.

Pages

Showing posts with label விழிப்புணர்வு.. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு.. Show all posts

Monday, April 6, 2015

மூலை முடுக்கெல்லாம் உயிரை பறிக்கும் குட்கா விற்பனை !

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட் களுக்கு தமிழகம் உட்பட 29 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டாலும் தமிழகத்தில் அவை பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வாய்ப் புற்றுநோய் பாதிக் கப்பட்ட இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக் கின்றன.

குட்காவுக்கு தடை விதிப்பதற்கான மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ல் இயற்றப் பட்டு, 2011-ம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்பே குட்காவுக்கு படிப்படியாக மாநிலங்கள் தடை விதித்தன. ஆனால், மத்திய அரசுக்கே முன்னோடியாக தமிழகத்தில் 2001-ம் ஆண்டே மேற்கண்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது இங்கு அவை பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்றன.

உணவு செலவை மிச்சப்படுத்த..
இதுகுறித்து வட மாநில தொழி லாளர்கள் சிலர் கூறும்போது, “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் குட்கா உற்பத்தி குடிசைத் தொழில் போல நடக்கிறது. இவை வீரியம் குறைந்த குட்கா மற்றும் பான் மசாலாக்கள். இவை அல்லாமல் ‘பான் ஷாப்’ மற்றும் சில ரகசிய இடங்களில் துண்டு பொட்டலங்களில் மடித்து குட்கா விற்பனை செய்யப்படுகின்றன. காலையில் ஒன்றை வாயில் ஓரமாக ஒதுக்கிக்கொண்டால் நாள் முழுவதும் போதை நீடிக்கும். பசி எடுக்காது. உணவு தேவையில்லை. விலை ரூ.15 முதல் 20 வரை மட்டுமே. எங்களுக்கு கூலி குறைவு என்பதால் உணவு செலவு மிச்சம்” என்றனர்.

எப்படி தயாரிக்கிறார்கள் ?
இதுகுறித்து பேசிய உற்பத்தியா ளர் ஒருவர், “பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை, காட்ச்சு (catechu) அமிலம் (பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் சாயப்பட் டறைகளில் பயன்படுத்தப்படும் catechol chemical), மண்ணெண் ணெய், சுண்ணாம்பு, பேக்கிங் சோடா (sodium bicarbonate) இவையே குட்காவுக்கான கச்சா பொருட்கள். சுண்ணாம்பை கொதிக்கவைத்து அதில் பேக்கிங் பவுடர், மண்ணெண் ணெய், பாக்குத் தூள், புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப் பார்கள். இது லேகியம் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் கட்டி விற்கிறார்கள்” என்றார்.

வாயை ஓட்டை போட்ட ப்ரஷ்:
திருப்பூரில் டான் போஸ்கோ கூடு அமைப்பின் உதவி இயக்குநர் ஜான் தர்மன் ‘தி இந்து’விடம் கூறும் போது, “எங்களிடம் உள்ள சுமார் 40 போதை அடிமை நோயாளிகளில் 10 பேர் குட்கா போன்ற மெல்லும் வகை புகையிலை போதைக்கு அடிமையானவர்கள். இவர்கள் அனை வரும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களே. இதுபோன்ற நோயின்போது வாயின் உட்புறம் பாதிக்கப்பட்டிருந்தாலும் மரத்துப் போனதன் காரணமாக வலி தெரிவது இல்லை. கடந்த வாரம் சென்னையை சேர்ந்த ஒரு சிறுவன் ப்ரஷ்ஷால் பல்விளக்கிக் கொண்டிருந்தபோது அவனையும் அறியாமல் கன்னத்தின் உட்புறமாக ஓட்டை போட்டு ப்ரஷ் வெளியே வந்துவிட்டது. இவர்களுக்கு தொடர்ச்சியான கவுன்சிலிங், மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தி வருகிறோம்” என்றார்.

