அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 13 வது மாதாந்திர மெகா கூட்டம் 05/07/2014 சனிக்கிழமை இஃப்தார் நிகழ்ச்சியுடன் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல் :
கிராத் : சகோ. நெய்னா முகமது
நிகழ்ச்சி தொகுப்பு : சகோ. சரபுதீன்
வரவேற்புரை : சகோ. அகமது ஜலீல்
சிறப்புரை : சகோ. அபுபக்கர்
வருட/மாத அறிக்கை : சகோ. அப்துல் ரஷீது
சிறப்பு பயான் : மௌலவி அப்துல் காதிர்
1. ரமலான் பிறை7-ல் ரியாத் பத்தாவில் உள்ள கிளாசிக் ரெஸ்டாரென்ட்டில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் இனிதே நடைபெற்றது.
2. சுமார் 80 க்கும் மேற்பட்ட அதிரை வாசிகள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
3. பைத்துல்மாலின் செயல் திட்டங்கள், ஜக்காத், சதக்கா மற்றும் ஃபித்ரா விசயமாக ஆர்வமூட்டப்பட்டது.
4. சிறப்பு பேச்சாளராக மௌலவி அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் நோன்பு, ஜக்காத்,ஃபித்ரா பற்றிய விளக்கம் மக்கள் மத்தியில் பிரயோஜனமாக இருந்தது.
5. ஜக்காத், சதக்கா, ஃபித்ரா-வை நோன்பு 25க்குள் வசூலித்து தலைமையகத்துக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
6. வருட சந்தா விசயமாக ஆர்வாமூட்டி அதற்காக உறுப்பினர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டது, அதற்கான தொகை SR 65 என தீர்மானிக்கப்பட்டது.
7. அனைத்து மாதாந்திர கூட்டம் நடத்துவதற்கு இடமும், ஒத்துழைப்பும் வழங்கி கொன்டிருக்கும் நமதூர் ( ஹாரா ) வாசிகளுக்கு ரியாத் பைத்துல்மால் சார்பாக நன்றியை தெரிவித்து கொல்கிறோம்.
8. அடுத்த அமர்வு இன்ஷாஅல்லாஹ் வரும் ஆகஸ்ட் 8-ல் ஹாராவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
9. இக் கூட்டத்திற்கு வருகை தந்த புதிய, பழைய உறுப்பினர்களுக்கு அதிரை பைத்துல்மால் மற்றும் ரியாத் கிளையின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
10. நன்றியுரை: சகோ. அஷ்ரப்
நோன்பு வந்துருச்சி, ஆ. ஊ...,
ReplyDeleteஅதிரை மக்களிடம் நோன்பு வந்துருச்சி, இப்தார் நிகழ்ச்சி கொண்டாட்டத்தை பாருங்க, பட்டாசு வெடியையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே.
அதிரை ஷிஃபா ஆஸ்பத்திரி, அதிரையில் உள்ள பள்ளிவாசல்கள், பைத்துல்மால்கள், இஸ்லாமிய அமைப்புகள், எல்லாம் இந்த நோன்பு நாளில் கங்கணம் கட்டிக்கொண்டு நீங்க செய்யப் போகிற சகாத்தை, பித்ராவை, சதாகாவை எங்களிடம் அனுப்பி வையுங்கள் என்று போட்டி போட்டிக் கொண்டு வாயைப் பிழந்து கொண்டு அலைகின்றனர்.
அதிரை சகோதரர் ஹாஜா ஷரீப் மர்ம நபர்களால் தாக்குதல், கையில் கட்டு விரல்களில் பலத்த காயம், மேலே உள்ள நல்லவர்கள் என்ன நடபடிகை எடுத்தார்கள்?
ஏதோ கண்துடைப்புக்கு அதை சாதித்தோம், இதை சாதித்தோம் என்று செய்திகளை போட்டு எங்களை மடையர்களாக்கிக் கொண்டு இருக்கின்றார்.
இந்த அமைப்புகளெல்லாம் தாக்கின அந்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க துப்பு இல்லை, உங்களுக்கு எதுக்கு இந்த பந்தா?
தர்மம் செய்பவர்கள், புரோக்கரை நம்பாதீர்கள், அதிரையில் தர்ம புரோக்கர்கள் வீதிக்கு வீதி அலைகின்றனர். பாதியை தாம் திண்டுவிட்டு பாதியை தர்மம் செய்வது இதுதான் இவர்களின் வேலை. தர்மம் செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் உங்கள் வீட்டுக்கு பணத்தை அனுப்பி பகிர்ந்து கொடுக்கச் சொல்லுங்கள்.
உள்ளதை சொல்லிவிட்டேன், என்னை யாரும் திட்ட வேண்டாம்.
மேதகு அஹமது ரிதுவான் துபாய் பாய் ..!
ReplyDeleteஅதிரையின் அணைத்து பொதுநல நிறுவனங்களையும் ஒட்டுமொத்தமாக விமர்சிக்கும் நீங்கள் உங்கள் சொந்த முயற்சியில் அல்லது உழைப்பில் ஊருக்கு ஏதேனும் நல்லது செய்திருக்கிறீர்களா?
ஹாஜா ஷரீபை தாக்கியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க பைதுல்மால் என்ன குற்றபுலனாய்வு துறையா அல்லது நீதி நிர்வாக மன்றமா?
இவ்வளவு கவலைப்படும் நீங்கள் ஏன் (ஒருவேளை துபாயில் இருந்தால்) ஒருவாரம் விடுப்பில் சென்று அவர்களை கண்டுபிடித்து தண்டித்து நீதியை நிலைநாட்டிவிட்டு வரக்கூடாது?
நண்பர்கள் கூடி இப்தார் விருந்தளிப்பதும் தங்கள் ஜகாத்தை ஒரு நிறுவனத்தின் மூலம் வழங்குவதும் எப்படி பந்தா என்று கூறுகிறீர்கள்?
உங்கள் பெயருக்குப்பின்னால் தொக்கி நிற்கும் துபாய் என்பது பந்தாவா? அடையாளமா?
ஜக்காத் பணத்தில் பாதியை தின்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை உங்களால் நிரூபிக்க முடியுமா? புனிதமிக்க ரமழான் மாதத்தில் இப்படி ஒரு பழியை எந்த ஆதாரத்தின் பேரில் வைக்கிறீர்கள்?
கலீபாக்களின் காலம் தொட்டு நடைமுறையில் இருந்துவரும் பைத்துல்மால் என்ற அமைப்பை நம்பாதீர்கள் என்று சொல்ல மக்களிடம் உங்களுக்கு என்ன அங்கீகாரம் இருக்கிறது?
ஒரு நபியின் தோரணையில் மக்களை அழைத்து உபதேசிக்கும் நீங்கள் அதற்கு தகுதி உடையவர்தானா?
பொதுநலத்தோடு பணியாற்றுபவர்களை விமர்சிக்கும் முன் நீங்கள் முதலில் எதாவது கலப்பணியாற்றிவிட்டு பிறகு பேசுங்கள். நிழலில் நின்று கொண்டு வெயிலில் வேலை செய்பவர்களை குறை சொல்லாதீர்கள்.
எல்லோரையும் திட்டி விட்டு கடைசியில் என்னை திட்டாதீர்கள் என்று வேண்டுகோள் வேறு..!
உங்களை யாரும் திட்டவில்லை...தொலைந்து போங்கள்..!!