.

Pages

Saturday, July 5, 2014

மாம்பழம் விலை வீழ்ச்சி ! விவசாயிகள் வேதனை !!

முக்கனிகளில் மாங்கனிக்கு என்று ஒரு தனி சிறப்பிடம் உள்ளது.'மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும்' என்பது முதுமொழி .தமிழகத்தில் மாங்கனிக்கு சிறப்பிடம் பெற்றது சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி பகுதிகள்.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாங்கனிகள் விளைகின்றன.
           
மாங்கனிகளில் பங்கனபள்ளி,கல்லாமை,இமாம் பசந்த்,நிமானியா ,கல்காசா,காசாலட்,செந்தூரம் ,ஒட்டு ரகங்கள் ,நாட்டு பழங்கள் என ஏகப்பட்ட ரகங்கள் உள்ளன.
       
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் கழனிவாசல் ,மாந்தோப்பு,தென்னங்குடி ,நாடாகாடு ,குருவிக்கரம்பை என பல பகுதிகளில் மாமரங்கள் விவசாயிகளால் வளர்க்கப்பட்டு ,மாங்கனிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.தென்னை ,வாழை ,நெல் சாகுபடிக்கு அடுத்து இப்பகுதியில் மா முக்கிய விளைபொருட்களாக உள்ளது.
         
ஏப்ரல் மாதம் தொடங்கிய மாம்பழ சீசன் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.இப்பகுதியில் கமிஷன் ஏலக்கடைகளில்
இவ்வாண்டு மாங்காய் வரத்து அதிகமாக இருந்தது.ஐம்பது மற்றும் நூறு பழங்கள் என கூறு கட்டி வைக்கப்படும் மாங்காய்கள் ,மற்றும் பழுத்த மாங்கனிகள் தரத்திற்கும் ,ரகத்திற்கும் தக்கவாறு விலை போகின்றன.
                 
சாதாரணமாக கிலோ ஒன்றுக்கு ரூபாய் பத்து முதல் 15 வரை ஏலம் போகும் மாங்கனிகள் ,சில்லறை விற்பனை கடைகளில் ரூபாய் 20 முதல் 30 வரை விற்கப்படுகிறது.தலைச்சுமையாகவும் ,கடைத்தெரு ஓரங்களிலும் பெண்கள் மூன்று ,நான்கு மாங்கனிகள் என கூறு கட்டி பத்து முதல்
முப்பது ரூபாய் வரையிலும் விற்பனை செய்கின்றனர்.இது பெண்களுக்கு நல்ல ஒரு வேலைவாய்ப்பினை தருகிறது.
           
இதுகுறித்து கமிஷன் ஏலக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது...
"இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர் .பல்வேறு ரக மாங்கனிகள் விற்பனைக்கு வருகின்றன .இங்கு வரும் பழங்கள் இயற்கை சுவையோடு இருப்பதால் பொதுமக்கள் ,வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
               
காரைக்குடி ,தேவகோட்டை ,கல்லல் ,மதுரை ,கோட்டைப்பட்டினம்,மீமிசல் ,தொண்டி என பல பகுதிகளையும் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து பழங்களை ஏலத்தில் எடுத்து செல்கின்றனர் .இப்பகுதி மாங்கனிகள் தரத்திலும் ,சுவையிலும் உயர்வானது 'என்றார்.

           
விவசாயியான ஆர்.எஸ்.வேலுச்சாமி கூறுகையில்...
'இவ்வாண்டு வழக்கத்தை விட விளைச்சல் அதிகம்.சந்தைக்கு மாங்காய் வரத்து அதிகம் என்பதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது .உற்பத்திக்கு ஆகும் உரம் ,தண்ணீர் பாய்ச்சல் ,காவல் பணி என செலவை கணக்கிட்டால் விவசாயிகளை பொறுத்தவரை பெருத்த நட்டம் தான் 'என்கிறார்.
       
விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

செய்தி கட்டுரை : 
எஸ்.ஜகுபர்அலி,                            
பேராவூரணி.

1 comment:

  1. உணவு உற்பத்தி குறைவு என்று ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் உணவு பாதுகாக்க போதிய வசதிகிடையாது, மாம்பலம், தக்காளி அதிக உருப்பத்தி ஆனாலும் விவசாய்கள் பாதிக்கப்படுகிறார்கள் ,உணவு பழங்கள் அழுகி நஷ்டத்தை ஏற்படுத்தி விடுவதால் மீண்டும் உணவு உற்பத்தி குறைகிறது இந்த நஷ்டத்தை தவிர்க்க அரசு பழ ஜூஸ், தக்காளி சாஸ் போன்ற தொழிற்சாலை நிர்வவேண்டும்.

    செய்வார்களா? செய்யமாட்டார்கள் - இலவசத்தை கொடுத்து தமிழகத்தை சீரளிக்கத்தான் செய்வார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.