உலகம் உருண்டை
அது அந்தரத்தில் தொங்குகிறது.
*
ஒரு வேளை
அது அழிந்து விட்டால்!
*
இந்த உலகில் மனிதன் பிறந்து விட்டான்.
ஒரு நாள் மரணித்து விடுவான்.
*
மரணிப்பது மனிதன் மட்டும்தான்.
ஆனாலும்!
அவனுக்கு உதவியாக இருந்த
காற்றோ, தண்ணீரோ, உணவோ,
அவன் கூட சேர்ந்து மரணிப்பது இல்லை.
*
வாழ்க்கை ஒரு சிறிய உலகம்
அதில் தான் எத்தனை வன்மங்கள்?
*
வாழ்க்கையில்
உயர்ந்துவிட்டால்,
முகத்திற்கு முன் சிரித்து பேசுகிறது.
முதுகிற்கு பின் பொறாமையில் பேசுகிறது.
*
தாழ்ந்து விட்டால்,
முகத்திற்கு முன் நக்கலாக பேசுகிறது.
முதுகிற்கு பின் கேவலமாக பேசுகிறது.
*
உயர்ந்தவனை வாழ்த்தவும் மனமில்லை.
தாழ்ந்தவனை உயர்த்தி விடவும் மனமில்லை.
*
மனிதரில்
எத்தனை பேர் நெருஞ்சி முள்?
எத்தனை பேர் முதுகு முள்?
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.
பொன்மொழிகள்வரிசையில்இதையும்சேர்க்கலாம்.
ReplyDelete