.

Pages

Showing posts with label ஹஜ் பயணம். Show all posts
Showing posts with label ஹஜ் பயணம். Show all posts

Friday, August 26, 2016

ஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்களில் தொழுகைக்கு அனுமதியில்லை!

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 25
முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் வழக்கமாக தவாஃப் செய்யும் பகுதியில் ஹஜ் காலம் முடியும்வரை தொழுகைக்கு அனுமதி இல்லை.

மக்கா  பிரதேச கவர்னர் இளவரசர் காலித் அல் பைஸல் அவர்களின் உத்தரவின்படி, ஹஜ் யாத்ரீகர்கள் சங்கடங்கள் இன்றி வசதியாக தவாப் செய்திடும் வகையில் (ஆகஸ்ட் 25) முதல் ஹஜ் காலம் முடியும் வரை, புனித மடஃப் (Mataf) எனும் தவாப் சுற்றும் பகுதியில் மட்டும் தொழுகைக்கான அனுமதி கிடையாது.

ஹஜ் யாத்ரீகர்களும் இன்ன பிறரும் பள்ளியின் உள் வளாகங்களிலும், மாடிகளிலும், சுற்றுப்புறங்களிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதே உத்தரவு புனித ரமலான் காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- நம்ம ஊரான்

Monday, August 15, 2016

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டணமில்லா வாட்ஸ் அப் எண் !

சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட வாட்சப், கட்டணமில்லா அழைப்பு மையம் (toll free) எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
+966 504127043
+966 8002477786

Sunday, September 28, 2014

அதிரை ஹஜ் பயணிகளை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த உறவினர்கள் !

இஸ்லாமியர்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்வார்கள்.

நடப்பாண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டங்களில் குழுவினர்களாக சவூதி அரேபியா நகருக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கின்றனர். இதில் 100 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் இம்முறை புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று இரவு புனித ஹஜ் பயணத்திற்கு சென்ற அதிரையர்களை அவர்களின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வழியனுப்பி வைத்தனர். அதே போல் ஹஜ் பயணத்திற்கு பிற ஊர்களிலிருந்து வந்த பயனாளிகளையும் அவரவர்களின் உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.