6 மணி நேரத்துக்கு ஒரு மரணம்:
இந்தியாவில் 27 கோடி பேர் குட்கா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை பயன் படுத்துகின்றனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு புற்றுநோய் உள்ளது. இங்கு புகையிலைப் பொருட்களின் விற்பனை மூலம் ஆண்டுக்கு 1.62 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அவற்றால் ஏற்படும் நோய்களால் ஆண்டுக்கு 6.32 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

தேசிய மருத்துவ இதழ் (இந்தியா) வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை, “உலகின் ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்பில் 25 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகிறது. சென்னை புற்றுநோய் பதிவேடு மற்றும் திண்டுக்கல் அம்பிலிக்கை புற்றுநோய் பதிவேடு களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு களின்படி நாட்டிலேயே வாய்ப் புற்றுநோய் பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. சென்னை யில் 2012 முதல் 2016-க்குள் வாய்ப் புற்றுநோய் தாக்குதல் 32 சதவீதம் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள் ளது.

இந்திய பல் மருத்துவக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் குட்காவுக்கு தடை கோரிய வழக்கு ஒன்றில், “இந் தியாவில் 6 மணி நேரத்துக்கு ஒரு வாய்ப் புற்றுநோயாளி இறக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளது.

குட்காவுக்கு தடை விதித்ததில் மத்திய அரசுக்கு முன்னோடி என்ற பெருமையை பெற்றது தமிழகம். ஆனால், தடையை செயல்படுத்து வதில்தான் உண்மையான பெருமை அடங்கியிருக்கிறது.

Courtesy: Tamil The Hindu

Sunday, March 1, 2015

நீங்கள் BSNL வாடிக்கையாளர்களா ?

நமதூருக்கு பி.எஸ்.என்.எல். பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08-தேதி முதல் தொடங்கப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் 2006-ம் அண்டு வரை அன்று என்னுடைய தனிப்பட்ட கடும் முயற்சிக்குப்பின் இந்த சேவை அதிரையில் தொடங்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர், கும்பகோணம், அதிரை வழித்தடங்களில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஆகிய ஊர்கள் இருந்த படியினால், அதிரைக்கு கிடைத்த அன்றே இந்த ஊர்களுக்கும் பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை கிடைத்தது.

அதிரையில் முதன் முதலாக பி.எஸ்.என்.எல் பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை இணைப்பு எனக்குத்தான் வழக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். பிரண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை அதிரையில் தொடங்கி 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறும்.

இந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த ஆண்டு 2015, பிப்ரவரி 06-ம் தேதியில் தான்  முதன் முதலாக ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த சேவை அதிரையில் முக்கால் வாசி பேர்களுக்கு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

காரணம், பொதுப்பணித் துறை மற்றும் நமதூர் பெரூராட்சியால் சாலை, வாய்க்கால் வடிகால், குடிநீர் வழித்தடம் மற்றும் தார்ரோடு சாலை மேம்பாட்டு பராமரிப்புகளுக்காக சேர்மன் வாடி பஸ் நிறுத்தம் அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை-06/02/2015-நள்ளிரவு 12.00மணி முதல் கனரக இயந்திரங்களைக் கொண்டு வேலை துவங்கப்பட்டதினால் அப்பகுதியிலிருந்து பிரிந்து அதிரையின் பல பகுதிகளுக்கு பல கேபிள்களில் செல்லும் தொலைபேசி மற்றும் இன்டர்நெட் இணைப்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டு அதிரையில் பல பகுதிகளுக்கு தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் நின்று விட்டது.

இதன் காரணத்தால், அதிரை நகரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆணை விழுந்தான் குளம் பகுதி, ஆஸ்பத்திரி தெரு, செட்டித்தெரு, தச்சத்தேறு, செக்கடித்தெரு, நடுத்தெரு, காலியார் தெரு,  நேசவுகாரத் தெரு, கீழத்தெருவில் சிலர், மேலத்தெருவில் சிலர், புதுமனைத்தெரு, சிம்பி லைன், வள்ளியம்மை நகர், மரியம் பள்ளி நகர், மிலாரிக்காடு, கல்லுக்கொல்லை, அம்பேத் கார் நகர், வண்டிப்பேட்டை, ஆலடித் தெரு, புது ஆலடித்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், மாளியக்காடு, நடுவிக்காடு, மகிழங்கோட்டை, ஷிபா மருத்துவமனை பகுதி, மின்வாரியம், மழவேனிற் காடு, பழஞ்சூர், மதுக்கூர் ரோடு ஆகிய இடங்களுக்கு இந்த சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை உலகளாவிய அதிரையர்கள் இணையத்தின் மூலமாக அறிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் பி.எஸ்.என்.எல். பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்ட நாள், நேரம், காலம் அடங்கிய அட்டவணை பின்வருமாறு இருக்கும்.  

