.

Pages

Showing posts with label வேண்டுகோள். Show all posts
Showing posts with label வேண்டுகோள். Show all posts

Monday, July 18, 2016

பிறை விவகாரம்: அதிரை ஆலிம்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !

இந்த வருட ஈதுல் ஃபித்ரு பெருநாளில் தான் எத்தனை சங்கடங்கள்! குழப்பங்கள்!

1. பெருநாளா? மறுநாளா?
2. கொண்டாட்டமா? திண்டாட்டமா?
3. நோன்பு வைப்பதா? விடுவதா?
4. நோன்பை விடுவது அல்லது பெருநாளை விடுவது ஹராமா? ஹலாலா?
5. ஒரே வீட்டினுள் சிலர் முதல் நாளும், சிலர் அடுத்த நாளும் என 2 நாட்கள் பெருநாள் கொண்டாடுவது சரியா?
6. ஒரே ஊருக்குள் 2 பெருநாட்கள் வருவது சரியா? (ஒரு குழுவினர் மிகச்சில வருடங்களுக்கு முன் 3 வது நாளும் தனித்து பெருநாள் கொண்டாடிய அதிசயமும் நடந்துள்ளது)
7. முதல் நாள் பெருநாள் அறிவிக்கப்பட்டதால் பேணுதலுக்காக நோன்பை விட்டுவிட்டு அடுத்த நாள் பெருநாளை மட்டும் கொண்டாடுவது சரியா?
8. 30வது இரவில் மஃரிப் தொழுகை முடிந்தது முதல் பிறை குறித்து (ஏற்று அல்லது மறுத்து) அறிவிப்பு வெளியிடுவார்கள் என இரவின் நெடுநேரம் வரை அதிரை அறிஞர்கள் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் காத்திருந்து கஷ்டப்பட்டது முறையா?
9. கொண்டாடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பெருநாள் தின சிறப்பு சமையல் குறித்து பெண்கள் முடிவெடுக்க முடியாது அல்லாடவிட்டது நியாயமா?
10. ஆண்களில்லா வீட்டிலுள்ள பெண்கள் இரவெல்லாம் அறிவிப்பை எதிர்பார்த்திருந்து விட்டு அடுத்த நாள் காலையில் சமையல் செய்வார்களா? அல்லது பெருநாள் தொழுகைக்கு தயாராவார்களா?

என இன்னும் மக்கள் சந்தித்த சங்கடங்களின் பட்டியலை நீட்ட முடியும் என்றாலும் அதிரை மக்களின் மனங்களை உணர்ந்து கொள்ள இதுவே போதுமானது.

மேற்படி புயலடித்து ஒய்ந்துள்ள இந்த சூழலே பிறை குறித்து நமதூர் ஆலிம்களுக்கு வேண்டுகோள் விடுக்க சரியான தருணமாக கருதுகிறோம். இந்த வருட ரமலான் பெருநாள் பலத்த பெரும் சர்ச்சைகளுக்கிடையே கடந்து சென்று விட்டது. சர்ச்சையின் பிரதான காரணங்களாக நாங்கள் 4 விஷயங்களை கருதுகிறோம்.

1. நம்பகமற்றவர்களாக மக்களால் கருதப்படும் ஒரு குழுவினரால் முதலில் பிறை அறிவிக்கப்பட்டது.
2. நம்பகமானவராக தெரிந்த தலைமை காஜியின் பிறை அறிவிப்பு பல்வேறு காரணிகளால் மக்களின் நம்பிக்கையை தகர்த்தது.
3. காயல்பாட்டிணத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த மதுஹப் ஆதரவு மக்களின் நம்பகமான பிறை அறிவிப்புகளை, மக்களின் கவனத்திற்கு கூட கொண்டு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
4. எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி, பிறை காணும் முன்பாகவே பெருநாள் விடுமுறை நாளாக வியாழக்கிழமையை (செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கெல்லாம் அரசு அலுவலகங்களில் சுற்றறிக்கை மூலம்) திணித்து விட்ட தமிழக அரசினரின் காரணம் அறிவிக்கப்படாத நிர்ப்பந்தம். (உண்மை நிலையை இதன் விபரமறிந்த த.ந.அரசு ஊழியர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது)

மேற்படி காரணிகளை பலரும் பலவாறாக ஆய்ந்துவிட்ட நிலையிலும், தூவானமாய் சிலர் அப்பாடா! நல்லவேளை எங்கள் கட்சி தற்போது ஆட்சியிலில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் மேலும் எங்கள் பங்கிற்கு உரசிக் கொண்டிருக்காமல் அதிரை ஆலிம்களிடம் சமர்ப்பிக்க நினைக்கும் எங்கள் கருத்தினுள் நுழைகிறோம்.

