அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரமசிவம் ( வயது 20 ) வீரமணி ( வயது 20 ) நண்பர்களான இருவரும் இன்று மாலை திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் பேராவூரனியிலிருந்து முத்துபேட்டையை நோக்கி டெம்போ வாகனம் வாழைத்தார்களை ஏற்றிகொண்டு சென்றது. டெம்போ வாகனம் கருங்குளம் அருகே சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் இறந்த வாலிபர்களின் இரு உடல்களையும் கைப்பற்றி அதிரை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றது.
தகவலறிந்த வாலிபர்களின் உறவினர்கள் மருத்துவனையில் சோகத்துடன் காணப்படுகின்றனர். பிரத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈசிஆர் ரோடு இன்னும் எத்தனை உயிர் பலிகொல்ல போகிறதோ? யா அல்லாஹ் நீயே பாதுகாவலன்.
ReplyDeleteஇசியான மர்டர் ரோடு
ReplyDeleteவேகத்தை குறைத்து விவேகத்தோடு சென்றால்
மரனத்தையாவது தவிர்க்கலாம்
Guys With Drunk and Drive !!!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete