.

Pages

Showing posts with label வேலை வாய்ப்புகள். Show all posts
Showing posts with label வேலை வாய்ப்புகள். Show all posts

Saturday, September 26, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் 339 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!

அதிரை நியூஸ்: செப்.26
தஞ்சாவூர் மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிட விபரம்:

  • அமைப்பாளர்: 140
  • சமையலர்: 73
  • சமையல்  உதவியாளர்: 126

இப்பணியிடங்கள் அனைத்திற்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடைவர்கள். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தஞ்சாவூர் மாநகராட்சி, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களுக்கு இதற்கென நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்ப படிவங்களை தொடர்புடைய அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். காலிப்பணியிடங்கள் விவரம் மற்றும் இன சுழற்சி விவரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் 05-10-2020 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும், இதற்கு முன்னரே விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்; 05-10-2020 மாலை 5.00 மணிக்கு பிறகு காலதாமதமாக தபால் அல்லது நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

1.சத்துணவு மைய அமைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

சத்துணவு மைய அமைப்பாளர் பணியிடத்திற்கு    - நியமன  அலுவலர் - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆவார்

கல்வித் தகுதி (அமைப்பாளர்)

1. பொதுபிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்  பிரிவினர் 10 ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. பழங்குடியினர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது  தேர்ச்சி பெறாதவர்

வயது வரம்பு

1. பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்  பிரிவினர் 21 வயது ப10ர்த்தியடைந்தும்,  40 வயதுக்கு  மிகாதவராக இருக்க வேண்டும்
2. பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும்ää    40 வயதுக்கு  மிகாதவராக இருக்க வேண்டும்
3. விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு  மிகாதவராக இருக்க வேண்டும்
4. மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர்) மாற்றுத்திறனாளி (உடல் ஊனமுற்றோர்) இருப்பின் அந்த அந்த இனத்திற்கு மேற்குறிப்பிட்ட குறைந்தபட்ச வயது பூர்த்தி அடைந்தும் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பிற தகுதிகள்

1. விண்ணப்பதாரர் நியமன பணியிடத்திற்கும், குடியிருப்பிற்கும் இடையே 3 கி.மீ தூரத்;திற்குள் இருத்தல் வேண்டும்
2. சத்துணவு மைய கணக்குகளை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். 

2.சத்துணவு மைய சமையலர் (ம) சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

சத்துணவு மைய சமையலர் (ம), சமையல் உதவியாளர் - நியமன  அலுவலர் - மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆவார்

கல்வித் தகுதி (சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்)

1. பொதுபிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்  பிரிவினர்    சமையலருக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி (அல்லது) தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும் 
    சமையல் உதவியாளருக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி (அல்லத) தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும்   
2. பழங்குடியினர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க இருக்க வேண்டும்.

வயது வரம்பு

1. பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்  பிரிவினர் பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்   ஆகியோருக்கு குறிப்பிட்ட  மனு செய்யப்படும் நாளன்று  21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்
2. பழங்குடியினர் பழுங்குடியினருக்கு மனு செய்யப்படும் நாளன்று 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்   
3. விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் மனு செய்யப்படும் நாளன்று 20 வயது பூர்த்தியடைந்தும்,    40 வயதுக்கு  மிகாதவராக இருக்க வேண்டும்

பிற தகுதிகள்

விண்ணப்பதாரர் நியமன பணியிடத்திற்கும், குடியிருப்பிற்கும் இடையே 3 கி.மீ தூரத்திற்குள் இருத்தல் வேண்டும்

( சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பத்துடன் அனைத்து பதவிகளுக்கும்; இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்

1) கல்விச்சான்றுகள் ஒளிநகல் (மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ்)
2) சாதி சான்றிதழ் ஒளிநகல்
3) இருப்பிடத்திற்கான சான்றிதழ் (குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் கார்டு நகல்)
4) விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் இருப்பின் அதற்கான சான்றிதழ்
5) உடல் ஊனமுற்றோராய் இருப்பின் அதற்கான சான்றிதழ்
6) சுயமுகவரியிட்ட ரூ.25-க்கு அஞ்சல்தலை ஒட்டிய உறை ஒன்று

தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் நகராட்சி ஆணையர்கள் மூலம் நேர்முக தேர்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும். தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பபட மாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

Friday, February 7, 2020

தஞ்சையில் நாளை (பிப்.08) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 08.02.2020 அன்று மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி  தஞ்சாவூரில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை,திருப்பூர், கரூர், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னனி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய  வேலைநாடுவோருக்கு 5000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர்.

எனவே, விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாரஅட்டை(இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

மேலும், இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் ஊதியம் போன்ற விவரத்தை dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கவும்.

மேலும், விவரங்களுக்கு 04362-237037  தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Friday, November 22, 2019

TNPSC இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு!

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 தோ்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 2 தோ்வு 2020, ஜனவரி மாதத்தில் நடத்தப்படவுள்ளது.

இத்தோ்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தோ்வு பற்றிய விவரம் மற்றும் தோ்வுக்கான கட்டணம் போன்ற விவரங்கள் விரைவில்  இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளது.

இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தஞ்சாவூா் மாவட்ட இளைஞா்களுக்காக தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு அக். 15ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தோ்வுக்கு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக். 15ஆம் தேதி முதல் அனைத்து வேலைநாள்களிலும் (திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற விருப்பமுள்ள தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த இளைஞா்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறலாம்.

Thursday, October 31, 2019

தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 01-11-2019 மற்றும் 08-11-2019, 15-11-2019, 22-11-2019, 29-11-2019 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை 01-11-2019 மற்றும் 08-11-2019, 15-11-2019, 22-11-2019, 29-11-2019 ஆகிய தேதியில் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளன. இந்த முகாமில் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிப்ளமோ இன் யோகா, மற்றும் இளநிலை பட்டம், ஓட்டுநர், தீ பாதுகாப்பு ஆகிய கல்வி தகுதிகளில் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். (வயது வரம்பு 18 முதல் 35-க்குள்)

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (டி.சி, மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, ஆதார் கார்டு) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இதனை தவறவிடாமல் முகாம் நடைபெறும் அன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆஜராகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Saturday, July 13, 2019

தஞ்சையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 1259 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கலந்துகொண்டு 1259 நபர்களுக்கு இன்று (13.07.2019) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்திய படித்த ஆண்-பெண் இருபாலருக்கான மாபெரும் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (13.07.2019) காலை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள்கால் துவக்கிவைக்கப்பட்டது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி அரியலூர், திருவாரூர், கோயம்புத்தூர், சென்னை, ஆந்திரா மற்றும கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களிலிருந்து வந்த தனியார் நிறுவனங்களான  மருத்துவமனைகள், சேவை நிறுவனங்கள், தனியார் வங்கிகள், கணினி மென் பொருள் நிறுவனங்கள், இருசக்கர மற்றும்; நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள், இயற்கை அழகு சாதன விற்பனை நிறுவனங்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 4000-க்கும்மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். 70 தனியார்த் துறை நிறுவங்களை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர்களால் (HR Manager)  நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 1259 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 110 நபர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. TNPSC Group-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு 240 நபர்களுக்கு ஆலோசணை வழங்கப்பட்டது.

அயல்நாட்டுத் துறை வேலைவாய்ப்புக்கான Overseas Man power Corporation நிறுவனத்தின் மூலம் 54 நபர்கள்அயல்நாட்டு பணிக்கான வேலைவாய்ப்புக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்கள். DDU-GKY திறன் பயிற்சி மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திறன் பயிற்சிக்கு183 நபர்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது.

