அதிராம்பட்டினம், ஜூலை 08
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெளசல்யா தலைமையில், மருத்துவ குழுவினர், சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில், 25 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கர்ப்பிணிகளுக்கு முழுப் பேறுகால பரிசோதனைகள், தடுப்பூசி வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் பதிவு செய்தல், மருத்துவ நிபுணர்கள் பேறுகால பராமரிப்பு குறித்த ஆலோசனைகள் வழங்குதல், தாய்மார்களுக்கு உயர் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், சத்துள்ள உணவுப் பழக்க வழக்கங்கள் கடை பிடித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.