.

Pages

Wednesday, July 9, 2014

குப்பைகளை தெருவில் கொட்டக்கூடாது ! மீறினால் நடவடிக்கை !! பேரூராட்சி அறிவிப்பு !!!

பேராவூரணி பேரூராட்சி சார்பில் புதன்கிழமை அன்று கடைவீதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வியாபாரிகளுக்கு குப்பைகளை சேகரிக்க பிளாஸ்டிக் தொட்டிகள் வழங்கப்பட்டது.
             
நிகழ்ச்சியில் தலைமை வகித்து பேசிய பேரூராட்சி தலைவர் என். அசோக்குமார், "நகரை தூய்மையாக வைத்திருக்க வர்த்தகர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். மக்கும் குப்பைகள்,மக்காத குப்பைகளை பிரித்து சேகரித்து, வரும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
           
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வர்த்தக சங்க தலைவர் பி.எஸ்.அப்துல்லா,செயலாளர் ஆர்.வெங்கடேசன்,கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் கந்தப்பன்,அன்பழகன்,கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன், கவுன்சிலர்கள் டாக்டர் மு.சீனிவாசன்,இந்திரா சீனிவாசன்,வனிதா மற்றும் நகர வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
       
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் ப.தியாகராஜன், " பேரூராட்சி சட்டப்பிரிவு 215-A ன்படி பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது, அசுத்தம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.நீதிமன்ற உத்தரவின் படியும், அரசு விதிமுறைகளின் படியும் பொதுமக்கள்,வணிகர்கள் சுகாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைக்க வேண்டும்.நகரை சுத்தமாக வைத்திருக்க வர்த்தகசங்கத்தின் ஒத்துழைப்போடு பச்சை நிறத்தில் 200, வெள்ளை நிறத்தில் 200 எண்ணிக்கையில் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
           
நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

செய்தி & படங்கள் :
எஸ். ஜகுபர்அலி,
பேராவூரணி.


4 comments:

  1. இதை நம் ஊரிலும் அமல் படுத்தினால் வரவேற்க தக்கது.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி . வாழ்த்துக்கள். இம்மாதிரியான திட்டங்களை எல்லா ஊர்களிலும் அமல்படுத்தவேண்டும். நோய் வருவதற்கான காரணம் குப்பை தான். இத்திட்டத்தின்மூலம் 2 திட்டங்களை நிறைவேற்றலாம்.

    1 மங்கா குப்பை வைத்து ரோடு போடலாம்
    2 மங்கும் குப்பைகளை Recycle செய்வதன் மூலம் இயற்கை உரங்களை தயாரிக்கலாம்

    அரசே இத்திட்டத்தை செய்தால் ரோடு இல்லாத கிராமங்களுக்கு சாலை உருவாக்கலாம் மற்றும் உர விலை குறையும் இதனால் விவசாயம் பெருகும்.

    இயற்க்கை உரத்திற்கு " அம்மா உரம் " என்று பெயர் வைத்தாலும் வியப்பில்லை!

    எப்படியோ குப்பை ஒழிந்தால் சரிதான்.

    ReplyDelete
  3. பதிவில் ஏதோ நம்ம ஊரு செய்தியென்று உள்ளே போய் பார்த்தால் பேராவூரணி செய்தியாக இருக்கின்றது .
    சமீப காலமாக அதிரை நியுஸ் பேராவூரணி நியுசாக மாறிவருகிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.