இம்முகாமில் திட்ட இயக்குநர் கு.இந்துபாலா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் டாக்டர்.கா.சண்முகசுந்தர், துணை இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா.பரமேஸ்வரி, தஞ்சாவூர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, February 5, 2019

தஞ்சையில் பிப்.9ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 09.02.2019 அன்று தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடந்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.02.2019 அன்று மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுவோருக்கு 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர்.  இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவச பயிற்சி வகுப்பிற்காக பதிவுகளையும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் RRB, TNPSC, SSC, IBPS, SBI போன்ற போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகளையும் மேற்கொள்ள உள்ளது.  இம்முகாமில் 18 வயது முதல் 45 வரையான (இருபாலர்) பணி நாடுவோர்கள் கலந்து கொள்ளலாம்.  விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். 

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித் தகுதி மற்றும் அளிக்க இருக்கும் ஊதியம் போன்ற விவரத்தை dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 10, 2018

துபை கட்டுமான நிறுவனத்திற்கு அக்.14 ந் தேதி ஆட்கள் தேர்வு முகாம்: ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், அயல்நாட்டு வேலை வாய்ப்பு கழகத்தின் சார்பில் துபாய் நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு முகாம் வருகின்ற 14.10.2018 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது: -
தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு கழகம் (Overseas Manpower Corporation Ltd.) சார்பில் 14.10.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் துபாய் நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு கொத்தனார், ஆபரேட்டர், தச்சர் மற்றும் பேர்மேன் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு வருட பணி அனுபவமுள்ள 27 வயது முதல் 45 வயது நிரம்பிய ECNR Passport வைத்திருக்கும் ஆண் வேலை நாடுநர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு ரூ.23,000-38,000 மாத ஊதியமும், இலவச இருப்பிடம் மற்றும் அயல்நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும். 

இது குறித்த மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற வலைதளத்திலும், 22505886 / 22502267 / 8220634389 / 9566239685 ஆகிய தொலைபேசி எண்களில் அறிந்து கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Monday, October 8, 2018

தஞ்சையில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வுக்கான (குரூப் 2) இலவச பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், தொழில்நெறி வழிகாட்டும் மையமும் / மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (தொகுதி- II) பணிகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருப்பதாவது: 
தொழில்நெறி வழிகாட்டும் மையம் / மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தஞ்சாவூரில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக  ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (தொகுதி- II) பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 31.07.2018 அன்று முதல் தொடங்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இத்தேர்வு சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி வணிக வரி அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (தலைமை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Assistant section Officer), கருவூல உதவியாளர், வருவாய் உதவியாளர், தணிக்கையாளர், கூட்டுறவு  முதன்மை ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கியதாகும். இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இப்பணிகாலியிடங்களுக்கு குறைந்த பட்ச வயது -18 உச்ச கட்ட  வயது வரம்பு இல்லை. 

இப்பயிற்சி வகுப்பில் மாணவ மாணவிகள் நன்கு படித்து தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக 11.10.2018 அன்று தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளதால் 09.10.2018-க்குள் மாணவர்கள் தங்கள் பெயர்களை தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார். 

Monday, July 2, 2018

ஆவின் நிறுவனத்தில் 275 Senior Factory Assistant பணியிடங்கள் ~ விண்ணப்பிக்க அழைப்பு!

ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள 275 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாகவுள்ள 275 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்  (Senior Factory Assistant) பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant) பணியிடத்திற்கு உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி, மொத்த பணிக் காலியிடம் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்த அறிவிக்கை (Vacancy Notification) www.omcaavinsfarecruitment.com
என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வலைதளம் வாயிலாக 16.07.2018 க்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத் ராம்ஷர்மா தெரிவித்துள்ளார்.

Saturday, June 30, 2018

தஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு  தகுதியான ஆட்கள் தேர்வு செய்திட தேர்வு முகாம்  வருகின்ற 21-07-2018 முதல் 29-07-2018 வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.  தகுதியுள்ள திருமணமாகாத இளைஞர்கள் தேர்வு முகாமில் கலந்து  கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (29-06-2018) தெரிவித்துள்ளார்.

