.

Pages

Friday, July 4, 2014

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற திருகுர்ஆன் போட்டியில் சிறுவர் சிறுமிகள் பங்கேற்பு !

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் சிறுவர,; சிறுமிகளுக்குகாண திருகுர்ஆன் பேச்சு போட்டிகள் நடைபெற்றது மஹல்லா தலைவர் ஜின்னா தலைமை வகித்தார.; போட்டியில் இஸ்லாமிய சிறுவர், சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர, இதற்கு பல்வேறு பள்ளி வாசல் ஆலிம்கள் நடுவராக இருந்து போட்டியை நடத்தினர், இறுதியில் தேர்வு பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இதில் செயலாளர் தாவூது, நிர்வாகிகள் நிஜாம், வக்கீல் தீன் முகம்மது, த.மு.மு.க நகர தலைவர் நைனா முகமது உட்பட பலரும் கலந்துகொண்டனர்

படம் செய்தி :
1-முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜிம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறுவர் சிறுமிகளுக்குகாண திருகுர்ஆன் பேச்சு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறுவர்களுக்கு த.மு.மு.க நகர தலைவர் நைனா முகமது பரிசுகளை வழங்கினார் அருகில் நிர்வாகிகள்

2-முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜிம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறுவர் சிறுமிகளுக்குகாண திருகுர்ஆன் பேச்சு போட்டியில் கலந்துக்கொண்ட சிறுவன்

'நிருபர்' மொய்தீன் பிச்சை 

1 comment:

  1. இந்தச் செய்தியின் பதிவுக்கு நன்றி.

    ஆயினும் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது இந்த குழந்தைகளின் திறமையை வெளிக் கொண்டு வந்த ஆசாத் நகர் பள்ளியின் தலைமை இமாம் மவுலானா அசதுல்லா அவர்களைப் பற்றியதாகும்.

    வெறும் கூழாங்கற்களாக இருந்த இந்த மாணவர்களை பட்டை தீட்டி வைரமாக ஜொலிக்க செய்த பெருமை மவுலானா அவர்களையும் அவரது தன்னிகரற்ற உழைப்பையும் அர்ப்பணிப்பையும் சாரும். இறைவன் அவருக்கு வாரி வழங்கி இருக்கிற மார்க்க அறிவை மலர்களை மலரச் செய்வதற்குப் பயன்படுத்தினார். அவருக்குத் துணையாக நின்ற நிர்வாகத்தினரையும் பாராட்ட வேண்டும்.

    ஒரு தனி மனிதர் நினைத்தால் கூட ஒரு சமுதாயத்தை சிறந்த சமுதாயமாக வடிவமைத்துவிடலாம் என்பதற்கு மவுலானா அசதுல்லா அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.