(0).   06/02/2005          from Fri Early Morning        12.00am = 0hrs
(1).   07/02/2015          to Sat Early Morning            12.00am = 24hrs
(2).   08/02/2015          to Sun Early Morning           12.00am = 48hrs
(3).   09/02/2015          to Mon Early Morning          12.00am = 72hrs
(4).   10/02/2015          to Tue Early Morning           12.00am = 96hrs
(5).   11/02/2015          to Wed Early Morning          12.00am = 120hrs
(6).   12/02/2015          to Thu Early Morning           12.00am = 144hrs
(7).   13/02/2015          to Fri Early Morning             12.00am = 168hrs
(8).   14/02/2015          to Sat Early Morning            12.00am = 192hrs
(9).   15/02/2015          to Sun Early Morning           12.00am = 216hrs
(10). 16/02/2016          to Mon Early Morning          12.00am = 240hrs
(11). 17/02/2015          to Tue Early Morning           12.00am = 264hrs
(12). 18/02/2015          to Wed Early Morning          12.00am = 288hrs

விடிந்தால் வெள்ளிக்கிழமை (06/02/2015) நள்ளிரவு 12.00-மணிக்கு துண்டிக்கப்பட்டதினால், அந்த நேரத்தையே முதல் நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு சில பேர்களுக்கு திங்கட்கிழமை 09/02/2015-இந்த தினத்தில் இணைப்பு சரிசெய்யப்பட்டு கிடைத்துள்ளது.

எனக்கு புதன்கிழமை 11/02/2015-இந்த தினத்தில் பிற்பகல் 3.00pm-மணிக்கு இணைப்பு கிடைத்தது. எனக்கு துண்டிக்கப்பட்ட மொத்த நேரம்கள் 120+15=135மணி நேரம்கள்.

BSNL Broad Band Internet - SUMMARY OF CHARGES.
My Monthly Charges for Broad Band Unlimited                                Rs 825.00

Service Tax                12.00% (on monthly fixed charge 825.00)     Rs   99.00
Education CESS          2.00% (on 12% Service Tax 99.00)            Rs     1.98
Higher Edu. CESS      1.00% (on 12% Service Tax 99.00)             Rs     0.99
TOTAL CHARGES FOR 30 DAYS (720Hrs)                                    Rs 926.97

For One Hour  -           Rs: 926.97/ Hrs for 30 Days 720 = Rs 1.29
Non working Hrs and Deduction amount = 135Hrs X Rs 1.29 = Rs 174.15

பி.எஸ்.என்.எல் பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டவர்கள் மேலே கணக்கிடப்பட்டதுபோல் நீங்களும் கணக்கிட்டு பார்க்கலாம்.

எனக்கு 135 மணிநேரங்கள் துண்டிக்கப்பட்டது, ஆகவே ரூபாய் 174.15-ஐ என்னுடைய அடுத்த பில்லில் கழிக்கவேண்டும். இது குறித்து விண்ணப்பம் எழுதினால்தான் அவர்கள் கழிப்பார்கள். இதேபோல் பாதிக்கப்பட்டவர்களாகிய நீங்களும் விண்ணப்பம் மூலம் தெரிவித்தால் உங்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.

குறிப்பு:-
2007-ம் வருடம் மே மாதம் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. அப்போதும் எனக்கு இதுமாதிரி கழிவு கிடைத்தது. மேலும் விபரங்களுக்கு இதில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பாருங்கள்.

My Complaint letter:
By Fax Mr.Rathinavelu, CAO TR. on 11/June/2007
Refax to GM on 18/July/2007

Letter from BSNL.

BSNL Bill. Dated 07/Aug/2007

Letter from Account Officer.

Order for to Pay Bill.

Total Bill Amount = Rs: 109+900+121+4=1134.00
Discount Amount = Rs: 180.00.
Paid Amount = Rs: 954.00 on 09/Aug/2007

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com

Friday, February 27, 2015

வீடு கட்டியாச்சா !? குடி போயாச்சா !? இந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டை கவனியுங்க.

வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால், அதற்காக என்னென்ன வேண்டும் எப்படி ஆயத்தப்படுத்தனும் என்று நம்மவர்களுக்கு சொல்லவே தேவை இல்லை.