வரலாற்று பூர்வமாக நம் அதிரை மக்கள் பிறை விஷயத்தில் நமதூர் ஆலிம்களின் தீர்ப்பை பின்பற்றியே நோன்பையும் பெருநாளையும் கடைபிடிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளோம்.

நமதூர் ஆலிம்கள் பிறை பார்க்க வேண்டிய நாட்களில் அன்றைய 'மரைக்கா பள்ளியில்' கூடி உள்ளூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது வெளியூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது அதிரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரமேயுள்ள இலங்கை பிறையின் (அன்றைய காலத்தில் நம் தொடர்பு எல்லைக்குள்ளிருந்த ஒரே சர்வதேச பிறை) அடிப்படையிலோ இன்றுபோல் தொலைத்தொடர்பு வசதிகளற்ற முந்தைய காலங்களில் பிறை அறிவிப்பை விடுத்து வந்தனர்.

இலங்கை பிறை என்பது பலமுறை இலங்கை வானொலியின் அறிவிப்பை 'கேட்டு' ஏற்பதாகவே இருந்ததும் உண்மை. ஊருக்கு ஒரு சில போன்கள் மட்டுமே அபூர்வமாக இருந்தபோதும் அவற்றினூடாகவும் பிறை பார்த்தலை கேட்டு உறுதி செய்து கொண்டுள்ளோம். நமதூர் ஆலிம்களின் மசூரா அடிப்படையிலான பிறை அறிவிப்பை மதுக்கூர், முத்துப்பேட்டை, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற நமது பக்கத்து ஊரார்களும் ஏற்று செயல்படுத்தி வந்தனர் என்பதும் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு.

ஏன் அப்போது சர்ச்சைகள் எழவில்லையா? எழுந்தன, ஆனால் அவை ஏன் எங்கள் பகுதிக்கு நேரத்தோடு தகவல் சொல்லி அனுப்பவில்லை? ஏன் மிகத் தாமதமாக அறிவிக்கின்றீர்கள் என்ற அளவிலேயே இருந்தன என்றாலும் மக்கள் ஆலிம்களிம் பிறை தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் அறிந்து ஒரேயொரு வருடம் மட்டும் தகவல் அறிவிப்பு அவர்களிடம் நேரத்திற்கு சொல்லப்படாத காரணத்தால் ஆலிம்களின் பிறை அறிவிப்பை சில தெருக்கள் மட்டும் ஏற்கவில்லை என்பதாக எங்கள் ஞாபகம். சர்ச்சைகள் எத்தனை எழுந்து அடங்கினாலும் அதிரைக்கு பெருநாள் தினம் என்பது ஒரே தினமாகத் தான் இருந்தது.

பல வருடங்கள் மக்கள் சுபுஹூக்குப்பின் காலை வேளையை அடைந்த நிலையில் வெளியூர்களில் பிறை பார்த்த நம்பகமாக செய்திகள் தாமதமாக கிடைத்து அதிரை ஆலிம்களால் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதற்கு அல்லாஹ்வின் அருளால் இன்னும் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் வாழும் சாட்சி.

மேலும், தலைமை காஜி அல்லது மாவட்ட காஜி அல்லது டவுன் காஜி அல்லது உள்ளூர் காஜி என்பன போன்ற தமிழக அரசு ஊழியர்களின் அறிவிப்பின் அடிப்படையில் அதிரையில் பிறை அறிவிப்புகள் செய்யப்பட்டதே இல்லை என்பதையும் பிறை ஆலோசணை அமர்வுகளில் பங்கு கொண்டு வந்த, இன்னும் அல்லாஹ்வின் அருளால் ஹயாத்துடன் உள்ள ஆலிம்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம். ஒருவேளை இத்தகவல் பிழையென்றால் எங்கள் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கின்றோம்.