விமானப்படை ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 03-01-1998ற்கும் 02-1-2002ற்கும் இடைப்பட்ட காலத்தில் (இரு நாட்கள் உட்பட) பிறந்திருக்க வேண்டும். எந்த வகையிலும் வயது தளர்வு கிடையாது. திருமணமாகதாவராக இருக்க வேண்டும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50% மொத்த மதிப்பெண்களும். ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு கட்டாயம் இடம் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும்.

1.6 கிலோ மீட்டர் தூரத்தினை  6 நிமிடங்கள் 30 விநாடிகளுக்குள் கடக்கும் திறன், ஒரு நிமிடத்திற்குள் 10 முறை உடல் தள்ளும் திறன் (PUSH UPS), ஒரு நிமிடத்திற்குள் 10 முறை உட்கார்ந்து எழும் திறன் (SIT UPS), ஒரு நிமிடத்திற்குள் 20 முறை குந்தி எழும் திறன் (SQUATS)  ஆகிய உடற் தகுதிகளை பெற்றிருக்க  வேண்டும்.

குறைந்தபட்சம் 152.5 செ.மீ உயரமும், உயரத்திற்கு தகுந்தாற்போல் உடல் எடையும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நிலை உடையவராகவும். எவ்வித தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் இல்லாமலும் இருக்க வேண்டும்.  இரு கண்களும்  6-36 என்ற அளவில் தூரப்பார்வை திறனும். ±3.50D-க்கு  மிகாமல் கிட்டப்பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். உடலில் பச்சை குத்தியிருந்தால் விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படமாட்டார்.

மேலும் விபரங்களுக்கு www.airmenselection.gov.in மற்றும் www.airmenselection.cdac.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Monday, April 30, 2018

ஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்!

வருகின்ற 05.05.2018 அன்று ஒரத்தநாட்டில் பெண்கள்
உயர்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 05.05.2018 அன்று ஒரத்தநாடு அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலைநாடுநர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்கவுள்ளனர்.

மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ((TAMILNADU SKILL DEVELOPMENT CORPORTATION) இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகளையும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் SSC, TNPSC, IBPS, RRB போன்ற போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவுகள் (OVERSEAS MANPOWER CORPORATION) மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான பதிவுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள், தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை,
முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் அளிக்க இருக்கும் ஊதியம் போன்ற விவரத்தை addeotnj@gmaill.com, dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04362-237037  என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Thursday, April 26, 2018

தஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமையலர் பணிக்கு 40 பேர் தேவை ~ விண்ணப்பங்கள் வரவேற்பு!

தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 40 சமையலர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்  என  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (26.04.2018) தெரிவித்துள்ளார்கள்.

இன்று (ஏப்.26) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் 40 சமையலர் பணியிடங்கள் (ஆண் - 20, பெண் -20)  நேர்காணல்  மூலம் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.  இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், ருசியாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

01.07.2018 அன்று SC/ST பிரிவினர்கள் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாகவும் BC, BCM, MBC & DNC பிரிவினர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்களாகவும், இதரப் பிரிவினர்கள்  18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்  அளவு புகைப்படத்தினை ஒட்டி 10.05.2018 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி  கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் மீது பரிசீலணை செய்யப்படாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

மேலும் இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு சமையலர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்திடமிருந்து பெறப்பட்ட பட்டியல்கள்  மற்றும் பத்திரிக்கை செய்தி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள். 

Saturday, March 24, 2018

கும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி நியமன ஆணை!

