.

Pages

Showing posts with label JMC. Show all posts
Showing posts with label JMC. Show all posts

Sunday, March 15, 2020

அதிராம்பட்டினத்தில் ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 15
திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க தொடக்க விழா அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரிச் செயலர் ஏ.கே காஜா நஜ்முதீன் முன்னாள் மாணவர்கள் சங்க அதிராம்பட்டினம் பிரிவை தொடங்கி வைத்துப் பேசினார். சமூக ஆர்வலர்கள் எம்.எஸ்.எம் ராபியா, ஏ. அப்துல் ரெஜாக், இ.வாப்பு மரைக்காயர், ஏ.ஹசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, முன்னாள் மாணவர்கள் சங்க அதிராம்பட்டினம் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எம்.கஜாலி முகமது செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பின் பேரில் பத்ருத்தீன், எம். நிஜாமுதீன், அகமது அனஸ், கிஜார், சேக் தம்பி, அஸ்ரப், சாலிகு, ஆசிப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.