அரசு காஜிகள், அமைப்பு காஜி, (அரசியல் கூட்டணி தர்ம) ஹிலால் கமிட்டி, அனைத்து தேசிய, மாநில இயக்கங்களின் பிறை அறிவிப்புகள், கணிப்புகள் போன்ற குழப்பங்கள் பெருகியுள்ள நிலையில் அவைகளின் அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், அதேவேளை இன்று தகவல் தொழிற்நுட்பங்கள் பெருகியுள்ள நிலையில், திறந்த மனதுடன் சர்வதேசப் பிறை முதல் உள்ளூர் பிறை வரை நாம் ஏற்று ஆலோசித்து அதிரையில் முன்பு அமல்படுத்தியவர்கள் என்ற கடந்த கால வரலாற்றை மீண்டும் நம்மால் செயல்படுத்திட இயலும் என்ற இறை சார்ந்த நம்பிக்கை மேலோங்குவதாலும் அதிரை ஆலிம்கள் மீண்டும் அதிரைக்கான ஒரு பிறை கமிட்டியை ஏற்படுத்தி அதில் புற உறுப்பினர்களாக பள்ளிக்கு ஒருவரையும், உங்களோடு பிறை விஷயத்தில் ஒத்துவருகின்ற உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இடம் பெறச்செய்து, பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் சர்வதேசம் முதல் உள்நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், உள்ளூர் என அனைத்து நம்பகத் தகவல்களையும் திறந்த மனதுடன் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆய்ந்த மசூரா முடிவினை அதிரைக்கான பிறை மற்றும் பெருநாளாக அறிவிக்க முன்வர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்.

இனியொரு முறை இயக்கங்களோ, காஜிகளோ, அரசோ நமது அதிரையின் பிறை நாட்களை தீர்மானிக்க நாம் இடமளிக்க வேண்டாம். பிறை பார்த்த, பார்த்ததை கேட்ட நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் நோன்பை நோற்கவும், பெருநாளை கொண்டாடவும் மீண்டும் அதிரையர்கள் அனைவரும் முன்வர வேண்டும் அதற்கு முன்முயற்சிகளை அதிரை ஆலிம்கள் இப்போதே துவங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

வரும் ஹஜ்ஜூப் பெருநாளாவது அதிரையர் அனைவரும் முன்பு போல் ஒரே நாளில் கொண்டாடிய பெருநாட்கள் போல் அமைய எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கின்றோம்.

வேண்டுதல்: 
ஆலீம்களுடன் தொடர்புடைய உள்ளூர் சகோதரர்கள் இந்த வேண்டுகோளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இது பல நல்ல புரிந்துணர்வுகளுக்கு இனிய துவக்கமாய் அமையட்டும்.

இவண்
அமீரகம் வாழ் அதிரை சகோதரர்கள்

Wednesday, May 18, 2016

முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் நினைவூட்டல் !

நமதூர் முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகம், நமதூர் சகோதர்களுக்கு மின்சார கட்டணத்தை ஆன் லைன் மூலம் செலுத்த இலகுவான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது...
அஸ்ஸலாமு அலைக்கும், முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை நீங்களே ஆன் லைன் மூலமாக சுயமாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மின்சார வாரிய இணையதளத்தில் பள்ளியின் பெயரில் புதிதாக அக்கவுன்ட் திறந்து இதன் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தி வரப்படுகிறது. இதற்காக நமதூரை சேர்ந்த தயாள மனம் படைத்த பலர் அவரவர் வசதிக்கேற்ப நேரடியாக கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இதே போல் நீங்களும் உங்கள் வசதிக்கு ஏற்ப தொகையினை செலுத்தி உதவலாம். ஒரு வருடத்திற்கும் முன் பணமாகவும் செலுத்தலாம். இதில் முக்கிய விஷயம் யாதெனில், நீங்கள் செலுத்தும் தொகை, யார் செலுத்தியது என்பது யாருக்கும் தெரியாது, உங்களுக்கும் அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும். சதக்கதுல் ஜாரியா ( நிரந்தரம்மான நன்மை ) அல்லாஹ்விற்கு பிடித்தமான ஒன்று.

கட்டணத்தை செலுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி:    

user id: Adirai         
password: mjm614701    

இவற்றை நினைவில் வைத்து கொள்ளவும். மின்சாரக் கட்டணத் தொகையோ அல்லது மாதமாதம் குறைந்த பட்சம் ₹ 500/ அல்லது ₹ 1000/ செலுத்தி நிரந்தர நன்மையை பெற்றுக்கொள்வோமாக ஆமீன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, March 21, 2016

முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் கனிவான வேண்டுகோள் !

