அதிராம்பட்டினம், ஏப்.25
அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் சார்பில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் 110 ஏழை குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ வீதம் அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, புளி, சீனி, ஆயில், பொட்டுக்கடலை, டீ தூள் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் பி.எம்.கே தாஜுதீன், எம்.எம்.எஸ் முகமது இக்பால், மு.காதர் முகைதீன், பி ஜமாலுதீன், கே. தாஜுதீன் என்கிற சலீம், எஸ். பகுருதீன், என்.எம் சம்சுல் மன்சூர் ஆகியோர் முன்னிலையில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மேலத்தெரு, பிலால் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினர்.