எல்.கே.ஜி. படிக்கின்ற பிள்ளைகிட்டே போய் எப்படி வீடு கட்டனும் என்று கேட்டால் நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சரியான விளக்கத்தோடு சொல்லும். அந்த அளவுக்கு அறிவு தேர்ந்த கட்டிட நிபுணர்கள் நமதூரில் உண்டு.

வீடு கட்டுவதற்கு மிகவும் முக்கியமான பொருள்களில் மணலும் ஒன்று. இந்த மணல் சுத்தமானதாக இல்லையென்றால் கட்டிடம் உறுதியாக இருக்க முடியாது.  மேலும் மழைக் காலங்களிலும், கச்சாங் காற்று வீசும் நேரங்களிலும் ஒரு மாதிரியான கசிவுகல் ஏற்படுவதை பார்க்கலாம். இந்த மாதிரியான கசிவுகல் தரை, சுவரு, மட்டப்பா, இன்னும் பல இடங்களில் காணலாம், இது உப்புக் கசிவு எனப்படும். மணலில் உப்புத்தன்மை இருந்தால் தான் இப்படி கசிவுகள் உண்டாகும். இது கட்டிடத்திற்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அதிரைக்கு மேற்கு, வடமேற்கு திசைகளில் இருந்து வரும் மணல்கள் எல்லாம் உப்புத்தன்மை கொண்டவை, இந்த மணல்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களில் உப்புக் கசிவு உண்டாவதை ஆதாரத்துடன் காட்டமுடியும்.

பல வருடங்களுக்கு முன்பு அதிரைக்கு வடக்கு, வடகிழக்கு பகுதியில் இருந்து வரும் மணல்களில் உப்புத் தன்மை கிடையாது, இவ்வகை மணல்களை கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் இன்னும் உறுதியாகவே இருக்கின்றது. இதையும் ஆதாரத்துடன் காட்டமுடியும்.

கட்டுமானத்திற்காக வாங்கும் பொருள்களின் தரத்தையும் தன்மையையும் யாரும் கவனிபப்து கிடையாது. ஏதோ வேலை முடிஞ்சா சரி, பட்டிப்பார்த்து அப்படியே அழகாக மொழுகி, பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, பார்பதற்கு அழகாக இருந்தால் போதும், தரை ஜில்லென்று இருக்குதா அப்பாடா, இதுவள்ளவோ வீடு என்று பெருமூச்சு விடுவோரும் உண்டு.

மக்களுக்கு என்ன, வீடு நல்ல பெருசா இருக்கணும், கீழும் மேலும் இரண்டு கட்டிடங்களாக இருக்கணும், திரீபேஸ் மின் இணைப்பு இருக்கணும், வண்ண வண்ண கலரில் மை அடித்து இருக்கணும், வீடு முழுக்க மார்பில் போட்டு இருக்கணும், ஆயில் பெயிண்ட் அடித்து இருக்கணும், இப்படி பல விதங்களில் விரும்புகின்றார்கள்.

விரும்புவதில் தப்பு இல்லை, அவர்களின் சக்திக்கு எவ்வளவு உயரம் விரும்ப முடியுமோ, அவ்வளவு உயரத்துக்கு விரும்புவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. விரும்ப உரிமை இருக்கும் அவர்களுக்கு விழிப்புணர்வு பெற உரிமை இல்லையே!?

கட்டிடம் கட்டுபவர்கள் எந்த தகுதி வரையில் உறுதி பெற்றவர்கள்?

கட்டிடங்கள் கட்டுவதற்கு வாங்கப்படும் பொருள்களின் தரம் எந்த வகையில் உறுதியானது?

மின் ஒயரிங் எவ்வாறு பிணைத்து இணைக்கப்பட்டுள்ளது?

எர்த், (Ground) எந்த தன்மையில் பொருத்தப்பட்டுள்ளது?

நல்ல நீர், கழிவு நீர் செல்லும் பாதைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

நமதூரில் கட்டும் கட்டிடங்களுக்கு தரச் சான்றுகளின் நிலை என்ன?

இழக்கும் பணத்திற்கு சமமாக கட்டிடத்தின் தன்மைகள் என்ன?

இப்படி யாராவது கட்டிடம் கட்டும் இஞ்சிநீயர்களிடம் கேள்விகளை கேட்டதுண்டா?

