.

Pages

Sunday, December 2, 2018

ஷார்ஜாவில் டேக்ஸி கட்டணம் உயர்வு!

அதிரை நியூஸ்: டிச.02
ஷார்ஜாவில் டேக்ஸி கட்டணம் உயர்ந்தது

ஷார்ஜாவில் டேக்ஸி கட்டணத்தில் 2 திர்ஹம் டிசம்பர் 1 முதல் உயர்த்தப்ட்டது இதன் மூலம் குறைந்தபட்ச கட்டணம் 13.50 திர்ஹமாக உயர்ந்தது.

இதற்கு முன் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1.50 திர்ஹம் உயர்த்தப்பட்ட பின் தற்போது தான் மீண்டும் உயர்த்தப்பட்டாலும் இன்றைய பொருளாதார சூழலில் மிகவும் பாதிக்கக்கூடிய விலை உயர்வே.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

முதலிடத்தில் அமீரக பாஸ்போர்ட்!

அதிரை நியூஸ்: டிச.02
கடந்த 2017 ஆம் வருடம் இதே டிசம்பர் மாதத்தில் 27 வது இடத்திலிருந்த அமீரக பாஸ்போர்ட் உலகின் மதிப்பு வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளது இதன் மூலம் அமீரக நாட்டினர் 167 நாடுகளுக்கு விசா நடைமுறைகள் ஏதுமின்றி செல்ல முடியும்.

கடந்த நவம்பர் மாதம் 3 வது இடத்திலிருந்த அமீரக பாஸ்போர்ட் 2 வது இடத்திற்கு வராமலேயே முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதும் இதுவரை முதலிடத்திலிருந்த சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சாதனையின் மூலம் அமீரகத்தினர் 167 சர்வதேச நாடுகளுக்கு செல்ல விசாவுக்கு காத்திருக்க வேண்டியதில்லை மாறாக செல்லும் நாடுகளின் விமான நிலையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

இந்த புதிய சாதனை என்பது உலகின் சுமார் 84% நாடுகளுக்கு விசா பிரச்சனைகள் ஏதுமின்றி செல்ல முடியும் என்பதுடன் இன்னும் 14% மட்டுமே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் சில்லறை பெட்ரோல் விலை கணிசமாக குறைவு!

அதிரை நியூஸ்: டிச.02
அமீரகத்தில் சில்லறை பெட்ரோல் விலை கணிசமான குறைந்தது

அமீரகத்தில் நடப்பு டிசம்பர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் சென்ற மாத பெட்ரோல் விலை ஒப்பீட்டுக்காக...

சூப்பர் 98 - லிட்டர் 2.25 திர்ஹம் (2.57) குறைவு 0.32 பில்ஸ் (காசுகள்)
ஸ்பெஷல் 95 - லிட்டர் 2.15 திர்ஹம். (2.46) குறைவு 0.31 பில்ஸ் (Fils)
ஈ பிளஸ் 91 - லிட்டர் 2.05 திர்ஹம் (2.38) 0.33 பில்ஸ்
டீசல் - லிட்டர் 2.61 திர்ஹம் (2.87) குறைவு 0.26 பில்ஸ்

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Saturday, December 1, 2018

அதிரை பைத்துல்மால் சார்பில் கஜா புயலில் பாதிப்படைந்த கூரை வீடுகள் மறு சீரமைப்பது தொடர்பாக டிச.03ல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்!

அதிராம்பட்டினம், டிச.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் நவம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்களின் தலைமையில், அலுவலகத்தில் இன்று (டிச.01) சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில், கஜா புயலில் அதிரையில் பாதிப்படைந்த கூரை வீடுகளை மறு சீரமைப்பது தொடர்பாக, அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்தார்கள், சமுதாய அமைப்புகள், நற்பணி சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், எதிர்வரும் (டிச.03) திங்கட்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துபையில் அனைவரின் கவனத்தை ஈர்த்த 'பாலைவன ரோஜா' வீடு (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.01
சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் 'எதிர்காலத்திற்கு தேவையான நிலையான மாற்றுவீடுகள்' (House of the future today) என்ற கருவிலான போட்டி The Solar Decathlon Middle East என்ற பெயரில் துபையில் நடைபெற்று வருகின்றது. இதில் 11 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 28 பல்கலைகழக மாணவர்கள் 15 குழுக்களாக இணைந்து பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆஸ்திரேலியாவின் 'வோல்லங்காங்  யூனிவர்ஸிட்டி' மற்றும் துபையின் தொழில்நுட்பம் மற்றும் மேலதிக கல்விக்கான நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்துள்ள 'பாலைவன ரோஜா' என பெயரிடப்பட்டுள்ள வீடு அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளது.