நமதூர் முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகம், நமதூர் சகோதர்களுக்கு மின்சார கட்டணத்தை ஆன் லைன் மூலம் செலுத்த இலகுவான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது...
அஸ்ஸலாமு அலைக்கும், முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை நீங்களே ஆன் லைன் மூலமாக சுயமாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மின்சார வாரிய இணையதளத்தில் பள்ளியின் பெயரில் புதிதாக அக்கவுன்ட் திறந்து இதன் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தி வரப்படுகிறது. இதற்காக நமதூரை சேர்ந்த தயாள மனம் படைத்த பலர் அவரவர் வசதிக்கேற்ப நேரடியாக கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இதே போல் நீங்களும் உங்கள் வசதிக்கு ஏற்ப தொகையினை செலுத்தி உதவலாம். ஒரு வருடத்திற்கும் முன் பணமாகவும் செலுத்தலாம். இதில் முக்கிய விஷயம் யாதெனில், நீங்கள் செலுத்தும் தொகை, யார் செலுத்தியது என்பது யாருக்கும் தெரியாது, உங்களுக்கும் அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும். சதக்கதுல் ஜாரியா ( நிரந்தரம்மான நன்மை ) அல்லாஹ்விற்கு பிடித்தமான ஒன்று.

கட்டணத்தை செலுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி:      
http://www.tneb.in/
user id: Adirai         
password: mjm614701    

இவற்றை நினைவில் வைத்து கொள்ளவும்.  இந்த மாத மின்சார கட்டணம் ₹ 5515/ செலுத்த வேண்டும். மாதமாதம் குறைந்த பட்சம் ₹ 500/ அல்லது ₹ 1000/ செலுத்தி நிரந்தர நன்மையை பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 16, 2015

ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி 'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது மின்வாரியத்திற்கு வேண்டுகோள் !

புனித ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி 'மனித உரிமை ஆர்வலர்' K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் கடிதங்கள் மூலம் மின்சாரவாரிய அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் ரமலான் மாத நோன்பை கருத்தில் கொண்டும், நமதூரில் அடிக்கடி ஏற்படும் மின் தடங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் மின் வாரிய அதிகாரிகளாகிய பட்டுக்கோட்டை DE, அதிராம்பட்டினம் AE, ஆகியோர்களுக்கு இன்று தபால் மூலம் கடிதங்களை அனுப்பினார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது : 

Thursday, June 11, 2015

மக்தூம் பள்ளி நிர்வாக கமிட்டியின் அன்பான வேண்டுகோள் !

புனித ரமலான் மாத நோன்பு இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. புனித ரமலான் மாத தொடர்பான பணிகள் அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிரை சால்ட் லேன் பிரதான பகுதியில் அமைந்துள்ள மக்தூம் பள்ளியின் பராமரிப்பு பணி மற்றும் நிர்வாகச் செலவீனங்களுக்கு நிதி உதவி வாரி வழங்க கோரி நம்மிடம் மக்தூம் பள்ளியின் நிர்வாக கமிட்டியினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

நிதி உதவி வாரி வழங்க கோரி கடித இணைப்பில் வழங்கியுள்ள பள்ளிக்கு சொந்தமான வங்கி கணக்கின் விபரங்கள்:
A/C Name : MAKHDOOM MASJID
A/C NO: 911202651
Branch Name: INDIAN BANK
ADIRAMPATTINAM

தொடர்புக்கு: 7845419224, 9443586898

இது தொடர்பாக பள்ளி நிர்வாக கமிட்டியின் சார்பில் வெளியிடப்பட்ட வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பரிந்துரை: நூருல் இப்னு ஜஹ்பர் அலி

Thursday, June 4, 2015

அதிரை பொதுமக்களுக்கு கனிவான வேண்டுகோள் !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

அன்பார்ந்த அதிரை வாழ் இஸ்லாமிய பெருமக்களே இறைவனின் உதவிகொண்டு அதிரை நியூஸ் சார்பாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், சிறந்த சாதனையாளர்களுக்கும் மற்றும் கல்வி ஊக்கத்தொகையும் அளித்து உங்களின் ஒத்துழைப்போடு சிறப்பாய் செயல்படுத்தினோம். இறைவன் நாடினால் இது ஒவ்வொரு வருடமும் தொடர வாழ்த்துங்கள்.

