.

Pages

Sunday, January 31, 2021

போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!


 தஞ்சாவூர் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இ.அ பää அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றுதுää.தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004ஆம் வருடம் முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்தக் குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லை. இந்த ஆண்டு (31.01.2021) ஞாயிற்றுக்கிழமை  இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இ.அ.பää அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துää ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயைப் பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சு10ழலில் இருந்து அறவே ஒழிக்கலாம். இந்த முகாம் மூலம் சுமார் 2ää29ää141ää தஞ்சாவூர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மேலும் நகரப்பகுதியில் 128 மையங்களும் ஊரகப் பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.இப்பணியில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள்ää துணை சுகாதார நிலையங்கள்ää பள்ளிக்கூடங்களää; அரசு மருத்துவமனைகள்ää தனியார் மருத்துவமனைகள்ää பேருந்து நிலையங்கள்ää புகைவண்டி நிலையங்கள்ää கோயில்கள்ää சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கும் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகளுக்கு 51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பொது சுகாதாரத்துறைää ஊட்டச்சத்து துறைää சமூகநலத்துறைää வருவாய்துறைää கல்வித் துறைää ஊரக வளர்ச்சித்துறைää நகராட்சிகள்ää உள்ளாட்சித்துறை மற்றும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்ää மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் பங்கேற்று இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. உபயோகப்படுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்துää தயாரிக்கப்படும் இடத்தில் இருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்தின் வீரியம் குறையாமல் குளிர்பதன தொடர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

தொடர்ந்து 31.01.2021 இன்று பிறந்த குழந்தைகளுக்கும் மேலும் இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்து இருந்தாலும் இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பு மருந்து அரசின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலை நிமித்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தற்காலிகமாக இம்மாவட்டத்தில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

எனவே போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 2 சொட்டு போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல்  போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மருததுரைää துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு. ரவீந்திரன்ää மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் ஆலோசனை க்கூட்டம்  தீர்மானங்கள்



அதிரை பைத்துல்மால் 72 வது குடியரசு தின விழா!

 அதிராம்பட்டினம், ஜன.26

இந்தியாவின் 72-வது குடியரசு தின விழா அதிரை பைத்துல்மால்  அலுவலகத்தில் 
நடைபெற்றது.










Tuesday, January 5, 2021

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)


அதிராம்பட்டினம், ஜன.05

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் நவம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். நசீர்தீன் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-12-2020) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.















அதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கல் (படங்கள்)


அதிரை நியூஸ், ஜன. 05

அதிரை பைத்துல்மாலின் தையற் பயிற்சி பள்ளியில் ஆறுமாத காலம் தையற் பயின்று தேர்ச்சி பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த (30-12-2020 புதன் கிழமை) அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் S.நசீர்தீன், செயலாளர் S.A.அப்துல் ஹமீது, பொருளாளர் S.M.முகமது முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ச்சிப்பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.




Tuesday, December 29, 2020

தஞ்சை மாவட்டத்தில் ஜன.03 ந் தேதி TNPSC GROUP-1 போட்டித்தேர்வு!


அதிரை நியூஸ், டிச.29 

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வு  தொகுதி-1க்கு 21 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வு தொகுதி-1 ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 03.01.2021 அன்று முற்பகல் 10 மணி முதல் 1.00 மணி வரை நடைப்பெறும் போட்டித்தேர்வு தொகுதி-1க்கு, 21தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு  எழுத வரும் அனைவரையும் அனைத்து மையங்களிலும் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு பரிசோதனை செய்த பிறகே தேர்வர்களை தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளித்திடவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்திடவும், தொடர்புடைய அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள் அருகிலேயே மருத்துவ குழுக்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நாளன்று தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றிட கூடுதல் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் கைப்பேசி மற்றும் மின்னணு தொடர்பான பொருட்கள் கொண்டு செல்ல கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், இயங்கு குழுவினர்கள், ஆய்வு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரை ஒருங்கிணைத்து தேர்வு மையங்களை கண்காணிக்கவும், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே தேர்வர்கள் அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியும், எவ்வித பயமின்றியும், பாதுகாப்பாகவும் தேர்வு எழுதிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.முத்து மீனாட்சி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் திருமதி.வேலுமணி மற்றும் வட்டாட்சியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Monday, December 28, 2020

பட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!


அதிரை நியூஸ், டிச.28

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் (27.12.2020) நேரில் பார்வையிட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு சட்டமன்ற தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்கு எண்ணப்படும் அறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு அலகுää விவிபேட் அலகு ஆகியவை வைக்கப்படும் பாதுகாப்பு அறை, தேர்தல் பார்வையாளரின் அறைää ஊடக அறை, கழிவறை ஆகியவற்றை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் லண்டனிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 72 பயணிகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 53 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3 பயணிகளுக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்று நபர்களின் மாதிரிகள் மேல்பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு, வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைசுத்திகரிப்பான் பயன்படுத்துதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன்,தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன, கும்பகோணம் வட்டாட்சியர் கண்ணன,பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.தரணிகா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.






Saturday, December 12, 2020

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி அதிராம்பட்டினத்தில் கோரிக்கை முழக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.12
மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கோரிக்கை முழக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜெ ஜியாவுதீன் தலைமை வகித்து, கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், பெண்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு, 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திரும்பப்பெறு' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை கைகளில் ஏந்தியவாறு, தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரத்தை தடை செய்ய கோரியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.