பட மொத்தம் 18 அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இந்நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் கோவை பி.எப்.சி அணியும், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி அணியும் மோதின. அதிராம்பட்டினம் எப்.சி அணியில், ஆதில் (கேப்டன்), அன்சர்கான் (கோல் கீப்பர்), சதாஸ்கான், அன்சர்கான், பக்கர், நவீத், ரியாவுதீன், நிஷாருதீன், இர்ஃபான், ரிஸ்வான் ஆகிய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி அணி மூன்றாமிடம் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், கோப்பை, சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர, தொடர் போட்டியில் அதிக முறை கோல் அடித்த வீரருக்கான சிறப்புப் பரிசு மற்றும் கேடயப்பரிசினை அணியின் வீரர் சதாஸ்கான் பெற்றார்.

அதேபோல், ஒரத்தநாடு ஒய்.பி.ஆர் கால்பந்து கழகம் சார்பில், ஐவர் கால்பந்து போட்டி, ஒரத்தநாட்டில் நடைபெற்றது. இதில், 13 வயதுக்குட்பட்டோருக்கான லீக் போட்டியில், திருச்சி, ஒரத்தநாடு, மன்னார்குடி, பாப்பாநாடு, கரம்பயம், அதிராம்பட்டினம் ஆகிய அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இந்நிலையில், கடந்த (ஜன.17) வெள்ளிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில், ஒரத்தநாடு ஒய்.பிஆர் அணியும், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி அணியும் மோதின. அதிராம்பட்டினம் எப்.சி ஜூனியர் அணியில், ஹமீது, ஆதில், சுஹைல் (கேப்டன்), ஷாஃபி (கோல் கீப்பர்), மஃப்ரூக், அராஃபத், உஜைர் ஆகிய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சமநிலை அடைந்தனர். பின்னர், ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டன. இறுதியில், ஒரத்தநாடு ஒய்.பிஆர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், ரன்னர் பட்டத்தை தட்டிச்சென்ற அதிராம்பட்டினம் எப்.சி ஜூனியர் அணிக்கு, கோப்பையை பரிசாக வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த பாராட்டு விழாவில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர், சீனியர் அணி வீரர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 
 

Sunday, December 29, 2019

கால்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வெஸ்டர்ன் FC அணி!

அதிராம்பட்டினம், டிச.29
தஞ்சாவூர் முத்தையா நினைவு கால்பந்து கழகம் சார்பில், ஐவர் கால்பந்து தொடர் போட்டி, தஞ்சை கிட்டு மைதனாத்தில் டிச.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட மொத்தம் 23 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC, தஞ்சாவூர் ஜி புட்பால் கிளப் ஆகிய அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்று விளையாடின. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC அணியில், அன்சார் கான் (கோல் கீப்பர்), ஆதில் (கேப்டன்), அன்சார் கான், ரிஸ்வான், சதாஸ் கான், நவீத், ரியாவூதீன், நிஷாருதீன், அஃப்ரித்கான், முகமது ஆகிய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 2-0 என்ற கோல் கணக்கில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது. அணியின் நட்சத்திர வீரர்கள் சதஸ்கான், நிசார் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை வழங்கப்பட்டன. தவிர, தொடர் போட்டியில் சிறந்த கோல் கீப்பருக்கான சிறப்புப் பரிசு மற்றும் கேடயப்பரிசினை அணியின் வீரர் அன்சர்கான் பெற்றார்.
சிறந்த கோல் கீப்பருக்கான பரிசு பெற்ற அன்சர்கான் 

Friday, August 9, 2019

சென்னையில் நடந்த இறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் சிறப்பிடம்!

அதிராம்பட்டினம், ஆக.09
சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஒற்றையர் இறகுப்பந்து போட்டி இன்று (ஆக.09) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவன் அ.ஆத்திப் அகமது, 10 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நான்காமிடம் பெற்று பள்ளிக்கும், அதிராம்பட்டினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜுமுதீன் மகன் ஆவார்.

சிறப்பிடம் பிடித்த மாணவன் அ.ஆத்திப் அகமதுவை, பள்ளித்தலைமை ஆசிரியை எஸ். மாலதி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

Thursday, June 13, 2019

அதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில் தஞ்சை அணி வெற்றி!

அதிராம்பட்டினம், ஜூன் 13
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 25 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முகமது நினைவு 19 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 05 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர் போட்டியில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கறம்பயம், ஆலத்தூர், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி, பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 28 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற தொடர் போட்டியின் 8-வது நாள் ஆட்டத்தில் தஞ்சாவூர் செவன்ஸ் தஞ்சாவூர் அணி, அத்திக்கடை ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சம நிலையில் இருந்தனர். பின்னர், ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டன, முடிவில் தஞ்சாவூர் அணி வெற்றி பெற்றது.