இன்னும் இப்படியே கேள்விகளை கேட்டுக்கொண்டே போனால்! நமதூரில் கட்டிடத்தொழில்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். அதே சமயம், இந்த மக்களின் நிலை!! பாதியிலேயே கஞ்சியை வடித்துவிட்டு சாப்பிடும் அரை வேக்காட்டு சோற்றுக்கு சமமானதாக இருக்கின்றது.

அதிரையில் புதியதாக கட்டப்பட்ட பல வீடுகளில் பலதரப்பட்ட குறைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. வெடிப்பு, தரை இறக்கம், கரையான் தொல்லை, தண்ணீர் கசிவு, மின் கசிவு போன்ற இன்னும் பல குளறுபடிகளில் குடித்தனக் காரர்கள் அவதிக்கு உள்ளாகுகின்றனர்.

வீட்டுக்கு உரிமையாளர்களே, நீங்கள் தகுந்த முறையில் விழிப்புணர்வோடு வீடுகளை கவனித்து கட்டாமல் போவீர்களேயானால், அதில் எவ்வளவு பாடுகள் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை.

வீடுகள் வெளிப்பார்வைக்கு அழகாக காட்சி அளிக்கலாம், ஆனால் சில கேன்சர்களால் உள்ளுக்குள் அரித்துக்கொண்டு இருக்கும்.

இனியாவது விழிப்புணர்வோடு இருங்கள்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com

Wednesday, January 14, 2015

அதிரையர்களின் கனிவான கவனத்திற்கு !


திரை நகரில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பத்தப்பட்ட பணம் பறிப்பு, நகை திருட்டு, கொள்ளை முயற்சி போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது, இதை நாம் ஊடக வாயிலாக அறிய முடிகிறது.

யாரை சந்தேகப்படுவது?

அதிரை வாசிகளில் ஒரு சிலரா?

அல்லது,
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிரையில் தங்கி இருந்து பலதரப்பட்ட கூலி வேலைகளை பார்த்து வரும் வேலையாட்களா?

அல்லது,
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினம் தினம் அதிரைக்கு வந்து போகும் பல தரப்பட்ட சில்லறை வியாபாரிகளா? (பஞ்சு மிட்டாய், கம்பளம், போர்வை, பழம், பழைய இரும்பு, வீட்டு உபயோகப் பொருள்களை பழுது பார்த்தல், ஆசிரம்களிளிருந்து வருகிறோம் என்று சொல்லும் வெளியூர் பெண்கள், இன்னும் பலர்)

அல்லது,
உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலத்தவர்கள், இவர்களின் கூட்டு முயற்சியா?

இப்படி பல கோணங்களில் சிந்தித்து பார்த்தாலும், திருடன் பிடிபடுவது ஒருபக்கம் இருந்தாலும், உள்ளூர்வாசிகளின் அலட்சியப்போக்கு மறைந்து விழிப்புணர்வு ஏற்படாதவரை இந்த ஊர் எப்படி உருப்படும்?

இதுக்கு எப்படி முற்றுப் புள்ளி வைப்பது?

அதிரை நகரில், தெருக்களில் இனம் தெரியாதவர்கள் தொழில் ரீதியாகவோ, வேறு எப்படியோ தென்பாட்டால், கண்டவர்கள் அவர்களை கூப்பிட்டு விசாரிக்க வேண்டும், சந்தேகப்படும்படியாக இருந்தால் காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

நடமாடும் வியாபாரிகள் யாராக இருந்தாலும், மாலை ஐந்து மணிமுதல் காலை பத்துமணி வரை தெருக்களில் விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது.

ஆசிரமத்தில் இருந்து வருகிறோம் என்று சில பெண்கள் கூட்டம் வீட்டுக்குள் இலகுவாக நுழைத்து விடுகின்றனர். இப்படி வருகின்றவர்களை முதலில் வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது, இரண்டாவதாக இப்படி வரும் பெண்களை கடுமையாக விசாரிக்கவேண்டியது வீட்டாரின் கடமை.

வேறு யாராவது “மின்சாரம், கேஸ், மக்கள் கணக்கெடுப்பு, இன்னும் பல விசாரணைக்கு வந்தால், தகுந்த அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள். வீட்டுக்கதவை முழுவதுமாக திறக்காமல் இரும்பு கிரிலுக்குள் உற்றுப்பார்த்து யார் என்று ஊர்ஜிதப்படுத்திய பின்னரே அடுத்த முடிவுக்கு வர வேண்டும்.