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர்  இணைந்து நடத்திய  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.03.2018  அன்று காலை கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)யில்  கும்பகோணம சார் ஆட்சியர் மா.பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில்  64 தனியார் துறை நிறுவனங்கள், 10 தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக திறன் பயிற்சி நிறுவனங்கள், 3214 விண்ணப்பதாரர்கள் கலந்துகெண்டனர். 885 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணைகளை தஞ்சாவூர் மாவட்ட சார் ஆட்சியர் மா.பிரதீப்குமார், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கே.இந்துபாலா, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் சா.சீத்தாராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் கோ.சம்பத், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் இரவிச்சந்திரன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

மேலும், விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 44  விண்ணப்பப்படிவங்களும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரயில்வே போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு 25 விண்ணப்பதாரர்களும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ((TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION) மூலமாக வழங்கப்படும் திறன்மேம்பாட்டு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு  281 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பெற்று வரும் தொழில்முனைவோர் பயிற்சிக்காக 22 நபர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இம்முகாமில், தஞ்சாவூர் மாவட்ட சார் ஆட்சியர் மா.பிரதீப்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கே.இந்துபாலா, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் சா.சீத்தாராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் திரு.கோ.சம்பத், கா.பரமேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் இரவிச்சந்திரன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ப.சிவா அவர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளர்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கக களப்பணியாளர்கள், கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டல் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரமேஷ் சாமியப்பன் மற்றும் தேசிய மாணவர்படை அலுவலர் எட்வர்ட் சாமுவேல் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் அசோக்ராஜ், முருகன, லதா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Wednesday, March 21, 2018

கும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24-03-2018 அன்று, கும்பகோணம் அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) (கோர்ட் ரோடு மற்றும் வேப்பத்தூர் ரோடு) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலை நாடுநர்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இலவச பயிற்சி வகுப்பிற்காக பதிவுகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்படிவங்கள் வழங்குதல், தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்று வரும் RRB, TNPSC, SSC, IBPS, SBI போன்ற போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகள் மற்றும் அயல் நாட்டு வேலைவாய்ப்பு பணிக்கான பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இம்முகாமில், 18 வயது முதல் 45 வரையான (இருபாலர்) பணி நாடுநர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Monday, March 5, 2018

கடலோர காவல், கப்பல் படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு நாகப்பட்டினத்தில் பயிற்சி!

கடலோர காவல், கப்பல் படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு நாகப்பட்டினத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் மீனவர் / மீனவர்களின் வாரிசுகள் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து  அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிப்பதன் மூலம், அவர்கள் இந்தியக் கடலோர காவற்படை மற்றும் இந்திய கப்பற்படை ஆகியவற்றால் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி அடைந்து வேலைவாய்ப்பினை பெற இயலும்.

இதனைத் தொடர்ந்து தற்போது, இந்திய கடலோர காவல் படையில் “நாவிக்” பதவிக்கு விண்ணப்பித்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடலோர மீனவ இளைஞர்களுக்கு மீன்வளத்துறையின் மூலம் மாதம் ரூ. 1000/- ஊக்கத்தொகையுடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள் தங்களது சுய விபரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தினை தஞ்சாவூர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 10.03.2018 க்குள் அளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Wednesday, January 24, 2018

ஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திருச்சியில் நேர்முகத்தேர்வு!

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், டிப்ளமோ/ஐடிஐ டெக்னிசியன்கள் மற்றும் லேபர்களை பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது.

தற்போது, ஓமன் நாட்டிலுள்ள முன்னணி பவுண்டரி ஆலைக்கு,  ஐடிஐ, 10th / 12th தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன்  22 முதல் 27 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றோர் இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு  மிகைநேரப் பணி ஊதியத்துடன் (Overtime) சேர்த்து  மொத்த மாத   ஊதியமாக ரூ. 24,740/-  மற்றும்  ஊதிய உயர்வு, இலவச உணவு, இருப்பிடம், மருத்துவக் காப்பீடு, விமான டிக்கெட் ஆகியவை வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள்  தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், டிரான்ஸ்பர் சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் வெள்ளை நிறப் பிண்ணனியுடன்கூடிய ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 27.1.2018 அல்லது 28.1.2018 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும் முதனிலைத் தேர்விற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
       
மேலும் விவரங்களுக்கு, www.omcmanpower.com என்ற
வலைதளத்திலும், 044-22505886 / 22502267 / 22500417 / 8220634389 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  

Monday, October 23, 2017

சவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை !

அக். 23, 2017
சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள தனியார் நிறுவனதில் பணியாற்ற (SALES MAN) விற்பனை பிரதிகள் தேவை. நல்ல சம்பளம். சவூதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சவூதி LICENCE உள்ளவர்கள், அரபு மொழி பேசத் தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
SARAFUDEEN 0509036121

Email – sarafudeen@theworldtop.com


Monday, September 25, 2017

கத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா !

வளைகுடா நாடுகளில் ஒன்றாகிய கத்தாரில் ஹெவி டூட்டி வாகன ஓட்டுநர் பணிக்கு 1 நபர் தேவை. கத்தார் லைசன்ஸ் வைத்து இருப்போருக்கு முன்னுரிமை. இலவச விசா மற்றும் இதர சலுகைகள் உண்டு.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு 0097470449588 என்ற அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.


Wednesday, September 20, 2017

தஞ்சையில் செப்.23 ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், மகளிர் திட்ட அலுவலகமும் இணைந்து நடந்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 23.09.2017 அன்று மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெறவுள்ளது.

தனியார் துறை வேலை வாய்ப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை மேலும் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட மூலம் 23.09.2017 அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை அம்பத்தூர் டிவிஎஸ் டிரெயினிங் அன்ட் சர்வீஸ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, பெரம்பலூர் எம்.ஆர்.எப். கம்பெனி, தஞ்சாவூர் வல்லம் ஸ்பின்னிங் மில் கம்பெனி, தஞ்சாவூர் பாலாஜி அப்பல்லோ ஹோம் ஹெல்த் கேர், தஞ்சாவூர் அபி அண்ட் அபி குரூப் கம்பெனிஸ், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், எலைட் பிரைவேட் லிமிடெட், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர்-திருச்சி-சென்னை வேவ் குரூப் ஆப் கம்பெனிஸ், கோயம்புத்தூர் எஸ்.எஸ். டெக்னோவேஷன் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், தங்களுடைய கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் 23.09.2017 நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Thursday, September 14, 2017

தஞ்சையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் !

அதிரை நியூஸ்: செப்.14
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மன்னர் சரபோஜி அரசு கல்லூரியுடன் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை 23.09.2017 அன்று காலை 7.00 மணி முதல் 3.00 மணி வரை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடத்தவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் (Job Seekers) www.ncs.gov.in மற்றும் http://jobfair.pythonanywhere.com ஆகிய இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டுடன் வேலைவாய்ப்பு முகாம் நாளன்று வருகைதரவும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்களும் மேற்காணும் இணையதளத்தில் பதிவு செய்து, பதிவு செய்த விவரத்தை jobmelathanjavur@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 7639319539.

இம்முகாமிற்கு வருகைதரும் வேலைநாடுநர்கள் போதுமான எண்ணிக்கையில் சுயவிபர குறிப்பு நகல்கள், சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ளவும்.

இம்முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு விபரம் அறிந்து கொள்ளவும், பதிவு செய்துகொள்ளவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் (OVERSEAS MANPOWER CORPORATION LTD) அரங்கு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

வேலைநாடும் இளைஞர்கள் தங்களது தொழில்திறனை வளர்த்துக்கொள்ள, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION) மூலமாக வழங்கப்படும் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அரங்குகளில் இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலக கிளை ஒன்று முகாம் நாளில், முகாம் வளாகத்தில் செயல்பட உள்ளது.  இங்கு முகாமிற்கு வருகைதரும் நபர்கள் பதிவு, புதுப்பித்தல், சிறப்பு புதுப்பித்தல் மற்றும் கூடுதல் பதிவு பணிகளை செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் தமிழகத்தின் 200க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 5000க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு தேர்வு  செய்ய உள்ளனர். எனவே  வேலைநாடும் இளைஞர்கள் நம்பிக்கையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களால் அறிவிக்கப்படுகிறது.