மேலும் அதிரையின் நலன்களில் மிகவும் அக்கறையோடு செயல்படுத்தக் கூடிய முக்கிய ஒரு விஷயத்தை உங்கள் ஒத்துழைப்போடு செயல்படுத்த சிறந்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

குளிர், மழை, வெயில் பாராது , நிமிடங்கள் கூட தாமதிக்காமல், இறைவன் நியமித்த பணியில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் பள்ளி இமாம்கள், முஅத்தின்களுக்கு  நிறைவான மாத சம்பளம் அளிக்கும் திட்டம்.

வாழ்வாதாரத்தைச் சம்பாதிக்க அஸ்பாப் எனும் உலகச் சாதனங்களைப் பயன்படுத்தாமலும், பிறரால் அறியப்பட்ட அதிக வெகுமதி தரும் சம்பாத்திய முறைகளில் ஈடுபடாமலும் வாழும் இவர்களுக்கு  உதவ வேண்டியது நமது கடமை யல்லவா ? கடமையான தொழுகைகளை முன்னின்று நடத்தும் இமாமும் அவருக்குப் பின் நின்று தொழும்  நூற்று /ஆயிரக்கணக்கான
மஅமூம்களில் முதன்மையானவரான முஅத்தினும் இறைவனின் பார்வையில் சிறந்தவர்களே.

சாதாரண ஆபீஸ் பாய் பணி செய்வோருக்குக்கூட  தற்கால மாத ஊதியம் ரூபாய் 7000 முதல் 8000 வரை இருந்து வருகிறது. இதில் பாதியளவே இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இதைக்கொண்டு அவர்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்ய முடியுமா ? அவர்களுக்கு சரியான சம்பளங்களை அளித்தால் வேறு பிதுஅத்தான விஷயங்களில் ஈடுபடாமல் அவர்களின் பர்லான பணியை மன சந்தோஷத்தோடு செய்வார்கள்.

அதிரையின் அனைத்து மஹல்லா கூட்டங்களில் இது பற்றி விவாதித்து, மஹல்லாவாரியாக அமைப்பு ஏற்படுத்தியோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ எல்லோருக்கும் ஒரே அளவில் சம்பளம் நியமித்து இவர்களின் ஊதியங்களை இக்காலத் தேவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்து, மற்ற ஊர்களுக்கு நாம் முன்னுதாரணமாக திகழ்வோம்! இது பெரும் தர்மங்களில் ஒன்றாகும்.

வஸ்ஸலாம்,
மு.செ.மு சபீர் அஹ்மது ( திருப்பூர் ) / அபூ தாஜ்

Tuesday, November 25, 2014

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு TIYA முஹம்மது மாலிக்கின் கனிவான வேண்டுகோள் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெருவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயன் படுத்திவரும் பெண்கள் குளத்தில் பல ஆண்டுகளாக திறந்த வெளியில் பெண்கள் மலம் கழித்து வருவதை தடுக்கும் நோக்கில், அதிராம்பட்டினம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எங்கள் மஹல்லாவின் முன்னாள் தலைவருமான மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் வஹாப் ( சாச்சா ) அவர்களின் முயற்சியால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதியில் ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது

கட்டி முடித்து பிறகு அதன் அருகில், இப்பகுதியில் வாழும் இளைஞர்களின் பெரும் முயற்சியால் ( TIYA ) அமைப்போடு சேர்ந்து வெளிநாடுகளிலிருந்து விடுப்பில் தாயகம் வரும் மேலத்தெரு மஹல்லா வாசிகளிடம் நிதி வசூல் செய்து அந்த ஏரியா முழுவதையும் தூய்மைப்படுத்தி சுத்தி முள்வேலி அமைத்து பெண்களும் சிறார்களும் பயன்படுத்தும் வகையில் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பூங்கா அமைத்து கொடுக்கப்பட்டது.

சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர சம்மந்தப்பட்ட தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோரிடம் பல முறை எடுத்துச்சொல்லியும் இந்த விசயத்தில் யாரும் அக்கரை கொள்வதாக தெரியவில்லை. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பாழடைந்து உடைந்து நொருங்கிய நிலையில் தற்போது காணப்படுகிறது. இதற்காக போடப்பட்ட போர்வெல் நீர் மூழ்கி மோட்டாரையும் சமூக விரோதிகள் திருடி சென்றுவிட்டனர்.

