.

Pages

Showing posts with label AFCC. Show all posts
Showing posts with label AFCC. Show all posts

Saturday, April 1, 2017

அதிரையில் AFCC நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்போட்டி துவக்க விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் ( AFCC ) நடத்தும் 12 ம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி துவக்க விழா அதிராம்பட்டினம் கிராணி விளையாட்டு மைதானத்தில் இன்று ( 01-04-2017 ) சனிக்கிழமை காலை தொடங்கியது.

இன்றைய முதல் ஆட்டத்தில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியினரும், தஞ்சை ஹிட்லர் சிசி அணியினரும் மோதினர். முன்னதாக டாஸ் வென்ற தஞ்சை ஹிட்லர் சிசி அணியினர் பீல்டிங் தேர்வு செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியினர் 47 ரன்கள்
( 166/7 ) வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தஞ்சை ஹிட்லர் சிசி அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

தொடக்கத்தில் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கால்பந்தாட்ட பயிற்சியாளர் அன்வர், ஏ.எப்.எப்.ஏ நிர்வாகிகள் சேக் தம்பி, அகமது அனஸ், அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கிவைத்தனர்.

இன்றைய ஆட்ட நடுவர்களாக சலீம், ஜிஃப்ரி ஆகியோர் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் அபுல் ஹசன் சாதலி தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாட்டினை ஏ.எப்.சி.சி நிர்வாகிகள் கமாலுதீன், ஹுசைன், தீனுல் ஹக், இல்முதீன், தாஜுதீன், ஹாசிம், இஸ்மாயில், சலீம், தமீம், நிஜாஸ் மற்றும் ஏனைய ஏ.எப்.சி.சி நிர்வாகிகள் செய்தனர்.

இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மைதானத்திற்கு வருகை தந்தனர்.

இத்தொடர் போட்டியில் சென்னை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, காரைக்கால், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியின் தலைசிறந்த மொத்தம் 32 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளது.

இத்தொடர் போட்டியின் நிறைவு விழா வரும் ஏப்-14 ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. முதல் பரிசு ரூ. 30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 20 ஆயிரம், மூன்று மற்றும் நான்காம் பரிசுகள் தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும்  தொடர் நாயகன், சிறந்த ஆட்ட நாயகன், சிறந்த கீப்பர், சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த பவுலர், சிறந்த பேட்ஸ்மேன் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


 

 

Monday, November 9, 2015

போலீஸ் சூப்பிரண்டட்டின் பாராட்டை பெற்ற அதிரை AFCC அணி !

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் அப்துல் வஹாப் இவரது மகன் AFCC சலீம்( வயது 29 ) . கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது AFCC அணிக்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று விளையாடி வெற்றி வாகை சூடி வந்துள்ளார்.  

இந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் தஞ்சை கிரிக்கெட் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தது. இந்த விழாவில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சாதனை நிகழ்த்திய அணிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது.

இதில் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பெற்று சிறந்த சாதனை படைத்த அதிரை AFCC அணிக்கு வின்னர் கோப்பை மற்றும் ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த இடது கை ஸ்பின் பந்து வீச்சாளருக்கான சிறப்பு பரிசு கோப்பை அதிரை AFCC அணியின் நட்சத்திர வீரர் AFCC சலீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  இவர் கலந்து கொண்டு விளையாடிய 6 மேட்சில் மொத்தம் 17 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போலீஸ் சூப்பிரண்டட் மயில்வாகனன் அவர்கள் சாதனை நிகழ்த்திய AFCC அணியின் வீரர்கள் மற்றும் சிறந்த ஸ்பின் பவுலர் சலீம் ஆகியோருக்கு வெற்றி கோப்பைகளை வழங்கி கைகுலுக்கி பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.

சாதனை நிகழ்த்திய AFCC அணி வீரர்களை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள், தஞ்சை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், அதிரை AFCC அணியின் மேலாளார், பயிற்சியாளர், சக வீரர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
 
 
 
 
 

Monday, June 1, 2015

அதிரை AFCC அணி சாம்பியன் !

அதிரை சிட்னி ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் ASFCC நடத்திய எட்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் இறுதி போட்டி நடைப்பெற்றது இரு அணிகளாகிய அதிரை AFCC அணியினரும், அதிரை SFCC அணியினரும் மோதினர் முன்னதாக டாஸ் வென்ற AFCC அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடினர். இதில் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99  ரன்கள் எடுத்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிரை SFCC அணியினர் தொடர்ந்து போராடி சொற்ப்ப ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர். இதன் மூலம் அதிரை AFCC அணியினர் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்று.

வெற்றி பெற்றோர் விவரங்கள் :
1. முதல் இடம் :  AFCC அணியினர் [ அதிரை ] - பரிசுத்தொகை ரூபாய் - 10,000/-
2. இரண்டாம் இடம் : SFCC அணியினர் [ அதிரை ] - பரிசுத்தொகை ரூபாய் - 7,000/-

கடந்த 5 தினங்களாக நடைபெற்ற இந்த போட்டிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகைதந்த பல்வேறு அணியினர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 15, 2015

அதிரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் உற்சாக செய்தி!

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) சார்பாக 10ம் ஆண்டாக நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி ஷிஃபா எதிரே கிரானி மைதானத்தில் சிறப்பாக வரும் ஏப்ரல் 16ந் தேதி துவங்கவுள்ளது.
வரும் பதினைந்தாம் தேதி துவங்கும் என நிர்வாகம் அறிவித்திருந்தாலும். அதிரையில் திடீரென பெய்த மழையால் தடைபட்டது. விளையாட்டு மைதானமும் iசேதமடைந்தது. இதையடுத்து களத்தில் இறங்கிய AFCC இளைஞர்கள் ஆடுகளத்தை சரிசெய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.
தலைசிறந்த தஞ்சை கிளப் அணிகள் பங்கேற்பதால் ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்ல

தொடர்ந்து உங்கள் ஆதரவு நல்கிட அன்புடன் அழைக்கிறது அதிரை AFCC நிர்வாகம்.

-அதிரை தென்றல் (இர்ஃபான்) 

Thursday, October 16, 2014

அதிரை வரலாற்றில் தனி முத்திரை பதிக்க இருக்கும் AFCC அணி !

அதிரையின் பிரதான அணிகளுள் ஒன்று AFCC. இந்த அணியில் நமதூரை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பலர் அங்கம் வகித்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் பல வெற்றிகளை குவித்தும் தந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் நடந்த மாநில அளவிலான TNCA கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட ஒரே அணி என்ற பெருமையை AFCC தட்டிச்செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடைபெற இருக்கிற லீக் போட்டியில் விளையாட AFCC அணி மீண்டும் தகுதி பெற்றுள்ளது. மாநில அளவில் நடைபெற இருக்கிற இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடி அதிரை வரலாற்றில் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்ப்போம்.