தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த கொடையாளர்களை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணியை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பேரணியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக இரத்த கொடையாளர்களை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையிலும், இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரணி மற்றும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை, கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் செயல்படும் இரத்த வங்கிகள் மூலம் கடந்த ஏப்ரல் 14 முதல் மே 15 வரை 16778 யூனிட்டுகள் இரத்த கொடையாளர்களால் வழங்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு செலுத்தப்பட்டு பயனடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட 7760 யூனிட்டுகள், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் 4754 யூனிட்டுகள், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் 2979 யூனிட்டுகள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 1285 யூனிட்டுகள் என மொத்தம் 16 ஆயிரத்து 778 யூனிட்டுகள் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழை-எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள். கல்வி நிறுவனங்கள். பொது சேவை மன்றங்கள். வர்த்தக சங்கங்கள். இளைஞர் மன்றங்கள். ரசிகர் மன்றங்கள் மூலம் இரத்தம் கொடையாக வழங்கப்படுகிறது. இவர்களை கௌரவித்து பாராட்டும் வகையில் தேசீய இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு; அனைத்து நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரத்த கொடையாளர்களை ஊக்குவிப்பது, புதிய இரத்த கொடையாளர்களை உருவாக்குவது மற்றும் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இரத்த தானம் அதிகரிக்க செய்வது இதன் நோக்கமாகும். இது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் அனைவரும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாராளமாக இரத்த தானம் வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
பேரணியில் அரசர் மேல்நிலைப்பள்ளி, வீரராகவா மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிளேக் மேல்நிலைப்பள்ளி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, பி.வி.செல்வராஜ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ-மாணவியர்கள் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்கரநாராயணன், துணை இயக்குநர்(சுகாதாரம்) டாக்டர்.சுப்பிரமணி, துணை இயக்குநர் (மருத்துவம்) டாக்டர் மீனாட்சி, இரத்த வங்கி அலுவலர் டாக்டர் ராதிகா மைக்கேல், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் திரு.மாதவன், கண்காணிப்பாளர் திரு.திருநாவுக்கரசு மற்றும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.