மேலும் ஸ்பிரே போன்ற சாதனங்களைக் கொண்டு மயக்கம் வரக்கூடிய வஸ்த்துக்களை முகத்தில் அடிப்பதும் பல இடங்களில் நடந்து வருகின்றது.

பெண்மணிகளே, நீங்கள் ஆட்டோக்களிலும், பேரூந்துகளிலும் பயணம் செய்யும் போதும், பொது இடங்களாகிய மருத்துவமனை, ஷாப்பிங் சென்டர், வங்கி, நகைக்கடை, தெரு இன்னும் வீட்டைத்தவிர ஏனைய இடங்களில் செல்லும்போதும்,  செல்போனிலும், மேலும் ஒருவரோடு ஒருவர் நேருக்குநேர் சந்தித்து பேசும்போதும் உங்களின் குடும்ப விசயங்களை பேசாதீர்கள். அப்படி குடும்ப விஷயங்கள் ஏதேனும் பேச நேர்ந்தால் வீட்டுக்குள் வந்து பேசுங்கள். இதுதான் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு.

பெண்மணிகளே இன்னும் கேளுங்கள்: நீங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று இருக்கும்போது உங்களின் உறவினர்களுக்கோ அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்கு உங்கள் மொபைல் போனை இயக்க நேர்ந்தால், அக்கம் பக்கம் பார்த்து விட்டு இயக்கவும், காரணம் உங்களுக்கு பின்னால் உங்களுக்கே தெரியாமல் மர்ம நபர்கள் வேறு யாராவது உங்களுடைய மொபைல் போனை கண்காணிக்கலாம், நீங்கள் டயல் செய்யும் மொபைல் நம்பரை அந்த மர்ம நபர் குறித்துக் கொள்ளலாம், மொபைல் போனில் இருக்கும் புகைப்படத்தை அந்த மர்ம நபர் தன் மொபைல் போனில் படம் பிடித்துக் கொள்ளலாம்.

மொபைல் போனுக்கு ரீ சார்ஜ் செய்ய நினைத்தால், ஆண் லைனில் செய்து கொள்ளுங்கள், அல்லது ரீ சார்ஜ் கார்டை வாங்கி நீங்களே செய்து கொள்ளுங்கள், எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் மொபைல் நம்பரை வெளியில் கொடுத்து விட வேண்டாம். எளிதில் யாரையும் இலகுவாக நம்பி விடக் கூடாது.   

எங்கு சென்றாலும் தனியாக செல்லவேண்டாம், தகுந்த பாதுகாப்போடு செல்லவேண்டும், இந்த விஷயங்களில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் யாராக இருந்தாலும், இவர்களை வைத்து வேலை வாங்கும் கட்டிட உரிமையாளர்கள், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு கொடுப்பதோடு, அடையாள அட்டை வழங்க வேண்டும். இதற்க்கு கட்டிட உரிமையாளர்களும் ஒப்பந்தக்காரர்களும் பொது மக்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இன்னும் கடுமையாக சிந்திப்போமேயானால், சரியாக ஒரு மூன்று வருடத்திற்கு கட்டிட வேலைகளை நிறுத்திப் பாருங்கள், திருட்டு தானாக குறைந்து விடும். காரணம் பொது மக்களில் பலர் கட்டிட தொழிலாளர்களையே சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் அவர்கள்தாம் மூளை முடுக்கெல்லாம் சென்று வேலை பார்கின்றனர். அவர்களில் சிலர் இப்படியான திருட்டு செயலில் ஈடுபடலாம் என்றும் பொது மக்கள் சந்தேகிக்கின்றனர்.

மூன்று வருடங்களா?

சரி வேண்டாம்,
ஒரு வருடம்!?

இதுவும் சரியில்லையா?
அட்லீஸ்ட், வெள்ளிக்கிழமை?

இதுக்கும் வலிக்குது என்றால் உங்களை என்ன செய்வது?

மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளை கடுமையாக கையாண்டால் திருட்டு குறைய வழி உண்டு.

கரின் பல பக்கத்திலும் தீவிர கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும்

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.