நிகழ்ச்சியினை, இப்ராஹீம் தொகுத்து வழங்கினார். ஆட்ட நடுவர்களாக கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் லியாகத்அலி, மூர்த்தி ஆகியோர் பொறுப்பு வகித்தனர். நேற்றைய ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.

தொடர் போட்டி முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், தொடர் போட்டியில் ஆட்ட நாயகன் தேர்வு பெரும் வீரருக்கு தங்க நாணயம் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற  வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

நாளை (ஜூன் 13) வியாழக்கிழமை தஞ்சை நேதாஜி புட்பால் கிளப் அணி, கலைவாணர் செவன்ஸ் கண்டனூர் ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். ஆட்டம் மாலை சரியாக 5.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Thursday, February 21, 2019

சென்னையில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அதிராம்பட்டினம் இளைஞர்!

சென்னை, பிப்.20
சென்னை புதுக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இஃப்திகார் (த/பெ. அப்துல் ஜலீல்) எட்டு பரிசுகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.

100 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம், நீளம்தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகியவற்றில் முதல் பரிசும்,  கேரம் போர்டு, ஈட்டி எரிதல் ஆகியவற்றில் இரண்டாவது பரிசும் வென்றுள்ளதோடு,  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் கல்லூரி விளையாட்டு செயலர் நினைவு பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

செய்தி மற்றும் படங்கள்:
என்.ஜமாலுதீன், துபை
 

Wednesday, January 2, 2019

பொதக்குடியில் நடந்த மின்னொளி கால்பந்து போட்டியில் அதிரை WFC அணி சாம்பியன்!

அதிராம்பட்டினம், ஜன.02
பொதுக்குடி கூல் பிரண்ட்ஸ் சார்பில், 14-வது ஆண்டு மின்னொளி ஐவர் கால்பந்து தொடர் போட்டி பொதக்குடி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (டிச.31) மற்றும் நேற்று (ஜன.1) ஆகிய 2 தினங்கள் நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம், பொதக்குடி, கூத்தாநல்லூர், மன்னார்குடி, அத்திக்கடை, பூதமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில், பொதக்குடி, அதிராம்பட்டினம் WFC, கூத்தாநல்லூர் ஆகிய அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

இதையடுத்து, நேற்று (ஜன.1) இரவு நடந்த இறுதி போட்டியில் அதிராம்பட்டினம் WFC, பொதக்குடி கூல் பிரண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. விறு விறுப்பாக நடந்த ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணி வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. முதல் பரிசாக ரூ.6100 வழங்கி அதிரை WFC அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், முதல் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய நட்சத்திர வீரர் அன்சர்கானுக்கு ரூ.500 சிறப்பு பரிசு வழங்கப்பட்டன.
 

Friday, August 31, 2018

அதிரையில் ESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி கோலாகல தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.31
அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பாக 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம்  காட்டுப்பள்ளி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு கோலாகலாமாக தொடங்கியது.

இன்று (ஆக.31) மற்றும் நாளை (செப்.1) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், மாயவரம், காரைக்குடி, தொண்டி, கீழக்கரை, நாகப்பட்டினம், திட்டச்சேரி, லால்குடி உள்ளிட்ட 22 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளது.

முதல் நாள் ஆட்டத்தில், அதிராம்பட்டினம் ESC, அதிராம்பட்டினம் FRIENDS ஆகிய அணிகள் மோதினர். போட்டி நடுவர்களாக பாரதி, ஆசிப் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

முன்னதாக, தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் கீழத்தெரு சங்க நிர்வாகிகள் தாஜுதீன், சேக்தாவூது, முகமது முகைதீன், எம்.ஏ அப்துல் ஜலீல், மான் ஏ. சேக், ஜியாவூதீன், தாஜுதீன், ஜெஹபர் அலி, தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், ம.செ ஜபருல்லா, தரகர் தெரு ஜமாஅத் நிர்வாகிகள்  சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகி அகமது அனஸ், கரையூர் தெரு பஞ்சாயத் நிர்வாகிகள் முத்துக்குமரன், பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகி முகமது முகைதீன், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர், ஜபருல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர் போட்டியை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பில், அதன் நிர்வாகிகள் அஜ்மல்கான், முகமது சாலிகு, அன்வர், சுல்தான், நிஜாம், ராசிக், நூருல் அமீன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சியை பைத்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.

நாளை (செப்.1), வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரமும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6 ஆயிரமும் மற்றும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாள் போட்டிகளைக் காண ஏராளமான விளையாட்டு பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.