கழிப்பிட வசதிகள் இல்லாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இப்போதும் இப்பகுதியில் வாழ்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் பழுதடைந்து காணப்படும் இந்த கழிப்பிட வசதியை மறு சீரமைத்து விரைந்து திறப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் சார்பாக சமூக ஆர்வலர் என்ற முறையில் இதை நான் உங்களின் பார்வைக்கு தருகிறேன்.

தவறினால் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், தமிழக முதல்வரின் (CM) செல் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளிக்கப்படும் என்பதை நினைவூட்டுகிறேன்.

என்றும் அன்புடன் அதிரை அல்மாஸ் என்கிற
K.M.N.முகமது மாலிக்
அபுதாபி ( 0097150-7914780 )
Kmmalik2009@gmail.com
சுகாதார வளாகத்தின் அப்போதைய புகைப்படங்கள் 
சுகாதார வளாகத்தின் தற்போதைய நிலை:

Friday, November 7, 2014

கடற்கரை தெரு கந்தூரி தொடர்பாக இமாம் மவ்லவி சபியுல்லாஹ் அன்வாரியின் வேண்டுகோள் !

கடற்கரை தெரு கந்தூரி எதிர்வரும் 21-11-2014 அன்று கொடிமரம் நடும் விழா நிகழ்ச்சியும் 23-11-2014 அன்று கந்தூரி ஊர்வலமும், இதை தொடர்ந்து 03-12-2014 அன்று சந்தனக்கூடு விழா ஆகியன நடைபெற இருப்பதாக கந்தூரி விழா குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்கரைதெரு ஜும்மா பள்ளியின் இமாம் மெளலவி முஹம்மது சபியுல்லாஹ் அன்வாரி அவர்கள் அமீரகத்தில் செயல்படும் கடற்கரைதெரு மஹல்லா அமீரக அமைப்பிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது...

Sunday, November 2, 2014

முஹைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் கனிவான வேண்டுகோள் !

நமதூர் முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகம், நமதூர் சகோதர்களுக்கு மின்சார கட்டணத்தை ஆன் லைன் மூலம் செலுத்த இலகுவான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது...
அஸ்ஸலாமு அலைக்கும், முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை நீங்களே ஆன் லைன் மூலமாக சுயமாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மின்சார வாரிய இணையதளத்தில் பள்ளியின் பெயரில் புதிதாக அக்கவுன்ட் திறந்து இதன் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தி வரப்படுகிறது. இதற்காக நமதூரை சேர்ந்த தயாள மனம் படைத்த பலர் அவரவர் வசதிக்கேற்ப நேரடியாக கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இதே போல் நீங்களும் உங்கள் வசதிக்கு ஏற்ப தொகையினை செலுத்தி உதவலாம். ஒரு வருடத்திற்கும் முன் பணமாகவும் செலுத்தலாம். இதில் முக்கிய விஷயம் யாதெனில், நீங்கள் செலுத்தும் தொகை, யார் செலுத்தியது என்பது யாருக்கும் தெரியாது, உங்களுக்கும் அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும். சதக்கதுல் ஜாரியா ( நிரந்தரம்மான நன்மை ) அல்லாஹ்விற்கு பிடித்தமான ஒன்று. கட்டணத்தை செலுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி :       
http://www.tneb.in/
user id:  Adirai        
password:  mjm614701    

இவற்றை நினைவில் வைத்து கொள்ளவும்.  இந்த மாத மின்சார கட்டணம் ₹4070/ செலுத்த வேண்டும். மாதமாதம் குறைந்த பட்சம் ₹ 500/ அல்லது ₹ 1000/ செலுத்தி நிரந்தர நன்மையை பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, October 26, 2014

24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு புதிய முயற்சியில் இறங்கிய அதிரை இளைஞர்கள் !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு புதிய முயற்சியில் அதிரை இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது...
அதிரை, தஞ்சை மாவட்டத்தின் முக்கியமான ஊர்களில் இதுவும் ஒன்று.  கல்வி, தொழில்நுட்பம், கலை, விளையாட்டு, வணிகம், போக்குவரத்து மற்றும் பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ஊர் என்று பலரால் அறியப்பட்டது. ஆனால் இந்த ஊரில் மிக மிக முக்கியமான ஒரு வசதியான மருத்துவ வசதி  இருந்தும் அது பயனற்று செயல்படாமல் உள்ளது என்பது வருத்ததிற்குறிய செய்தி.

