.

Pages

Saturday, January 24, 2015

வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக சிங்கப்பூர் தேர்வு !

ஆசியாவிலும் உலக அளவிலும் வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு மிக உகந்த இடமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ்கிறது. அதே நேரம் ஹாங் காங் (HongKong), உலக அளவில் ஒப்பிடுகையில் 33-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது.

ஊழியர்கள் இடம்பெயர்வது தொடர்பான நிபுணத்துவச் சேவைகளை வழங்கும் ஈ.சி.ஏ இன்டர்னேஷனல் (ECA International) நிறுவனம், அந்தத் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது.

தூய்மையான காற்றுத் தரம், உறுதியான உள்ளமைப்பு வசதிகள், தரமான மருத்துவ வசதிகள், குறைவான குற்றச்செயல்கள் எண்ணிக்கை ஆகியவை, சிங்கப்பூர் அந்த உயரிய இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவியது.

ஆண்டுதோறும் அந்தப் பட்டியலில், அண்மை நிலவரங்கள் சேர்த்துக் கொள்ளப்படும். உலக அளவில் சுமார் 450-க்கும் மேற்பட்ட இடங்கள், அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் சிட்னி, அடெலெய்ட்(Adelaide) நகரங்களை சிங்கப்பூருக்கு அடுத்த நிலைகளில் தர வரிசைப்படுத்தி இருக்கின்றனர், ஆசியாவில் வசிக்கும் வெளிநாட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.