அதிராம்பட்டினம், ஏப்.10
அதிராம்பட்டினம் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடையின்றி முழுமையாக கிடைக்கவும், அதிராம்பட்டினம் பகுதி தென்னை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளைத் தொடர அனுமதிக்கக் கோரி, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு இன்று (10-04-2020) வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுற்றுப்புறத்தில் உள்ள மாளியக்காடு, ராஜாமடம் ஈசிஆர், மழவேனிற்காடு, வள்ளிக்கொல்லைகாடு ஈசிஆர் ஆகிய 4 பிரதான சாலைகள் வழியாக வரும் வாகனங்களை போலீசார் தணிக்கை செய்வதால், அதிராம்பட்டினம் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைப்பதிலும், நோயாளிகள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளின் மருத்துவமனைகளுக்கு சென்று வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைக்கவும், அவசர மருத்துவத்திற்கு நோயாளிகள் வாகனங்களில் சென்றுவர அனுமதிக்கவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களின் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வைத்து அடைத்திருப்பதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுப்படி செய்திருக்கும் தென்னை விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளைத் தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பணிகளைத் தொடர அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.