This is the ‘Desert Rose’, a smart sustainable house designed and built by the students and teachers of the University of Wollongong (UOW) Australia and Dubai and Technical and Further Education (TAFE NSW)

ஆஸ்திரேலிய மாணவர்கள் வடிவமைத்துள்ள இந்த வீட்டிற்கு மின்சாரக் கட்டணம் செலுத்த தேவையிருக்காது. இந்த வீட்டு கூரையின் மீது அமைக்கப்பட்டுள்ள டிராக்டைல் தொழிற்நுட்ப சூரியஒளி ஓடுகள்  (The Tractile solar tiles) தினமும் சுமார் 52.07 Kwh மின்சாரம் தயாரிக்கும் வல்லமை படைத்தவை. இதிலிருந்து சராசரியாக 38  Kwh மின்சாரம் மட்டுமே மொத்த வீட்டின் தேவைக்கும் பயன்;படும், மீதமானவை கூடுதல் மின்சாரமாக இருக்கும்.

அதேபோல் இந்த வீட்டிற்கு என குளிர்சாதனங்களை நிறுவத் தேவையில்லை. இதன் சுற்றுச்சுவர்கள் மற்றும் கூரை ஆகியன சிமெண்டிற்கு பதிலாக பழைய கண்ணாடி துகள்கள் கலந்த ஒருவகை கலவையில் செய்யப்பட்டுள்ளதால் எப்போதும் வீட்டின் உட்புற தட்பவெப்பம் 16 டிகிரி செல்ஷியஸாக இருக்கும், இதற்கு 2வது தோல் (2nd Skin)  என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதன் சுவர்கள் பயன்படுத்தப்பட்ட பழைய மரச்சாமான்கள், பிளாஸ்டிக் பால் பாட்டில்கள் போன்றவை கலந்து தயாரிக்கப்படுகின்றன.

இந்த வீட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் நம்முடைய குரல் கட்டளைக்கேற்ப திறந்து மூடும் தன்மையில் செயல்படுவது. 90 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்த எதிர்கால வீடுகளில் ஒரு தம்பதியர் குடியிருக்கலாம், கூடுதலாக உள்ள மற்றொரு அறையில் பிறர் தங்கிக் கொள்ளலாம்.

முஹமது பின் ராஷித் சோலார் பார்க்கின் பின்புற மைதானத்தில் சுமார் 60,000 சதுரடியில் நடைபெற்றுவரும் இந்த போட்டி கண்காட்சிக்கு அனுமதி இலவசம். மொத்தம் 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகைக்காக நவம்பர் 14 (நேற்று) துவங்கி எதிர்வரும் நவம்பர் 29 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. நவ. 28 ஆம் தேதி வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

FACT FILE:
Solar Decathlon Middle East: Open to the public, free admission

To visit: Register at https://www.solardecathlonme.com/plan_your_visit

November 14-29, 2018

Sunday to Wednesday

Village 9am to 6pm

Visit the houses 9am to 12pm

Thursday to Saturday

Village & Houses: 9am to 6pm

*Winning house has been announced on November 28.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

துபையில் சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலில் விடப்பட்ட 100 வயது ஆமை (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.01
துபையில் 100 வயது ஆமை சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலில் விடப்பட்டது.

துபையில் இன்று 100 வயது கிரீன் ஸீ வாரியர் இன ஆமை (100-year-old warrior turtle, a member of the Green Sea species) உட்பட 53 ஆமைகள் துபை ஆமைகள் மறுவாழ்வு மையத்தினரால் சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன. இந்த கிரீன் ஸீ ஆமைகளுடன் ஹாக்பில் இன ஆமைகளும் (A mixture of Green Sea and Hawksbill turtles) கலந்திருந்தன.

சுமார் 6 மாதங்களுக்கு முன் ஏதொவொரு படகு ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட காயங்களுடன் இந்த 100 வயது ஆமை ஆர்வலர்களால் மீட்கப்பட்டு துபை ஜூமைராவிலுள்ள புரூஜ் அல் அரப் மற்றும் ஜூமைரா அல் நசீம் ஆமைகள் மறுவாழ்வு மையங்களில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆமைக்கு மட்டும் சுமார் 25 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துபை ஆமைகள் மறுவாழ்வு மையம் கடந்த 14 ஆண்டுகளில் 1,653 ஆமைகளுக்கு சிகிச்சையளித்து கடலில் விட்டுள்ளது. இவற்றில் சில ஆமைகள் சேட்டிலைட்டுடன் தொடர்புடைய ஜீபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு அவற்றின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Fifty three rehabilitated turtles were released into the Arabian Gulf today.
Dubai Turtle Rehabilitation Project was established in 2004.
In the past 14 years, 1,653 turtles have been rehabilitated.
The turtles recover at Burj Al Arab and sent to Jumeirah Al Naseem for the final stages of rehabilitation.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

அபுதாபி புறநகர் சாலைகள் மணிக்கு 140 கி.மீ அதிவேக சாலைகளாக தரம் உயர்வு!

அதிரை நியூஸ்: டிச.01
அபுதாபியின் புறநகர் பகுதிகளில் மேலும் சில சாலைகள் மணிக்கு 140 கி.மீ அதிவேக சாலைகளாக தரம் உயர்வு

அபுதாபியிலிருந்து சவுதி செல்லும் சாலை மணிக்கு 160 கி.மீ வேகத்திலும், அபதாபி அல் அய்ன் இடையே மணிக்கு 140 கி.மீ வேகத்திலும் செல்ல ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் கூடுதலாக வழங்கப்பட்டு வந்த 20 கி.மீ கருணை வேகம் என்ற நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதும் அறிந்ததே. இந்த புதிய நடைமுறைகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள வேகத்திற்கு மேல் வாகனங்களை செலுத்த அனுமதியில்லை.

தற்போது மேற்குப்புற அபுதாபியின் கர்பியா பிரதேசத்தில் அமைந்துள்ள பல்வேறு சாலைகள் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் எதிர்வரும் அமீரக தேசிய தினமான டிசம்பர் 2 முதல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, இங்கும் 20 கி.மீ கூடுதல் கருணை வேகம் கிடையாது. இந்த சாலைகளில் நேராக பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி மாறாக இதன் கிளைச்சாலைகளில் பயணிப்போர் அந்தந்த சாலையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில் குறிப்பிட்டுள்ள வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

1. கர்பியா (Garbia) பிரதேசத்தின் E20 எனப்படும் அல் சுவைஹான் - அல் ஹீர் சாலை முதல் E75 எனப்படும் மதீனா மிலிட்டரி ஜாயித் ரவுண்டபோட் முதல் டிரக் ரோடு இன்டர்சேஞ்ச் வரையும், அதேபோல் மறுமார்க்கத்திலும்,

2. அஜ்பான் பேலஸ் ரவுண்டபோட்டில் துவங்கும் E16 எனப்படும் அஜ்பான் - அல் ஸாத் சாலை முதல் E95 எனப்படும் அல் அய்ன் - அல் கோஹ் சாலை வரையும் புதிய வேகக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ தாஜுல் என்கிற கே.எம் காதர் முகைதீன் (வயது 72)

அதிரை நியூஸ்: டிச.01
அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு முகமது நெய்னா மலை அவர்களின் மகனும், க.மு சுலைமான் க.மு முகமது ஆகியோரின் சகோதரரும், தாவூது கனி, கா.மு நெய்னா மலை, திக்கால்கான், மீரா முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய தாஜுல் என்கிற கே.எம் காதர் முகைதீன் (வயது 72) அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-12-2018) சனிக்கிழமை மாலை தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.