இதனால் நம் மக்கள் படும் துயரம் எண்ணில் அடங்காதது. ஒருவருக்கு கீழே விழுந்து கை உடந்துவிட்டது, சாலை விபத்து, இரவில் நெஞ்சு வலி, என்றால் கூட பட்டுக்கோட்டைக்கு ஆட்டோ பிடித்து தூக்கி செல்லும் ஆவல நிலை. இது போன்ற அடிப்படை மருத்துவ உதவிக்கு முதலுதவிக்கு கூட இரவில் வந்து பரிசோதிக்கும் மருத்துவர் கூட நமதூரில் இல்லை என்பது தான் அதிரையின் இன்றைய நிலை.

அதிரையில் பல தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனையும் உள்ளன. இவை அனைத்தும் இருந்தும் ஒரு அவசர சிகிச்சைக்கு கூட நமதூர் மக்களால் இங்கு பரிசோதிக்க முடியாமல் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு பல துயரங்ளுடன் பயனத்துக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கி செல்கின்றனர்.

ஏன் இந்த நிலை, இந்த நிலை எப்பொழுது மாறும். அதிரை மக்களே! அதிரை இளைஞர்களே! அதிரை அமைப்புகளே! அயல்நாட்டில் வசிக்கும் அதிரை அன்பர்களே! சமுக ஆர்வலர்களே! முறையான மருத்துவ வசதி இன்றி தவிக்கும் நமதூரின் நிலையை சற்று பாருங்கள். இதற்க்கு எப்பொழுது பிறக்கும் விடிவுகாலம்?

பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற‌ ஆடம்பரமான செலவுகளை செய்யும் நாம் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? வீனான விஷயங்களுக்கு நேரத்தை செலவழிக்கும் நாம் இதற்க்கு ஏன் நம் நேரத்தை செலவலிக்க தயங்குகிறோம்?

மருத்துவ வசதி என்பது ஒவ்வொரு ஊரின் அத்தியாவசிய தேவை. காய்ச்சல், தலைவலிக்கு மருந்துவம் பார்க்கும் மருத்துவமனை மட்டும் நமதூருக்கு போதுமா? அவசர சிகிச்சைக்கு என்னேரமும் செயல்படும் மருத்துவமனை அதிரைக்கு எப்பொழுது வரும்? அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணிநேர சேவை எப்பொழுது?

இவை அனைத்தும் நம் மனதில் கேள்வியாக மட்டுமே இருக்கும், இதை வெளிகொண்டு வாருங்கள்! அதிரையில் ஒரு மருத்துவ புரட்சியை ஏற்படுத்துவோம்! இதற்க்காக தற்பொழுது அதிரையை சேர்ந்த சில இளைஞர்கள் தங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பிள் போன்ற அனைத்து விதமான சோசியல் நெட்வொர்க் களிலிம் அதிரையில் 24 மணி நேர மருத்துவமனையை வழியுறுத்திய லோகைவை தங்கள் ப்ரொபைல் பிக்சராக மாற்றவுள்ளனர். இதனை படிக்கும் வாசகர்களான நீங்களும் உங்கள் ப்ரொஃபைல் பிக்சராக மேலே உள்ள படத்தை மாற்றி இளைஞர்களின் முயற்சிக்கு வழு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலுன் இந்த செய்தியையும் உங்கள் முகநூல், வாட்ஸ் ஆப் அனைத்திலும் பகிருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரையில் 24X7 மணி நேர மருத்துவ வசதியை ஏற்ப்படுத்த நினைக்கும் இளைஞர்கள்

பரிந்துரை : நூருல் இப்னு ஜெஹபர் அலி

Saturday, October 11, 2014

அதிரையின் அந்தஸ்து 110/33/11 கே.வி திறன் !?

நமதூருக்கு 1955களில் முதன் முதலாக மன்னார்குடி துணை மின் நிலையத்திலிருந்து 11கே.வி. உயர் மின் அழுத்த மின்சாரத்தை மதுக்கூர், துவரங்குறிச்சி, மழவேநிர்காடு, மண்ணப்பன் குளம் வழியாக இரும்பு உலோகத்தினால் ஆன மின் கம்பங்களை நட்டு, அதன்மூலம் மின் கம்பிகளை கொண்டு வந்து ஹனீப் டாக்டர் கட்டிடத்திற்கு எதிர்த்தாற்போல் ஒரு மின் மாற்றியை நிறுவி அதன் மூலம் நமதூருக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

இது காலப்போக்கில் பல முன்னேற்றங்கள், நவீனங்கள், ஊர் விரிவாக்கம் இப்படியான பல நிலைகளை கடந்து, அன்று (1995) 33/11கே.வி திறன் கொண்ட துணை மின் நிலையத்தை கொண்ட அந்தஸ்த்தை நமதூர் அடைந்து இருந்தது.

