.

Pages

Thursday, October 23, 2014

கொட்டும் மழையிலும் ஜாவியா மஜ்லிஸில் பங்கேற்கும் அதிரையர்கள் !

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கடந்த 25-09-2014 அன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

கொட்டும் மழையிலும் இன்று நடைபெற்ற மஜ்லீஸில் திரளாக அதிரையர்கள் கலந்து கொண்டனர். இன்றைய மஜ்லிஸில் மெளலவி அஜீஸ் ரஹ்மான் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பெருகி வரும் வட்டி கொடூரம் குறித்தும், பிள்ளைகள் மார்க்க கல்வி கற்பதின் அவசியம் குறித்தும் விளக்கி கூறினார். இதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.

இன்றைய நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட கலந்துகொண்ட அனைவருக்கும் நெய்சோறு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வழக்கம் போல் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்னும் சில தினங்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் ஜாவியா நிர்வாக கமிட்டியினர் கவனித்து வருகின்றனர்.








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.