தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் விசாரணை கட்டாயமாக உள்ளது. இதனால் அநாவசியமான காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பவர்களுக்கு, முதலில் கொடுக்கப்பட்ட போலீஸ் விசாரணையின் அறிக்கை வில்லங்கம் ஏதுமில்லாத பட்சத்தில், இரண்டாவது போலீஸ் விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் வந்ந்துள்ளது.
இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் தற்போது போலீஸ் விசாரணை இல்லாமலேயே விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும் என வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முகேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்படுவது போலீஸ், இவங்க தான் விசாரணை என்ற பெயரில் வசூல் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்,
ReplyDeleteபெரிய பெரிய குற்றம் செய்தவநெல்லாம் வெளிநாடு செல்ல முடிகிறது ஆனால் ஒன்றும் ஒருப்படாத பிரச்சனை காரணம்காட்டி 2 வது முறையில் பாஸ்போர்ட் புதுபிக்கமுடியவில்லை.
வெளிநாட்டில் வாழ்பவர்கள் அங்கே பாஸ்போர்ட் புதுபிப்பது நல்லது, பணம், நேரம் மிச்சமாகும். அறிவிப்பு வெளிவந்தாலும் நடைமுறைக்கு வருவது காலதாமதமாகும்.