இந்த நிலை ஆரம்ப காலத்தில் போதுமானதாக இருந்தாலும், தற்போது நமதூரும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ, வெகுவாக விரிவடைந்து விட்டது. வீட்டுக்கு வீடு நவீன மின் சாதனங்கள், மேலும் அடிக்கடி மின் துண்டிப்பு, மழை காலங்களில் உயர் மின் அழுத்த கம்பிகளில் (மதுக்கூர்-அதிரை 33கே.வி) பழுதுஏற்படுதல், இதன் காரணத்தினால் பல மணிநேரங்கள் மின்சாரம் தடைபடுதல் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ மாணவியர்கள், மருத்துவமனைகள், இன்னும் பலர் பலப்பல இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர்.

இவைகளை கருத்தில் கொண்டு மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு அவ்வப்போது பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இதன் பலனாக நமதூருக்கு 110/33/11கே.வி திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க (SANCTION) அங்கீகாரம் கிடைத்து விட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இந்த வசதியினால் எந்த அடை மழையானாலும் மின் தடை இருக்காது, நாம் இனிமேல் மதுக்கூர் துணை மின் நிலையத்தை எதிர்பார்க்க தேவை இல்லை, இந்த புதிய மின் நிலையம் சுதந்திரமாக இயங்கும், நமதூரிலிரிந்து மேலும் பல ஊர்களுக்கு மின்சாரம் பிரிந்து செல்லும், நமதூரில் லோ வோல்டேஜ் என்ற சொல்லுக்கே இடம் இருக்காது, மேலும் நமதூரில் உள்ள அனைத்து மின் கம்பங்களும் மின் கம்பிகளும் புதியதாக மாற்றி அமைக்கப்படும், மின் தடைக்கு வேலையே இல்லை, அதிரை நகரம் ஜொலிக்கும்.

பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, திருவாரூர் போன்ற துணை மின் நிலையங்கலைபோல் அதிரையும் திகழும்.

அதிரையில் தற்போது உள்ள துணை மின் நிலையம் இடம் இதற்க்கு போதுமானதாக இல்லை. அதற்கு பக்கத்திலோ அல்லது வேறு இடத்திலோ நிலம் பார்க்கப்பட்டு வருகின்றது, நான்கு அல்லது ஐந்து ஏக்கர் தேவைப்படும் குறைவாக பார்த்தால் நான்கு ஏக்கர் நிலம் வேண்டும்.

அதாவது:-
மா கணக்கில் 12 வரும்.
குழி கணக்கில் 1200 வரும்.
சதுர அடி கணக்கில் 172800 வரும்.

ECR பகுதியில் கிடைத்தால் நல்லது. இந்த விஷயத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் ஒத்துழைக்க பங்கு உண்டு. தயவுசெய்து எல்லோரும் ஒத்துழைப்பு தாருங்கள். நமதூருக்கு இப்படியான ஒரு மின் வசதி வருமேயானால் அது நம் எல்லோருக்கும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை.

மேலதிக விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
கே.எம்.ஏ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer, Adirampattinam-614701
consumer.and.humanrights614701@gmail.com

Sunday, March 30, 2014

ஒரு கடிதத்தால் சாதித்த அதிரையர் !

அதிரையில் கடந்த வாரங்களுக்கு முன் நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திடிரென தொடர்ந்து மின் தடங்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் அதிரை பொதுமக்களும், அரசு பொதுத்தேர்வு  எழுதிய மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

முன்னறிப்பின்றி ஏற்படும் மின் தடங்கள் குறித்து நமதூர் மனிதஉரிமை ஆர்வலர் K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் மின்சாரவாரியத்தை அணுகி காரணம் கேட்டதில், தவறு அதிரையில் இல்லை என்றும், மதுக்கூரில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 17-03-2014 அன்று மின்சார உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திருக்கிறார். அதன் பலனாக மின்சார வாரிய துரித நடவடிக்கை மேற்கொண்டு பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதனால் அதிரையில் இரவு நேரத்தில் திடிரென ஏற்படும் மின் தடங்கள் தற்போது குறைந்து காணப்படுகின்றன.